(Reading time: 33 - 65 minutes)

வர்கள் சென்ற பின்னர் அமைதியான  சந்தியா வீட்டில், லக்ஷ்மி தன் மகள்களிடம், “ஏன் பாப்பா, அடுப்பு அப்படி ஒன்னும் குப்பையா தெரியலேல, அவுங்க கிச்சனை எல்லாம் வந்து பாப்பாங்கன்னு நினைச்சு கூட பாக்கலை. அவங்க என்ன நினைச்சிருப்பாங்களோ” என புலம்பினார். ஸ்ரீ யும், சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“ஏன்டி சிரிக்கிறீங்க. கூடமாட வீடை கூட்ட வைக்கன்னு இருந்தீங்கன்னா இப்படி திடீர்ன்னு யாராவது வர்றபோ வீடு பாக்க அசிங்கமா இருக்காதுல்ல” என்றார் லக்ஷ்மி ஆதங்கத்துடன்.

“யாழு, நித்தி, நிக்கி எல்லாரும் சேர்ந்துகிட்டு பேப்பரை கிழிச்சு விளாண்டு ஹால்ல இரச்சு வச்சிருந்தாங்க. பேன் காத்துக்கு பறந்து எல்லாம் கிச்சனுக்குள்ள வந்துடுச்சு. நாம எல்லாரும் பேக் பண்றதுல பிசியா இருந்ததுன்னால ஒன்னும் பண்ண முடியல. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தினமும் கூட்டி விட்டு சுத்தமா தான வைச்சிருக்கோம். அப்படி தப்பா நினச்சா நினைச்சுகிட்டு போறாங்க. சும்மா சும்மா பிள்ளைங்களை இதை செய்யாத அதை செய்யாதன்னு மிரட்டிகிட்டே இருக்க முடியுமா? எங்க அத்தை எந்த நேரமும் யாழுவை மிரட்டி மிரட்டி அவளுக்கு அவங்களை பிடிக்க மாட்டிங்குது. அவ இங்க வந்தா தான் ப்ரீயா பீல் பண்றா. சந்து நல்லாயிருந்தா அழகா பிள்ளைகளை சமாளிச்சிருப்பா. அவளே கால் வலியோட நாளைக்கு மீட்டிங்குக்கு ரெடி பண்ணனும்ன்னு பிசியா இருக்கா” என்று லக்ஷ்மியை சமாதான படுத்தினாள் விந்தியா.

லக்ஷ்மியின் அருகில் வந்த சந்தியா, “ம்...இந்த மாதிரி பணக்காரவங்களை பாத்தவுடனே வழிஞ்சிட்டு ஜால்ரா அடிக்கிறீங்க? நாம இப்படி பண்றது தான் அவங்களுக்கு பணத்திமிர் வர்றதுக்கு காரணம். உங்களுக்கு அப்படி என்ன அவுங்களை பார்த்தும் பூரிப்பு? அப்பா அதுக்கு மேல. அப்பா ஏன் அவங்களை தாங்கணும்? அவங்க நமக்கு என்ன பெருசா செய்திட்டாங்க?” என அவள் கேள்விகள் தொடுத்துக் கொண்டிருந்தது வரவேற்பறையில் இருந்த தன்ராஜிற்கு கேட்க, அவர் அங்கு  எழுந்து வந்தார். லக்ஷ்மி அவளுக்கு என்ன பதில் சொல்லவென்று யோசிப்பதற்குள் அங்கே வந்தவர் சந்தியாவிடம்,

