(Reading time: 19 - 37 minutes)

ப்போது தான் அவளை கவனித்தவராக “ஏன் மா நீயும் இப்படி பண்ற, பாரு உன் கண்ணும் சிவந்து போய் கிடக்கு, புது இடம்ன்றதுனால தூக்கம் வரலையா” எனக் கேட்டார்.

அவளும் “ஆமாம் ஆமாம் அத்தை” என்று உளறினாள்.

சந்துரு இதற்கும் சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் திரும்பிய அவன் தாய் “சந்துரு உனக்கு ஏதோ ஆகிடுச்சி” என்று சொல்லி விட்டு இனியாவிடம் திரும்பி “இட்லி செய்யட்டுமா தோசை செய்யட்டுமா, உனக்கு எது பிடிக்கும்ன்னு சொல்லு செய்யறேன், இல்ல ரெண்டும் செஞ்சிடட்டுமா” என்றார்.

“இல்ல அத்தை, தோசை மட்டும் போதும்” எனவும் அவர் கிட்சனுக்கு செல்ல திரும்பினார்.

சந்துரு “அம்மா உனக்கே இது நல்லா இருக்கா, இங்க உன் பசங்க ரெண்டு பேரும் இருக்கோம்ன்றது உனக்கு நியாபகம் இருக்கா, எங்களுக்கு என்ன வேணும்ன்னு எல்லாம் கேட்க மாட்டியா” என்றான்.

“நீ அவ கூட போட்டி போடாதா டா. நானே எனக்கு பொண்ணு இல்லைங்கற குறைய என் மருமகள்களை பார்த்து தான் தீர்த்துக்கறேன். உனக்கு அதுவும் பொறுக்கலையா, உனக்கு தானே, நான் போடறது சாப்பிடு, இல்லன்னா பட்டினியா கிட” என்றார் சிரித்துக் கொண்டே.

சந்துரு “நீ எப்பம்மா இப்படி வயலன்ட்டா மாறின” என்றான்.

“உனக்கு இப்படி தான் நடக்கணும், போடா” என்று விட்டு அவர் உள்ளே சென்று விட, சந்துருவும் அவரை பின் தொடர்ந்தான்.

“ஹேய் இனியா காலைல இருந்து நீ வாக்கிங் போக வருவன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா, இதுல சந்துரு வேற ஒரே கலாட்டா பண்றான்”

“சாரிப்பா. எனக்காக வெயிட் பண்ணீங்களா,  நான் தூங்க நாலு மணி ஆகிடுச்சி. அதான் எந்திரிக்க முடியலை கால் பண்ண வேண்டியது தானே, நான் எந்திரிச்சி வந்திருப்பேன் இல்ல”

“இல்ல நீ வரலன்ன உடனே இப்படி தான் இருக்கும்ன்னு தெரியும், இருந்தாலும் நீ வருவியான்னு பார்த்தேன்”

“ஆமா நீங்க எப்ப தூங்கநீங்க. காலைல வேற எந்திரிச்சிருக்கீங்க. உங்க கண்ணு வேற ரொம்ப ரெட்டா இருக்கு தெரியுமா, ஏன் சீக்கிரம் விழிச்சீங்க”

“ஹேய் தூங்கினா தானே சீக்கிரம் விழிக்கறதுக்கு”

“என்ன சொல்றீங்க. நைட் புல்லா தூங்கவே இல்லையா”

“ம்ம்ம். தூக்கமே வரலை டா. கண்ணை மூடினா உன் முகம் தான் கண்ணு முன்னாடி வருது. அப்புறம் எப்படி தூங்கறது”

“என்ன இளா நீங்க. ஆபிஸ் போகணும் இல்லை. ஏன் இப்படி பண்றீங்க” என்றாள் சோகமாக.

“ஹேய் நான் வேணும்னே எல்லாம் தூங்காம இல்லைடா. கொஞ்ச நாளா இருந்த டென்ஷன் திடீர்ன்னு காணாம போயிடுச்சி. அப்புறம் மேடம் நேத்து பேசினதுன்னு அதெல்லாம் ரீவைன்ட் பண்ண மாதிரி கண்ணு முன்னாடி ஓடிட்டே இருந்துச்சி, தூக்கமே வரலை, பார்த்தா விடிஞ்சிடுச்சி, சரி நீயும் வாக்கிங் வருவன்னு எந்திரிச்சி வந்துட்டேன், அவ்வளவு தான்.”

அவள் அவனை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் அங்கு வந்த சந்துரு இருவரையும் ஓட்டிக் கொண்டே இருந்தான். இனியா மட்டும் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தாள். அதற்குள் சாப்பிட வருமாறு ராஜலக்ஷ்மி அழைக்கவும் தப்பித்தோம் என்று இனியா ஓடி விட்டாள்.

சாப்பிட்டு முடித்தவுடன் ஹாஸ்பிடல் கிளம்ப என்று ரூமிற்கு வந்த இனியாவை பார்க்க இளவரசன் வந்து சேர்ந்தான்.

அறைக்குள் வந்த இளவரசன் “இனியா” என்றபடி நின்றான்.

“என்ன இளா”

“இன்னைக்கு சனிக்கிழமை தானே, இன்னைக்கு ஹாஸ்பிடல் போகனுமா”

“எல்லாருக்கும் சண்டே தான்ப்பா ஹாலிடே. சனிக்கிழமை வொர்கிங் டே தான்.”

