Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 13 - 26 minutes)
1 1 1 1 1 Rating 4.89 (9 Votes)
Pin It

10. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

ன்னை யாரென்று தெரியவில்லை என்றவுடன் அதிர்ச்சியான அனு டாக்டரைப் பார்க்க, அவரும் கவலையுடன் நர்ஸை அழைத்து கதிரின் தாயாரை அழைத்துவர செய்தார். காமாட்சியம்மாளுடன் சந்துருவும் உள்ளே வந்தான். காமாட்சியம்மாளை தெரிகிறதா? என்று கேட்ட பொழுது, அதற்கும் ‘இல்லை’ தலை ஆட்டிய கதிர் மேலும் ஏதோ சொல்ல முயல்பவன் பொல தன் வாயைக் காட்ட, அவன் அருகில் சென்ற சந்துரு,

“ அவன் பேச முடியலன்னு சொல்றான் போல டாக்டர்...” என்றவுடன், கதிரை செக் பண்ணியவர்,

“எவ்ரிதிங்க் இஸ் நார்மல்....”என்று யோசித்தவர்,

“இவர்க்கு எமோஸனல் ஆனா திக்குமா..? எப்பவாவது திக்கிருக்கா...?” என்று கேட்க,

“ஆமா..” என்று சந்துருவும், காமாட்சியம்மளும் ஒரு சேர கூறியவுடன்,

“தென் அதான் பிராப்லம்...கொஞ்சம் பேச பேச சரியாயிரும்....மெதுவ பேச்சு கொடுங்க...பட் டோன்ட் மேக் ஹிம் ஸ்டெரைன்....” என்றபடி நர்சிடம் சில குறிப்புகள் கொடுத்துவிட்டு சென்றார்.

நன்றாக முழித்து சந்துருவைப் பார்த்தவன், அவன் கைகளைப் பிடிக்க முயன்று தோற்க, வேகமாக கதிரின் கைகளைப் பிடித்துக் கொண்டான் சந்துருவைப் பார்த்து கதிர் ‘சாரிட’ என்பது போல் கண்களை மூடித் திறக்க, சந்துருவின் கண்களில் கண்ணீர் நிறைந்து போனது. வேகமாக அதைத் துடைத்துவிட்டு, கதிரின் தாயாரை அவன் முன் நிறுத்தி அவன் சற்று தள்ளி நின்று கொண்டான்.

“ கதிரு...” குரல் நடுங்க அழைத்தவர்,அவன் சிகயை மெதுவாக கோதிவிட்டார். பிறகு,

“வலிக்குதாயா...?” கேட்ட அந்த தாய்க்கு தன் மகனை பார்க்கும் பொழுது தனக்கே வலிப்பது போல் இருந்தது.

"எல்லாமே சரியாயிருச்சு ராசா.." மனம் லேசானதைப் போல புன்னகைத்தார். கதிரின் கண்கள் அனுவைத் தேடி, அவளைக் கண்டதும் அவள் கண்களைவிட்டு அகல மறுத்தது. அவளை அருகே வருமாறு அழைத்தவன்..அவள் அருகே வந்ததும், வெகுவாக முயன்று கண்களில் குறும்புடன் அவளைப் பார்த்து புன்னகைக்கவும், அதற்கு மேல் தாள முடியாதவள் போல் பெரிய கேவலுடன் கைகளில் முகத்தை புதைத்து மடிந்தமர்ந்து அழுது கதறி தீர்த்து விட்டாள்.

காமாட்சியம்மாளும் அவளை தேற்ற முயன்று அவரும் கூட சேர்ந்து அழவும், அவர்களை தேற்ற முயன்று சந்துருவை பார்த்த நர்ஸ் அங்கே மூன்று நாட்களாக பார்த்தவர்

"அவள விடுங்க ,நல்லா அழட்டும்...இத்தன நாளா உள்ள அடக்கி வச்சிருந்தது இப்படி வெளிவந்தாதான் நல்லது. கொஞ்ச நேரத்தில அவளே சரியாயிருவா ...சும்மாவா போராடி மீட்டுறுக்காளே "என்று அவளை வாஞ்சையுடன் பார்த்தபடி கூறினார்.

