(Reading time: 60 - 120 minutes)

ன்னது? வொய்  டல்  டே?”

 

“தெரியலை. சரி அதை விடு. மது என்ன தான் சொன்னா? தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிக் கொடுத்தாளா இல்லையா?” நைசாக நழுவி விட்டு  அவனை பற்றி கேட்டான்.

 

“நான் தப்பு தப்பா பாடுது. மது சிரிச்சே  இருந்தது” என்றான் நிரஞ்சன்.

 

“அய்யோ..நிரு.நீ இப்படி பிச்சு பிச்சு கொஞ்சு தமிழ்ல பேசுனா சிரிக்க மாட்டாங்களா? அரை குறையா பேச யார்கிட்ட கத்துக்கிட்ட?” கேட்டான் கார்த்திக்.

 

“ஆய்ந்து நாளில் தமிழ் புக் படிச்சது. மலேசியா தமிழ் நிறைய இருக்காங்கோ. அவங்கட்ட பேசுது. தமிழ் பழகுது” என்றான் நிரஞ்சன்.

 

“ஓ மை காட்….ஐந்தை இப்படி கீரை ஆயுர மாதிரி ஆய்ந்துன்னு சொல்றியே! உனக்கு சொற்குற்றம் சொல்ற அளவுக்கு என்னோட தமிழ் அறிவு இருக்கு. பரவாயில்லை. மது எப்பவும் என்னை  தமிழ் படிச்சு காமிக்க சொல்லி, நான் திணறுறதை பாத்து  கிண்டல் பண்ணி என்ஜாய் பண்ணுவா. உன்னை விடுவாளா?  அவகிட்ட  வசமா சிக்கியிருக்க” என்றான் கார்த்திக்.

 

“நீ  தமிழே தெரியாத மாதிரி மதுகிட்ட பேசணும்னு சொன்னதுனால்  வேணும்னே தப்பு தப்பா அதுகிட்ட பேசுது” என்றான் நிரஞ்சன்.

 

“அன்னைக்கு பேசுனப்போ ஏதோ பெட்டரா தெரிஞ்சது. அதான் அப்படி சொன்னேன். நீ சாதாரணமாவே தப்பா தான் பேசுறன்னு இப்போ தான் தெரியுது” என்று  சொல்லி சிரித்தான்  கார்த்திக்.

 

“டோன்ட் வொர்ரி. தமிழ் ப்ரண்ட்ஸ் ட்ட தமிழ் பேசுது. அவங்கோ கரக்ட் பண்ணுது”

 

“அய்யோ…. நீ மதுவை கரக்ட் பண்ணு முதல்ல. “ என்று  கார்த்திக் விழுந்து விழுந்து சிரித்த படி. அவன் சிரித்ததில் கவனம் சிதறி ஸ்டீரிங் ஒரு நொடி வேறு திசையில் செல்ல வேகமாக சரியான  திசையில் செலுத்தி சரி செய்தான்.

 

“ப்ச்… ஐ அம் லூசிங் ஹோப்...நம்பிக்கை குர்யுது கார்த்திக். ரம்பா ஆங்ஷியஸ்ஸா இருந்தது. மது ஃபன்னியா நினைகுது. என் பீலிங்ஸ் அதுக்கு புரிலை. புரியவும் புரியாது” முடிக்கும் போது கவலையுடன் முடித்தான்.

 

“ரம்பா வா?” கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் நிரஞ்சன் குரலில் கவலை ஒலிக்க,

 

“ஏன்? என்ன ஆச்சு?” கேட்டான் கார்த்திக்.

 

“நீ இப்படி தமிழ் பேசுனா ஜீரா வேண்டவே வேண்டாம்னு ஓடி போயிடும்னு சொல்லி சிரிக்குது” என்றான் கவலையுடன் நிரஞ்சன்.

