(Reading time: 23 - 45 minutes)

வாழ்த்துகள் அஸ்வத்” என்று கூறி கொண்டே வாயில் ஸ்வீட்டை வைத்தார் அஸ்வத்தின் தந்தை கண்ணன். வீடே மகிழ்ச்சியில் மிதந்தது. மதிப்பெண்களை பார்த்த துளசிக்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வந்தது. லோக்கல் சேனல்களில் தங்கள் மகனை பற்றி வந்தமையால் பெருமையில் இருந்தனர் பெற்றோர்.. தன் செல்ல தம்பி இவ்வளவு மதிப்பெண் எடுத்ததில் அஸ்வத்தை விட அஹல்யாவிர்க்கே பெருமை அதிகமாக இருந்தது.

பின்னாள் இருந்து வந்து அஸ்வத்தின் தலையில் அடித்து “இந்தா இவ்ளோ மார்க் எடுத்த என் செல்ல தம்பிக்கு, என்னோட gift” என்று கூறி மகிழ்ச்சியுடன் ஒரு அழகிய பார்கர் பென் தந்து அரவணைத்து கொண்டாள் அஹல்யா.... “தேங்க்ஸ் அக்கா” என்று கூறி அதை பெற்றுக்கொண்டான். தேங்க்ஸ் சொல்லி சொல்லி அஸ்வதிற்கு வாய் வலிக்கும் அளவிற்கு வாழ்த்துக்கள் குமிந்தன. இனிமையாக நேரம் கழிந்தது வாழ்த்துகள் நன்றிகள் எல்லாம் ஓய்ந்து கலைத்து உட்கார தேஜு அழைத்தாள்.

“என்ன சார் கலக்கிட்டிங்க? வாழ்த்துக்கள்” குரலில் சந்தோஷம் தென்பட்டது.

“தேங்க்ஸ் தேஜு, ஆன்ட்டி ஃபோன் பண்ணாங்க கங்கிராட்ஸ் தேஜு” மகிழ்ச்சியுடன் பதிலுக்கு வாழ்த்துக்கள் கூறினான்.

“தேங்க்ஸ் அஸ்வத், அப்புறம் என்ன பிளான் டாக்டர்க்கு படிக்க போறியா?”

“ஏன் தேஜு இவ்ளோ மார்க் எடுத்தாளே டாக்டர்க்கு தான் படிக்கனுமா? எனக்கு இன்ஜினியரிங் பண்ணனும்தான் ஆசை, சோ ரெண்டு மூணு காலேஜ் பாத்து வச்சுருக்கேன்.” என்று தன் ஆர்வத்தை கூறினான். 

“நீயுமா? அனு கூட இன்ஜினியரிங் தான் பண்ண போகிறாள்” என்று கூறி அவனது பதிலை எதிர்பார்த்தாள்.

“ஓஹோ...” என்று யோசனையாக கேட்டுக்கொண்டு அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருக்க தேஜுவே தொடர்ந்தாள் “அவளுக்கும் எனக்கும் 7 மார்க் தான் வித்தியாசம்”. அதற்கும் வெறும் ஓஹோ மட்டும் தான் பதிலாக வந்தது. இவர்களின் சண்டை பற்றி தேஜு அறிந்ததே எனவே அவன் பதில் கூற மாட்டான் என்றும் அவள் அறிந்ததே. ஒரு நாள் தானாக சரியாகும் என்று எண்ணி விட்டுவிட்டாள். ஆனால் அஸ்வத்தோ தேஜு நினைத்தது போல் கோவத்தில் ஒன்றும் இல்லை, அனுவை பற்றி கேட்டுக்கொள்ள அஸ்வதிற்கு ஆர்வமாக இருந்தது எனினும் ஆர்வம் இருப்பதை காட்டிக்கொள்ளவும் தன்மானம் விடவில்லை எனவே அனுவை பற்றி தனக்கு கவலையே இல்லை என்பதுபோல் காட்டிகொண்டான்.

