(Reading time: 23 - 46 minutes)

பாஸ்கரன் அதிர்ச்சியுடன்,

"என்னம்மா சொல்ற? எப்படி..? ஊரில எந்த விவரமும் தெரியலையேம்மா.."

"ஆ.. ஆக்ஸிடென்ட்.. அதனால யாருக்கும் எதுவும் சொல்லிக்கலண்ணா" நளினி சொல்லும்போதே அவர் கன்னங்களில் கண்ணீர் கோடாக இறங்கியது. நந்து அவர் அருகில் வந்து கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவள் தோள்களில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள்.

தண்ணி கட்டுப்படுத்திக்கொண்டு இன்னும் அதிர்ச்சியில் இருந்தி மீளாத தன் அண்ணனின் கைகளை அழுத்தினார்.

"என்னால ஜீரணிக்கவே முடியலம்மா. கண் முன்னாடி ஓடி ஆடிட்டு இருந்த பிள்ளை.. என்னாலயே முடியலாயே, பிரபு எப்படி தாங்கினான்..? என்று கேட்டவரிடம்

"ரொம்ப கஷ்டப்பட்டான்.. என்ன பண்றதுண்ணா, நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் வாழ்க்கை அது பாட்டுக்கு நிக்காம போய்க்கிட்டேதானே இருக்கு.." என்று பெருமூச்சு விட்டவர் பேச்சை மாற்றும் விதமாக நந்துவிடம்

"பிரபுவை ஞாபகம் இருக்காடா?" என்றார் கண்களில் ஆர்வத்துடன்.

"ம்.. இருக்கு அத்தை.. ரொம்ப குறும்பு பண்ணிட்டே இருப்பான்ல.. எப்ப பாத்தாலும் என்கிட்ட வம்பு பண்ணிட்டே இருப்பான். ஆனாலும் நான் அவன் பின்னாடியே தான் சுத்தினேன். ஏன்னே தெரியல.." என்றாள்.

(இப்பவும் அதான பண்ணப்போற நந்துக்கண்ணு)

"தம்பியை அவன், இவன்னு சொல்ல கூடாதுமா.. மரியாதையா பேசனும்." என்றார் பாஸ்கரன்.

'அப்படியா' என்பதுபோல் தன் அத்தையை பார்த்தாள் நந்து.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லடா.. நீ அவனை டா போட்டே கூப்பிடலாம். அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்." என்றார்.

(ம்க்க்கும்.. அவன் உன்னை கூப்பிட விட்டுட்டாலும்...)

மேலும் தன் பள்ளிக்காலம், college, friends என எல்லாவற்றையும் பற்றி கதையடித்துவிட்டு, நளினி செய்து எடுத்து வந்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு, கிளம்ப ஆயத்தமானார்கள். அப்போது நந்துவின் கையில் ஒரு பார்சலைக் கொடுத்த நளினி, "பிரிச்சு பாரு.." என்றார். பிரித்தவள், ஒரு அழகான இள ரோஜா நிற சில்க் காட்டன் புடவையை பார்த்து

"ரொம்ப அழகாய் இருக்கு அத்தை.." என்றுபடி வாங்க தயங்க,

"இப்படி உனக்கு வாங்கி போட்டு அழகு பார்க்கணும்னு ரொம்ப ஆசைடா... blouse தோராயமா தச்சிருக்கேன்.. போட்டு பார்த்து கையிலே பிடிச்சிக்கோ.." என்றார்.

"கலர் ரொம்ப நல்லா இருக்கு அத்தை.." என்றாள் நந்து.

"ம்ம்.. யாரோட செலக்சன்" என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுகொண்டு

"நீ முதல் தடவை வீட்டுக்கு வர்றப்போ, இந்த சாரி தான் கட்டிட்டு வரனும்." என்றவர், "உங்களை விட்டு போகவே மனசில்ல.. ஆனா மாமா பசியோட வருவார். அதுனால கிளம்பறேன் நந்துமா. அடுத்த சனிக்கிழமை hostel க்கு வறேன்டா.." என்றபடி தான் அண்ணனின் கைகளை பிடித்து

"உன்ன அவரே வந்து, வீட்டுக்கு கூப்பிடுற நாள் சீக்கிரமே வரட்டும் அண்ணா.. நீ நந்துவை பத்தி கவலை படாதே. இனிமே அவ என் பொறுப்பு.." என்றார்.

