(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

   

அவர்கள் இருவரின் வருங்கால வாழ்க்கையை பற்றி பேசினார்கள்! அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தைகளை வளர்க்கும் முறை பற்றியும் பேசினார்கள்! 

   

மொத்தத்தில், ஏற்கனவே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தவர்கள், இப்போது ஓருயிர் ஈருடலாக மாறி போனார்கள்.

   

🌼🌸❀✿🌷

   

ஒரு வாரம் ஒரு வினாடியாக ஓடிச் சென்றது.

   

சமையலறையில் பாரதி ஏதோ வேலையாக இருக்க, ஃபோன் பேசி முடித்து விட்டு அவளை தேடி வந்தான் விவேக்.

   

“ரதி டார்லிங், இன்னும் கிச்சனில் என்ன செய்ற? வா, நம்ம முக்கிய வேலையை ஆரம்பிப்போம்,” கண் சிமிட்டி அவன் சொன்னதை ரசித்து பார்த்தவள்,

   

“நாளைக்கு செய்ய வேண்டிய சமையலுக்கு தேவையான காய்கறி ரெடி செய்து வைக்கிறேன் ஆனந்த். தினமும், ரொம்ப லேட்டாகுதே!”

   

“இதெல்லாம் ரொம்ப முக்கியமா?”

   

அவன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, பாரதியின் செல்ஃபோன் ஓசை எழுப்பியது.

   

“லாவண்யாவா இருந்தா எடுக்காதே,” என்றான் விவேக்!

   

ஃபோனை கையில் எடுத்துப் பார்த்த பாரதி, “லாவண்யா தான் கூப்பிடுறாங்க. ஏன் எடுக்க கூடாது?” என்றாள் புரியாமல்!

   

அவளருகே வந்து அவளை அனைத்துக் கொண்ட விவேக்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.