(Reading time: 23 - 45 minutes)

ஸ்வத்தின் வீட்டில் அதே போல் கல்லூரிக்கு செல்வதற்காக ஏற்பாடுகள் நடந்துக்கொண்டு இருந்தன. அதே அறிவுரைகள் ஆனால் அஸ்வத் எதையும் மறுத்து பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டான்.

“அஸ்வத் நீ கண்டிப்பா சென்னை வரைக்கும் போகனுமா நம்ம ஊரிலேயே படிக்கலாமே” என்று பரிவுடன் துளசி கேட்டார்.

“ஏம்மா அப்படி கேட்குறிங்க” என்று கேட்டவாறு தாயின் அருகில் அமர்ந்து தோளில் தலை சாய்த்துக்கொண்டான்.

“இதோ இப்படி கொஞ்சிகிட்டே இருக்க ஆளு இருக்காதே” என்று பாசமாக அவன் சிகையை கலைத்தவாறு சிறு வருத்ததுடன் கூறினார்.

“ஏன் என்னை பார்த்தால் ஆளாக தெரியலையா” என்று மைவிழிகளில் கோவம்காட்டி வம்பிற்கு வந்தாள் அஹல்யா.

“ஆஹா நீ கொஞ்சுகிற இலட்சணம்தான் நல்லா தெரியுமே உனக்கு எப்போலாம் செல்லுல வேலை இல்லையோ அப்போ மட்டும் அம்மா அம்மானு சுத்தி வருவ.... என் பையன் அப்படி எல்லாம் இல்லை எந்த வேலை இருந்தாலும் என்கிட்ட கொஞ்சிட்டுதான் போவான் ஹ்ம்ம்” என்று அலுத்துக்கொண்டார்.

“ஹலோ துள்ஸ் ஓவரா பேசாதிங்க நான்தான் வீட்ல இருந்து உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் மறக்காதிங்க...” என்று பதில் அளித்தாள்.

“ஆமா பெருசா பண்ணிட்டா சும்மா அங்க இங்கனு வீட்டில சுத்திட்டு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிக்குற” என்று தன் செல்ல மகன் சென்னைக்கு போகும் கடுப்பில் பொருமிக்கொண்டு இருந்தார் துளசி. “சரி சரி போதும் நிறுத்துங்க டேய் அஸ்வத் அங்க ஏதாவது பிரச்சனைனா எனக்கு உடனே போன் பண்ணு நான் பார்த்துக்குறேன்” என்று வீர வசனம் பேசினாள் அஹல்யா...

“அது எப்படி அக்கா என்னைபோய் கிண்டல் பண்ணுவாங்க நான் உன் தம்பின்னு தெரிஞ்சாலே பயன்துட மாட்டாங்களா? நீ யாரு பெரிய சொர்ணா அக்காவாச்சே” என்று புகழ்வது போல் கிண்டல் செய்தான் அஸ்வத். அது புரியாமல் “பரவால பரவால புகழாத” என்று பெருமையாய் முகத்தை வைத்துக்கொண்டாள்.

அரட்டை அடித்துக்கொண்டே நேரம் வேகமா சென்றது. துளசிக்கு மகனை பிரிய மனம் இல்லை ஆனாலும் வேறு வழியும் இல்லை எனவே அரைமனதோடு அஸ்வத்தை கல்லூரியில் சேர்க்க துளசியும் கண்ணனும் சென்றனர்.

டுத்த நாள் கல்லூரி துவங்கும் நாள் எனவிருக்க, ஹேமா வெங்கட் இருவரும் அனுவை கல்லூரி விடுதியில் சேர்க்க வந்தனர். கல்லூரி வாயிலை அடையும்வரை இல்லாத ஒரு விதமான தனிமை அனுவை இப்பொது தொற்றிக்கொண்டது. வீட்டில் அலட்சியமாக பேசியது நினைவிற்கு வர வருத்தமாக இருந்தது. புது இடம், புது கனவுகள், புது விதமான சுதந்திரம் என பலவகை கனவுகள் மட்டுமே இத்தனை நாட்கள் எண்ணிக்கொண்டு இருந்தாள். ஆனால் அதையும் தாண்டி கல்லூரி வாழ்க்கை ஒன்று இருப்பதை எண்ணவில்லை... இப்போது அந்த எண்ணங்கள் எல்லாம் வந்து பயம் தந்தது, அங்கு உள்ள பெண்கள் எப்படி பழகுவார்கள்? பெற்றோரை விட்டு தனியாக இருக்க வேண்டுமே? சீனியர்ஸ் ராக்கிங் பண்ணுவாங்களா? எப்படி நடந்துக்கணும்? எல்லாரும் சகஜமா பலகுவாங்களா? என்று பல எண்ணங்கள் அவளுள். 

கல்லூரியின் நுழைவாயிலை அடையும்போது புது விதமான உணர்வு தொற்றிக்கொண்டது அது வருத்தமா பயமா இல்லை சந்தோஷமா என்று புரியாத ஓர் உணர்வு எங்கோ ஒரு புது உலகை காணும் உணர்வு மனதில். கல்லூரி விடுதிக்கு சென்றனர்... புது முகங்கள் புது சுற்றுபுறம் திரு திருவென முழித்துக்கொண்டு விடுதிக்குள் சென்றாள், அவளுக்கு தந்திருக்கும் அறைக்கு சென்று தன் பொருட்களை வைத்தாள், அங்கு முன்பே பொருட்கள் இருப்பதை பார்த்து தனக்கு முன்பே இன்னொரு பெண் வந்திருப்பதை உணர்த்தாள் அனு. ஹேமாவிற்கு முதல் முறை அனன்யாவை தனியாக விடுவது மிகவும் வருத்தமாக இருந்தது இருப்பினும் வேறு வழி இல்லையே, “அனு ஏதாவது வேணும்னா அர்ஜுன்க்கு போன் பண்ணு அவன் வந்து பாத்துட்டு போவான் சரியா?” பரிவாக தலையை தடவியவாறு கூறினார். இவர்கள் பேசிக்கொண்டு இருக்க சிரித்த முகமாக ஒரு பெண் நுழைந்தாள்.

