முடிவு எடுத்த பின்னாடி மாறக்கூடாது. எடுத்த முடிவுக்காக போராடனுமே தவிர பின் வாங்க கூடாது புரியுதா” என சொல்லிவிட்டு காரை ஹாஸ்டல் கேட் முன் நிறுத்த அவளும் இறங்கி அர்ஜூனிடம்
“நான் யோசிச்சி சொல்றேன் அண்ணா வரேன்” என சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்குள் நுழைந்தாள். அர்ஜூனும் திருப்தியாக அவ்விடம் விட்டு சென்றான்.
அர்ஜூன் சொன்னதைக்கேட்டு ரிஷிகேசனும் சரி நந்தினியும் சரி தங்களுக்குள் குழம்பிக்கொண்டனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்றாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில் இருவருக்குமே தயக்கம் உள்ளது.
ரிஷிக்கோ
”நான் என் மனசுல இருக்கறத இப்ப சொன்னாலும் நந்தினி அதுக்கு சரின்னு சொல்வாளா மாட்டாளான்னு தெரியலையே அவளே பாவம் எல்லா சொந்தத்தையும் விட்டுட்டு தனியா இருக்கா இந்த சமயத்தில நான் பேசறதை வைச்சி அவள் தப்பா புரிஞ்சிக்கிட்டா என்ன செய்றது. அவளுக்கேன் எதுவும் புரியமாட்டேங்குது. அர்ஜூனுக்கு கூட புரியுது ஆனா அவளுக்குதான் புரியலை இதுல அத்தான் அத்தான்னு வேற கூப்பிடறா ஏன் அவளுக்கு தெரியாதா
அத்தான்னா என்ன அர்த்தம்னு நானா அவளை அப்படி கூப்பிட சொன்னேன். இல்லையே அவளேதானே முதல் நாள்ல இருந்து அப்படி கூப்பிடறா என் மேல பாசம் இருந்தா வார்த்தைக்கு ஒரு அத்தானும் பார்வையில ஒரு அன்பும் உதட்டுல சிரிப்புமா இருப்பாள். இதே என் மேல கோபம்னா அந்த அத்தான்னுங்கற வார்த்தை கூட மறைஞ்சிடும். அப்புறம் அவளுடைய பார்வையும் நிலத்தை பார்க்கும் அதுல அவள் என்ன நினைக்கிறாள்னு தெரிஞ்சிக்க முடியாது. அவளது உதட்டில கூட சிரிப்பு இருக்காது உம்முன்னு முகத்தை வெச்சிக்குவா.
இப்படியிருந்தா எப்படி, என் மேல கோபம்னா என்கிட்ட கேட்கனும் சண்டை போடனும்
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.