“பரவால்ல நந்து, திட்றதுக்கு நடுல நடுல இப்படி எமரால்ட் நெக்லஸ் வேற தருவாங்க போலருக்கு, யூ என்ஜாய்,“ என அருணா சொல்லவும், சிரித்து விட்டு, அனைவரும் ஒன்றாகவே கிளம்பினார்கள்.
உதயின் அருகே அமர்ந்து அவனின் வீட்டை நோக்கி சென்ற பயணம் நந்திதாவிற்கு மிகவும் பிடித்திருந்தது! ஆனால் அவள் அமைதியாக இருந்தாள்!
எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் உதயும் கூட அந்த பயண நேரத்தில் அமைதியாக தான் இருந்தான்!
என்ன என்ற யோசனையுடன் அவள் அவன் பக்கம் ரகசியமாக பார்த்தால், உதயும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்!
தானாக அவள் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை தோன்ற, உதய் இன்னும் நெருங்கி அவள் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு, அவளின் கையையும் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
அந்த பிடியில் தெரிந்த உரிமை நந்திதாவிற்கு பிடித்திருந்தது! இனி அவளுக்காக உதய் இருக்கிறான்!
அந்த மகிழ்ச்சியுடனே வலதுக் காலை எடுத்து வைத்து உதயின் வீட்டில் மருமகளாக நுழைந்தாள்!
துளசியின் உதவியுடன் உதயின் வீட்டை சுற்றிப் பார்த்து, அதை நந்திதாவிடம் புகழ்ந்து சொல்லி விட்டு அவளின் தோழிகள் கிளம்ப தயாரானார்கள்!
“இப்போ கிளம்பினா தான் நந்து கரக்ட்டா இருக்கும்! ஹாப்பி மேரீட் லைஃப்,” என மனுஜா ஆரம்பித்து வைக்க, மற்ற இருவரும் கூட அதையே கோரஸாக சொன்னார்கள்!
நந்திதாவும் சிரித்த முகத்துடனே அவர்களை வழி அனுப்பினாள்! அது என்னவோ உதய் அவளுக்கு இருக்கிறான் என்ற எண்ணம் மற்ற எல்லாவற்றையும் விட இப்போது அவளுக்கு