(Reading time: 19 - 37 minutes)

ஞ்சே நிமிஷம் தான். ஓகே.”

“ஓகே டி என் பொண்டாட்டி”

“ஏய் என்ன இப்பவே என்ன டி போட்டு எல்லாம் கூப்டறீங்க”

“உன் மூளைய என்ன சொல்லி பாராட்டரதுன்னே எனக்கு தெரியலை, பொண்டாட்டின்னு சொன்னதுக்கு ஒன்னும் கேட்கலை, டி போட்டு பேசனேன்னு மட்டும் திட்டு”

“அது ஓகே. ஆனா ஏன் டி போட்டு பேசறீங்க”

“எது மா ஓகே.”

“அது தான்”

“அதான் எது”

அவனை முறைத்து விட்டு (அப்படி இல்லனா முறைக்க முயற்சித்து விட்டு) “என்னை பொண்டாட்டின்னு சொன்னது தான்.”

“ஹேய் உன்னை என் பொண்டாட்டின்னு ஒத்துக்கற, அப்புறம் உன்னை வாடி, போடின்னு பேசறதுல என்ன இருக்கு”

“அது ஏன் உங்களுக்கு அதிகாரம் கிடைச்ச உடனே எல்லாரும் வாடி போடின்னு பேசறீங்க. அதான் எனக்கு புரியலை”

ஐயோ என்று சிரித்துவிட்டு “இனியா அது அதிகாரம் இல்லை உரிமை, எங்களுக்கு ஆயிரம் ப்ரண்ட்ஸ்(கேர்ள் பிரண்ட்) இருக்கலாம். சிஸ்டர்ஸ் இருக்கலாம். ஆனா அவங்களை எல்லாம் நாங்க அப்படி கூப்பிட மாட்டோம். எங்களுக்கே எங்களுக்குன்னு உரிமையானவளை மட்டும் தான் அப்படி கூப்பிடுவோம். இட்’ஸ் அ பாய் திங்” என்றான்.

இனியா அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து விட்டு “பைவ் மினிட்ஸ் முடிஞ்சிடுச்சி. நீங்க கிளம்புங்க” என்றாள்.

“ஹேய் ஹேய் இனியா. இன்னும் ஒரு டூ மினிட்ஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சி கேட்டு வாங்கி கொண்டான்.

அந்த இரு நிமிடம் அவன் ஏதும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இனியாவால் தான் அவனை பார்க்க இயலவில்லை. இவ்வளவு நேரம் அவன் பேசும் போது அவனுடன் ஈடுக்கு ஈடு பேசும் போது தோன்றாத ஏதோ ஒன்று அவன் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் போது தோன்றியது.

“ஓகே. டூ மினிட்ஸ் முடிஞ்சிடுச்சி. கிளம்புங்க என்று அவன் கையை பிடித்து அறை வாயிலில் கொண்டு வந்து விட்டாள்.”

இனியா என்று அவன் திரும்பவும் தயங்கவும்,

“இளா ப்ளீஸ் இப்ப டைம் 2.20 ஆகுது. காலைல ஹாஸ்பிடல் போகணும். நீங்க ஆபீஸ் போகணும். ப்ளீஸ்” என்றாள்.

“ம்ம்ம். நீயும் ரொம்ப கெஞ்சற, அதனால ஓகே” என்று ரொம்ப பிகுவாக கூறிவிட்டு “ஒரு நிமிஷம் என் மொபைல் உள்ளே இருக்கு” என்று கூறி விட்டு உள்ளே வந்தான்.

இனியாவும் அவனுடன் உள்ளே வந்தாள்.

மொபைலை தேடுவதை போல் பாவனை செய்துவிட்டு அவள் எதிர் பார்க்காத நேரம் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடி சென்று அறை வாயிலில் நின்று “ஐயோ இனியா நான் மொபைலே எடுத்துட்டு வரலை, ஹிஹிஹி” என்று சிரித்து விட்டு “எதுக்கும் கதவை லாக் பண்ணிக்க, இல்லை என் மூட் மாறி திரும்ப வந்தாலும் வந்துடுவேன்” என்று  அவன் கூறவே,

அவனை முறைத்து விட்டு வந்து அவள் அப்போதே கதவை லாக் செய்தாள்.  

கதவை லாக் செய்தும் அவன் சிரிப்பு சத்தம் அவளை தொடர்ந்தது.