தேர்வு முடிந்து சில நாட்கள் கடந்தன... தேஜு, அனு இருவரும் நுழைவு தேர்விற்கு தயார் ஆனனர். நுழைவு தேர்வு முடிந்து தேஜுவிற்கு பெங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரியிலும் அனுவிற்கு சென்னையில் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைத்தது.  

நாட்கள் கண் இமைக்கும் நொடியில் ஓடிப்போனது. இருவரும் பல வருடங்கள் இல்லை என்றாலும் ஒன்றாக படித்த 3 வருடங்களில் உயிர் தோழிகள் ஆனனர், இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் கிடைத்ததில் மனம் வருத்தமாக இருந்தது.

“ஹே இப்போ என்ன ஆச்சுனு முகத்தை இப்படி வச்சிருக்க? சிரி அனு..”

“நீ தானே என்கூடவே சென்னைல வேற காலேஜ் சேருறேன்னு சொன்ன..” என்று சிறு பிள்ளை போல் சிணுங்கினாள் அனன்யா.

“நானும் அப்படி நினைத்து தான் சென்னைலையும் entrance எக்ஸாம் எழுதினேன் என்னடா பண்றது கடைக்களை, இப்படி உம்முன்னு இருக்காத அனு, நம்ம அடிக்கடி பேசலாம் சரியா? நீ அங்க என்னலாம் நடக்குதுன்னு எனக்கு ஃபோன்ல சொல்லு” என்று ஒருவழியாக தாஜாவாக பேசி சமாதானம் செய்தாள். கல்லூரியில் சேர்வதற்கு இன்னும் 3 நாட்களே இருந்தமையால் தேஜு... அனன்யா மற்றும் அவள் குடும்பத்தாரிடம் சொல்லிக்கொண்டு பெங்களூர் சென்றுவிட்டாள். அனுவோ அடுத்து கிளம்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்தாள்...

“அனு புது இடத்துக்கு போகிரம்மா பத்திரமா இருக்கணும், பாத்து பழகு எல்லாரையும் சீக்ரம் நம்பிடாத” என்று அனுவிற்கு அறிவுரை கூறிக்கொண்டே அவளது துணிகளை அடுக்கினார் ஹேமா. அனு எதுவும் பேசாமல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ஹேமா பேசுவதை கவனித்துக்கொண்டு இருந்தாள். இவள் அமைதியாக இருப்பதை பார்த்து “என்னடி எதுவுமே பேச மாட்டிங்கிற?”

“என்ன பேசுறது அதான் எனக்கும் சேர்த்து நீங்களே பேசுறிங்களே” என்று அமைதியாக கூறினாள்.

அவள் பேசுவதை கேட்டு முறைத்தாலும் “ஹே தனியா இருந்துப்பியா அனு?” என்று ஹேமா பரிவாக கேட்டார்.

“ஏன், எனக்கென்ன நான் தனியா இருந்துப்பேனே, சொல்லபோனா ஜாலியா இருப்பேன்” என்று உற்சாகமாக பதில் கூறினாள்.  

“அதானே உனக்கு என்ன?! கூட இருக்க போகிற பொண்ணுங்கதான் பாவம் பேசியே காதுல ரெத்தம் வர வச்சுடுவியே” என்று ஹேமா கிண்டல் செய்தார்.

“அது அவங்க தலையெழுத்து” என்று நக்கலாக பதில் கூறினாள்.

“கொழுப்பு அவ்வளவும் கொழுப்பு...”

“நன்றி நன்றி...” மனதில் தேஜு இல்லாமல் போர் அடிக்குமே என்ன செய்வது என்றே எண்ணங்கள் ஓட ஹேமாவிடம் பெரிதாக பேச்சுத்தர மனம் வரவில்லை அனுவிற்கு.

“சரி புது இடம்...” என்று மீண்டும் அவர் தன் அறிவுரையிலேயே குறியாக இருக்க..

“அம்ம்ம்ம்ம்மா, நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை விடுங்க, நானே பார்த்துகிறேன்” என்று பேச்சை பாதியில் நிறுத்த பார்த்தாள்.

“ஆமா பெரிய பொண்ணு மாதிரியா நடந்துக்குற?” என்று வாக்குவாதத்தை தொடர்ந்தார்.

