(Reading time: 33 - 65 minutes)

பின், மதுவை தவிர அனைவரையும் வரவேற்பறைக்கு அனுப்பி விட்டு, அவளுடன் அமர்ந்து அன்று ரிக்குடன் பேச வேண்டிய விவரங்களை ஆலோசித்து, சிக்மா பப்ராஜக்ட்டின்  அன்றைய நிகழ்வுகளை பகிரும் தொலைப்பேசி கலந்தாய்வை முடித்தாள்.

இரவு உணவை அரட்டையோடு முடித்து விட்டு சக்தியும், மதுவும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினர். மதுவை அழைக்க அன்றும் கார்த்திக் வரவில்லை. மாறாக, சூர்யாவும்  மீராவும் வந்தனர்.

அனைவரையும் அனுப்பி விட்டு, வீடு அமைதியாக பத்து மணியாகியும் லக்ஷ்மி படுக்க வராததால், சந்தியா அடுப்பறையில் அம்மா சமைத்து கொண்டிருந்த சத்தம் கேட்டு மெதுவாக நொண்டி நொண்டி சென்று அவரை பார்த்து,

”அம்மா இன்னும் என்ன செய்துகிட்டு இருக்குறீங்க? படுக்க வரலையா? காலையில் இருந்து இங்கயே தவம் கிடக்குறீங்க? “ என்று  கேட்க,

“முறுக்கு சுடுறேன்டி. விந்தியாவுக்கு இன்னக்கு ஆபிஸ் வேலை அதிகம்ன்னா. அதோட  இவ்வளோ நேரம் இங்க கூட மாட நின்னுட்டு இப்போ தான் படுக்க போறா. ஸ்ரீ யும் அவகூடவே தருண்னை தூங்க வைச்சிட்டு வாறேன்னு போயிருக்கா. நம்ம அடுப்பு தாழ்வா இருக்கா, பொடுசுங்க இங்குட்டும் அங்குட்டுமா ஓடிக்கிட்டு இருந்ததுங்க. அதான் கொதிக்கிற எண்ணைல கைய கிய்ய சுட்டுடக் கூடாதுன்னு அப்போ முறுக்கு சுடலை. இப்போ தான் எண்ணைய காய வைக்கிறேன். சரி, நீ எதுக்கு இங்க வந்து நின்னுக்கிட்டு இருக்க. கால்  கொஞ்சம் சரியான போதுமே குதிக்க ஆரம்பிச்சிடுவ. ” என அவளை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக இருந்தார்.

மே மாத வெக்கையில் பிசு பிசுத்த முடியுடன் வேர்வையில் குளித்திருந்த லக்ஷ்மிக்கு மகள் ஆசைப் படுவதை எல்லாம் செய்து கொடுக்கும் ஆர்வம். உடம்பில் இருந்த  அலுப்பை பொருட்படுத்தாமல்  மாங்கு மாங்குவென வேலை செய்து கொண்டிருப்பவரை பார்க்க சந்தியாவிற்கு பாவமாக இருந்தது.

அன்பென்னும் மழை நீ…

ஆருயிர் நீ ..

இரக்கத்தின் பிரதிபலிப்பு  நீ ...

ஈன்ற பின்னும் சுமப்பவள் நீ …

உயிர் இயங்க காரணம்  நீ...

ஊட்டமளிப்பவள் நீ   …

என்றும் குழந்தையாய்  நினைப்பவள்  நீ  ...

ஏணியாய் இருப்பவள் நீ …

ஒப்பில்லா மாணிக்கம் நீ ...

ஓய்ந்து உயிர் பிரியும் தருணம் கூட  ஏக்கமாய் தேடுவாய் நீ

லக்ஷ்மியின் உயர்வான மற்றொரு குணம் விருந்தோம்பல். அவர் முகம் சுளித்தால் சந்தியா தோழிகளை வீட்டிற்கு எளிதில் அழைத்து வர முடியுமா?

தாயின் அன்பு தான் எவ்வளவு பரிசுத்தமானது. இந்த  தாய்மை உணர்வு மதுவின் அம்மாவுக்கு இருந்திருந்தால் மது சாகும் வரை போயிருக்க மாட்டாளே!!!

மதுவை பற்றி வீட்டில் ஓரளவிற்கு சொல்லி வைத்திருந்தாள் சந்தியா. அவர்கள் ஏதாவது அவளிடம் கேட்டு அவள் மனம் புண்படக் கூடாது என கவனமாக பேசுமாறு சொல்லியிருந்தாள். அதனால் இயல்பாக வரும் கனிவு லக்ஷ்மிக்கு மதுவிடம் தூக்கலாக வெளிப்பட்டது.