“உனக்கு கால் சுளுக்கு ஆனப்போ அவங்க எனக்கு என்னன்னு ஒரு ஆட்டோ பிடிச்சு உன்னை வீட்டுக்கு அனுப்பி வைச்சிருக்கலாம்ல? அன்னைக்கு அர்ஜுனுக்கு உதவி பண்ண அவுங்க பிள்ளைகள் வந்தாங்க தான? நன்றி மறப்பது நன்றன்று. யாரையும் மனசை பாத்து தான் எடை போடணும். ஒருத்தவங்களை பத்தி முழுசா தெரியாம தத்து பித்துன்னு உளறிகிட்டு இருக்க கூடாது. சதாசிவம் சாரை பாத்தியா? கான்சர் ட்ரீட்மெண்ட் எடுத்து  அவர் தலையில ஒரு முடி இல்ல. கூச்சப் பட்டுகிட்டு அவ்வளவா எங்கயும் போக மாட்டாராம். இன்னைக்கு அவரு தங்கச்சி மகள் நம்ம கூட பழகுறதை பாத்து சந்தோஷப் பட்டு நமக்கு நன்றி சொல்ல வந்திருக்காரு. அவ்வளோ பெரிய மனுசர்  இந்த நிலைமையிலையும் இங்க வந்து சொல்லணும்ன்னு என்ன அவசியம்? நீ கெட்டிக்காரின்னு நினைச்சேன். அவங்களை  பத்தி இப்படி பேசிக்கிட்டு இருக்க? அவங்க காதுல விழுந்தா என்ன நினைப்பாங்க?” என அறிவுரையை சற்று கடுமையாக கூறினார்.

அப்பா சொன்னவுடன் தன் தவறை உணர்ந்தவளாய் “சாரிப்பா, நீங்க இந்த அளவுக்கு  பணிவா பேசி நான் பாத்தது இல்ல. யார்கிட்டயும் ஒரு மிலிட்டரி மேனா கம்பீரமா பேசி தான் பாத்திருக்கேன். அதான். எனக்கு கோபம் வந்துடுச்சு.” என்றாள் தணிந்த குரலில்.

“பணம், பேர், புகழ் அத்தனையும் இருந்தும் எளிமையா பழகுறது ரொம்ப கஷ்டம் பாப்பா. அப்படிபட்டவங்களை  பாக்கிறப்போ, நம்மை அறியாம மரியாதை கொடுக்க தோணும். அப்படி  தான் சதாசிவம் சாரை பாக்கிறப்போ எனக்கு தோணுச்சு ” என்று சந்தியாவிற்கு தன்ராஜ் விளக்க அவள் புரிந்தவளாய் தலையாட்டினாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரும் படுக்க ஆயத்தமாக,

“ஒவ்வொரு கார்த்திகைக்கும் விரதம் இருக்கணும்னு நேந்திருக்கேன். இந்த மாசத்தில கார்த்திகை எப்ப வருது” என காலண்டரை பார்க்க சென்ற சந்தியாவிடம்,

“நாளைக்கு தான்டி கார்த்திகை. நீ பேசாம அடுத்த மாசத்தில இருந்து விரதம் இரு” என்றாள் விந்தியா.

தன் அக்கா சொல்வதை நம்பாமல் காலண்டரை பார்த்த சந்தியா, அவள் சொன்னதை ஊர்ஜிதம் செய்த படியே, “விந்தி ஒன்னு நினைச்சா செஞ்சிடணும். இல்லாட்டி சாமி கண்ணை குத்திடும்.” என்று சொல்லிக் கொண்டே இரு விரல்களையும் விந்தியாவின்  கண்களுக்குள் குத்த போவது போல செய்து காண்பிக்க, “சீ..போ” என சந்தியாவின் விரல்களை முறுக்கினாள்.

“ஸ்..ஆ..அம்மா…. பாவம்டி பெரிய மாமா. உன் வன்முறை தாக்குதல தாக்கு பிடிக்க முடியாம தான், உள்ளூர்ல இருந்தாலும் ஒரு வாரம் நீ இங்க வந்ததும் ஏ... என் பொண்டாட்டி அம்மா வீட்டிக்கு போயிட்டான்னு அம்மன் கோவில்ல பொங்கல் வைச்சு கொண்டாடுராறு”  என அதற்கு விந்தியா,

“ஒரு பாட்டுக்கு பல டிரஸ் மாத்திற ஹீரோயினாட்டும் பிறந்த நாளைக்கு வித விதமா போட்டு உருவி உருவி எரிஞ்சிட்டு போயிட்ட. அம்மா வீட்டுக்கு ரெஸ்ட் எடுக்கன்னு வந்து, உன் பத்து செட் டிரஸ்ஸ தோச்சு போட்டது தான் மிச்சம். இதுக்கு நான் எங்க வீட்டிலே இருந்திருக்கலாம் போல” என விந்தியா அலுத்துக் கொள்ள,

