Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 24 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சினேகாவின் செல்ஃபோனில் வாட்ஸ்-அப் மெசேஜ் வந்திருப்பதின் அறிகுறியாக மெல்லிய ஓசைக் கேட்டது.
ஃபோனை கையில் எடுத்து பார்த்தாள்.
மகாலட்சுமி ஜோக் ஒன்றை அனுப்பி இருந்தாள்.
அதை படித்து புன்னகைத்தாலும் அவளின் மனதில் குற்ற உணர்வும் தோன்றியது.
இத்தனை வருடங்களில் மகாலக்ஷ்மியிடம் இருந்து அவள் எதையுமே மறைத்ததில்லை! இப்போது ஆகாஷ் மீது அவளுக்கு தோன்றி இருக்கும் அன்பு ஒன்றை தவிர...!
மகாலட்சுமிக்கு தெரிந்தால் அவள் என்ன சொல்வாள் என்பது சிநேகாவிற்கு நன்றாகவே தெரியும்... ஏன் சினேகாவின் அறிவுமே அதை தானே சொல்லிக் கொண்டிருக்கிறது...!!!
அது ஏன் காதல் என்று ஒன்று வந்து விட்டால் இதயமும், மூளையும் இப்படி அடித்துக் கொள்கின்றன???
“சினேகா!”
சியாமளாவின் குரலில் சிந்தனையில் இருந்து வெளிப்பட்டாள் சினேகா.
“சொல்லுங்க மேம்!”
“நேத்தைக்கு நீ கொடுத்த ட்ராயிங்க்ல மேப் ஸ்கேல் சரியா இல்லைன்னு பிரபா சொல்லிட்டு போனார்.”
“இல்லையே மேம், கரக்ட்டா தான் செய்தேன்,” என்று சொல்லிய படி அவளின் கம்ப்யூட்டரில் பிரபாகருக்கு அனுப்பிய டிராயிங்கை ஓபன் செய்துப் பார்த்தாள்.