“அடுப்பு பக்கத்தில் எனக்கு ஒரு சேர் போடுங்க. ஸ்ரீ வர்ற வரைக்கும் நான் முறுக்கு சுட்டுத் தாரேன். இப்படி வெக்கையிலயே  நின்னு, போன வருஷம் மாதிரி அக்கி வந்து கஷ்டப்படப் போறீங்களா?” என லக்ஷ்மி எவ்வளவு சொன்னாலும்  கேட்காமல் முறுக்கை பிழிந்து சுட ஆரம்பித்தாள். கட கடவென அவள் செய்வதை பார்த்து அதிசயித்த லக்ஷ்மிக்கு மகளை பார்த்து ஒரே பெருமை. “மீன் குஞ்சுக்கு நீந்த தெரியாதா? நீங்க பண்றதை பாத்திருக்கேன். ஆனா இதையே சாக்கு வைத்து என்னை சமயக்கட்டுக்குள்ள வர வைக்கலாம்ன்னு மட்டும் நினைக்காதீங்க. இதோட அவ்வளவு தான்.” என சொல்லிக் கொண்டிருக்கும் போது ஸ்ரீமா வந்தாள்.

பின் இருவரும் லக்ஷ்மியை வற்புறுத்தி படுக்க அனுப்பினர். “போங்கம்மா. நீங்க படுங்க. டயர்டா இருக்கீங்க. நாங்க பாத்துக்குறோம்” என ஸ்ரீயும் சொல்ல, மனசே இல்லாமல் சென்ற லக்ஷ்மியை  நாற்காலியில் அமர்ந்திருந்தவாறு  சந்தியா அழைத்தாள். என்னவென்று அருகில் வந்தவருக்கு கன்னத்தில்  முத்தமிட்டு “லவ் யு அம்மா. குட் நைட்” என அவர் “உனக்கு வேற  வேலையே இல்ல பாப்பா” என முகத்தில் பூரிப்புடன் சொல்லிக்  கொண்டே நிமிர்ந்தவர், அவள் தலையை மாவாட்டுவது போல செல்லமாக ஆட்டினார்.

அதிசயமாய் பார்த்த ஸ்ரீமா “என்னடி இன்னைக்கு பாசம் பொங்குது? ஏதாவது அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கணுமா?” என கேட்க, சந்தியாவிற்கு சென்னை பயணம் நினைவு வந்தது. “வாங்கணும். ஆனா..நாளைக்கு சொல்றேனம்மா” என்று விட்டு அவரை கிளப்பினாள்.  “நானே பாத்துக்கிறேன்னா சொல்ல சொல்ல கேக்காம ரெண்டு பேரும் அனுப்பி விடுறீங்க. நீ கீழ தனியா படுத்துக்குவியா?“ என சந்தியாவிடம் கேட்க “ம்ம்” என வேகமாக தலையாட்டினாள். பின்னே, அவள் தனிமையில் கார்த்திக்கிடம் பேச முடியாதே. அதற்காக ஏற்கனவே லக்ஷ்மியை தயார் படுத்தி இருந்தாள்.

“பாத்ரூம் போற வேலை எல்லாம் முடிச்சிட்டு  போய்  தூங்கு. எதுவும்னா அப்பாவை எழுப்பு. அப்பா ஹால்ல தான் படுத்திருக்காங்க. எண்ணைல கவனமா வேலை பாரு” என்று விட்டு மாடிக்குச் சென்றார்.

ஸ்ரீ வேலைக்கு இடையே, “சந்து, பாண்டி மாமாக்கு அவர் வேலை பாக்கிற  பிரஸ்ல  ரொம்ப நல்ல பேராம். இவரோட  சித்தப்பா மகன் அங்க தான் வேலை பாத்துகிட்டு இருக்கான். அவன் மூலமா நம்ம டவுசரை  விசாரிச்சு இருக்காங்க. இன்னைக்கு தான் என்கிட்டயும் அப்பாகிட்டயும் இவரு சொன்னாருடி” என்றாள் ஸ்ரீமா.

“ப்ச்..அந்த பாண்டி தேவையில்லாம என் விஷயத்தில தலையிட்டு, அநியாயமா அவன் டவுசர் கிழியப் போகுது.” என்று அலுத்துக் கொண்டாள் சந்தியா.

“என்ன பண்ண. உங்க மாமாவே அவனுக்கு புகழ் மாலை போடுறார். அவனை கூட ஏத்துக்கலாம். ஆனா பீப்பா வாய்ய திறந்தா மூடுமா? .திருவிழாவுக்கு போற ரெண்டு மூணு நாள்ல அது  எத்தனை தடவை திட்டி அழ வைச்சிருக்கு.. பல நேரம் பூமான்னு நினச்சுகிட்டு என்னை திட்டும். போற வீட்டில மாமியாரும் கொஞ்சமாவது குணமா இருந்தா தான் அங்க வாழ முடியும்.  அப்பாகிட்ட சொன்ன சிடு சிடுன்னு விழுறாங்க. வர்ற வெள்ளிக்கிழமை மாமா என்னை கூப்பிட வர்றாங்க. அப்போ அவரை  அப்பாட்ட பேச சொல்லியிருக்கேன். அப்பா நாம சொன்னா கேக்க மாட்டாங்க. இவரு சொன்னா  கேப்பாங்கன்னு நினைக்கிறேன்.” என்று அந்த பேச்சை முடித்தாள் ஸ்ரீமா.