“ஹாய் அனன்யாதானே” என்று அந்த பெண் கேட்டவாறு அருகில் வந்து அமர்ந்தாள். “ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று சிறு ஆச்சர்யத்துடன் அனு கேட்க, “என்னது உங்களுக்கா? நானும் உன்னோடோட செட் தான் சோ வா போனே கூப்பிடு. என் பேரு பிருந்தா, வெளியில் நேம் லிஸ்ட்ல பார்த்தேன் மத்த பேரு எல்லாம் ஒண்ணுமே புரியலை அநேகமா இதான் உன் பேரா இருக்கும்னு guess பண்ணேன்” என்று புன்முறுவலுடன் கூறினாள்.

பிருந்தா பேசியதில் மனம் இலகுவாக அவளிடம் பேசினாள் “ஓஹோ நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் department நீ எந்த department?”

“ஹய் நானும் தான்” என்று பிருந்தா தன் சந்தோஷத்தை வெளிகாட்டினாள்.

“ஹப்பாடா யாருமே கம்பனிக்கு இல்லையேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்...” என்று அனு திருப்தியாக கூறினாள்.

“கவலையே படாத அனு உன்னை பார்த்தாலே நீ என் ரகம்னு தெரியுது சோ எல்லாத்துலையும் கம்பனி குடுக்குறேன்..”

“அது என்ன ரகம்?” புரியாமல் அனு கேட்டாள்.

“அதுவா...” என்று அவள் காதில் ரகசியம் போல் பிருந்தா கூற இருவரும் சேர்ந்து சிரித்தனர்... மகளுக்கு நல்ல தோழி கிடைத்த திருப்தி ஏற்பட்டது ஹேமாவிற்கு. ஹேமாவின் முகத்தை பார்த்த பிருந்தா அவர் மனம் புரிந்து போக “கவலையே படாதிங்க ஆன்ட்டி உங்க பொண்ண கண்கலங்காமல் நான் பார்த்துகிறேன்” என்று சிரிப்புடன் கூற ஹேமாவிற்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.

அவர்களது அரட்டையுடன் சேர்ந்து பொருட்களையும் அடுக்கினர், பிருந்தாவை தேடி அவள் தோழி ரியா வர பிருந்தாவே இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.. “நம்ம  department தான், ரொம்ப அமைதியா இருக்காள்னு தப்பு கணக்கு போட்டுறாத அனு, சும்மா நடிக்கிறாள் போக போக பாரு உள்ளே தூங்கிட்டு இருக்க மிருகம் வெளியே வரும்” என்று ரியாவை கிண்டல் செய்து கொண்டு இருந்தாள் பிருந்தா. நேரம் செல்ல செல்ல மூவரும் நல்ல தோழிகள் ஆனனர்.

“ஹாய் பாஸ் என் பேரு அருண் நான் தான் உங்க ரூம் மேட்” என்று அஸ்வதிடம் அறிமுகம் செய்துகொண்டான் அருண்.

“ஹாய் என் பேரு அஸ்வத்” என்று கூறி கை கொடுத்தான்.

“என்ன ஊரு பாஸ் நீங்க?”

“திருப்பூர்”

“ஏன் பாஸ், கேட்டதுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவிங்களா?”

“ச்சே ச்சே அப்படிலாம் இல்லையே மத்தவங்களாம் இன்னும் வரலையா?”

“இன்னும் 2 பேரு வரணும் பாஸ் அவங்க 1 வீக் கலுச்சுதான் வரதாக சொல்லிருக்கானுங்க என்னோட ஃப்ரிண்ட்ஸ் தான்”.

“ஓஹோ நான் கம்ப்யூட்டர் சயின்ஸ், நீ அருண்?”

“நானும் தான்... அஸ்வத் உனக்கு இங்க சீனியர்ஸ் யாரையாவது தெரியுமா?”

“இல்லையே ஏன்டா?”

“இல்லை ஐஸ் வச்சு ராக்கிங்ல இருந்து தப்பிசுடலாம்னு இருந்தேன்” என்று யோசனையாக கூறினான்.

“நான் கேள்விப்பட்ட வரைக்கும் நம்ம departmentல ஒரு சீனியர் இருக்காராம் ராக்கிங் பண்ணுறேன்னு அறுவை போடுவாராம், நீ பேசாம அவர் அறுவையை கேட்டாலே தப்பிச்சிடலாமாம் நடுவில மட்டும் மூஞ்சி சுளுச்சா அவ்ளோதான்” ரொம்பவும் சீரியஸ்சாக கூறினான்.  

“ஏன்டா என்ன பண்ணுவாராம்?” என்று ஆர்வமாக கேட்க

“5 நிமிட அறுவை, நாள் கணக்கு அறுவை ஆகிடுமாம்” என்று கூறி சிரித்தான்.

“ச்சே இதுவும் ஒரு பொழப்பு” என்று தலையில் அடித்துகொண்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.