“ஏன் நான் என்ன பண்ணிடேன்?” என்று புரியாமல் கேட்டாள்.

“ம்ம்ம்.. இதை பாரு” என்று செல்லில் எடுத்த ஒரு புகைபடத்தை காட்டினார் ஹேமா. அதை பார்த்த அனுவின் முகம் மாறிப்போனது...

“ஏம்மா இதை எல்லாமா ஃபோட்டோ எடுப்பாங்க? அய்யோ யாராவது பார்த்தால் என் மானமே போகும்” என்று சிணுங்கிக்கொண்டு செல்லில் இருக்கும் புகைப்படத்தை அழிக்க பார்த்தாள்.

“ஏய் உதை வாங்குவ டெலிட்(delete) பண்ணாத” என்று ஹேமா மிரட்டி செல்லை மீண்டும் வாங்கிக்கொண்டார்.. “எவ்வளவு அழகா இருக்கு பாருடி, எல்லாரும் சின்ன வயசு வரைக்கும் தான் விரல் சுப்புவாங்க ஆனா நீ என்னடானா கழுத வயசு ஆகியும் விரல் சுப்புர இருந்தாலும் அந்த அழகே அழகு தான் போ” என்று நக்கலாக கூறி சிரித்தார்.

“என்னம்மா நக்கலா ஒழுங்கா டெலிட் பண்ணுங்கம்மா” என்று அனு கெஞ்சாத குறையாக கேட்டாள்

“டெலிட்டா?! தப்பு தப்பு இதை நல்லா பெரிய போட்டோவா போட்டு வர போற மாப்பிளைக்கு கல்யாண பரிசா குடுக்க பிளான் போட்டு இருக்கேன் கெடுத்திடுவை போல் இருக்கே?” என்று அனு தவறாக எதையோ சொல்லிவிட்டது போல் அதட்டினார்.  

“அய்யோ... கல்யாண பரிசாவா ஏம்மா இப்படி யோசிக்க ஆரம்பிச்சுட்டிங்க” என்று தலையில் அடித்துக்கொண்டு “ஏம்மா முன்னாடியே இதை நிறுத்த வச்சுருக்கலாம்மில்ல” என்று அவள் அலுத்துக்கொண்டு கேட்க, அதற்கும் ஹேமாவிடம் பதில் இருந்தது...

“செய்யாமலா இருப்பேன், செஞ்சு பார்க்காத டெக்னிக் இல்லை.... அப்புறம் கடைசில வெறுத்து போய் விட்டுடேன் நான் கஷ்ட்டப்பட்டு செஞ்ச டெக்னிக் எல்லாம் வீனாபோச்சு அதான் கடைசியா இந்த ஃபோட்டோ பிளான்” என்று தன் கடைசி ஆயுதத்தை கூறினார் ஹேமா..

இவர்கள் பேசிக்கொண்டு இருக்க அங்கு வெங்கட் வந்தார், “அப்பா பாருங்கப்பா” என்று அவர் செல்ல மகள் கெஞ்ச அவர் சைகையில் தான் அந்த புகைப்படத்தை பிறகு delete செய்வதாக கூறினார்.

“என்ன அங்க சைகை ம்ம்ம்ம்...” என்று ஹேமாவிடம் இருந்து செல்ல மிரட்டல் வர “ஒன்னும் இல்லையே” என்று அப்பாவும் பொண்ணும் சேர்ந்து நடித்தனர்.

“இப்போ என்னம்மா செய்யுறது? ஹாஸ்டல்ல பார்த்துட்டால்?! நான் படுக்கும் போது ஒழுங்காதான் படுக்குறேன், ஆனா என்னையும் அறியாம நைட் விரல் சுப்புரேனே” என்று வருத்தமாக கூறினாள் அனு.

“வேணும்னா உனக்கு ஒரு டெக்னிக் சொல்றேன், தூங்கும் போது தலையணை வச்சு முகத்தை மரச்சுக்கோ, யாருக்கும் தெரியாது...” என்று விடுதி வாழ்க்கை பற்றி அறியாமல் ஐடியா தந்தார் ஹேமா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.