சின்ன புன்னகையுடன் வெட்கம் மின்ன கீதா சொல்ல,
“அதையும் ஒப்பிச்சுட்டாரா அவர்!!! எப்படி இப்படி எல்லாம்??” என்றாள் கிருத்திகா.
“நானும் அவர் கிட்ட எல்லாம் சொல்வேன், அவரும் சொல்வார், அப்படி தான்!”
“அது சரி, நீங்க லவ் மேரேஜ் செய்தவங்க...”
“நிறுத்துங்க நிறுத்துங்க! எங்களுடையது அரேன்ஜ்ட் மேரேஜ்...”
“பார்த்தீங்களா, என் கிட்டேயே கதை விடுறீங்க? அண்ணா தான் என் கிட்ட எல்லாத்தையும் சொன்னாரே! அவர் உங்க வீட்டு காம்பவுண்ட் தாண்டி குதிச்சு வந்து ப்ரொபோஸ் செய்தது, நீங்க வெட்கத்தோட அம்மாவை கேட்க சொன்னது எக்ஸட்ரா எக்ஸட்ரா!”
கீதாவின் முகம் போன போக்கை பார்த்து கிருத்திகாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் கண்களை உருட்டிக் கொண்டு,
“ம்ம்ம்ம்... செய்றதெல்லாம் செஞ்சுட்டு இப்போ நல்ல மருமகள் பட்டம் வாங்கிட்டீங்க! அண்ணா கிட்ட நீங்க பேசுறது தெரிஞ்சும் என் கிட்டேயே நீங்க பிஸியா வேலை செய்துட்டு இருக்கீங்கன்னு அம்மா பில்ட்-அப் கொடுக்குற அளவுக்கு அம்மாவை கவர் செஞ்சு வச்சிருக்கீங்க!!!” என்றாள் பொய்யான மிரட்டலாக!
“ப்ளீஸ், அத்தை கிட்ட சொல்லாதீங்க. அவங்க ஏதாவது தப்பா நினைச்சுக்க போறாங்க.”
“அப்புறம்!”
“ப்ளீஸ்!”
“ரொம்ப கெஞ்சுறீங்களே, வேணா ஒன்னு செய்யலாம்...”