(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 29 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

“என செல்லமே, வாடா வா வா! அப்பாவே ஃபோன் செய்யனும்னு சொல்லிட்டு இருந்தார். என் கண்ணம்மா! உன்னை கண்ணால பார்த்தப்புறம் தான் திருத்தியா இருக்கு. உட்கார்... உட்கார்... சொல்லி இருந்தா அப்பா, அண்ணா எல்லோரையும் வீட்டிலேயே இருக்க சொல்லி இருப்பேனே!”

   

வாயெல்லாம் பல்லாக கிருத்திகாவை வரவேற்றாள் சிவகாமி.

   

“திடீர்னு கிளம்பி வந்தேன்ம்மா!” என்றப்படி விழிகளை சுழற்றி வீட்டை பார்த்த கிருத்திகா, “வீடு ரொம்ப அழகா இருக்கு அம்மா,” என மனதில் தோன்றியதை மறைக்காமல் சொல்லவும் செய்தாள்.

   

மகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டையே மறந்துப் போயிருப்பதை உணர்ந்து வருத்திய போதும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

   

“எல்லாம் கீதாவோட வேலை செல்லம்! ஒரு நிமிஷம் ரெஸ்ட் எடுக்க மாட்டா அவ. இப்போவும் ஏதோ வேலையா தான் இருப்பா, கூப்பிடுறேன். அப்படியே உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்,” என்றாள் சிவகாமி.

   

“எனக்கு இப்போ எதுவும் வேண்டாம்மா. ஆமாம் அப்பா எதுக்கு என்கிட்டே பேசனும்னு சொன்னார்???”

   

“வெளிநாட்டுல இருந்து ஒரு பிரபல டாக்டர் ஏதோ கான்ஃபரன்ஸ்க்காக சென்னை வந்திருக்காராம். உனக்காக அவர் கிட்ட அப்பா இன்னைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்க போறேன்னு சொன்னார்.”

   

“ஓ!”

   

“நீ கவலைப் படாதேடா, எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும். நாங்க எல்லோரும் எதுக்கு இருக்கோம், ஏதாவது செய்து பழசை எல்லாம் ஞாபகத்துக்கு வர வச்சிடுவோம். உனக்கு பழக்கமான விஷயத்தை பார்த்தாலே கொஞ்சம் கொஞ்சமா நினைவு வந்திரும். வீட்டை சுத்தி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.