பாரு. உன் ரூமை போய் பாரு!”
சிவகாமி சொல்லிக் கொண்டு இருந்த நேரம்,
“வாங்க... வாங்க... “ என்று கிருத்திகாவை வரவேற்றப்படி அங்கே வந்தாள் கீதா.
கிருத்திகா அவளைப் பார்த்து நட்புடன் புன்னகைக்க, சிவகாமி, “அதுக்குள்ளேயா விஜய் பேசி முடிச்சிட்டான்? ஆச்சர்யமா இருக்கே,” என்றாள் கேலியாக!
“இல்லத்தை, பேச்சு சத்தம் கேட்கவே கால கட் செய்துட்டு வந்தேன்,” என்றாள் கீதா மெல்லிய சங்கோஜம் இழையோட!
“அதானே பார்த்தேன்! சரி, சரி, நீ செல்லத்தோட பேசிட்டு இரு. நான் மாமா கிட்ட பேசிட்டு வரேன்.”
“சரி அத்தை,” என்ற கீதா கிருத்திகாவின் அருகே வந்து அமர்ந்தாள்.
சிவகாமி வேறு அறைக்கு செல்வதை கவனித்துக் கொண்டே, “எப்படி இருக்கீங்க?” என கிருத்திகாவிடம் வினவினாள் கீதா.
“நல்லா இருக்கேன்! அம்மா பேச்சை பார்த்தா நான் நடுவில வந்து தொல்லை செய்துட்டேன் போலருக்கே,” என்றாள் கிருத்திகா கண்களை சிமிட்டிக் கொண்டே!
“அதெல்லாம் ஒன்றுமில்லை,” என்ற கீதாவின் முகத்தில் வந்து போன மெல்லிய வெட்கத்தை பார்த்து புன்னகைத்தாள் கிருத்திகா.
அதன் பின் தன் நேரத்தை கீதாவுடனே செலவிட்டாள் கிருத்திகா.
“அப்பா டாக்டர் கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கார். அப்பா ஃபோன் செய்த உடனே நாம இரண்டு பேரும் கிளம்புற மாதிரி இருக்கும்,” என சிவகாமி சொல்லவும், கிருத்திகாவினுள் சில பல குழப்பங்கள் ஏற்பட்டது!