(Reading time: 44 - 87 minutes)

16. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

கார்த்திக் மிகச் சாதுர்யமாக திட்டமிட்டு, தனது மென்பொருள் தயாரிப்பில் இருந்து  சந்தியா பின் வாங்க முடியாத படி அவள் கல்லூரி நண்பர்களுடன் நடத்தும் ஆர்ம்ஸ் பௌண்டேஷனுக்கு ஒரு பங்கு நிதி செல்வது போல செய்து, சந்தியாவின் நன்மதிப்பை பெற்ற நேரம் தொண்டு நிறுவனத்திற்கு ஒரு பங்கு செல்வதால் தனது மென் பொருளுக்கு வரி விலக்கும் பெற வழி வகுத்தான்.

சற்று நேரத்தில் விந்தியாவும், ஸ்ரீமாவும் கடைக்கு சென்று விட்டு திரும்ப, அவர்களுடன் வந்த லக்ஷ்மியும் சந்தியா இருந்த அறைக்கு வந்தனர். அவளிடமும்  மதுவிடம் பான்சி ஸ்டோரில் வாங்கிய பொருட்களை  காண்பிக்க, பேச்சு அதில் திசை திரும்பியது.   பேச்சினோடே  குழந்தைகளுக்கு உணவூட்டிய பின், அனைவரும் உணவை தட்டில் போட்டுக் கொண்டு வந்து  அந்த அறையிலே அரட்டை அடித்துக் கொண்டே உண்ண, மதுவும் அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க  அவர்களுடனே உண்ண சம்மதித்தாள்.  அப்பொழுது கார்த்திக் மதுவை அழைக்க அதை கண்டுக்காதது போல ஆனால் உள்ளுக்குள் அதி கவனம் செலுத்திய சந்தியாவின் காதில், "ஓ....அதுவா...நீ போன் பண்ணப்போ சந்தியா தெரியாம காலை மூவ் பண்ணா. அவங்க அப்பா போன் பேசக் கூடாதுன்னு போனை வாங்கிட்டாங்க. இவங்க எல்லாரும்  ரெம்ப கம்பல் பண்றதால சாப்பிட்டிட்டு வாரேன். அத்தைகிட்ட சொல்லிடு. 8:30 க்கு என்னை பிக் அப் பண்ண வந்திடு" என்ற மதுவின் பேச்சு விழுந்தது. சந்தியாவின் மனம்  கார்த்திக்கை எதிர்பார்த்து காத்திருந்தது.

மதுவிற்கு இப்படி ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் அங்கு நடப்பது எல்லாம் வியப்பாக இருந்தாலும் அசௌரியமாக இல்லை. கண்ணே மணியே என யாரும் கொஞ்சி குலாவவில்லை... இருந்தாலும் அவர்கள் பேச்சில், சிரிப்பில், கிண்டல்  கேலியில் அன்பு உலா வந்து கொண்டிருந்தது. சந்தியாவிற்கு தட்டில் பால் சோற்றை பிசைந்து வந்து கொடுத்த லக்ஷ்மியிடம் "ஏம்மா அவளுக்கு கால்லு தான் உடைந்திருக்கு...கையுமா உடஞ்சி போச்சி?  சாப்பாடு பிசைந்து கொடுக்கிறீங்க...ரெம்ப தான் செல்லம் " என்றாள் ஸ்ரீ...

"உனக்கு ஏண்டி பொறாமை அம்மா எனக்கு ஊட்டியே  விடுவாங்க...அம்மா ஆ...." என தட்டை வாங்காமல் வாயை  நீட்ட,

"இந்தா தட்டை பிடி பாப்பா...காலயில இருந்து உன் பின்னாலே அலஞ்சு கால் எல்லாம் உலயுது...அதை விட நீ பேசி பேசி ஏன் காதெல்லாம் இரையுது " என்று அலுத்துக் கொண்டார் லக்ஷ்மி . பின், மதுவை கை காட்டி "இந்த பாப்பா  இருக்கிற இடம் தெரியுதா?...இவளை பாத்தாவது  கொஞ்சம் அமைதியா இருக்க கத்துக்கோ..." என்றவர் மதுவிடம் திரும்பி, "ஏண்டா....நீ சாப்பிடவே மாட்டியா...இந்த இன்னும் கொஞ்சம் வைக்கிறேன்" என அவள் போதும் போதும் என்றும் விட்டாமல் அவளை வயிறு முட்ட சாப்பிட வைத்தார் லக்ஷிமி.

சற்று நேரத்தில் சூர்யா மதுவை அழைக்க வர, சந்தியாவிற்கு கார்த்திக் வரவில்லை என ஏமாற்றம். சூர்யா அவளுடைய எக்ஸ் ரே வை ஒரு முறை பார்த்து விட்டு, பெரிய அளவிற்கு பாதிப்பு இல்லை என்றாலும் அவளை ஓரிரு நாட்கள் பிசிகல் தெரப்பிக்கும்  சென்று வர சொன்னான்.

