(Reading time: 17 - 34 minutes)

09. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

பைக்கை காலேஜ் பார்கிங்கிற்குள் நிறுத்திய சந்துரு  நிமிர்ந்து பார்த்தபோது, ரோட்டின் அந்த பக்கம் கதிர் தென்பட்டான். சந்துரு கையசைக்க கதிரிடம் இருந்து எந்த பிரதிபலனும் இல்லாமல் போக, மேலும் அவன் பார்வை வேறெங்கோ இருப்பதைக் கண்டு அவன் பார்வையை தொடர்ந்து சந்துரு பார்த்த பொழுது அங்கு ஒரு பெண் (அனு) நின்று கொண்டிருந்தாள். புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளீன் முகம் திகைப்பும்  பயமுமாக மாறியது. “கதிர்” என்று கதறியபடி ரோட்டை நோக்கி ஓட ஆரம்பிக்க அவளுடன் சேர்ந்து பலரும் ஓட ஆரம்பித்தனர். பயத்துடன் உயிரை கையில் பிடித்தபடி திரும்பிப் பார்த்தவனுக்குகண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

சாலையைக் கடக்க முயன்ற கதிரை இடித்துத் தள்ளி விட்டு வந்த வேகத்தில் பிரேக் பிடித்தும் ஒரு 100 அடி தள்ளிப் போய் மீடியனில் இடித்தபடி நின்றது. கதிரை சுற்றி கூட்டம் கூடியது. இருட்டத் தொடங்கிய கண்களையும் இதயத்தையும் நொடியில் சுதாரிக்கவைத்தபடி, கண்மண் தெரியாத வேகத்தில் கதிரிடம் விரைந்தான் சந்துரு. கதிரின் அருகில் வந்து பார்த்தவன் இரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சற்று கிடந்தவனைக் கண்டு கலங்கிய மனதில் தைரியத்தைக் கூட்டி அவன் நாசியில் நடுங்கும் தன் விரலை வைத்துப் பார்த்தான். மூச்சு வருவதும் போவதும் தெரியாமல் போகவே கழுத்தில் நாடியை அழுத்திப் பார்கக, அங்கு லேசாக துடிப்புத் தெரியவும் சிறு நிம்மதியுடன் அவனை ஒரு புறமாக படுக்க வைத்தான். அதற்குள் காலேஜ் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. கதிரை கவனமாக அதில் ஏற்றியபடி சந்துருவும் அதில் ஏறிக்கொண்டான். சந்துருவுடன் ஏற முயன்ற அனுவை தடுத்து விட்டு கவினும் இன்னும் இரண்டு tutorsம் கூடசென்றார்கள். போகும் போதே தன் தந்தைக்கு போன் செய்து விவரத்தைக் கூறினான் சந்துரு.

ஆம்புலன்ஸிலிருந்து கதிரை இறக்கும்பொழுதே வேகமாக வெளியே வந்த ஞானபிரகாஷ் விரைந்து கதிரிடம் வந்து லேசாக சோதித்து பார்;த்தவர்.

“ ஆபரேசன் தியேட்டர் கொண்டு போங்க....குவிக்.”என்று அவசரப்படுத்தியவர்  பின்னோடு வந்த தன் மகனைக் கூட கண்டு கொள்ளவில்லை.

Opt வெளியே இருக்கையில் இருகைகளையும் தலையில் தாங்கியவாறு அமர்நிதருந்தவன், அருகே காலடி ஓசைக் கேட்கவும் நிமிர்நது பார்கக அனு, ஆரு, நந்து மற்றும் அவனுடைய பேட்ஸ்மேட்  சிலபேர் வந்திருந்தனர் ப்ரேம் உட்பட. வேகமாக கவினிடம் வந்த அனு,

“கதிர்... எங்க ? “என்று பதற்றத்துடன் கேட்ட உள்ளே என்பது போல் கையை காட்டிய கவின் சென்று சந்துருவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். சந்துருவின் மறுபக்கம் வந்து அமர்ந்த நந்து, அவன் முகத்தைப் பார்த்து கலங்கிப்போனாள். சற்று தயங்கிய வாறே அவன் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் போத்தி வைத்துக் கொண்டாள். அந்த ஸ்பரிசத்தில் நிமிர்ந்து பார்த்தவன், நந்து கண்டதும் அவள் கைகலை அப்படியே எடுத்து அதில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான். மூடி இருந்த கதவையே வெறித்த  அனு நிற்கமாட்டாமல் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தாள்.

அவளையே, அவள் தவிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த ஆருவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால் அதைப்பற்றி பேசி தெளிவுபெரும் நேரம் இதுவல்ல என்பதால் அவளை நெருங்கி ஆறுதலாக,

“ஒன்னும் ஆகாது அனு” என்றாள்.

“ஆமா... ஒன்னும் ஆகாது... ஆகக் கூடாது” என்று உருப்போட்டது போல் அதையே திரும்பப் திரும்பக் கூறியவள் தன் போக்கில் நடந்தபடி அருகில் இருந்த ஜன்னல் கம்பியில் தலையை சாய்த்துக் கொண்டாள். வெளியே வெறிததவளின் மனதில் கடைசி நாள் காலேஜில் நடந்தது மனக்கண்ணின் முன் ஓடியது.

க்ஸாம் எல்லாம் முடிந்து அடுத்த நாள் ஊருக்கு போகும் பரபரப்பில் அனைவரும் பேசிக் கொண்டிருக்க எப்போதும் போல் தனியாக தன் புக்கிற்குள் தலையை விட்டுக் கொண்டிருந்த கதிர்,

“அப்றம், எக்ஸாம் எல்லாம் முடிந்தாலும் புக்கை விடமாட்டிங்களா?”