ஒருவாராக அழுகையை கட்டுக்குள் வர எழுந்து கண்ணையும் கன்னத்தையும் அழுந்தத் துடைத்துக் கொண்டவள் இன்னும் தேம்பித் கொண்டே இருக்க ,

கதிர் 'அழாதே 'என்று தலையசைக்க அவனைப் பார்க்க பார்க்க அழகை கூடியதே தவிர குறையவில்லை. அருகில் நின்ற சந்துரு அவளிடம் வந்து அவளின் தோள் மெல் கைவைத்து ,

"அழாத அனு ...இவ்வளோ நேரம் தைரியமா இருந்தவ இப்ப உடைஞ்சு போகலாமா? ப்ளீஸ் பாரு.. நீ அழறத பார்த்து அவன் கஷ்டப்படுறான். நீதான சொன்ன பாசிடிவ் எனர்ஜிதான் அவனை குணமாக்கும்னு ...அவனுக்கு இப்பவும் அது வேணும் .உன்னோட நம்பிக்கைதான் அவன முழுசா குணமாக்கணும். "உணர்ச்சி வசப்பட்டு அவளை தன்தோளோடு அனைத்துக் கொண்டவன்.

"உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல" எனவும் நிமிர்ந்து அவனைக் கேள்வியாய் பார்க்க.

"ஒரு பொண்ணால்ல தான் ஒரு நண்பனை இழந்தேன் ,ஆனா இப்போ இன்னொரு பொண்ணாலதான் என் நண்பம் எனக்கு திரும்ப கிடைச்சிருக்கான் " என்றான் குரல் தழுதழுக்க

(உன்ன புரிஞ்சுக்க முடியலையே பிரகாசு )

அவள் வேறு ஏதும் கேட்பதற்கு முன்னால் அவள் தலையை வருடிவிட்டவாரு இன்னும் ஒரு முறை தன் நண்பனைப் பார்த்தவன் அவன் கைகளை அழுத்தித விட்டு வெளியே சென்றான்.

அழுகையை முடித்துக் கொண்டு கதிரைப் பார்த்தவள் அவன் ,அவள் அழுததைப் போல் முகத்தை வைத்துக் காட்டிவிட்டு பிறகு கேலி போல் சிரிக்க ,சட்டென்று புன்னகைத்தவள் சிரிப்பை மறைத்து போலி கோபத்துடன் காமாட்சிசயம்மாளிடம் சென்றவள் அவர்தோள்களை பிடித்தபடி

"பார்த்தீங்களாம்மா ...இவ்ளோ நேரம் நம்மள பாடா படுத்திட்டு இப்ப 'ஈ  'னு சிரிக்கிகறத ..."என்றாள்

கதிர் மறுபடியும் அருகில் வா என்பது போல் கண்ணசைக்க சட்டென்று "போடா " என்றாள் அனு கோபமாக .கதிர் சற்று சங்கடத்துடன் தன் தாயின் முகத்தைப் பார்க்க அவரோ சிறு குழந்தையின் விளையாட்டை ரசிப்பவர் போல் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தர்

நர்ஸ் ,

"இன்னும் கொஞ்ச நேரத்தில tranqualiser கொடுத்திருவேன் . எப்படியும் ஒரு 12 மணி நேரம் தூங்கிறுவார் ,யாராவது வந்து பார்க்கணும்னா ஒவ்வொருத்தரா வந்து அமைதியா பார்த்திட்டு போகச் சொல்லுங்க."என்றார்.

"நீங்க இங்கேயே இருங்கம்மா"  என்று கதிரின் அம்மாவை அங்கேயே ஒரு சேரைப் போட்டு அமர வைத்து விட்டு வெளியே வந்தாள்.

