(Reading time: 33 - 65 minutes)

ந்த மாதிரி இத்து போன ஐடியாவை  அவனால மட்டும் தான் கொடுக்க முடியும். உங்களுக்கு போய்  எப்படி பாஸ் இப்படி ஒரு பிரண்ட்? முதல்ல அவன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணுங்க” என்று அதிகாரமாய் கூறினாள்  சந்தியா.

“எனக்கு இந்த ஊர்ல ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு இருக்கிற ஒரே ஒரு பாய் பிரண்ட் அவன் மட்டும் தான். அதுனால அவனை மன்னிச்சு விட்டுடு. சரி, நீ என்ன பண்ண இவ்வளோ நேரம் ?”

“பூக்கு குடுத்து விட  கை முறுக்கு சுட்டேன் பாஸ்….. ஹே உங்ககிட்ட மது சொன்னாளா ஸ்நாக்ஸ் எடுத்திட்டு போறதுக்கு?“ என சந்தியா கேட்டவுடன் கார்த்திக்கிற்கு பொசுக்கென கோபம் வந்தது.

“நேத்து என்கூட எவ்வளோ நேரம் பேசின? என்கிட்டே கேட்டிருக்க வேண்டியது தானே?” என அவன் கேட்டதில் அவன் கோபம் தெரிந்தது.

“சும்மா சில்லி விஷயத்துக்கு ஏன் புஸ் புஸ்ன்னு கோபம் வருது அங்க்ரி பர்ட்க்கு? நேத்து நான் கேக்க வந்தப்போ ஒரே மசாலா பாட்டா பாடி டைவர்ட் பண்ணி விட்டீங்களே“ என்று அலுத்துக் கொண்டாள்.

“ஐ டோன்ட் திங் திஸ் இஸ் சில்லி. இந்த தூது சொல்லி விடுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத.“ எரிச்சலுடன் சொன்னான் கார்த்திக்.

“மதுவை  தூது  நீங்க தான் பாஸ் அனுப்புனீங்க. எனக்கு எல்லாமே நீங்க தான்கிற மாதிரி பேசுறீங்க? அப்படி அக்கறை இருக்கிறவங்க ஏன் என்னை பார்க்க வரலை?” என அவனுக்கு சரியாக பதிலடி கொடுத்தவள் அதோடு தன் ஏக்கத்தையும் வெளிபடுத்தினாள்.

வனுக்கு அங்கு வர விருப்பமில்லை என அவளிடம் வெளிப்படையாக  சொல்ல முடியாதே…. ஒரு நொடி என்ன சொல்லவென்று தயங்கியவன், “எந்த உரிமைல உன்னை வந்து பாக்க சொல்ற? நான் யாரு சந்தியா உனக்கு?”, அவன் குரல் ஏக்கத்துடன் தொனிப்பது போல கேட்டான்.

“என்ன பெரிய உரிமை? பாஸ்ங்கிற உரிமை போதாதா?” என்றாள் அலட்சியமாக.

“ஒரு சாதாரண ஸ்ப்ரைன்னுக்கு எந்த பாஸ் வீட்டுக்கு வந்து பார்க்க வருவான்? கொஞ்சம் கூட லாஜிக்கலா இல்லை” என்றான் கார்த்திக்.

“அப்ப ப்ரண்ட்டா வரலாம்ல” என்றாள் வேகமாக.

“ஐ ஆம் நாட் யுவர் ப்ரன்ட்..” என ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக  கொட்டி விட்டு “இதை ஏற்கனவே சொல்லிட்டேன்” என மீண்டும் அவளிடம்  நினைவுருத்தினான்.