“முதல்ல உங்க ரூம்க்கு போங்க. உங்க சத்தம் அத்தைக்கு கேட்க போகுது” என்றாள்.

“அதெல்லாம் கேட்காது டா செல்லம். இருந்தாலும் உனக்காக போறேன். பாய் ஸ்வீட்டி. குட் நைட். ஸ்வீவீவீவீவீட் ட்ரீம்ஸ்” என்று வேண்டுமென்றே இழுத்து சொல்லி விட்டு சென்றான்.

இனியாவிற்கு தான் படபடப்பாக இருந்தது. நேற்றிலிருந்து அவனிடம் கொஞ்ச நேரம் பேச முடியாதா என்று எண்ணி இருக்க, இன்று இவ்வளவு நேரம் அவனுடன், அதுவும் அவள் வாழ்க்கையையே தீர்மானித்தாகி விட்டது.

லைட் ஆப் செய்து விட்டு படுத்த அவளுக்கு உறக்கமே வரவில்லை.

“டைம் வேற ஆகுது. நாளைக்கு ஹாஸ்பிடல்ல போய் தூங்குனா நல்லாவா இருக்கும். ஐயோ தூக்கமே வர மாட்டுதே” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

பின்பு இளவரசனை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்.

“இருந்தாலும் இவன் ரொம்ப மோசம்” என்று நினைத்துக் கொண்டே புன்னகையுடன் உறங்கி போனாள்.

 

காலையில் இனியா எப்போது வெளியே வருவாள் என்று அவள் ரூமையே பார்த்துக் கொண்டிருந்தான் இளவரசன்.

நேற்று காலையில் கூட அவள் தோட்டத்தில் வாக்கிங் போனதை பார்த்தேனே என்று எண்ணி கொண்டே அவள் ரூமை பார்த்துக் கொண்டிருந்தான்.

சரி குளித்து விட்டாவது வரலாம் என்று எண்ணி குளிக்க சென்றான்.

அவன் குளித்து விட்டு வெளியில் வந்து பார்த்தால் அவள் அறையின் கதவு திறந்து இருந்தது. உடனே அவன் சென்று பார்த்தால் அறையில் இனியா இல்லை. உடனே கீழே சென்றான்.

கீழே இனியாவும் சந்துருவும் அமர்ந்திருந்தார்கள்.

இளவரசன் சிரித்தவாறே வந்தமர்ந்தான்.

சந்துரு “என்னன்னா நைட் எல்லாம் தூங்கலை போல, கண்ணெல்லாம் ரெட்டா இருக்கு” என்றான்.

அவனும் சளைக்காமல் “ஆமா டா வொர்க் இருந்துச்சி” என்றான்.

அதற்குள் ராஜலக்ஷ்மி காபி கொண்டு வந்து இனியாவிற்கும், சந்துருவிற்கும் கொடுத்தார்.

“வேலை இருந்தா அதுக்குன்னு நைட் எல்லாம் முழிச்சி வேலை பார்ப்பியா, உடம்பை கெடுத்துக்காதப்பா” என்று அவன் தாய் கூறினார்.

இளவரசனுக்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“சரிம்மா” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, சந்துரு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

“ஏன்டா நீ சிரிக்கற, உன்னை அவன் கூட வேலைக்கு போன்னு எத்தனை டைம் சொல்லி இருப்பேன். அவனே தனியா இருந்து கஷ்டப்படறான் அதை சொன்னா, நீ சிரிக்கற” என்று அவனை திட்டி விட்டு உள்ளே சென்றார்.

சந்துரு அம்மா உள்ளே சென்று விட்டார்களா என்று பார்த்து விட்டு “ என் நேரத்தை பார்த்தியாண்ணா, நீ என்ன வேலை பார்த்தன்னு எனக்கு தான் தெரியுமே” என்று கூறி திரும்ப சிரித்தான்.

இனியாவிற்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது.

திரும்ப காபி கொண்டு வந்து பெரிய மகனுக்கு கொடுத்த ராஜலக்ஷ்மி “இனியா நீ என்ன இன்னைக்கு காலைல வாக்கிங் போகலையா, லேட்டா எந்திரிச்சியா” என்றார்.

இனியா மெதுவாக “ஆமா அத்தை, நைட் தூங்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சி” என்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.