தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 55 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நந்திதா அவசர அவசரமாக முகத்தை துடைத்துக் கொள்ள, துளசியும் அவளை ஒரு முறை செக் செய்து விட்டு, எல்லாம் சரியாக இருக்கிறது என்று தலை அசைக்க, இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்.
ரேவதியின் பக்கத்தில் அவர்கள் வந்ததும், “இந்தா இது உனக்கு,” என ஒரு சின்ன நகை பெட்டியை நந்திதாவிடம் நீட்டினாள் ரேவதி.
நந்திதா தயக்கத்துடன் நிற்க,
“வீட்டுக்கு வர போற மருமகளுக்காகன்னு ஸ்பெஷலா நான் ஆர்டர் கொடுத்து வாங்கி வச்ச நெக்லஸ் இது... எமரால்ட் நெக்லஸ்,” என்று சொல்லி அந்த பெட்டியை நந்திதாவின் கையில் வைத்தாள் ரேவதி.
நந்திதா அதை வாங்கிக் கொள்ள,
“எடுத்து போட்டுக்கோ,” என்றாள் ரேவதி.
துளசி நந்திதாவிற்கு நெக்லஸை அணிவித்து விட அது மற்ற நகைகளை விட தனி அழகுடன் மின்னியது...
ஏற்கனவே அழகாக இருந்த நந்திதாவின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்த்தது....!
“ரொம்ப அழகாருக்கு,” என துளசி சொல்ல, சின்ன புன்னகையை பதிலாக கொடுத்து விட்டு,
“வீட்டுக்கு கிளம்பலாம், உதய் நீங்க எல்லாம் ஒன்னா வாங்க, நான் இப்போ கிளம்புறேன். “ என்றாள் ரேவதி!
அவள் அங்கிருந்து சென்றதும் ஃப்ரென்ட்ஸ் புடை சூழ அந்த நெக்லஸை பார்த்தாள் நந்திதா! அவளுக்கு மட்டுமல்லாமல் அவளின் தோழிகளுக்கும் அது பிடித்திருந்தது!