(Reading time: 23 - 46 minutes)

வியாழன்  மாலை,

காலேஜ் கேன்டின் முன்னால் ஃபிரெஷர்ஸ் எல்லோரும் நின்றுகொண்டிருக்க, அவர்கள் முன்னால் ஒவ்வொரு இயர்ஸின் ரெப்ரசன்ட்டேடிவ்வும் இருந்தார்கள், அதில் வின்சியும் அடக்கம். முதலில் ஒரு house surgeon  முன்னே வந்து,

"டியர் ஜூனிர்ஸ், நாளைல இருந்து நம்ம 'காலேஜ் டே' புரொக்ராம்ஸ் ஆரம்பிக்குது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஃபங்சன் இருக்கும். நாளைக்கு 'ரோஸ் டே'  அன்ட் 'டிரெடிஷனல் டே'. அதனால நாளைக்கு எல்லோரும் டிரெடிஷனல் டிரஸ் தான் போட்டுட்டு வரனும். அப்றம், ஈவினிங் இங்க நிறைய ரோஸஸ் வச்சிருப்போம், அதையெடுத்து யார்வேனா யார்க்கு வேன்னா கொடுக்கலாம். யாரும் வேண்டான்னு சொல்லக்கூடாது. பட், எல்லாமே லிமிட்டோட இருக்கனும். அன்ட் நாளைக்கு 'ஃபிரெஷர்ஸ் டே'யும் இருக்கிறதுனால என்ஜாய் இட் வித் ரோஸஸ்." என்றுவிட்டு சென்றான். பிறகு மற்ற சீனியர்ஸ் இன்னும் கொஞ்சம் 'டூஸ் அன் டோன்ட்ஸ் ' சொல்லிவிட்டு சென்றனர்.
    கலைந்து சென்ற அனைவரும், நாளை என்ன டிரெஸ் போடுவது என்று பேசியபடியே செல்ல., அனு ஜெனியிடம் நாளைக்கு பிங்க் நிற சாரி அணிந்து வர சொன்னாள்.

  றுநாள் காலை, குளித்து விட்டு தன் அத்தை எடுத்துத்தந்த புடவையை ஆசையுடன் வருடினாள் நந்து, பிறகு அதை அணிந்து கொண்டு அனு, ஆருவின் ரூமிற்கு சென்றாள். அங்கு அணுவும் ஆருவும் ஏற்கனவே கிளம்பி ரெடியாகி இருந்தார்கள். முன்று பேரும் ஒரே மாதிரி சாரி அணிந்து பார்ப்பதற்கு அழகாய் இருந்தார்கள். அதிலும் நந்துவிற்கு அந்த நிறமும், அதை உடுத்தி இருந்த விதமும் அவளை தேவதை போலக் காட்டியது.
         காலேஜில் , அவர்களுக்காய் காத்திருந்த ஜெனி , அவர்களைப் பார்த்ததும் உற்சாகமாய் கையசைத்தாள். அவளும் அதே பிங்க் நிற பிரிண்டட் சில்க் சாரி அணிந்திருந்தாள். கொஞ்சம் பூசினார்ப்போல இருக்கும் ஜெனிக்கு அந்த புடவை பாந்தமாய் பொருந்தி இருந்தது. நால்வரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பொது அவர்களைத் தாண்டிச் சென்ற தீப்தி , மிகுந்த வேலைபாடு அமைந்த , அடர்ந்த பச்சை நிற சாரியும், அதற்கு தோதாய் மிதமான ஒப்பனையுமாய் அழகாய் இருந்தாள். தான் கிளம்பும் வரைத் தூங்கிக் கொண்டிருந்தவள், எப்போது எழுந்து, எப்போது கிளம்பினாள் என்பது நந்துவிற்கு புரியாத புதிராக இருந்தது.

 சிறிது நேரத்தில் ரோஸ் டே துவங்கியது. முதலில் ஹவுஸ் சர்ஜன்ஸ் அனைவரும் பிரெஷர்ஸ் அனைவருக்கும் வெள்ளை மற்றும் மஞ்சள் ரோஸ் கொடுத்து வாழ்த்து சொன்னார்கள். ஒரு சிலர் ரெட் ரோஸ் கொடுத்தார்கள். பின்பு , பைனல் இயர்ஸ் வந்த பொது, நந்துவைத் தேடி வந்த ப்ரேம் ஒரு ரொமான்டிக் லுக்கோடு ( கவுண்டமணி சார் விடுவாரே ...ஊஊஉர்ர்ர்ர.......அதான்,அதேதான்..)ரெட் ரோஸ்-ஐ நீட்ட ,நந்துவும் வேற வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டாள். பக்கத்தில் நின்ற அனு அதைக் கொடு என்று வாங்கி,

" ஹாப்பி ரோஸ் டே சார்..." என்றபடி அவனிடமே திருப்பிக் கொடுக்க, அவளை முறைத்தபடியே அவனும் வாங்கிக்கொண்டான்.