“போடி, நீ மனுஷன் பீலிங்க்ஸ் புரிஞ்சிக்க மாட்ட” என்றான் கோபமாக.

இனியா சிரித்து விட்டு “அதுக்குள்ளே ஐயாவுக்கு கோபமா” என்று அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள்.

“அப்ப எங்கயாச்சும் வெளிய போகலாமா. ஓகே வா” என்றான் அவசரமாக.

இனியா அவனை பார்த்து “இளா ஒன்னு புரிஞ்சிக்கோங்க, நாம ஒன்னும் டீன் ஏஜ்ல இல்லை. ஏன் இப்படி அவசர படறீங்க” என்றாள்.

“ம்ம்ம்” என்றவாறு அவன் ஷோபாவில் அமர்ந்து விட்டான்.

“இளா. முதல்ல சொல்லுங்க. உங்களுக்கு இன்னைக்கு எந்த வொர்க்கும் இல்லையா. சொல்லுங்க.”

“இருக்கு. ஆனா எதுக்கு பர்ஸ்ட் பிரியாரிட்டீஸ் தரனும்ன்னு இருக்குல்ல”

“ஹாஹா. உங்க பர்ஸ்ட் பிரியாரிட்டடி உங்க வொர்க்குக்கு கொடுங்க. எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்றாள் சிரித்துக் கொண்டே.

“ஓ அப்படியா. நியாபகம் வச்சிக்க இந்த வார்த்தையை. மேரேஜ்க்கு அப்புறம் சொல்லி பாரு என்ன இப்படி வேலை வேலைன்னு ஓடறீங்கன்னு. அப்புறம் பார்த்துக்கறேன்”

“அப்படியா. அத அப்புறம் பார்க்கலாம்” என்றாள் இனியா

“அதுக்கு ஏண்டி சிரிக்கற.”

“ஹிஹிஹி என் வாய். நான் சிரிக்கறேன். ஹிஹிஹி”

“உனக்கு வாய் அதிகமாகிடுச்சிடீ”

“ஹிஹி எனக்கா வாய் அதிகமாகிடுச்சி. அதை ஒரு உம்மனாமூஞ்சி சொல்லுது”

“ஹேய் என்னடி என்னையா உம்மனாமூஞ்சின்னு சொல்ற”

“ம்ம்ம். ஆமாம். உங்களை பர்ஸ்ட் டே பாத்துட்டு நான் அப்படி தான் நினைச்சேன். இப்ப பார்த்தா இந்த வாய் அடிச்சிட்டு எனக்கு வாய் அதிகமாகிடுச்சின்னு சொல்றீங்க. அதான்”

“எல்லாம் என் நேரம், உன் கிட்ட பேச முடியாது. என் ஹாப்பி மூட் நீ ஸ்பாயில் பண்ணிடுவ போலருக்கு. நான் போறேன். பாய்”

அவன் சோகமாக போவதை கண்ட இனியா “இளா” என்றாள்.

திரும்பி நின்றவன் “என்ன” என்றான் குழந்தை போல்.

“ஐயோ இளா உங்களை பார்த்தா சிரிப்பு தான் வருது. ஏன் சின்ன குழந்தையாட்டும் பண்றீங்க”

“போடி. நீ ஒன்னும் பேசாத”

“சரி. நான் பேசல.”

“நாம ரெண்டு பெரும் அட்லீஸ்ட் கோவிலுக்காச்சும் போலாமா. ஹாஸ்பிடல் பெர்மிஷன் போடறியா”

“ம்ம்ம். கோவிலுக்குன்னா போலாம். நோ ப்ராப்லம்”

“அப்பாடா. இதுக்காச்சும் ஓகே சொன்னியே”

“வெயிட் பண்ணுங்க. ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்துடறேன்”

“ம்ம்ம். நான் கீழே இருக்கேன். நீ வா”

இருவரும் கிளம்பிய பின் ராஜலக்ஷ்மியிடம் சென்ற இளவரசன் “அம்மா இனியாவை நானே இன்னைக்கு ட்ராப் பண்றேன்” என்றான்.

அவரும் “சரிப்பா” என்றுவிட்டு சென்று விட்டார்.

ருவரும் கிளம்பி வெளியே செல்கையில் இளவரசனின் வலது புறம் இனியா நடந்து சென்றாள்.

இளவரசன் தன் வலது கையை பின்னே எடுத்து சென்று இனியாவின் வலது தோல் பட்டையில் யாரோ கூப்பிடுவது போல் சீண்டவும், இனியாவும் யாரோ என்று எண்ணி திரும்பி பார்த்தால் அங்கு யாரும் இல்லை, எல்லாம் இவனின் வேலை என்று எண்ணி கையில் இருந்த அவள் பேகை எடுத்து அவனை அடிக்க ஆரம்பிக்க இளவரசன் ஓடினான்.

கேட் வரை அப்படியே ஓடி சென்று விட்டு இனியாவிடம் திரும்பியவன் “ஓகே ஓகே இதுக்கு மேல ஓடினா ரோடுல போறவங்க என்ன நினைப்பாங்க. விடுமா என்று கூறிவிட்டு அவள் கன்னத்தை பிடித்து கெஞ்சினான்.”

ஒரு வழியாக அவர்கள் இருவரும் கிளம்பி சென்று விட்டார்கள்.

இதை எல்லாம் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ராஜலக்ஷ்மி அதிர்ந்தார்.   

தொடரும்

En Iniyavale - 15

En Iniyavale - 17

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.