(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

   

“இப்போ அவக் கிட்ட தான் பேசிட்டு வந்தேன். நாம வர இன்னும் ஒரு வாரம் ஆகும், என் வேலையை எல்லாம் இன்னும் ஒரு வாரம் அவளை கவனிச்சுக்க சொன்னேன். அதுக்காக உன்னை டீஸ் செய்ய தான் கூப்பிடுறா,” என்றான் விவேக் முகத்தில் காதலும் குறும்பும் கலந்து மின்ன!

   

அவனின் குறும்பை ரசித்தாலும், “ஓ! ஆனால் இன்னும் ஒரு வாரமா? எனக்கு இரண்டு நாள்ல் காலேஜ் திறக்குதே ஆனந்த்,” என சிணுங்கினாள் பாரதி!

   

“லீவ் போடு கண்ணா!”

   

“ஆனந்த், இது போல கன்னாபின்னான்னு எல்லாம் லீவ் போட முடியாது.”

   

“சரி, அப்போ வேலையை விட்டுடு!”

   

பதில் சொல்லாமல் முகத்தை உயர்த்தி முறைத்தவளை பார்த்து கண்ணடித்தான் விவேக்!.

   

“இப்படி முறைக்கும் போது நீ எவ்வளவு அழகா இருக்கன்னு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா? நீ வேலைக்கு போ, என்ன வேணா செய், இப்போ டைம் வேஸ்ட் செய்யாமல் வா!”

   

“ப்ச், சொன்னால்...”

   

ஆள்காட்டி விரலை பாரதியின் உதடுகளில் வைத்து அவளின் பேச்சை நிறுத்திய விவேக்,

   

“நோ மோர் டாக்! மத்த விஷயத்துல எல்லாம் நல்லவனா இருக்கும் இந்த உன்னோட ஆனந்த், இந்த விஷயத்துல மட்டும் ரொம்ப கெட்டவன்,” என்றான்!

   

அவன் ஏற்ற இறக்கங்களுடன் சொன்ன அந்த திரைப்பட வசனத்தை கேட்டு கோபமாக முறைக்க முயன்ற பாரதி, முடியாது தன்னை மீறி கலகலவென சிரித்தாள். அதை ரசித்தப்படியே விவேக் அவளை அணைக்க, சந்தோஷமாக அவனின் கைகளுள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.