வெளியே சென்ற சந்துரு நேராக நந்துவிடம் சென்று அவள் தோள்களை பிடித்தபடி முகத்தில் பூத்த நிம்மதியுடன்,

"கதிருக்கு நினைவு வந்திருச்சு ...அவன் நம்மகிட்ட திரும்பி வந்துட்டான் " என்றவன் .,சட்டென்று அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .நந்துவிற்கு ஒரு நிமிடம் மூச்சு சீரற்றுப்போனது, என்னதான் அந்த அணைப்பில் துளிகூட மோகமோ தாபமோ இல்லையென்றாலும் பெண்மையின் இயல்பான வெட்கமும் கட்டுக்கோப்பும் அவளை அவனிடம் இருந்து விலகச் செய்தது .அவள் விலகுவதை உணர்ந்து இன்னும் இறுக்கியவனை செய்வதையரிமல் நிமிர்ந்து சுற்றிலும் பார்க்க நல்லவேளையாக, அனுவின் தந்தை ஆருவோடும் செல்வாவோடு உணவு வாங்குவதற்காக கேன்டினுக்கு சென்றிருந்தார். கவின் மட்டும் வாய் திறந்தபடி அதிர்ச்சியுடன் பார்த்திருந்தான். அவனைக் கண்டதும் இன்னும் தீவிரத்துடன் சந்துருவிடம் இருந்த விலக முயன்றபடி.

"ப்ளீஸ் விடுங்க இது ஹாஸ்பிடல்.."என்றாள் திணறலாக

" சோ வாட்...இப்போ எவ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா " என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் சிறுபிள்ளையைப் போல் அவளை வசதியாக தன்மீது சாய்த்துக் கொள்ள அவளுக்குத் தான் அவன் பேச பேச தன் மீது உரசிய அவன் மூச்சுக் காற்றுக் கூட இன்பமான இம்சையாய் தோன்றியது .இதற்கு மேல் தாளாது என்று அவனை முழுபலத்துடன் தள்ளியபடியே

"அங்கிள் வர்றார் " எனறாள்.நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட பொம்மையை காணும் குழந்தை போல அவளைப் பார்த்தவன் , "வரட்டும் " என்று அசால்ட்டாக சொன்னவனை ,'இவனை வைத்துக்கொண்டிருந்த என்ன செய்வது' என்று விழித்து கொண்டிருந்த நந்துவை காப்பாற்றுவதுபோல் கதவைத் திறந்து கொண்டு வந்த அனு ,கவின் வாய் பிழந்தபடி நிற்பதைப் பார்த்து அவன் முன் சென்று சொடுக்குப் போட்டு,

"டேய் வாய ஏன் இப்படி திறந்து வச்சிருக்க ..உள்ள ஈ இல்ல  அனகோண்டாவே போயிரும் போல "என்று சொல்லி சிரித்தவளைப் பார்த்து வேகமாக வாயை மூடிக் கொண்டவன்.

"ஏன் கேட்க மாட்ட ...இதுக்கு முன்னாடி இங்க நடந்த சீன்ன நீ பாத்திருந்தன்ன.." என்று சொல்லிக் கொண்டே போனவன் நந்து உதட்டைக் கடித்தபடி வேண்டாம் என்று கண்களால் கெஞ்ச பாவம் பார்த்து பேச்சை மாற்றினான் ,"அதவிடு கதிர் சார நாங்க போய் பார்த்திட்டு வரவா "என்று கேட்டான்.

"என்னடா எதையோ மென்னு முழுங்கற... எங்க வாங்கனுமோ அங்க போட்டு வாங்கிக்கறேன் ..இப்போ போகலாம் ஆனா நர்ஸ் ஒவ்வொருத்தரா போய்ட்டு வர சொன்னாங்க "என்றாள்.

"அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க ...ஆனா இங்க தனியாதனியா வருவாங்களான்னு தெரியலையே "என்று நந்துவையே ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்க அவனுக்கு முன்னால் கதிரின் அறைக்குள் நுழைந்தாள் நந்து .கவினும் பின் தொடர்ந்தான். அவர்கள் உள்ளே செல்லவும் அனுவின் தந்தை வருவதற்கும் சரியாய் இருந்தது. அனுவிடம் ஒரு கவரைக் கொடுத்தவர் ,

"இதைக் கதிரோட அம்மாகிட்ட கொடுத்திருடா நாங்க எல்லாம் அங்கேயே சாப்பிட்டோம் அவங்க சாப்பிடுற வரைக்கும் நான் கதிர்கூட இருக்கேன் நீங்க நாலுபேரும் போய் சாப்பிட்டு வாங்க " என்றார்.