சூரியாவும் மதுவும் விடைப் பெற்று சென்ற பின்னர், சிறிது நேரத்தில் அனைவரும் படுக்க செல்ல, சந்தியாவிற்கு துணையாக லக்ஷ்மி அவள் அருகில் படுக்க, தன்ராஜ் வரவேற்பறையில் தூங்க போனார்.

ந்தியா அவள் அருகில் படுத்திருந்த லக்ஷ்மியிடம் "அம்மா, பகல்ல வேற நல்லா தூங்குனதுனால இப்போ தூக்கமும் வர மாட்டேங்குது. அப்பா போனை பிடிங்கிட்டாங்க. கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு நான் என்ன பண்ண...எனக்கு ஒரு பாட்டு பாடுங்க மம்மி ப்ளீஸ்..." என லக்ஷ்மியை நச்சரிக்க ஆரம்பித்தாள்.  

"ஷ்.....ப்பா... " என அலுத்துக் கொண்டவரிடம், "இன்னும் ஏன் தயக்கம் ... உங்கள் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள் மம்மி  ..பாடுங்க மம்மி பாடுங்க" என அவள் மேலும் நச்சரிக்க, "நான் பாடாட்டி தூங்கவும் விட மாட்ட... சரி தேன் நிலவு படத்தில எனக்கு பிடிச்ச பாட்டு பாடுறேன்"  என்று சொல்லி,

"நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது"

என  பாடும் போது,

முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா

இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே...

என்ற வரிகள் லக்ஷ்மி அவளுக்காகவே பாடியது போல உணர்ந்த சந்தியா, ரகசியமாய் புன்னகைத்தாள்.

மலர் முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

என்ற பாடலின் கடைசி வரிகள்,  காலையில் பார்த்த கார்த்திக்கின் வீடை நினைவுருத்த, "மனம் போல மணம் முடிப்பது என்பது எட்டாக்கனி" என்றது  அவள் மனது.....லக்ஷ்மி பாடி முடித்தவுடன் "ம்...அந்த காலத்தில எப்படி அர்த்தமுள்ள பாட்டா பாடி இருக்காங்க..இப்போ உள்ள பாட்டை காது கொடுத்து கேக்கவே முடியலை" என்றார் கவலையுடன். அவர் சொன்னவுடன் சந்தியா, "கரக்ட். கண்ணதாசன் எனக்காகவே எழுதின மாதிரி தான்  டீச்சர் இருக்கு. ஆனா நீங்க  சூப்பரா பாடுனீங்க. ஒன்ஸ் மோர் பாடுங்க மம்மி...ப்ளீஸ்  என்றவாறு ஒரு சாய்ந்து படுத்தவாறு அருகில் படுத்திருந்த லக்ஷ்மியின் கன்னத்தை லேசாக கிள்ளிய படி கேட்க, "ஆளை விடுடி சந்து. காலையில சீக்கிரம் எழுந்த்தரிக்காவிட்டா  அப்பா கடிப்பாரு. நான் வேணா உன் போனை வாங்கித் தாரேன்...தூக்கம் வராட்டி பூமாகிட்ட பேசு" என்று, சந்தியாவிற்காக  தன்ராஜிடம் பரிந்து பேசி  அவரிடம் இருந்து அவளது போனை வாங்கி கொடுத்தாள்.  

ந்தியா பூமாவிற்கு ஒரு மணி அடித்து விட்டு இணைப்பை துண்டித்து அவளுக்கு மிஸ்ட் கால் கொடுக்க, அவள் மறுபடியும் அழைக்கவில்லை. ஒரு மணி நேரமாக பலமுறை அழைத்த பிறகும்  பூமாவிடம் இருந்து பதில் வராததால்  கார்த்திக்கிற்கு  அவன் முழித்திருந்தால் அழைக்குமாறும், தனது  அருகில் லக்ஷ்மி இருப்பதால் மிட்நைட் மசாலா என்று ஏடாகூடமாக பேச வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை விடுத்து குறுஞ்செய்தி அனுப்பினாள். அவள் அனுப்பிய அடுத்த நொடியில் அவனிடம் இருந்து அழைப்பு வர, எடுத்த சந்தியா "ஹலோ" என்றாள் குரல் தாழ்த்தி மொட்டையாக.

"மை ஸாண்டி சுகர் இப்படி  பதுங்குதே....? சரி கால் வலி எப்படி இருக்கு?" என நலம் விசாரித்தான் கார்த்திக்.

