(Reading time: 23 - 45 minutes)

04. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

பார்த்தியா கணேஷ் உனக்கே கோவம் வருதுல இப்படி தான் எனக்கும் இருந்துச்சு ஹ்ம்ம் என்னவெல்லாம் பேசினான் தெரியுமா,” என்று தன் பெஸ்ட் ஃப்ரிண்ட் விநாயகரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள் அனு. என்னதான் ஹேமா ஃப்ரிண்ட்லியாக பழகினாலும் சில நேரங்களில் பொறுப்பான தாயாக கண்டிப்புதான் அதிகமாக இருக்கும், எனவே நிகழ்ந்தவை அனைத்தையும் ஹேமாவை காட்டிலும் கணேஷிடம் வந்து பகிர்ந்து கொள்வதே வழக்கம். இதுவும் ஹேமாவின் மூலமாக வந்த பழக்கமே, வெங்கட்டிற்கு promotion,transfer  என்று வருவது எல்லாம் எப்பொழுதும் நடப்பதே. ஆனால் அதில் பெரும்பாலும் பாதிக்கபடுவது பிள்ளைகளே, பள்ளிகள் மாறிக்கொண்டே இருப்பதால் பெஸ்ட் ஃப்ரிண்ட் அமைவது கொஞ்சம் கடினமாகவே இருந்தது இருவருக்கும். அர்ஜுன் இதை பெரும்பாலும் வெளியே சொல்வது இல்லை, ஆனால் அனுவோ சிறுவயதில் அவ்வப்போது பெஸ்ட் ஃப்ரிண்ட் என யாரும் இல்லை என்று கூறி அழுவாள். அவளை சமாதானம் செய்வது ஹேமாவிற்கு பெரும்பாடாக இருக்கும் எனவே குட்டி விநாயகர் சிலை ஒன்றை கையில் கொடுத்து அவர்தான் அனுவின் தோழன் என்றும் கூறினார் ஹேமா. அன்றில் இருந்து அனு எங்கு சென்றாலும் கையுடன் விநாயகரையும் எடுத்து செல்வாள். விநாயகரின் தலையெழுத்து வேறுவழி இன்றி அன்று முதல் அனுவிற்கு பெஸ்ட் ஃப்ரிண்டாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.

“எவ்வளவு தைரியம் பார்த்தியா கணேஷ் நான் அவனை சைட் அடிச்சேனாம் என்கிட்டயே சொல்லுறான், எனக்கு அவன்கிட்ட பேசவே பிடிக்கலை, சரி ஃப்ரிண்ட்ஸ் ஆகலாம்னு நினைச்சேன் ஆனால் இனிமே அவன்கிட்ட நான் பேச போறது இல்லை அஸ்வத் எனக்கு எப்பவுமே எதிரி தான் ஹ்ம்ம்” என்று தன்பாட்டிற்கு புலம்பி கொண்டு இருந்தாள்..

இவள் இப்படி புலம்பி கொண்டிருக்க அய்யோ பாவமாக அமர்ந்து இருந்தார் விநாயகர். அப்படி எல்லாம் சொல்லாத அனு நான் வேற கணக்குல போட்டு இருக்கேன் என்று தனக்கும் இரண்டு திட்டு விழுமோ என்று பயந்து ரகசியமாக கூறினார்..

“ஹே என்னடி பண்ணிக்கிட்டு இருக்க ஃபங்க்ஷன் முடிந்து வந்து இவ்வளவு நேரமாக என்ன பண்ணுற முதல்ல டிரெஸ்ஸை அழுக்கு ஆக்காமல் மாத்து துவைக்குறது நான்தான்” என்று ஹேமா அறையின் வெளியே நின்று கத்திக்கொண்டு இருந்தார்.

“ஆஹா என்னமோ கையாலையே துவைக்கிற ஃபீல் கொடுக்குரிங்க, வாஷிங் மிஷின்ல தானே போடுறிங்க?” என்று வெளியே வந்து தன் கோவத்தை கொஞ்சம் ஹேமாவிடமும் காட்டினாள்.

வ்வாறு அஸ்வத்தின் மீது இருந்த வெறுப்பில் சில நாட்கள் கோவத்திலேயே செல்ல, 12ஆம் ஆண்டு தேர்வு வருவதால் பள்ளியில் தினமும் தேர்வுகள் வைக்க துவங்கினர், தேர்வின் நினைவில் அஸ்வத்தின் நினைவு மறைந்துபோக, முழுமுயற்சியுடன் படிக்க துவங்கினாள். தேஜுவும் அனன்யாவும் சேர்ந்து படித்தனர், தேஜுவின் விருப்பபாடம் biology யாக இருக்க அனு கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருந்தாள். அந்த பாடத்தை தவிர அனைத்தையும் சேர்ந்து படித்தனர்... ஒருவர் படித்ததை மற்றவர்க்கு சொல்லி கொடுத்தனர்.

தேர்வுகளும் துவங்கின, அனைவருக்கும் நாட்கள் அமைதியாக சென்றாலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பரபரப்பாக நாட்கள் சென்றது. ஒரு தேர்வு முடிவதும் தெரியவில்லை அடுத்த தேர்வுக்கு படிப்பதும் தெரியவில்லை. இதுவரை இப்படி ஒரு ஜீவன்  இருப்பதாக உறவினரோ பக்கத்து வீட்டில் இருப்பவர்களோ யாருமே கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதே ஜீவன் stateboard எக்ஸாம் மட்டும் எழுத போவது அறிந்துக்கொண்டால் ஊரே அந்த ஒருவனை மட்டும் சுற்றிவரும், நன்றாக படிக்கிறானா? எவ்வளவு மதிப்பெண் பெறுவான் என்று கழுகு போல் சுற்றிவருவர். படிப்பதில் இருக்கும் இறுக்கத்தை விட சுற்றி இருப்பவரின் எதிர்பார்ப்பே இன்னும் இறுக்கம் தரும் அந்த மாணவர்களுக்கு... தேஜுவும் அனன்யாவும் தேர்வுகளை நன்றாக எழுதினர். இருவரின் பல நாள் தியாகம் இறுதி கட்டத்தை அடைந்தது.  