"சரிப்பா" என்றபடி அதை வாங்கிச் சென்றவள்.வெளியே வரும் பொழுது மற்றவர்களோடு காமாட்சியம்மாவையும் அழைத்து வர கேள்வியாக நோக்கியவர்களிடம்

,"பக்கத்து டைனிங் ரூம்லதான் சாப்பிடணுமாம் நான் அம்மா கூட போறேன் நீங்க போய் சாப்பிடுங்க "என்று மற்ற மூவரையும் பார்த்துக் கூறினாள்.

"இல்ல அனு நீ போய் முதல்ல சாப்பிடு நான் ஆன்டி கூட போறேன் "என்று ஆரு அவர்களை அழைத்துச் செல்ல அனுவின் தந்தை கதிரை பார்ப்பதற்காக உள்ளே சென்றார்.

ற்ற நால்வரும்  கேன்டினை நோக்கி சென்றனர் .மகிழ்ச்சி மனதை நிறைத்திதருந்தனால் சாப்பாட்டின் ருசிக்கூட அவர்களுக்கு தெரியவில்லை .மூன்று யுகங்களாய் தோன்றிய மூன்று நாட்களுக்கு பிறகு பழைய கலகலப்பு திரும்பியிருந்தது அன்று புதிதாய் ஒரு சந்துருவைப் பார்த்தார்கள் .இவ்வளவு துருருப்புடன் கேலியும் கிண்டலுமாய் அவனைப் பார்த்ததே இல்லை. அவனின் சந்தோஷம் தொற்று நோய்போல் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது .பேச்சின் நடுவே

"சார் கேக்கனுன்னு நினைச்சேன் ..அம்மா ஊர்ல இல்லையா சார் ?...இருந்திருந்தா கண்டிப்பா இங்க வந்திருப்பாங்களே..?" என்றான்.

"ஆமா கவின்.. அவங்க இப்ப வெள்ளியங்கிரில இருக்காங்க. ஒவ்வொரு வருஷமும் இந்த ஒரு வாரம் அங்க போயிருவாங்க. அங்க இருக்கிற வயசான நோயாளிங்களுக்கு சேவை செய்வாங்க. இத ஒரு விரதம் மாதிரி செய்வாங்க. அவங்கள contact பண்ணவே முடியாது. இந்த ஒரு வாரம் வீட்டு நினைப்பே வரக்கூடாதுனு சொல்வாங்க...    பதட்டத்தில try பண்ணேன், கிடைக்கவே இல்ல. அப்புறம் அனுவைப் பார்த்தப்பவே நம்பிக்கை வந்திருச்சு.. அம்மா அங்க செய்யிற தர்மம் எல்லாம் இங்க இவனுக்கு தான் வரும்னு நினச்சு விட்டுட்டேன்..." என்றான். நந்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்து

 

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)shreesha 2014-02-22 01:01
when did u post next epi??????????? v r waiting for that.........
plse be quick
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Thenmozhi 2014-02-22 00:26
Hi friends, Unfortunately there's a delay in posting the next episode :sad:
Apologies for the same...