“ப்ச்.. சரி, நீங்க யாருன்னு எனக்கு தெரியலைன்னே வச்சுக்கோங்க” என அலுத்து கொண்டவள், பின் “ஆனா, இவ்வளோ பொசஸிவ் இருப்பீங்கன்னு நினச்சு கூட பாக்கலை. உங்களுக்கு தெரியுமா கார்த்திக்? இதுக்கு முன்னாடி பூவோட ரெண்டு குட்டிங்களை எங்க கண்ணுக்கு காட்டாமலே முருகன் எடுத்துக்கிட்டான். இது மூணாவது குழந்தை. எங்க பூ மாசமா இருக்கிறதுனால ஒரு தாய் பாசத்தில மதுகிட்ட அம்மா கேட்டாங்க.  எந்த ஒரு நெகடிவ் தாட்ஸ்ஸும் அந்த குழந்தைய பாதிக்க கூடாது.  நான் தப்பு பண்ணி உங்களை பீல் பண்ண வச்சா சாரி. ப்ளீஸ் இந்த பேச்சை இப்படியே விட்டுடுங்க” என்று  கவலையோடு  கெஞ்சலான குரலில் சொல்ல, அவனுக்கு என்னவோ போலாகி விட்டது.

“ஏய், வல்லிகண்ணு, எனக்கு உன் மேல தான் கோபம். சரி அதை விடு.  பழச பத்தி நினைக்காம சியர் அப் அண்ட் பி ஹேப்பி.  உங்க பூமாக்கு கொழு கொழுன்னு அழகா ஒரு குட்டி தேவதை  பிறப்பா பாரு.“ என்றான் இதமாக.

சந்தியா அவன் ஆறுதலில் உற்சாகமானவளாய், “எதை வச்சு பொண்ணுன்னு சொல்றீங்க? எனக்கு பொண்ணுன்னா பிடிக்கும். உங்க வாக்கு பலிக்கணும் பாஸ்” என்றாள் குஷியாக.

“என் வாக்கு பலிச்சா  என்னை தேடி வந்து  ஹக் கொடுத்து  கிஸ் அடிச்சு தேங்க்ஸ் சொல்லணும்” என்று அவன் கிடைத்த வாய்ப்பை விடாமல் காதல் வசனம் பேசி குறும்பு செய்தான்.

“ஏன் பாஸ் ஹிந்தி ஆக்டர் இம்ரான் ஹாஸ்மியாட்டம் கிஸ் அடிக்கிறதுல்லே இருக்குறீங்க” என கிண்டலடித்தாள்.

“ஹா...ஹா..” என சிரித்தவன், “பாலிவுட் படத்தையும்  விட மாட்டியா நீ?”

“அய்யோ அந்த படமெல்லாம் பாக்கலை. ஒரு தடவை சத்தியம் தியேட்டர்  போனப்ப அவன் பட  போஸ்டர் பாத்துட்டு  ப்ரண்ட்ஸ்  சொல்லியிருக்காங்க” என்றாள்.

“நாம வேணா சென்னை போறப்போ அதை விட சூப்பர் படத்துக்கு போலாம்” என்றான் கார்த்திக் அந்த சூப்பரில் சூப்பர் அழுத்தத்துடன்.

“ஆசை தோசை…..இவ்ளோ நேரம் முறுக்கு சுட்டு  டையர்டா இருக்கு. ஒரு பாட்டு பாடுனா அப்படியே தூங்கிடுவேன் பாஸ்” என கேட்டாள் சந்தியா.

“போனா போகுதுன்னு ரெண்டு நாள் பாடினா தினம் பாட சொல்வ போல.“, என குறும்பு புன்னகையுடன் கேட்டாலும், அவள் கேட்கிறாள் என்றவுடன் உள்ளுக்குள் அவனுக்கு அப்படி ஒரு கர்வம் வந்தது.

“அப்ப விடுங்க  பாஸ் நான் பாடுறேன்.” என்று விட்டு தொண்டையை செரும,

“அய்யோ அந்த கொடுமைய மட்டும் செய்திடாத. விக்ரமாதித்யன் வேதாளத்துக்கு கதை சொல்ற மாதிரி பாட்டு பாடுனா தான் விடுவ போல இருக்கே. பாடுறேன். ஆனா, பல்லவி மட்டும் தான் பாடுவேன்” என நிபந்தனை விடுத்தான்.