“இதெல்லாம் வெயிட் லாஸ் ட்ரிக்குக்கா. நீ கொடியிடையா பவனி வர வேண்டாமா? உன்னை பாத்ததும் காலேஜ் பொண்ணுக எல்லாம்   ஓடி வந்து

“ நீங்க எந்த காலேஜ்ல படிக்கிறீங்க?”  கேட்டதும், நீ,

“நானா காலேஜா ..ஹாங்...ஹாங்” (சந்தியா கொஞ்சி கொஞ்சி பேசி காண்பித்தாள்)

நீ வெக்கப்பட்டு கனைக்குறது நினச்சு பாத்தா எப்படி புல்லரிப்பா இருக்கு தெரியுமா விந்தி? அதுக்கு தான் உன்  தங்கச்சி இந்த பாடுபடுறா” என நக்கலடிக்க,

“இரு. இரு. இன்னக்கு உன்னோட இன்னொரு காலையும் உடைக்காம விட மாட்டேன்டி” என விந்தியா அவள் முதுகில் சத்தென போட்டுக் கொண்டே சவால் விட,

“ஏய் பாப்பா, அப்படி மட்டும் செய்த, இவ என்னை படுத்த படுக்கையா ஆக்கிடுவா” என்று லக்ஷ்மி பதறினார்.

“உள்நாட்டில எனக்கு எதிரிங்க அதிகமாகிட்டே போறாங்க. டீச்சர் நீங்களுமா? சரியே இல்ல. சந்தியாவோட மொக்கை ட்ராக்ல சிக்கி சின்னாபின்னமாக வேண்டாம், விலகி ஓடுமாறு கடைசி எச்சரிக்கை விடுறேன்.” என்று விட்டு,  “டீச்சர்  அடுத்து, நம்ம சாப்பாட்டு மேட்டருக்கு வருவோம். நான் நாளைக்கு விரதம் இருந்து, சாயங்காலம் அஞ்சு மணி வாக்கில் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்துடுறேன். நான் வந்ததும் மணக்க மணக்க சாம்பார்,ரசம், ஒரு கூட்டு, இரண்டு பொரியல், அவியல், அப்பளம், பாயாசம்ன்னு ரெடி பண்ணி வச்சுடுங்க“ என்று லக்ஷமியிடம் சொல்லிவிட்டு, அவர் பேசுவதை காதில் வாங்காமல்,  மாடிப் படிக்கட்டுகளில் மெதுவாக நொண்டி நொண்டி ஏறி  தன்னறைக்குச் சென்றாள்.

கார்த்திக்கை மடி கணினியில் வீடியோ கான்பரன்ஸில்தொடர்பு கொண்டாள். இருவரும் கண் விழித்து அடுத்த நாள் நிரஞ்சனின் நிறுவனத்தின் குழுவினருக்கு காட்ட வேண்டிய செயல்முறை விளக்கத்தை தயார் செய்து முடித்தார்கள். படுக்க செல்லும்  போது மணி இரண்டை தொட்டது. கார்த்திக்கின் கண்கள் சிவந்து போய் இருந்தன. அதை பார்த்த சந்தியா,