"எனக்கென்னமா.. நீயும் நந்துவும் சந்தோஷமா இருந்த போதும்.. வேற எந்த கவலையோ கோபமோ எதுவும் இல்லமா.." என்றார் அவர் தலையை பாசமாய் கோதியபடி.

ளினி விடை பெற்று சென்றவுடன், நந்துவுடன் hostel-ஐ அடைந்தவர், அங்கு ஆரு, அனு குடும்பத்தினரை பார்த்து

"மன்னிச்சிடுங்க.. காலைல அவசரமா போகவேண்டியதாயிருச்சு.. அதனால உங்க கூட சரியா பேச முடியல.." என்றார்.

அதனால என்னங்க.. இப்போ வாங்க பழகலாம், இது அங்கவை அது சங்கவை" என்று தன் மகள்களை காட்டி சிரித்தார் அனுவின் தந்தை.

அனுவின் துறுதுறுப்பும் பேச்சும் எங்கிருந்து வந்தது என்று அவளின் அப்பாவை பார்த்ததும் தெரிந்துவிட்டது நந்துவிற்கு. மனிதர் கலகலப்பே உருவாக இருந்தார். அவர் மட்டுமல்ல குடும்பமே குதூகலத்தை குத்தகை எடுத்தது போல் இருந்தது. அதில் அனுவின் தாயார் மட்டும் விதிவிலக்காய் அமைதியான புன்னைகையுடன் வளையவந்தார். எப்பொழுதும் அமைதியாக இருக்கும் ஆரு கூட அவருடன் செல்லம் கொஞ்சி கொண்டும், உரசி கொண்டும் இருந்ததைப் பார்த்து நந்துவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அனுவும், அவள் சித்தியும் அவர்களை காலாய்த்துக் கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களிலேயே நந்துவையும் பாஸ்கரையும் தங்கள் குடும்பத்திற்குள் இழுத்துக் கொண்டார்கள்.

மாலையானவுடன் பாஸ்கரன் மற்றும் அனைவரும் ஒருவருக்கொருவர் விடைபெற்றுக்கொண்டனர். நந்துவிடம் வந்த பாஸ்கரன்

"நந்துமா, இனிமே எதுவாயிருந்தாலும் அத்தையிடம் கேளுடா.. அவளும் உனக்கு அம்மா போலத்தான்.." என்றார்.

"நீங்க சொல்லனுமாப்பா.. பத்திரமா போய்ட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தாள்.

எல்லோரும் கிளம்பியவுடன் ஆருவிடமும், அனுவிடமும் காலையில் தன் அத்தையை சந்தித்ததைப் பற்றி சந்தோஷமாக கூறினாள். அவர்களுக்கும் ஒரே சந்தோஷமானது. சாரியைப் பார்த்துவிட்டு, அவர்கள் சிரிக்க, என்னவென்று கேட்ட நந்துவிற்கு, அவர்கள் தங்கள் ரூமிலிருந்த இரண்டு சாரியை கொண்டுவந்து காட்டினார்கள். மூன்றும் கிட்டதிட்ட ஒன்று போல இருப்பதைப் பார்த்து நந்துவுக்கும் புன்னகை வந்தது.

திங்கள் காலை, காலேஜ் கேன்டினின் முன் 1st years ஆங்காங்கே அமர்ந்திருக்க, ஜெனியைத் தேடியவர்கள், அவளை சுற்றி நான்கு பேர் நின்றிருப்பதை கண்டு வேகமாக அங்கே போனார்கள். அவர்களும் தங்கள் க்லாஸ்‌மேட் தான் என்பதை அறிந்து நிம்மதி ஆனார்கள்.

"அப்பாடி வந்துட்டீங்களா.. இவனுங்க இம்சைல இருந்து என்னை காப்பாத்துங்க.." என்று ஜெனி அவர்களை பார்த்து கதற

"மாமாவை பார்த்து இம்சைனு எல்லாம் சொல்ல கூடாது டா செல்லம்.."