 

அது சிரிப்பை வரவழைத்தாலும், எட்டு வருடமாக அவளை நினைத்து ஏங்கும் நிரஞ்சனின் மனதை வெகுவாக பாதித்திருக்கிறதை அவன் சொல்லும் விதத்தில் புரிந்து கொண்டான் கார்த்திக். சந்தியா கடுமையான வார்த்தைகளால் சாடிய போது  அவன் பட்ட வேதனையை நினைவு கூற, எரிச்சல் வந்தவனாய்,

 

“பொண்ணுங்களுக்கு  யாரு நல்லவன், யாரு கெட்டவன் வித்தியாசப்படுத்தி பாக்க தெரியாது. பசங்களுக்கு உடம்புல பலத்தையும், பொண்ணுங்களுக்கு நாக்குல விஷத்தையும் கொடுத்திட்டாரு கடவுள். தே ஸ்பில் வேனமஸ் வேர்ட்ஸ்(விஷம் கக்கும் வார்த்தைகள்) ஆன் அஸ். அந்த வார்த்தைகள் நம்மை கொன்னு போட்டுடும். “ பல்லைக் கடித்துக் கொண்டு கோபக் குரலில் கொந்தளித்தவன் பேசி முடித்த பின் தன்னையறிந்து நிதானப்படுத்தியவனாய், “சாரி டியூட்.” என்று சொல்லி விட்டு   மூச்சை இழுத்து வெளியில் விட்டு  சில நொடி தாமதத்திற்கு பின், “ப்ச்...புத்திசாலி பொண்ணுங்களே இப்படி நடக்கிறப்போ, மது மாதிரி அப்பாவி பொண்ணு என்ன செய்யும்?”  என்று இப்போது, சட்டென்று  மாறிய வானிலையாய்  இதமாக சொன்னான்.

 

“ஹே...கமான் மேன்.  எப்பவும் போலவே கேர்ள்ஸ் மீல கோபப்படுது? மது என்னை ஹர்ட் பண்ணல. அது குழந்தையா இருக்குன்னு  சொல்லது. அது கூட டெய்லி பேச ஆசை. பட், யு நோ மனசு அதையே அதிகம் திங் பண்ணி வேலை பாக்க முடியல. ப்ராடக்ட்ல நெக்ஸ்ட்  மூணு மாசத்துக்கு நிறைய வொர்க் இருக்கு. வி காட் லாட் ஆப் திங்ஸ் இன் அவர் ப்ளேட். இதுல இந்த முயற்சி வேண்டாம்னு  தோணுது. லெட்ஸ் பினிஷ் ப்ராடக்ட் பர்ஸ்ட்“ என்றான் நிரஞ்சன்.

 

“சரி. அப்போ இன்னைக்கு மதுகிட்ட பேசாத. நான் அவளுக்கு மெசேஜ் பண்ணிடுறேன்” என்று கார்த்திக் பொய்யாக மிரட்ட,

 

“நோ...நோ.. டுடே இஸ் சண்டே. பர்ட் வாட்ச் பத்தி பேசுது” என்றான் நிரஞ்சன்.

 

“நாளைக்கு பேச வேண்டாம்னு சொல்லவா?”

 

“ம்..ஒன் வீக் கழிச்சு சொல்லுது” என்று இழுத்தான் நிரஞ்சன்.

 

“ஒன் வீக் கழிச்சு  தினமும் பாக்கணும் பேசணும்ன்னு ஆசை இருக்காத? ம்ம்“ என்று சிரித்தவாறு கேட்டான்   கார்த்திக்.

 

“ம்ம்...அப்கோர்ஸ்…” என்று சிரித்து விட்டு, பெருமூச்சை விட்டவனாய், “ஸ்ட்ரெஸ்புல் ஜாய்…” என்றவன், சில நொடி மவுனத்திற்கு பின், “மது அழகா சிரிக்குது. ப்ரிட்டி ஸ்மைல். அதே பாத்து, சந்தியா சொன்னது மாதிரி ஓபன் புக்கா என் லவ் சொல்ல ஆசையா இருக்கு. பட், சொன்னா மது  சிரிப்பு போயிடுமே ”, என்றான் நிரஞ்சன் கவலையுடன்.