We will post the next episode as soon as possible :)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Priya .Kumaran 2014-02-22 01:47
:(
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Bala 2014-02-19 11:37
anu kathir pair romba super ah irukku.. :) we need more pages prishan...
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)shaji4 2014-02-11 18:11
:D nalla poguthu story
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)affia 2014-02-10 14:51
d update s serious as well as funny... ;-) great going.. make it a lengthy update if u could.. eagerly waiting fr d next update.. :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Keerthana selvadurai 2014-02-10 10:04
Prishan good going..But unga vallal thanmaiya next episode la than nanga pakka porom...
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Admin 2014-02-09 22:21
Both the episodes are good Prishan
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)radhika selvam 2014-02-09 15:23
gunas death should come as 2yrs before, when kathir recollects the flash back. plz correct it. coz already one yr gone for new batch. am I correct prishan
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-09 19:41
wait for the next episode radhika...adhula ungalukku theliva soliraen... :)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)radhika.selvam 2014-02-10 03:02
thank u for ur reply.
Reply | Reply with quote | Quote
# NiMahii 2014-02-09 00:22
Haha k k prishan na 9th epi read panama 10th read paniten athan konjam confused nw doubt cleared :-) :-) NYC story keep rocking prishan (mind voice:haiyo ipa sirnu solanuma ila madam nu solananuma I'm so confused again :P :P )
Reply | Reply with quote | Quote
# RE: NiPRISHAN 2014-02-09 19:43
im priya mahii.neenga apdiyae sollalaam.. no conf ok, :P
Reply | Reply with quote | Quote
+1 # Super!!Ramyasree 2014-02-08 23:01
atheppidi ma serious aa pora trackle ethra comedy include panninel??? ethu serious aa padikkarappove chirippum varuthu... kalakkinel
Reply | Reply with quote | Quote
+2 # RE: Super!!PRISHAN 2014-02-09 19:45
athu thaana varuthu oye...thanks ramya maami..just kidding :P ..
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)shaji 2014-02-08 19:21
nice update
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-09 19:49
thanks shaji..
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Indu 2014-02-08 17:48
Nice Update Prison...unga story la comedy,sentiment,story yelome super...padika usual story pola ilama romba realistic ah iruku...but inum konjam page sethu update panunga pls
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-09 19:48
thanks indhu...kandipa adutha epi perusa poda try panraen.
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Jansi 2014-02-08 16:42
Nice update. Aanalum kadavula kooda comedy piece aakidureenga.Enjoyed :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-09 19:46
avarum namma thosth thaan jansi.. :D
Reply | Reply with quote | Quote
+3 # ninaithala inikumTamil Selvi 2014-02-08 14:11
pls unga update weekly once irutha romba happy ah irukum...pls kojam try panuga...
Reply | Reply with quote | Quote
+1 # RE: ninaithala inikumPRISHAN 2014-02-08 15:06
thanks tamil. i will try :)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)shreesha 2014-02-08 11:34
nice update..... one monthku aprum panrathu konjam perusa update pannirikalam.... but the updation is good...
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-08 15:09
thanks shreesha..kandipa next upd perusa vara mathiri paniralam.
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Nithya Nathan 2014-02-08 09:39
Nice. but Romba chinna episode .
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-08 15:10
thanks nithya.
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Aayu 2014-02-08 08:19
Nice update but romba length :-) episode aa irukke..... konjam korachchukonga :) :P :)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-08 15:13
ha..ha..romba ootatheenga aayu.. :-*
Reply | Reply with quote | Quote
+2 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Meena andrews 2014-02-08 08:11
nice update.but too short .next time lengthy update kudunga plz...eagerly waiting for 22nd feb
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-08 15:14
sure...thanks meena
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)Thenmozhi 2014-02-08 06:11
Short episode! But nice update Prishan :)
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-08 07:48
THANKS AADHI...
Reply | Reply with quote | Quote
# NiMahii 2014-02-08 01:40
Enna oru continuation eh illa kathir ku ena achu???
Reply | Reply with quote | Quote
# RE: NiThenmozhi 2014-02-08 06:14
Hi Mahii,
Muthalla vara conversation'la solli irukkaanga paarunga. Kathir payapadum nilamaiyai cross seithuttaar... :)
Reply | Reply with quote | Quote
# RE: NiPRISHAN 2014-02-08 07:53
hi mahi..kathirku accidentla brain stem damage ayirichu. After trtment he stabilized gradually. yet due to fracture and emotional stress he cant able to speek. unga doubta clear pannitaenna?.. :lol:
Reply | Reply with quote | Quote
# RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)priya skumaran 2014-02-08 01:05
super update... but 5 pages only? ..
Reply | Reply with quote | Quote
+1 # RE: நினைத்தாலே இனிக்கும்... - 10 (Online Tamil Thodarkathai)PRISHAN 2014-02-08 07:58
thanks priya..i planned for 2 more pages. epadiyo kutti episode ayiruchu. next epi bigga thara try panraenppa.. :)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top