"வலி இருக்குத்தான் செய்யுது. ஆனா பெயின் கில்லர்  அடிக்கடி சாப்பிட்டா  எனக்கு ஒத்துக்காது. தலை சுத்தும். அதான் நைட் எதுக்கு ரிஸ்க்ன்னு போடலை. அம்மா என் பக்கத்தில தான் படுத்திருக்காங்க. பாவம் ரெம்ப  அசந்து தூங்குறாங்க. அவங்களை டிஸ்டர்ப்  கூடாதுன்னு மெல்ல பேசுறேன்.” என்று அவன் கேள்விகளுக்கு மிக மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

“உண்மைய சொல்லு... வள்ளிக் கண்ணு. அவுங்க முழிச்சு  நம்ம மிட்நைட் மசாலாவை  டிஸ்டர்ப் ஆகிடக் கூடாதுன்னு தானே  மெல்ல பேசுற?” என கேட்டன் கார்த்திக்.

“நான் குண்டக்கான்னா நீங்க மண்டக்கான்னு தான் சொல்வீங்க. ஹே...விசா ப்ராசஸ் பண்றதுக்கு  தேங்க்ஸ்" என நன்றி சொன்னாள்.

"அதுக்கு எதுக்கு அப்படி குதிச்சு மறுபடியும் காலை உடைக்க பாத்த?" என கேட்டான் கார்த்திக்.

"சும்மாவா...பின்ன...உங்களுக்கு  ஒரு அபி கிடச்ச மாதிரி எனக்கும்  ஒரு வசூல் ராஜா அங்க இருக்கானே. அவனை மீட் பண்ண சான்ஸ் கிடைச்சிருக்கே. அதான் அப்படி குதிச்சேன்" என்று அவனை சீண்டுவதற்காக சொன்னாள்.

அவள் சொன்னவுடன் அவன் எதுவும் பேசவில்லை. மவுனித்தான். அவன் மவுனம் மேலும்  சந்தியாவை தூண்ட  "எங்க வசூல் ராஜா சூப்பர் டான்சர். பூ வளைக்காப்புக்கு  நானும் அவனும் தீதி தேரா தேவர் தீவானான்னு  ஹம் ஆப்கே ஹேயின் கவுன் படத்தில மாதிரி ஜோடியா டான்ஸ் ஆடினா செமயா இருக்கும்ல. ஹையோ... நான் அங்க வர்றேன் தெரிஞ்சா அவன் தான் என்னை விட பல  மடங்கு சந்தோஷமா இருப்பான்." என அவள் சொல்ல சொல்ல கார்த்திக்கால்  இயல்பாக இருக்க முடியவில்லை.

"நேற்று சந்தியா அப்பா சொந்தத்தில் மாப்பிள்ளை என்று சொன்னது அவனைத் தானோ...இவள நம்ம முடியாது. நம்மள டீஸ் பண்றதுக்கே பொய் சொன்னாலும் சொல்லுவா. நாளைக்கு சக்திகிட்ட கன்பர்ம் பண்ணனும்....அட்லீஸ்ட் இன்னும் மூணு வாரத்துக்கு எவனும் துண்டு போடாம இருக்கணும்" என தனக்குள் சொல்லிகொண்டவன்   அது உண்மையாக இருக்க கூடாது என்று நினைத்துக் கொண்டே  "யு ஆர் அன் ஆசம் லையர்" என்று நீட்டி முழக்கினான். சந்தியா சிரித்துக் கொண்டே, "நான் உண்மைய சொன்னா இந்த உலகம் நம்புமா? சரி, என் பொக்கே எங்க?"   என கேட்டாள்.  

"அதுக்கு  நேரம் வர்றபோ அனுப்புறேன்...", கார்த்திக்.

"அந்த நேரம் எப்போ வரும்?", சந்தியா.

"வென் ஐ” என வேகமாக சொல்லிவிட்டு ஒரு சிறு இடைவெளி விட்டு “ கிவ் அப்...", என்றான் குரலை தாழ்த்தி...

"கிவ் அப் வாட்? எதை விடுறப்போ?", அவன் சொல்வது புரியாமல் கேட்டாள் சந்தியா.

"உன்னை இம்ப்ரெஸ் பண்ற முயற்சிய  விடுறப்போ", நிதானமா ஒவ்வொரு வார்த்தையாக கொட்டினான் கார்த்திக்.

சந்தியா மவுனித்தாள். "என்ன ஆச்சு வள்ளிக்கண்ணு? சத்தத்தையே காணோம்...அல்ரெடி இம்ப்ரெஸ் ஆகிட்டியா? எனக்கு தான் தெரியலையா?”

என்றான் குறும்பாக.

"ஆசை தோசை. உங்க முயற்சிய மது விசயத்திலயும் எடுத்தா நல்லா இருக்கும்...." என்றாள் மது மேலிருந்த அக்கறையில்.

"நான்  முயற்சி எடுக்காமலா அவ இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தா?" என கேட்டான் கார்த்திக்.

"என்ன சொல்றீங்க. மது இன்னைக்கு இங்க வந்தது உங்களோட ப்ளானா?" என அதே மெல்லிய குரலில் வியப்பாக வினவ,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.