ஸ்ரீமா வீட்டு மாமாவால் அப்பாவிடம் பேச முடியாவிட்டால் பூமாவுடன் சேர்ந்து பாண்டியனின் மணம் முடிக்கும் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என சந்தியா நினைத்தாள். அவளால் யோசனையே செய்ய முடியாத நிலை வரும் என்று அவள் எண்ணிக் கூட பார்க்கவில்லை…..

ந்தியா வேலை எல்லாம் முடித்து ஒதுக்கி படுக்க போன நேரம் கார்த்திக் அழைத்தான்.

“பாஸ் இன்னும் தூங்கலையா?”

“இன்னக்கு நீ டிசைன் பண்ணதுல கொஞ்சம் ரிவொர்க், பினிஷிங் டச் கொடுக்க வேண்டியிருந்தது. பொதுவா நான் ஏர்லி பர்ட், காலையில் சீக்கிரம் எழுந்தரிப்பேன். ஆனா, நடுராத்திரி எழுப்பி விடுறியே. மறுபடியும் தூங்க லேட் ஆகிடுது. அதான் இப்போ வேலையை முடிச்சிட்டு படுக்க பாத்தேன்.” என்ற கார்த்திக், மடி கணினியை அருகில் இருந்த மேசையில் வைத்து விட்டு கட்டிலில் முதுகை சாய்த்தான்.

“நான் ஏதாவது தப்பா வொர்க் பண்ணியிருந்தேனா பாஸ்? ” என குப்புற படித்தவள் கழுத்தில் இருந்த சங்கிலியை விரலுக்குள் நுழைத்து விளையாடிக் கொண்டே  ஒரு வித படபடப்புடன் கேட்டாள்.

“எக்ஸ்செலன்ட்டா பண்ணியிருந்த சுகர். நான் ஒரு பெர்பெக்ஷனிஷிட். சின்ன விஷயம் கூட மிஸ் ஆகக் கூடாதுன்னு எக்ஸ்பெக்ட் பண்ணுவேன். உன்கிட்ட உள்ள பிளஸ் பாயிண்டே  வேகமா கத்துக்கிறது தான். அதுனால சீக்கிரம் ட்ரைன் ஆகி, டச் அப் வொர்க் கூட வராத படி பாத்துக்குவ. ஸ்மார்ட் சந்தியா” என்றான் சிரித்துக்  கொண்டே.

“ரியலி ?!!! இதுல உள்குத்து இல்லையே?”, என வியப்பாய், அவன் பாராட்டியதில் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுமுறை உறுதி படுத்திக் கொள்ள கேட்டாள்.

“ம்...ஹும்…”, இல்லையென தலையாட்டிக் கொண்டவன்,

“நான் எதிர்பாரத்தை விட நல்லா பண்ற வல்லிகண்ணு. அடுத்த ரெண்டு நாளும் நமக்கு நிறைய வேலை இருக்கு. தூங்கக் கூட டைம் இருக்காது. வெள்ளிக்கிழமை அஞ்சு மணிக்குள்ள எல்லாத்தையும் முடிச்சா தான் ரிலாக்ஸ்டா நான் ஊருக்கு கிளம்ப முடியும். கண்ணு,  இன் நீட் ஆப் யுவர் ஹெல்ப் ?” என கொஞ்சலாக  கேட்டான் கார்த்திக்.

“என்ன கண்ணு??” போலியாக  கண்டித்தாள்.

“அப்போ.  செல்லம்”, புது அடைமொழியால் அழைத்து அவள் மறு மொழிக்கு ஆர்வமாய் காத்திருந்தான்.

“ செல்லமா? “ மறுபடியும் வினவினாள்.

“நல்லாலையா? உனக்கு ஹனின்னா பிடிக்க மாட்டிங்கிது..சுகர் ன்னா கேவலமா இருக்குங்கிற. வல்லிக்கண்ணுன்னு ஆதிகாலத்து ஸ்டைல்ல இருக்கு, குடு குடு பாட்டி கூட செட்டாகாதுன்னு என் நண்பன் சிவா அட்வைஸ் பண்றான்” என அழுத்துக் கொண்டே பாட்டு போல பாடினான்.

“அதுனால?? இந்த செல்லம் ஐடியாவை அவன் தான் கொடுத்தானா?”, கேள்வி தான், அனால் அவள் கேட்கும் தொனியில் நக்கல் எதிரொலித்தது.

“ஆமா..நான் தமிழ் வாகபலரில வீக். அதான் அவன்கிட்ட ஐடியா கேட்டேன் செல்லம். இதுவாவது பிடிச்சிருக்கா?”, கார்த்திக் கேட்க,

“கில்லி பிரகாஷ்ராஜ் கூப்பிடுற மாதிரியே இருக்கு. நேத்து அந்த பர்தா ஐடியாவை அவன் தான கொடுத்தான்?”, சந்தியா.

“எஸ் செல்லம். அவங்க ரெஸ்டாரண்ட்ல பாயா போடுற ஆயாவோட பர்தாவை வாங்கி கொடுத்தான். அவனோட ஐடியான்னு உனக்கு தெரியமா ?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.