(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

   

”அந்த உயில் எங்க“

   

”லூசு என்னைக் கேட்டா எனக்கெப்படி தெரியும், உன் மனைவியை கேளு தெரியும்”

   

“உன்னை பிடிச்சி வைச்சா அவள் கண்டிப்பா வருவா, அப்ப அவள்கிட்ட கேட்டுக்கறேன் நீ வா” என அவளின் கையை பிடித்து இழுக்க அவளோ முரண்டுப்பிடித்தாள்.

   

”வாங்கறேன்ல” என அவளை வலுவாக பிடித்து இழுக்க அவளும் இழுத்த இழுப்பிற்க்கு வந்தவள் மறுபடியும் கால் இடறி வேறொரு பக்கம் விழுந்தாள். அங்கும் ஒரு போட்டோ இருந்தது இவள் விழுந்த வேகத்தில் அந்த போட்டோவும் உடைந்தது அது அகத்தியனுடயது. கண்ணாடி உடைந்து மீண்டும் அவளின் காலில் கண்ணாடி சில்லால் காயம் ஏற்பட இந்த முறை அவள் வலியில் அலறினாள். 

   

சங்கமேஸ்வரன் விடவில்லை. மீண்டும் அவளை பிடிக்க முயன்ற நேரம் அவளுக்கு பதிலாக வேறொரு கை அவரின் இழுப்பிற்கு வந்தது, அது என்னவென பார்த்தால் இறந்துப் போன அகத்தியன் போட்டோவில் இருந்து எழுந்து வந்து பேயாகி அவர்களின் முன் நின்றான். அவனைக் கண்டு சங்கமேஸ்வரன் பயந்து நடுங்க அதுநாள் வரை அடைபட்டுக் கொண்டிருந்த அகத்தியனின் ஆவி ஆயிரம் மடங்கு பலத்துடன் கெட்டவங்களை பழி வாங்க காத்திருந்தது, நாச்சியாவிற்கு இப்படியொரு துன்பம் வந்த உடன் அடைந்து கிடந்த அகத்தியனின் ஆவி உடனே விழித்துக் கொண்டது. 

   

அகத்தியனின் ஆவி வந்ததும் சங்கமேஸ்வரன் உதவிக்கு கார்கோடகனை அழைக்க அவனும் வந்தான். இரு பேய்களும் அகத்தியனின் ஆவியை அடக்க முயல அகத்தியனின் பலத்தின் முன்னால் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. இரு கைகளால் இரு பேய்களையும் பிடித்து உலுக்கினான் அதில் பேய்களுக்கே வலி உண்டானது.

   

நடப்பதைக் கண்டு வியந்த நாச்சியா

   

”அகத்தியனா இது பேயை கண்டதும் முதல் ஆளா ஓடுவான், இப்ப என்ன பேய்களையே 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.