 என்ற கேலிக் குரலில் சட்டென்று நிமிர்ந்தவன் தன் முன்னே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தவளைக்கண்டு சற்றே தடுமாறிப் போனான். எப்பொழுதும் இருக்கும் குறும்புடன் இன்னும் ஏதோ ஒன்று அவள் கண்களில் மின்னி அவனைக் குழப்பியது. 

தடுமாற்றத்துடன் “எ....என்ன வேணும்?” என்று கேட்டவனின் பார்வை தன் முகத்தையே ஆராய்வதைக் கண்டவள், அவனை இன்னும் சற்று நெருங்கி நின்று கொண்டு,

“என்ன கேட்டாலும் குடுப்பீங்களா...”'கேட்டவளின் குரலில் குறும்பு குறைந்து குரல் குழைத்தது.

“ஆ......” கேட்டவளின் அருகாமையிலும் குழைவிலும் மயங்கியவன் மெஸ்மரியத்திற்கு உட்பட்டவன் போல் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று அவன் கண் முன்னால் சொடுக்கு போட்ட அனு, என்ன என்பது போல புருவம் உயர்த்த பலமாக தலையை குலுக்கி அந்த மெஸ்மரிசத்திலிருந்து விடுபட முயன்றவாரே

“எ.... என்ன சொன்ன” என்றான்

“ம்.... ‘சுரைக்காய்க்கு உப்பில்லைனு சொன்னேன்’....சரியான தத்தி....” தனக்குள்ளே முனுமுனுத்தவள் அவன் கண்களை நேராகப் பார்தது,

“என்னப் பிடிச்சிருக்கா? “என்றாள்.

 இந்த நேரடி தாக்குதலில் தடுமாறியவன் என்ன பதில் சொல்வது என்று முழிக்க,

“பிடிச்சிருக்கா இல்லையா?...” அவள் மிரட்டுவது போல கேட்க,

“இல்லை..”என்று சொன்னவன் ஆமாம் என்று தலை ஆட்ட,

“இது சரிபட்டு வராது” என்று பொருமியவள், அவனை இன்னும் நெருங்கி

“இங்க பாரு... லீவு முடிஞ்சு வர்றப்போ அத்தைக்கிட்ட நம்ம விஷயத்துக்கு பெர்மிஷன் வாங்கிட்டு வரனும்... சரியா..... உன்னால பேச முடியாதுன்னா என்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கறேன்... இதுல ஏதாவது சொதப்பின..” என்று அவனை மிரட்ட அவள் சொல்வதின் விஷயத்தின் உட்பொருளை கிறகிக்க முயன்றவனாய், “

“எ...எந்த விஷயம்?”  என்றான்.

“அதான்...நான்...நீ...நம்ம...காதல்...கல்யாணம்....” அவன் கண்களைப் பார்க்காமல் சொல்லியவள், சொல்லி முடிப்பதற்குள் சிவந்து போனாள்.

சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சிறிது தூரம் சென்றவள் சொன்னதென்னவோ தைரியமாகச் சொல்லிவிட்டவள், மனதில் பயம் தலைதூக்கவும், நின்று, உதட்டைக் கடித்தபடி மெதுவாக அவனை திரும்பிப் பார்கக அவன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கவும், மெதுவாக அவன் கண்களைப் பார்க்க, அதில் தீவிரம் குறைந்து பழைய குரும்பு தெரியவும், நிம்மதியானாள்.

அவன் “அருகில் வா” என்று அழைக்க “முடியாது” என்று தலை ஆட்டி விட்டு அந்த இடத்தை விட்டு ஓடி வந்துவிட்டாள்.

லீவ் முழுவதும் அவன் குறும்பு சிரிப்பை நினைத்தே கடத்தியவள், உள்ளுக்குள் பயமும் வெட்க படபடப்புமாக அவனை பார்க்கும் ஆர்வத்துடனும் காலேஜிக்கு வரும் நாளுக்காக காத்திருந்தவளுக்கு, அங்கு நடந்ததை தாங்க முடியவில்லை. கண் முன்னே கதிர் தூக்கி எறியப்பட்டதை அவள் வாழ்க்கையில் ஒரு நாளும் மறக்கவே முடியாது என்று நினைத்தாள். அவன் என்னவெல்லாம் பேசப் போகிறான் என்று  சந்தோஷத்துடன் கற்பனை பண்ணியிருந்தவளுக்கு, இன்று அவன் கண் விழித்து அவளைப் பார்த்தால் போதும் என்று இருந்தது. சோர்ந்து போன மனதை அதட்டி எழுப்பியவள், மிச்சமிருந்த நம்பிக்கையெல்லம் திரட்டிக் கொண்டாள். கண்களை அழுந்த துடைத்தவள்,

“இனிமேல் அழமாட்டேன்....எதுக்கு அழனும்?...அவனுக்கு ஒன்னும் ஆகாது..ஆகவும் விட மாட்டேன்....” தனக்குள்ளே சூலுரைத்துக் கொண்டவள், கவினிடம் ஃபோனை வாங்கி தன் தந்தைக்கு ஃபோன் செய்து பேசினாள். கொஞ்ச நேரத்தில் opt கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் ஞானபிரகாஷ். அவரிடன் அனைவரும் விறைய,

“ இப்போதைக்கு அவன் ஸ்டேபிலா இருக்கான். பட், ப்ரைன் ஸ்டெம்  டேமேஜ் இருக்கு. ஃபேமஸ் neuralogist டாக்டர். ராடிஸன் இன்னும் 10 மினிட்ஸ்ல வந்திருவார். அவர் வந்து பார்த்த்துக்கு அப்றம்தான் எதுவும் சொல்ல முடியும்.” என்றவர் சந்துருவிடம் திரும்பி, அவன் தோளில் தட்டியவாறு,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.