இறுதி தேர்வு நாளும் வந்தது, “எப்படி தேஜு பண்ணிருக்க?” இருவரும் மிதிவண்டியை தள்ளியவாறு பேசிக்கொண்டு வந்தனர்.

“நினைச்சதை விட கொஞ்சம் ஈசியாக தான் இருந்துச்சு அனு நல்லா பண்ணிருக்கேன், நீ?”

“நானும் தான் நூடுள்ஸ், எப்படா எக்ஸாம் முடியும்னு நினைச்சுகிட்டே எழுதினேன் தெரியுமா டிவி பார்க்க முடியலை, ஒழுங்காக தூங்ககூட இல்லை, வீட்ல அம்மாவே ஆச்சர்யமா பார்த்தாங்க நம்ம பொண்ணுதானானு.” என்று கூரியவளின் முகத்தில் பெரும் நிம்மதி.

“ஆமா அனு என் வீட்டுலயும் தான், சரி அடுத்து என்ன பிளான்? என்ன படிக்கலாம்னு இருக்க?” பொறுப்பாக அடுத்த கட்டத்தை யோசித்தாள் தேஜு.

“ஹே இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா? எக்ஸாம் முடுஞ்ச அன்னைகேவா?! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் தான் என் மூளை வேலை செய்யும்...” என்று கூறி அலுப்பாக நெற்றியை அழுத்திக்கொண்டாள்.

“அதுக்கு மூளைன்னு ஒன்னு இருக்கணும்.” என்று நக்கலாக கூற..

“அதை நீ சொல்லுறியே நூடுள்ஸ்” என்று தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் சிரித்து பேசியவாறு வீட்டிற்க்கு சென்றனர்.

விடுமுறை நாட்கள் நதிபோல் நகர மேற் படிப்பினை பற்றி முடிவு எடுத்தனர். தேஜு டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டாள். அனன்யா இன்ஜினியரிங் சேர ஆசைப்பட்டாள். நுழைவு தேர்விற்கு படித்துக்கொண்டும், விடுமுறையை சந்தோஷமாக கடத்திக்கொண்டும் அதே நேரம் தேர்வு மதிப்பெண்களுக்கு காத்துக்கொண்டும் பொழுது சென்றது.

தேர்வு முடிவுகளும் வந்தன. இருவருமே நன்றாக தேர்வினை எழுதியதால் தேஜு பள்ளியில் 2ஆம் இடத்தையும் அனன்யா 3ஆம் இடத்தையும் பிடித்தனர். இருவரும் வானில் பறக்காதகுறை தான்... உறவினர்கள் வருசையாக தொலைபேசியில் அழைக்க அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி கூறியே கலைத்து போனனர் இருவரும்.  

“என் பொண்ணு பாஸ் ஆகிட்டா....” என்று பழைய படங்களில் வருவதை போல் ஹேமா ஃபீல் குடுக்க அனு தலையில் அடித்துக்கொண்டாள் “அம்மா மானத்தை வாங்காதிங்க நான் ஸ்கூல் டாப் 3 ல் வந்திருக்கேன் அதைபோய் பாஸ்ஸு கீசுன்னு”.. என்று அலுத்துக்கொண்டாள்.

“அதைதான் என்னால நம்பவே முடியலை எப்படி நடந்துச்சு இட்ஸ் அ மெடிக்கல் மிராக்கிள்? (its a medical miracle)” என்று ஆச்சர்யப்படும் தோணியில் கூறி நக்கல் செய்தார் ஹேமா.

“அதுக்கெல்லாம் தனி மூளை வேணும்மா நான் திருவாளர் வெங்கட்டோட பொண்ணாக்கும் சோ பிறக்கும் போதே வந்துருச்சு” என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.

“முன்னாடியாவது பரவாலை இப்பதான் ரொம்பவே சந்தேகமாக இருக்கு எப்படி இவ்ளோ மார்க் வாங்கினணு...” என்று கூறி தொடர்ந்து 6 அடித்தார் ஹேமா.

ஹேமா சரியான ஃபாம்மில் இருப்பதை அறிந்து எதுவும் பேசாமல் முறைத்தாள் அனு. எதற்கும் சளைக்காதவள் தான் ஆனால் பல நாட்கள் கழித்து அஸ்வத்தின் பேரைக் கேட்டதில் வந்த குழப்பத்தில் அடக்கி வாசித்தாள் அனன்யா.

அஸ்வத் திருப்புரிலேயே முதல் மாணவனாக வந்ததை முன்னிட்டு லோக்கல் சேனல்களில் செய்திகள் வந்தன. அதை கவனித்த அனன்யா மனதில் அஸ்வத்தை மெட்சிக்கொண்டாள், கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தாலும் மனதில் மகிழ்ச்சியாகவே இருந்தது. அதே நேரம் அவனது செய்தி அவர்களின் சண்டையை நினைவு படுத்த முன்பு போல் கோவம் வந்தது. இவ்வாறு மனம் மாறிமாறி யோசிக்க, இந்த மனம் ஏன் ஒரு நிலையில் இருப்பது இல்லை என்று புரியாமல் குழம்பி போனாள் அனு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.