“பாஸ் நீங்க போய் படுங்க. நாளைக்கு உங்க பேரை காப்பாத்திடுவேன் “

“ம்...அது தெரியும். நாம சொல்ற மாற்றங்களை டிவலப்மென்ட் டீம் பாத்துகிட்டு என்ன சொல்ல போறாங்களோ தெரியலை. நிருவும் கண்டிப்பா இந்த என்ஹன்ச்மென்ட் எல்லாம் கொண்டு வந்தா தான் மார்கெட்ல டிமான்ட்டை உருவாக்க முடியும்ன்னு சொல்றான். ஆனா ஏற்கனவே ப்ளான் பண்ண தேதில இதையும் சேர்த்து ரிலீஸ் பண்ண டீம்ல அதிவேகமா வேலை பாக்கிற ஆட்கள் இல்ல. இது வொர்க் அவுட் ஆகாட்டி நானும் நிருவும் ப்ளான் பி வச்சிருக்கோம். அதாவது நாங்களே உள்ள இறங்கி டிவலப்மென்ட் டீம் கூட சேர்ந்து வேலை பாக்கிறது. ஏற்கனவே இருக்கிற கமிட்மென்ட்ஸ் கூட அதையும் செய்றது கஷ்டமான விஷயம். லைப் ரொம்ப ஹெக்டிக் ஆகிடும் கண்ணு“ என்று விட்டு கைகளை விரித்து சோம்பல் முறித்தான்.

“உங்க ‘ப்ளான் பி’ல என்னையும், வாத்தையும் சேத்துக்க முடியுமா ?” , எனக் கேட்டாள் சந்தியா.

“உனக்கு அடுத்த மூணு மாசத்துக்கு ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு. அதுனால உனக்கு ஒரு பிக் நோ. வாத்துன்னா வினோத் தான ? உங்க ப்ரோபசரோட  ரிசெர்ச் டீம்ல உன்கூட வொர்க் பண்ண  பையன் தான?. நான் ஆர்ம்ஸ் பௌண்ட்டேஷன் பத்தி விசாரிக்க அவன் கூட பேசுயிருக்கேன். ஆனா அந்த பையன் ஏற்கனவே வேலை பாக்கிறானே..அதோட அவன் எதிர்ப்பாக்கிற பேக்கேஜ் என்னால குடுக்க முடியாது செல்லம்” என்றான் கார்த்திக்.

“அவனால நாலு மணி நேரம் ஒரு நாளைக்கு நமக்காக வேலை பாக்க முடியும். நான் சொன்னா ஓசியிலே செய்து கொடுப்பான். அதோட அவனுக்கு நாம பண்ற சப்ஜெக்ட் ரொம்ப பிடிச்ச விஷயம். எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் செய்யுங்க. எனக்கு குடுத்த அந்த ப்ராடக்ட் ஷேர்ஸ்சை அவனுக்கு மாத்தி விட்டுடுங்க.” என்றாள் சந்தியா.

“தியாகச் சுடரே, இந்த கை மாத்துற வேலையெல்லாம் வேண்டாம். உங்க வாத்துட்ட இது விஷயமா நானே பேசிக்கிறேன். என்னால முடிஞ்ச பேமென்ட் அவனுக்கு பண்றேன். அவனுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா வரட்டும். நீயா எதுவும் அவனை வற்புறுத்தாத. மீதியை நாளைக்கு பேசலாம். இப்போ தூங்கு.  இது தான் உன் பெட்ரூமா?”

“ம்...எஸ்”, சந்தியா தலையாட்டிய படியே.

“ லுக்ஸ் சோ கேர்ள்லி ”, என்றான் கண்கள் மிளிர. இள ரோஜா நிற சுவரில் வண்ணமயமாய்  கலை நயத்துடன்  அலங்கரித்திருந்தாள்...சுவற்றில் ஒரு பெரிய வானவில் ஓவியம்...

அவள் திரும்பி பார்த்து விட்டு “அப்படியா தெரியுது?”

சிரித்தவன் “ஹன்...ஹன்” சாய்ந்து பார்த்துக் கொண்டே நாற்காலியை அரைவட்டமாக சுழற்றியவாறு லேசாக தலையாட்டினான். அவன் கருகருவென்ற அடர்த்தியான கேசமும் அதற்கேற்றார் போல அசைய, அவன் தலையை கோதி விட துடித்தன அவள் கைகள்.

தோளை குலுக்கியவாறு “உங்க ரூம் எப்படி இருக்குன்னு பாப்போம்” என அவளும் பதிலுக்கு கணினியில் எட்டி பார்த்து விட்டு  “ஹம்...லைப்ரரி மாதிரி இருக்கு பாஸ். “ அவன் அறையில் ஒவ்வொரு பொருளும்  அழகாக நேர்த்தியாக  அடுக்கி வைக்கப் பட்டிருந்ததை பார்த்து கிண்டலடித்தாள்.