“சீக்கிரம். நல்லா லவ் சாங்கா பாடுங்க பாஸ். செம லவ் மூட்ல இருக்கேன்.”, என அவனை அவசரபடுத்திக்   கொண்டே தலையணையை அணைத்தாள்.

“லவ் மூடா?”, ஆச்சர்யத்துடன் கேட்டான் கார்த்திக்.

“எங்க வசூல் ராஜாவுக்கு என் கையால முறுக்கு சுட்டேன் பாஸ். அதான்….ஆனா நீங்க கவலைப்படாதீங்க. ஓ வெண்ணிலா இரு வானிலான்னு  பாடுங்க” என்று அவனை  சீண்டி விட்டு  அவனக்கு கேட்க்காத வண்ணம் சிரித்தாள்.

அவள் சிரிக்கும் சத்தம் சன்னமாக அவனுக்கும் கேட்டது. அவள் அவிழ்த்து விடுவது  பொய் தானோ  என்ற யோசனையோடே பாட ஆரம்பித்தான்.

பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்

கைகளால் கைகளில் ரேகை மாற்றினை

 

பொய் ஒன்றே ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய்

கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி

வழக்கம் போல பாடி முடித்ததும் சத்தமில்லாமல் இணைப்பை துண்டித்த பின்னும், அவள் சொன்ன வசூல் ராஜா உண்மையாக இருக்குமோ என சிறிது நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்தவன், சந்தியாவிற்கு பூமாவின் தொலைபேசி எண்ணை அனுப்புமாறு மின்னஞ்சல் அனுப்பி விட்டு தூங்கினான்.

மே 17, வியாழக்கிழமை

ந்தியா காலை எழுந்ததும்  கார்த்திக்கின் மின்னஞ்சலை பார்த்து விட்டு பூமாவின் தொடர்பு எண்ணை  அவனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தாள். பின் பூமாவிற்கு அழைத்து கார்த்திக்கின் விவரங்களை கூறிவிட்டு பாண்டியன் பற்றி ஸ்ரீமா பேசியதை சொல்ல, பூமா அதற்கு, “சரிடி...குணா சரியான பயந்தாங்குளி.  ஸ்ரீ சொன்ன மாதிரி சின்ன மாமா தான் அப்பாகிட்ட தைரியமா பேசுற ஆளு. அவரு பேசியும் அப்பா கேக்காட்டி, நீ தான் பேசணும். என்னை கிணத்தில இருந்து பாண்டியன் காப்பாத்தினதை கொஞ்சம் பில்ட் அப் குடுத்து சொல்லு. பூமாகிட்ட பாண்டி தப்பா நடந்தது சின்ன வயசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. அக்காகிட்ட அப்படி நடந்துகிட்டவனை  என்னோட புருஷனா நினச்சு பாக்கவே முடியல. அப்படி இப்படின்னு பஞ்சிங்கா சொல்லி நடிச்சிடுடி. உனக்கு தான் அழுகையே வராதே...கிளிசரின் வாங்கி போட்டுக்கோ. நீ இந்த மாதிரி பேசுனா தான்டி அப்பாக்கு  பயம் வந்து பேக் அடிப்பாங்க “ என்றாள் பூமா.

“அந்த விஷயத்தை ஏன் இழுக்கிற. அவன் அன்னைக்கு உன் உயிரை காப்பாத்தாட்டி நீ இப்போ என் கூட பேசிக்கிட்டு இருக்க மாட்ட. அந்த வயசுல அவன் உன்னை மடியில வைச்சு, வயித்தை அமுக்கி, அழுத்தி பிடிச்சு, வாயோட வாய் வச்சு  தண்ணியை வெளியேத்த ட்ரை பண்ணதை தப்பா புரிஞ்சிட்டேன். அப்ப எனக்கு கசமுசான்னா டிபனிஷன் கூட தெரியாதுடி.  நான் வயசுக்கு கூட வரல. அதான் ஊரெல்லாம் அவனை பத்தி தப்பா டமாரா அடிச்சு அப்பாகிட்ட போட்டு கொடுத்தேன். அதை இப்போ நினச்சா கூட கில்டியா இருக்கு தெரியுமா?  “ என சந்தியா சொல்ல,

“அப்போ அவனையே கட்டிக்கிட்டு உன் பாவத்தை கழுவிக்கோ..அவன் உன்னை திட்டம் போட்டு கல்யாணம் பண்ண ட்ரை பண்றான்னு நீ சொன்னதுல இருந்தே எனக்கு திக் திக்குன்னு இருக்குடி. நீ இப்படி கூல்லா இருக்க” என்றாள் பூமா வருத்தத்துடன்.

