ஒரு சில வினாடிகளிலேயே பிரபாகர் சொன்னது சரி என்பது புரிந்தது!
எப்படி இப்படி ஒரு முட்டாள்த்தனமான தவறை செய்தாள்???!!!
கேள்வி தோன்றிய உடனேயே கேள்விக்கான பதிலும் அவளுக்கு கிடைத்தது!
எல்லாம் ஆகாஷை நினைத்து உருகிக் கொண்டிருந்ததால் வந்தது தான்!!!
“என்ன ஆச்சு சினேகா, ஆர் யூ ஆல் ரைட்? ரெண்டு மூணு நாளா வித்தியாசமா இருக்க மாதிரி இருக்க?”
சியாமளாவின் கேள்வி சினேகாவை இன்னும் அதிகமாக தடுமாற வைத்தது.
இப்படி எல்லோரும் தெரிந்துக் கொள்வது போலவா நடந்துக் கொள்கிறாள்!!!???
ஆனாலும் சமாளித்துக் கொண்டு,
“பெரிசா ஒண்ணுமில்லை மேம். லைட்டா ஃபீவரிஷா, தலைவலியும் இருந்துச்சு... அதான் கொஞ்சம் டல்லா இருந்தேன்,” என்றாள்.
“அதானே பார்த்தேன்! சினேகாவாவது கவனமில்லாமல் தப்பு செய்றதாவது!!! வேணும்னா லீவ் எடுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ... ஆனால் கொஞ்சம் கவனமா பிரபாக்கு ஃபைல்ஸ் அனுப்பு. பிரபா சரியா பார்க்காம ஆகாஷுக்கு அனுப்பினாருன்னு வை, அப்புறம் அவ்வளவு தான்.”
“இனிமேல் கேர்ஃபுல்லா இருக்கேன் மேம்!!! சாரி...”
“சாரி எல்லாம் எதுக்கு! நீ சின்சியர் சிகாமணின்னு எனக்கு தெரியும்,” என்றாள் சியாமளா இலகுவாக!
அதற்கு பிறகு மனதை அலைப் பாய விடாமல் பத்து மடங்கு சின்சியாரிட்டியுடன் வேலையை