“போதும் போதும் அசடு வழிஞ்சது...”
“எனக்கு போதாதே... உன்னை பார்த்துட்டே, இப்படி செல்லம் கொஞ்சிட்டே இருக்கனும் போல இருக்கு...”
“இருக்கும், இருக்கும்... நீங்க தூங்காம உட்கார்ந்து பார்த்துட்டே இருங்க, நான் தூங்குறேன்...” என்று சொல்லி விட்டு படுத்தால் பாரதி!
“ஹேய் ரதி, நானும் வரேன்...” என்று அவளுடன் இணைந்துக் கொண்ட விவேக், கருமமே கண்ணாக பாரதியை தூங்க விடாமல் அன்பு தொல்லை செய்தான்!
🌼🌸❀✿🌷
“எப்படிடா விவேக் இப்படி எல்லாம் உன்னால மட்டும் செய்ய முடியுது? எனக்கு இப்போ தான் ஆன்ட்டி ஏன் வேலை மெனக்கெட்டு லாவண்யாவை இந்தியாக்கு வர சொல்லி கூப்பிட்டாங்கன்னு புரியுது... ஃபைலை எல்லாம் படிச்சு பார்த்து தானே சைன் போடுற?”
நான் ஸ்டாப்பாக கிண்டல் செய்துக் கொண்டிருந்த விக்னேஷை பார்த்து முறைத்தான் விவேக். நண்பர்கள் இருவரின் அருகில் அமர்ந்திருந்த லாவண்யாவும், பாரதியும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டிருந்தார்கள்.
“இந்த அழகுல புது பிஸ்னஸ் வேற... உன்னை நம்பி ப்ராஜெக்ட் வேற தராங்களே, அவங்களை சொல்லனும்,” என விக்னேஷ் தொடரவும், ‘இனி பொறுப்பதில்லை’ என பொங்கி எழுந்த விவேக்,
“சொல்வடா, ஏன் சொல்ல மாட்ட... ஆனால் விக்கி, யாரோ ஒருத்தர் லவ் செய்ற பொண்ணுக் கிட்ட ஐ லவ் யூன்னு சொல்ல பயந்து நடுங்கிட்டு இருந்த கதை உனக்கு தெரியுமா?” என்றான் கடுப்புடன்!