(Reading time: 23 - 46 minutes)

Lab-ற்க்குள் நுழைந்தவுடனே புதிதாக வந்து அமர்ந்திருந்த அவளை மற்றவர்கள் பார்த்தார்கள். முதல் பார்வையிலே பணக்கார மிடுக்குடன் யாருடனும் பேசாமல் தனித்துத் தோன்றினாள். முகத்தில் கர்வம் அப்பட்டமாக தெரிந்தது. அவள் அருகில் இருந்த இருக்கை காலியாக இருக்கவே அங்கே அமர்ந்த அனு, அவளைப் பார்த்து புன்னகையுடன்

"ஹாய்,  தீப்தி தான நீ? நான்  அனு..!" என்றாள்  ஆர்வமாக,

" so  what .." என்று முகத்தில் அடிப்பது  பதில் சொன்னாள் தீப்தி.

" so... நாம ஃபிரென்ட்ஸா  இருக்கலாம்...நந்து  தான்  உன்  ரூம் மேட்...ஆமா, நீ  ஏன்  இவ்வளோ  நாள்  காலேஜ்க்கு  வரல?"  என்று  வழக்கம் போல்  வழவழக்க...

" ஏய்  நிறுத்து... i dont  want your  freindship... விட்டா  பேசிட்டே  இருக்க... 'நியுசென்ஸ்'.." என்று எரிந்து விழுந்தாள் தீப்தி..

இதை  எதிர்பார்க்காத  அனு  திகைத்தாள், பின்பு  சகஜமாகி,
" அஸ்  யு  விஸ்... பட்  ஒன் திங், யு  டோன்ட்  டிசர்வ்  மை  ஃபிரண்ட்சிப்.. பாய்  ஃபார் எவர்  நியுசென்ஸ்..."  என்றபடி  தன்  சீட்டில்  சென்று  அமர்ந்தாள்.

       அனுவிடம்  மட்டுமல்ல  எல்லோரிடமும்  அலட்சியத்துடன்   பட்டுகத்தித்தார்  போல  பேசிய  அவளை  யாருக்கும்  அவ்வளவாக  பிடிக்கவில்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம்  அவள்  கவலைப்படவில்லை..அதனால் அவளுக்கு  'ராங்கி'  என்று  பெயர் வைத்து,  அவள்  போகும்போதும் , வரும்போதும்

 'வாடி  என்  ராங்கி..ராங்கி... '  என்ற  பாட்டை பசங்க ( எல்லாம்  நம்ம  கவின் அன்  கோ  தான் ) பாடி பாடி   வெறுப்பேத்தினார்கள். கடுப்பாகிப்  போன தீப்தி,

 " சட்  அப்  பாய்ஸ்...நான் யாரோட  பொண்ணு  தெரியுமா? " என்று  மிரட்ட, அதர்க்கெல்லாம்  பயப்படுபவர்களா  அவர்கள், 

" ஊதா  கலரு  ரிப்பன், உனக்கு  யாரு  அப்பன்..?" என்று  கர்ன கொடூரமாக  பாட, அடுத்தவன்,

“எவண்டி உன்ன பெத்தான்,....” என்று  பாட,

அவள்தான் வாயை  மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று.

Physiology prof. பிருந்தா மேடம் பார்ப்பதற்கு காமடியாக இருந்தாலும் class நடத்துவதில் கில்லியாக இருந்தார். நடுவில் கேள்விகள் வேறு கேட்டதால் எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டியதாயிற்று. அந்த வாரம் முழுவதும் அதே class என்பதால் சற்று தொய்வாக போனது. எல்லோரும் கொட்டாவியை மென்று முழுங்கிக் கொண்டு பாடத்தை கவனிப்பது போல் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

வியாழன் அன்று lab-இல் முதலாவதாக நின்று கொண்டிருந்த நந்துவை அழைத்த prof.

"நீ போய், final year படிக்கிற சந்துருகிட்ட பழைய நோட்ஸ் கேட்டிருந்தேன்.. நான் கேட்டேன்னு சொல்லி வாங்கிட்டு வா.." என்றார்.

"சந்துருவா.." என்று தயங்கி நின்றவளைப் பார்த்து

"நீ இன்னும் போகலையா.. go and get it fast" என்று விரட்ட, கடவுளை துணைக்கு அழைத்த படி office ப்யூனிடம் final year  எங்கே என்று கேட்டு அவர்கள் இருந்த class-ஐ நோக்கி சென்றாள்.