கொஞ்சலாக சொன்னது சாட்சாத் கவினே தான்.

"மச்சான் இவளோட அப்பா மிலிட்ரி ஆஃபிஸராம்டா.. பீ கேர்ஃபுல்.." என்றான் பக்கத்தில் நின்ற அருண். ஒரு கணம் மிரண்ட கவின், சமாளித்து

"ஹே.. ஹே.. நாங்கெல்லாம் அமெரிக்காவுக்கே அல்வா குடுக்கிறவங்க... மிலிட்ரி ஆபிசர் என்ன, மிலிடரியே வந்தாலும் அசர மாட்டோம்ல.." என்று கெத்து காட்ட

"அதத்தான் கெடாவர நீ டிசெக்ட் பண்ணின அழகிலேயே பார்த்தோமே.." என்று அனு வாற

"வந்துட்டா வில்லி" என்று முனுமுனுத்துவிட்டு "excuse me.. இது எனக்கும் என் செல்லத்துக்க்கும் நடக்கிற விசயம்.. நீ தலையிடாத" என்று கூற, சலைக்காத அனு

"அப்படியா? அதை உன் செல்லத்தை சொல்ல சொல்லு நான் அப்பீட் ஆயிற்றேன்.." என்றாள் சவாலாக.

அவள் சொல்லி முடிப்பதுற்குள்ளேயே,"சீ.. ச்.. சீ.. இவன் யாருன்னே எனக்குத் தெரியாது.." ஜெனி முகத்தை சுழித்துக் கொண்டு சொல்ல,

"நா.. ன்.. யா... ரு...." கமல் போல வார்த்தை வராமல் தவிப்பது போல கவின் நடிக்க

"டொன்ட.. டொன்ட.. டொன்ட.. டொய்ங்.." நாயகன் தீம் ம்யூஸிக்கை சுற்றியுள்ளவர்கள் பாட, ஆருவும், நந்துவும் சிரித்தனர்,பிறகு, ஆருவும், நந்துவும் ஆஃபிஸ் ரூமிற்கு சென்று புக்ஸ் வாங்கி வருவதாய் சொல்லிச் சென்றனர்.

"இதுக்கொன்னும் கொறச்சல் இல்ல.. ஒரு சின்ன பொண்ணு உங்க நண்பன, ரத்தத்தின் ரத்தத்த காலாய்கிறத பாத்திட்டு சும்மாயிருக்கீங்க.. இதுக்காடா உங்களுக்கு நேத்து கொத்து பரோட்டா வாங்கித் தந்தேன்.."    சென்டிமென்டாக முகத்தை வைத்துக் கொண்டு கூற,

"என்ன தல, இப்படி சொல்லிட்ட.." என்று சீறி எழுந்த மூன்று சிங்கங்களும் "ஏய்.. ஏய்.. ஏய்.." என்று மாறி மாறி குரல் கொடுக்க, பக்கத்தில் போய்க்கொண்டிருந்த இரண்டு சீனியர்களில் ஒருவன்

"என்னடா இங்க சத்தம்.." என்று அதட்ட, மூன்று சிங்கங்களும் பூனையாய் பதுங்கியது.

"ஹி... ஹி... ஒன்னும் இல்ல சார்... சும்மா" கவின் சமாளிக்க

"இல்ல சார், நீங்க பாக்கறதுக்கு விஜயகாந்த் மாதிரி கறுப்பா இருக்கிறதுனால.. உங்கள தான் கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க சார்" ரொம்ப பதவிசாக அனு கூற

"என்னங்கடா..?" என்று அவர் பல்லைக் கடிக்க

"ஐயோ தெய்வமே.. நீங்க தலைவர் மாதிரி சார்... உங்க அழகென்ன, ஸ்டைலென்ன... உங்களப்போய் அப்படியெல்லாம் சொல்வோமா சார்.." என்று அவர் காலில் விழ, (வஞ்ச) புகழ்ச்சியில் நனைந்த அவன்

"ம்... அந்த பயம் இருக்கனும்..." என்றபடி அனுவிடம் திரும்பி

"உன் பேர் என்ன?" கேட்க

"அனு சார்" என்றாள்.