அடுத்து வந்த 3rd இயர்ஸ் , அனைவருக்கும் மஞ்சள் ரோஸ் கொடுக்க, வின்சென்ட் மட்டும் ரெட் ரோஸை ஆருவின் அருகில் இருந்த டேபிளின் மேல் வைத்து விட்டு சென்றான். ஆரு அதைக் கையால் கூட சீண்டவில்லை. அடுத்து இம்மீடியேட்ஸ், என்று ஒரு வழியாக அனைவரம் கொடுத்து முடிக்க, ஆச்சர்யமாக நந்துவிற்கும் , தீப்திக்கும் நிறைய ரெட் ரோஸ் சேர்த்திருந்தது.
             
 கை நிறைய ரோஸுடன் வந்த கவின் அன் கோ ,
"கேர்ள்ஸ்...யாருக்கு எந்த ரோஸ் வேணுமோ எடுத்துக்கோங்க..." என்று தாராள மனதுடன் கூற, அவர்களின் பிளானைப் ( எந்த ரோஸை எடுக்கிறார்களோ, அதை வைத்து அவர்களின் ரிலேஷனை முடிவு செய்வது ) புரிந்து கொண்ட கேர்ள்ஸ் , கூடிப் பேசி ஒரே நேரத்தில் எல்லா ரோஸையும் பிடுங்கினார்கள்.

"மச்சான், கவுத்திடாளுங்க மச்சான்......." என்று பசங்க கண்ணீர் விட,

"இல்லையே..."என்றபடி தன கோட்டிற்குள் இருந்து ஒரு ரெட் ரோஸை கவின் எடுத்துக்காட்ட,

"துரோகி.." என்று பசங்க பாய, அந்த அடியெல்லாம் தூசியைத் தட்டுவது போல் தட்டி விட்டு,

" ஜெனிக்குட்டி ...உனக்காக மாமா ஸ்பெஷல்-ஆ வச்சிருந்தேன், வாங்கிக்கோ.." என்று அந்த ரோஸை நீட்ட,

"இன்னொரு தடவை குட்டி கிட்டினு சொன்ன பல்ல தட்டி கைல கொடுத்திடுவேன்..." என்றாள் முஷ்டியை மடக்கிய படி,

"அதத்தான 5 வருஷம் படிக்கப் போறோம்....அதோட பல்லிலாம மாமா நல்லாவா இருப்பேன்..?" இவர்கள் வாக்குவாதத்தினூடே அந்த ரோசைப் பார்த்த அனு,

" கவின், இந்த ரோஸ் கலர் ரொம்ப ‘யுனிக்’கா இருக்குடா...!! எங்க குடு பார்ப்போம்” என்று கேட்க,

"நோ.......இது என் ஜெனிக்காக மட்டும் தான்....உன்னோட ஆசை எனக்கு புரியுது. ஆனா என்ன செய்றது......... what to do... என்  இதயத்தில என் ஜெனிக்கு மட்டும் தான்  இடமிருக்கு..... ஒரு வேளை  நான்   உன்ன  முன்னாடியே பார்த்திருந்தா யோசிச்சிருப்பேன்......i may consider.." என்று இழுத்து இழுத்து மேஜர் சுந்தரராஜன்  போல பேசியவனைப்  பார்த்து,

" டேய்  உன்  அராத்து  தாங்கலை.." என்று  பல்லைக்கடித்த ஜெனியிடம்,

" ஒழுங்கா  வாங்கிக்கோ..இல்ல சீனியர்ஸ்கிட்ட  சொல்லிடுவேன்.."  எனவும் இவன்  செய்தாலும்  செய்திடுவான்  என்று  பயந்துக் கொண்டு ஜெனியும் வாங்கிக் கொண்டாள்.

" அது..."  என்று இல்லாத மீசையை  முறுக்கிக்  கொண்டான்  கவின்.

 ப்போது  அங்கு  வந்த இரண்டு  பெண்  சீனியர்ஸ்,

" இங்க யார்  நந்து " என்று கேட்க, நந்து பயந்தபடி முன்னால் வந்தாள்.

" நீ தானா.." என்று  அவளை  ஏற, இறங்க  பார்த்தவர்கள்,

" நீ எங்க கூட லாப் வரைக்கும்  வா.." என்றார்கள். நந்து  பதற்றமாவதைக்  கண்டு கவின்,  விளையாட்டாக கேட்பது  போல,

" நாங்கள்ளாம்  வர  கூடாதா  சிஸ்டர்ஸ்.." என்று கேட்டு  கூட போக முயல, அவனைத்  தடுத்த  சீனியர்ஸ்,

" பயப்படாத.. உன் ஃபிரண்ட  பார்ட்டிக்குத்  தான் கூட்டிட்டுப்  போறோம்.." என்றபடி  லாப் பக்கம்  அழைத்துச்  சென்றார்கள்.

