“சஞ்சீவ், என்ன செய்றீங்க? வாங்க அங்கே...”
“நோ, அதுக்கு எல்லாம் எனக்கு பொறுமை இல்லை...”
அதற்கு மேல் அவளை பேச அவன் அனுமதிக்கவில்லை.
🌼🌸❀✿🌷
காலையில் தூக்கத்தில் இருந்து விழிப்பு ஏற்பட்ட பின்பும் கண்களை திறக்க இந்து மிகவும் சிரமப் பட்டாள். ஒரு வழியாக கண்களை திறந்தவளின் பார்வையில், அவள் அருகில் கட்டிலில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவ் தென் பட்டான்...
“குட் மார்னிங்டா இந்து செல்லம்...”
அவன் குளித்து ஃப்ரெஷ்ஷாக இருப்பதை வியப்புடன் பார்த்தவள்,
“டைம் என்ன அச்சு சஞ்சீவ்?” எனக் கேட்டாள்.
“பதினொரு மணி தான்...”
“என்னது பதினொரு மணியா....” என்று பதறி படுக்கையில் இருந்து எழுந்தவள், ஏதோ நினைவு வந்தவளாக,
“இங்கே எப்படி...?” என்றாள் புரியாமல்!
{/f90filter}
அவளின் கேள்வியை புரிந்துக் கொண்டவனாக,
“நான் தான் உன்னை தூக்கிட்டு வந்து படுக்க வச்சேன்... அம்மா, என்ன வெயிட் நீ,” என்றான் சஞ்சீவ் கேலி மின்ன!