"பார் அனு, இனிமே என்ன help வேணும்னாலும் என்கிட்ட கேளு.." என்று இளித்துவிட்டு சென்றான். கர்மம். கர்மம் என்று தலையில் அடித்துக் கொண்டாள் அனு.

"டேய்.. யப்பா.. பொண்ணா இது.. குட்டிப் பிசாசு.. இப்படி மாட்டி விட்டுருச்சே, ஆனா அந்த ஆளு பயங்கர கறுப்பா இருக்கார்லடா.." என ஒருவன் சொல்ல

"இல்லடா.. கறுப்பா பயங்கரமா இருக்கான்.." என்று சொல்லி சிரித்தார்கள்.

ப்படி பேசிக்கொண்டிருக்கும் போது அந்த விஜயகாந்த்(அதான்பா அந்த சீனியர்) அவனுடன் கூட வந்தவன், ஆரம்பத்தில் அனுவின் குறும்பை கண்டுகொண்டுவிட்டதற்கு அடையாளமாக கண்களில் குறும்புடன், அடக்கிய சிரிப்புடனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பின்பும் இரண்டு முறை திரும்பி திரும்பி பார்த்தவனை பார்த்த அனு, 'என்ன' என்பதுபோல் புருவம் உயர்த்த, சட்டென்று தலையை திரும்பிக் கொண்டு சென்றான். ஆனால் அனுவிற்கு அவன் அணிந்திருந்த கண்ணாடியையும் மீறி கண்களில் மின்னிய குறும்பு வெகு நேரம் கண்களில் வந்து போனது. அதிலிருந்து நினைவை திருப்பியவளுக்கு, அவளை குட்டி பிசாசு என்று சொன்னது கேட்டது.

"யாருடா குட்டி பிசாசு, நீ பிசாசு.. உன் friend vampire.. இன்னும் .." என்று ஏகிற ஆரம்பிக்க

"ஐயோ தாயே.. விட்டிருமா.. மச்சான் எஸ்ஸாயிருடா" என்று காணாமற்போனார்கள். ஜெனியிடம் திரும்பிய அனு

"operation mosquito-வ ஆரம்பிக்கலாமா?" என்று கேட்க, அவர்களை கையெடுத்து கும்பிட்ட கவின்

"எனதெருமை.. சே.. எனதருமை தோழிகளே.. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பு தான்.. அதுக்கு மேல உடம்பு தாங்காது.. அப்புறம் நான் அழுதுருவேன்" என்றுவிட்டு ஜெனியிடம் "ஜெ.லோ மாமா வரட்டா" என்று கேட்க

"ஜெ.லோ வா? அப்படினா..?" கேட்டவிளின் காதில் அனு பதில் சொல்ல

"ஐயோ இது காதை கடிச்சிச்சுனாலே போச்சே" என்று மிறள, அவன் பயந்தபடியே ஜெனி, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க

"டேய் என்னப் பார்த்தா உனக்கு ஜெ.லோ மாதிரி தெரியுதா.. நான் என்ன அப்படியா.."

"நோ.. நோ... நோ.. bad words. மாமா பாவம்ல, உனக்கு பிடிக்கலைனா shakira மாதிரின்னு வச்சிக்கலாமா?" என்று கேட்க

"வேணாம்.. feeling-அ கிளப்பாம போயிடு.." என்று கடுப்பாக

"நீ ஏன்டா feel பண்ற, இதுக்கு அவங்கள்ள ஃபீல் பண்ணனும்" என்று சொல்லி அவளிடம் மொத்து வாங்கிக் கொண்டான். office room-இல் இருந்து வந்த ஆருவும், நந்துவும்

"Books, Instruments எல்லாம் சாயங்காலம் வாங்கிக்கிற சொன்னாங்க. இப்போ physiology class இருக்காம் வாங்க போகலாம்" என்று சொல்லி அந்த பிரச்சனையை முடித்து வைத்தார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.