(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அடைக்கலாமானாள் பாரதி.

   

🌼🌸❀✿🌷

   

காலையில் பாதி தூக்கத்தில் புரண்ட பாரதி, காற்றில் வந்த தாளிக்கும் வாசனையில் உணர்வு பெற்று கண் திறந்தாள். பக்கத்தில் விவேக் இல்லை என்பது புரிய, அவசரமாக எழுந்து சமையலறை பக்கம் சென்றாள். அங்கே கரண்டியோடு நின்றிருந்த கணவனை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்!

   

“ஆனந்த்!!! என்ன செய்றீங்க?”

   

“குட் மார்னிங் மஹாராணி! இன்னைக்கு டிஃபன் மட்டுமில்லை லஞ்சும் ரெடி. நீ சீக்கிரம் பல் துலக்கிட்டு வந்தால், என்னுடைய நளபாகம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்,” என்றான் விவேக் முகம் எல்லாம் மலர்ந்து மின்ன!

   

அங்கே இருந்த ஆவி பறக்கும் உணவுகளை பார்த்து கண் விரித்துக் கொண்டே, “நீங்க ஏங்க இதெல்லாம் செய்தீங்க?” என்றாள் பாரதி!

   

“எல்லாம் உனக்காக தான். நீ முதலில் பிரஷ் செய்துட்டு வா. என்னோட குக்கிங் எப்படி இருக்குன்னு டேஸ்ட் செஞ்சு சொல்லு!

   

அதையே செய்து, சீக்கிரமாக வந்து அவனுடைய உப்புமாவை சாப்பிட்டு ரசித்த பாரதி,

   

“சூப்பர்ங்க...” என்று பாராட்டினாள்!

   

“காலையில தூக்கம் எல்லாம் தியாகம் செஞ்சு இந்த கேஸ் ஸ்டவோட போராடி நான் சமையல் செஞ்சது நீ இப்படி வெறும் வார்த்தையால் புகழவா? என்னுடைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் ரொம்ப அதிகம் மேடம்,” என்றான் விவேக் அவளை பார்வையால் அளந்துக் கொண்டே!

   

“உங்களை திருத்தவே முடியாது ஆனந்த்!” 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.