(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

சாப்பிடட்டுமே... அப்படி ஏன் அவங்களை நடுவுல போய் தொல்லை செய்யனும்?"

   

இந்து சொன்னதைக் கேட்டு காஞ்சனாவின் முகத்தில் சிந்தனை படர்ந்திருந்தது. ஆனால் அவள் எதுவும் சொல்லவில்லை. இந்துவே தொடர்ந்து பேசினாள்.

   

"எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவங்க ரெண்டுப் பேரும் தனியா வெளியே எங்கேயாவது போறது எல்லாம் அபூர்வம் அத்தை... நீங்க கோவிலுக்கு போகனும்னா என்னை கூப்பிடுங்க, அந்த நேரத்தில அக்காக்கும், ராஜீவுக்கும் கொஞ்சம் ப்ரைவசி கிடைக்கும்ல? நான் ஒன்னு சொல்லட்டுமா அத்தை, இன்னும் எத்தனை வருஷமானாலும் கீதா அக்கா இதையெல்லாம் வாயை திறந்து கேட்க மாட்டாங்க... ஏன்னா அவங்க அப்படி தான்... நாமா தான் இதை எல்லாம் கண்டு பிடிச்சு செய்யனும்..."

   

அடுத்த சில வினாடிகள் அங்கே வெறும் தொலைகாட்சியின் சத்தம் தான் கேட்டது.

   

காஞ்சனாவின் அமைதியை எப்படி எடுத்துக் கொள்வது என்றுப் புரியாமல், "நான் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமா பேசிட்டேனா அத்தை? கோபமா????" என்றாள் இந்து.

   

தன் பக்கத்தில் இருந்த இந்துவின் கேசத்தை கனிவுடன் வருடிய காஞ்சனா,

   

"இல்லைடா இந்து... இதை எல்லாம் நான் யோசிக்கவே இல்லையேன்னு நினைச்சேன்... இது போல இன்னும் நிறைய இருக்கா?" என்றாள்!

   

கண்களில் குறும்பு மின்ன, "எக்கச்சக்கம்!!! ஏதோ கீதா அக்கா என்பதாலே பரவாயில்லை... இல்லைனா அவ்வளவு தான்..." என்றாள் இந்து.

   

சின்ன மருமகளின் குறும்பை ரசித்து சிரித்த காஞ்சனா, "நல்லவேளை நீ எனக்கு மருமகளா வந்த, இல்லன்னா இது எல்லாம் எனக்கு புரிஞ்சே இரு

{/f90filter}

க்காது! ஆனாலும் திடீர்னு நான் கீதாவை கூப்பிடாம உன்னை கூப்பிட்டா கீதாக்கு வருத்தமா இருக்காதா?" என்றாள்.

   

"அதை எல்லாம் என் கிட்டே விட்ருங்க, நான் பார்த்துக்குறேன்...."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.