“லூசு பூமா. இப்படி எல்லாம் கண்ட கண்டதையும் நினச்சு குழம்பிக்கிட்டு இருந்த, மாமாகிட்ட போட்டு குடுத்துடுவேன்டி. நான் எந்த நிலைமையும் சமாளிச்சிடுவேன்னு தெரியும் தான? இந்த சந்தியா வாய் போதும். அதை வைச்சு  உலகத்தையே விலை பேசிடுவா...இந்த டவுசர் எம்மாத்திரம்? கவலைய விடு.  நீ வயித்தில பிள்ளைய வைச்சுகிட்டு இருக்க. நல்லதை மட்டும் யோசி.” என்று வீர வசனம் பேசி விட்டு வைத்தாள். யாரையும் பெரிதளவில் நோகடிக்காமல் இந்த திருமண முயற்சியை முறியடிப்பது எப்படி என யோசித்துக் கொண்டே பல் விளக்க  கிளம்பும் போது, கார்த்திக் அழைத்து அடுத்த அரை மணி நேரத்திற்குள் வேலையை ஆரம்பிக்க அழைப்பு விடுக்க சரியென வேக வேகமாக தயாராகி அவனுடன் அன்றைய திட்டமிட்ட வேலைகளை முடிக்க ஆரம்பித்தனர். மாலையான பின்னும் வேலை முடியாததால், கார்த்திக் அவளிடம்  மீதியை இரவு பார்க்கலாம் என்று விட்டு அலுவலகத்தில் இருந்து  வீட்டிற்கு கிளம்பினான்.

அன்றும், மாலை மது நித்தி, நிக்கியை கூட்டிக் கொண்டு வந்தாள். மதுவுடன் சேர்ந்து பத்து நிமிட சிக்மா பராஜக்ட் வேலையை முடித்து விட்டு,  அனைவரும் அரட்டை அடித்து கொண்டே , பூமாவிற்கு அமெரிக்காவிற்கு அனுப்பி விடும் பொருட்களை பேக் செய்து ஒரு பெரிய பையில் அடுக்கி கொண்டிருந்தனர்.

அப்பொழுது மதுவை அழைக்க சௌபர்ணிகாவும், சதாசிவமுமே நேரில் வர, சந்தியா வீட்டில் அனைவரும் பரபரப்படைந்தனர், தன்ராஜ் உட்பட. ஒரே தடபுடலாக உபச்சாரம் நடந்தது. சந்தியாவிற்கு இயல்புக்கு மாறாக தன் தகப்பனார் அவர்களை தாங்குவது சற்று எரிச்சலை அளித்தது. சந்தியா வீட்டிற்குள் மெதுவாக நடக்க ஆரம்பித்திருந்ததால், அவர்களிடம்  வரவேற்பறைக்கு வந்து மரியாதை நிமித்தம் சிறிது நேரம் பேசி விட்டு உள்ளே வேலை என செல்ல, அவளுடன் சௌபர்ணிகாவும் வந்தார். பின், லக்ஷ்மி அவருக்கு வீட்டை சுற்றி காண்பிக்க, மது அறியா வண்ணம், “அம்மா வாயெல்லாம் பல்லா இருக்கு பாரு” என ஸ்ரீமாக்கு சைகை காட்ட ஸ்ரீமாவும் ஆமோதித்து, அந்த விஷயத்தை விந்தியாவிற்கு சத்தமில்லாமல் பரப்பினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.