அவளை நேராக ஒரு பார்வை பார்த்த கிருத்திகா,
“வேறென்ன சொன்னார் அந்த ஓட்ட வாய்???” என வினவினாள்!
“வேற... ஹ்ம்ம்.... நீங்க லைப்ரரில ஏதோ புக் தேடிட்டு இருந்தீங்கன்னு சொன்னார்.”
முகத்தில் கேர்ளிஷ் பாவனை தோன்ற, “அடப்பாவி அண்ணா!!! இப்படி மானத்தை வாங்கிட்டாரே!!!” என்றாள் கிருத்திகா.
“அப்படி ஏன் நினைக்குறீங்க???? நானே கூட உங்க கிட்ட கேட்கனும்னு இருந்தேன்.”
“என்ன கேட்கனும்னு இருந்தீங்க???”
“இல்ல... நீங்க தேடின புக் கிடைச்சுதா???”
“அது எதுக்கு உங்களுக்கு????”
“நானும் கொஞ்சம் டிப்ஸ் தெரிஞ்சுப்பேன்ல!”
“அது சரிங்க!” என்ற கிருத்திகாவின் பேச்சில் முழுக்க முழுக்க கேலி இருந்தது!
“பொதுவா நல்லா சமைச்சா வீட்டுகாரருக்கு பிடிக்கும்ன்னு சொல்வாங்க. அதை தவிர வேற ஏதாவது கண்டு பிடிச்சீங்களா?”
“சமைப்பதை தவிர டிப்ஸ்! அதுவும் உங்களுக்கு???? ரொம்ப தேவை தான்!!! இதுக்கும் மேல அந்த பாவப் பட்ட அண்ணனை மயக்கி என்ன செய்ய போறீங்க???? நான் ஏதோ என்னோட நிலைமைக்கு புக் தேடினால், நீங்களும் கேட்குறீங்க??. உங்களுக்கு நான் தேடின புக் எல்லாம் சரி வராது!”
“அவர் சொன்னார், நீங்க என்ன சொன்னீங்கன்னு!”