 

“ஓபன் புக்கா?? ஊருக்கு தான் உபதேசம் எல்லாம்… தான் மட்டும் சொல்றதை  செய்ய மாட்ட. செய்றதை சொல்ல மாட்டா.. ” மனதிற்குள் சந்தியாவை திட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக். ஆனால் தன் எண்ணத்தை  வேதனையில் இருக்கும் நிரஞ்சனிடம் சொல்லவில்லை.

 

“ஐ அம் லூசிங் மை ஹோப் டு வின் ஹெர் ஹார்ட்…” என்றான் நிரஞ்சன் வருத்தமாக மறுபடியும்.

 

“கோழையா பேசாத நிரு. வி வில் மேக் இட் ஹேப்பன். அவ ஹர்ட் ஆகாதபடி உன்னை பற்றி அவளுக்கு புரிய வைப்போம். எனக்கு என்னமோ இந்த தமிழ் ட்யூஷன் உங்களுக்கு உள்ள பாண்டிங் அதிகமாக்கும்ன்னு தோணுது. நீயே யோசிச்சு பாரு. நாம எப்பவும் சந்தோஷமா இருக்கிற மொமென்ட்டை தான் அதிகம் விரும்புவோம். மதுக்கு இது விளையாட்டா இருந்தாலும், யு ஆர் எ சோர்ஸ் ஆப் ஜாய் டு ஹர்.  உன் மேல அவளுக்கு சாப்ட் கார்னர் வரும். இன்னொரு விஷயம், சந்தியா கூட அவளுக்கு இப்போ தான் ஒரு நல்ல பிரண்ட்ஷிப் கிடைச்சிருக்கு. நான் ஏற்கனவே ப்ளான் பண்ண மாதிரி அவ சென்னை போறப்போ மதுவை கூட்டிகிட்டு வருவா. நீ அங்க வந்துடு. சந்தியா  உனக்கு ஹெல்ப் பண்ணுவா. “

 

“வாட் அபௌட் யு?”, கேட்டான் நிரஞ்சன்.

 

“நான் வரலை.”, பதிலளித்தான் கார்த்திக்.

 

“ஒய்?”, கேட்டான் நிரஞ்சன்.

 

“ப்ச்...காட் வொர்க் ஹியர் ”, அழுத்துக் கொண்டான் கார்த்திக்.

 

“ஐ நோ யு ட்யூட்…. வாட் இஸ் யுவர்  ப்ராப்ளம்?” கேட்டான் நிரஞ்சன்.

 

“சந்தியா”, - நிறுத்தி நிதானமாக சொன்ன அந்த ஒற்றை வரி பதிலில்  அவன்  உயிர் அடங்கியிருப்பது போல  ஒரு உணர்வு.

 

“சந்தியாக்கு என்ன?” கேட்டான் நிரு.

 

“ஷி ஹேட்ஸ் மி”, உலகமே வெறுத்து ஒதுக்கியது போல அல்லாடியது அவன் குரல்.

 

ன் நண்பன் ஒரு பெண் தன் மீது ஆர்வம் செலுத்தாதது பற்றி  குறை கூறியது சந்தியாவை மட்டும் தான். சொந்த விஷயங்களை அவ்வளவு எளிதில் மற்றவர்களிடம் பகிராதவன், அதிலும் மதுவின் குடும்ப பின்னணி பற்றி  நிரஞ்சனைத்  தவிர்த்து மற்ற நண்பர்களிடம் சொல்லாதவன் சந்தியாவிடம் சொன்னது அதை விட வியப்பு. நிரஞ்சனிடமுமே அவர்கள் பழகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்தே சொன்னவன்  அவளிடம் பழகிய ஓரிரு நாட்களில் சொல்லிவிட்டானே! சந்தியாவின் தாக்கம் அவனிடம் இருப்பது நிரஞ்சனுக்கு  தெளிவாக புரிந்தது.

 

“சந்தியா திட்டுது ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.