  லாபின்  காரிடரை  அடைந்ததும், 

" இங்க  பாரு  நந்து, உன்ன  இங்க எதுக்கு கூட்டிட்டு  வந்தோம்னா.. நீ ஃப்ஸ்ட் நாளே  சந்துரு  கிட்ட திட்டு  வாங்கினயாமே, அதனால நீதான்  அவன்கிட்ட  இப்ப  புரப்போஸ்  பண்ண  கரெக்டான  ஆள்.."  என்ன சொல்கிறார்கள்  என்று  புரியாமல்  திகிலோடு  நந்து  அவர்களைப் பார்க்க,

" புரியலையா.. அங்க பாரு " என்று காரிடரின்  கடைசியில் நின்று கொண்டிருந்த சந்துருவைக் காட்டி,

" ஒன்னுமில்ல,  இந்த ரெட் ரோஸை அவன்கிட்ட  குடுத்து  'i  love  you' னு மட்டும்  சொல்லிட்டு  வந்துடு.." என்றாள்.  விபரீதம்  புரிய, 'ஐயோ சந்துருவா...' என்று மிரண்டு முடியாது என்பது போல்  தலையாட்டினாள்.

" அப்போ சரி ,  இவள ப்ரேம் கிட்ட கூட்டிட்டு  போக வேண்டியதுதான்.  என்ன பாக்கற,  ப்ரேம்  தான்  உன்ன  தனியா  கூட்டிட்டு  வர  சொன்னான்...ப்ரப்போஸ் பண்ணனுமாம்.  நாங்க தான்  பாவம்னு இங்க  கூட்டிட்டு  வந்தோம் ... என்ன  சொல்ற ப்ரேம்மா..? சந்துருவா...?" எனவும், மறு வினாடியே ,

" இங்கயே  போறேன் " என்ற  நந்துவிற்கு  கண்களில்  நீர்  முட்டியது. அவள்  கையில்  ரோஸை திணித்துவிட்டு , லாப் குள்ளே  சென்று  ஐன்னல்  வழியே வெளியே நடப்பதை  பார்க்க  தொடங்கினர்.

 காலியாக  இருந்த  காரிடரின்  அந்தக்  கடைசியில் சந்துரு  நின்று  கொண்டிருந்தான். தடதடக்கும்  இதயத்தை  கையால் அழுத்திக் கொண்டு அவனை நோக்கிச் சென்றவள், அவனை  நெருங்க  சில  அடிகள்  இருக்கும்  போது  தைரியத்தை  திரட்டி  அவனை  நிமிர்ந்து பார்த்தாள்.

 சிற்பியால்  நேர்த்தியாக  செய்யப்பட்ட  சிற்பம்  போல்,  ஒற்றைக்  காலை  தூணில் தாங்கி கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான். தோள்களில் அலட்சியமாக கிடந்த கோட் கூட அவனுக்கு கம்பீரமாக இருந்தது. காற்றில் ஆடிய  அடர்ந்த சிகையும், கூறான நாசியும், அழுத்தமாக மூடியிருந்த வடிவான உதடும் யாரும் என்னை அணுக முடியாது என்று பறைசாற்றியது. தூரத்தில் வானத்தை பார்த்திருந்த அந்தக் கண்கள், அவளுக்கு மிகவும் பரிச்சயமாய் இருந்தது.

அந்த கண்களின் ஏக்கமும், சோகமும் அவளை மிகவும் பாதித்தது. இங்கு நடப்பது ‘dejavo ‘ போலத் இருந்தது. தன்  சிறு  வயதில்  இதே ஜோடிக் கண்களின்  சோகம் மாற்ற, தான் ஒரு பூவை நீட்டி சொன்னது இப்போது ஞாபகம் வந்தது, 

" இது  வெறும் ரோஜா இல்ல, என்னோட சந்தோஷம், இத  நீ வச்சிட்டு , உன்னோட சோகத்தை எல்லாம் என்கிட்ட கொடுத்திரு, பிரபு..."  

சொல்லி  முடித்த பிறகு  தான், ரோஸை நீட்டியவாறே தான் அதை வாய் விட்டு சொல்லிவிட்டோம் என்று அவளுக்கு புரிந்தது. என்ன காரியம் செய்துவிட்டோம் என்று பதறி அவள் நீட்டிய கையை மடக்கும் முன்,
அவள் கைகள் இரண்டும் சந்துருவை நோக்கி இழுக்கப்பட்டது. அதிர்ந்து விழித்தவளின் உள்ளங்கைகளை தன் கைகளில் எடுத்து, தன் கன்னங்களில் வைத்து அழுத்திக் கொண்டான் சந்துரு.

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 04

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 06

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.