Class-இல் professor வராததால் மாணவர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். இவள் வருவதை பார்த்து சிலர் விசிலடித்தனர். எதையும் காணாதவள் போல் தரையை பார்த்தபடி போனவள் முன்னால் இரு கால்கள் மறைப்பது போல் நிற்கவும், நிமிர்ந்து   பார்த்தாள். அங்கு பிரேம் அதே கோனல் சிரிப்புடன் நிற்பதை கண்டு

'ஐயோ இவனும் final year தானே.. இவன் இருப்பான்னு யோசிக்கவே இல்லையே..' என்று விழித்தாள்.

"என்ன இந்த பக்கம்.. என்ன பார்க்கத் தான வந்த?" என்று கேட்டபடி அவளை நோக்கி முன்னேற

'எப்படி இவனை தடுப்பது' என்று யோசித்தவளுக்கு அன்று சந்துருவை பார்த்ததும் இவன் பின்வாங்கியது நினைவு வர

"சந்துரு சாரை பார்க்க வந்தேன்.." என்றாள். சட்டென்று நின்றவன்

"சந்துருவையா, அவனா வரச்சொன்னான்?" என்று சந்தேகத்தோடு கேட்க, உள்ளே இல்லாத தைரியத்தை வெளியில் காட்டிக் கொண்டு

"ஆமா சார்.. physiology நோட்ஸ் தரேன்னு வரச் சொன்னார்" என்றாள் கோர்வையாக.

(உனக்கு கூட அப்பப்போ பல்ப் எறியுது நந்து)

"சரி போ.." என்றபடி அவளையே யோசனையுடன் பார்த்தபடி நின்றான்.

'கடவுளே நான் பேசினது எதுவும் சந்துருவுக்கு கேட்டிருக்க கூடாது' என்று வேண்டிக் கொண்டபடியே அவனை class-ற்குள் தேடினாள். வாசல் அருகில் அமர்ந்திருந்தவன், தன் மேல் நிழல் விழவும் நிமிர்ந்து பார்த்தான். நந்து தயங்கி நிற்கவும், புருவ சுளிப்புடன் 'என்ன' என்று தலையசைக்க

"பிருந்தா மேடம் physiology நோட்ஸ் கேட்டிருந்தாங்களாமே, அதை வாங்கிட்டு வர சொன்னாங்க.." என்று தட்டு தடுமாறி சொல்லி முடிக்க, தன் bag-இல் இருந்து நோட்ஸை எடுத்து டேபிலின் மேல் வைத்தவன் எடுத்துக்கொள் என்பதுபோல் சைகை செய்ய.. விட்டால் போதும் என்று அவளும் வேகமாக வெளியே வர.. பிரேம் அவளை கவனிப்பதை பார்த்து, நோட்ஸ் நன்றாக வெளியே தெரியும்படி வைத்துக் கொண்டு சென்றாள்.

Lab-ற்க்கு வருவதற்குள் அவள் மனது முரண்பாடாய் யோசித்தது. ‘அப்பாடா திட்டு வாங்கவில்லை’ என்று சந்தோஷமாகவும், அதே வேளையில் ‘ஒரு வார்த்தை கூட பேச வில்லையே அவ்வளவு வெறுப்பா?’ என்று கஷ்டமாயும் இருந்தது கண்டு குழம்பிப் போனாள்.

ஆழ்ந்த  தூக்கத்தில்   இருந்த  நந்துவிற்கு,தூரத்தில்  யாரோ  விசும்புவது  போல் கேட்டது. அது  கொஞ்சம்  கொஞ்சமாக  அருகில் வரவும்,  கஷ்டப்பட்டு கண்களைத்  திறந்து பார்த்தாள். ஒரு  உருவம்  தலைவிரி  கோலமாக , தன்  ரூம்  ஜன்னல்  அருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்ததைக் கண்டு அரண்டுபோனவள்,  சட்டென்று  எட்டி  லைட்டை  ஆன்  செய்தாள்.

லைட்  வெளிச்சம்  தன் மேல் படவும், கண்களை வேகமாக துடைத்துக் கொண்ட தீப்தி, அதே வேகத்தில் லைட்டை ஆஃப் செய்துவிட்டு, தன் பெட்டில் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

அவளையே விசித்திரமாக பார்த்தபடி உறங்கிப் போன நந்து, மறுநாள் காலையில் முதல் வேலையாக ஆருவிடம் நடந்ததைக் கூறினாள். ஆருவும் 'அவள் ஹோம்சிக்கால் அழுதிருக்கலாம்’ என்றும், அதைப் பெரிது படுத்த வேண்டாம் என்றும் கூறினாள். நந்துவும் அதை அத்துடன் விட்டுவிட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.