அவள் சொன்னவுடன்  பலமாக சிரித்த கார்த்திக், “அப்படியா தெரியது?”

சிரித்தவள், “ஹன்...ஹன்” அவனை போலவே லேசாக தலையாட்டினாள். அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் கார்த்திக்.

“என்ன” என்பது போல புருவத்தை அவள்  உயர்த்த,

“என்ன” என பதிலுக்கும் அவனும்  புருவத்தை உயர்த்த,

“ப்ச் “ என உதட்டை சுளித்தாள், அவனும் பதிலுக்கு “ப்ச்” என உதட்டை சுளித்தான்.

அவள்  தோலை குலுக்க அவனும் அதையே செய்தான்.

“காபி கேட்” என சொல்லி விட்டு அவள் அழகு காட்ட, அவன் பதிலுக்கு அழகு காட்டாமல், “சொந்த தயாரிப்பு” என்று விட்டு  “உம்மா” என முத்தமிடுவது போல செய்ய,

“பாக்க ரன்பீர் கபூர்  மாதிரி இருந்துகிட்டு  செய்றதெல்லாம் இம்ரான் ஹாஸ்மி வேலை” என்று அவன் தலையில் “நங்” கென குட்டு வைப்பது போல கணினி முன் விரல்களை மடக்கி காண்பித்தாள்.

‘ஸ்...ஆ” என குட்டு  வாங்கி வலிப்பது போல நடித்தான்.

மறுபடியும் கொட்டு வைக்க அவள்  விரல் முட்டியை தேய்த்த படி  ஆயத்தமாக,

“ப்ளீஸ். வேணா வலிக்குது. அழுதுடுவேன் ” என  தலையை தேய்த்து விட்டு அவளுக்கு பெரிய கும்மிடு போட்டு காண்பித்தான். சந்தியாவிற்கு சிரிப்பு வர, “அந்த பயம் இருக்கட்டும்” என்று விட்டு  சிரிக்க,  

“பீக் டைம் முடிஞ்சு பிரம்ம முகூர்த்தம் ஆரம்பிக்க போகுது இன்னும் ஏன் சிரிச்சு பயஞ்காட்டுற “ கதறுவது போல சொன்னான்.

அவள் மீண்டும் சிரிக்க, “மறுபடியுமா?? சரி, இரண்டு நிமிஷத்தில் கால் பண்ணுவேன். பில்லோ ஹக் வேணும்னா சீக்கிரம் ரெடியாகு.  இல்லாட்டி தூங்க போயிடுவேன்” என அவன் மிரட்ட வேகமாக அதற்கு தயாரானாள்.

சில நொடிகளில் கார்த்திக் போனில் அழைத்து பாட,

ஆழியிலே முக்குளிக்கும் அழகே!

ஆவியிலே தத்தளிக்கும் அழகே!

உன் தின்னென்ற கன்னத்தில், திம்மென்ற நெஞ்சத்தில்,

இச்சென்று இதழ் வைக்கவா? இச்சைக்கோர் இலை வைக்கவா?

உன் உம்மென்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்

இப்போதே தடை வைக்கவா? மௌனத்தை குடி வைக்கவா?

அவன் பாடி முடித்து இணைப்பை துண்டிக்க போனவனை தடுத்தவள், “ஏய் கார்த்திக் இந்த பாட்டில ரொமான்ஸ் அதிகமா இருக்கு.இப்படி எடாகூடமா பாடினா கட் பண்ணிடுவேன்” என்றாள் சந்தியா.

“உன்னை யாரு  லிரிக்ஸ் எல்லாம் ஆராய்ச்சி பண்ண சொன்னது. கண்ணை மூடி தூங்கு. குட் நைட்” என்று விட்டு போனை வைத்தான்.  “உனக்கு பிடிக்காட்டி எப்பவோ கட் பண்ணியிருப்பியே சந்தியா ….உனக்கு பிடிச்சிருக்கு தான...இன்னைக்கு தான் எனக்கு முதல் வெற்றி” என்று  எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 16

Go to Episode 18

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.