(Reading time: 17 - 34 minutes)

டாக்டர்ஸ் ரவுண்ட் வரும் போது மட்டும் வெளியே வந்த அனு, மீதி நேரம் முழுவதும் கதிரின் பக்கத்திலேயே இருந்தாள். அவன் கைகளை தொட்டபடியே, அவன் காதுகளில் மெல்லிய குரலில் பேசியபடியே இருந்தாள்.

இரவு 8 மணியைப் போல் அனுவின் தந்தை, கதிரின் தாயார் காமாட்சியையும் கூடிக்கொண்டு வந்தார். ஒடிசலான தேகத்துடன் வெகுளித்தனமான முகத்துடன் பதறி அழுதபடியே ஐ.சி.யு வார்டின் அருகே வந்தவர். சந்துருவை பார்ததவுடன் கதறியபடி அவனருகே சென்றவர், அவன் சட்டையை பிடித்தபடி

“சந்திருப்பா....எம்... மகனுக்கு என்னப்பா ஆச்சு?... அவன் எங்க???... நேத்து ராவு சந்தோஷமா கிளம்பி வந்தானேய்யா...... இன்னிக்கு இப்படி சொல்றியளே... எங்கப்பா என் புள்ள?..” கதறியவரை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்,

“அவனுக்கு ஒண்ணுமில்லமா... அப்பாதான் பார்த்தாரு.... ஒன்னும் பெரிசா இல்லணு சொல்லிட்டாரு....”  தடுமாறி ஒருவாறு தன்னிடம் இல்லாத நம்பிக்கையை குரலில் கொண்டு சொல்ல, கதிரின் அன்னை வந்த செய்தியறிந்து அங்கு வந்த ஞானபிரகாஷ் காமாட்சியம்மாளை தனியாக அழைத்துச் சென்று தைரியமூட்டி ஐ.சியுவின் உள்ளே அவரைக் கூட்டிச் சென்றார். அங்கு உள்ளே கதிரின் பக்கத்தில் இருந்த அனுவைப் பார்த்து லேசான புருவ சுளிப்புடன் கதிரை கவனித்தார்.

தன் மகனின் நிலைமையை பார்த்த காமாட்சியம்மாள், வாயில் சோலை பொதித்தபடி குமிறி அழ சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அனு அவரைப் பார்த்தவுடன் அவர் கதிரின் தாயாய் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவள்,’ என்ன மாதிரி ஒரு சூழ்நிலையில் அவரைப் பார்க்க வேண்டியதாய்ப் போயிற்று’ என்று மனம் நொந்தவளாய் மெதுவாக அவர் அருகே சென்றவள் அவரை அணைத்தவாரே அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றாள்.

 அதற்கிடையில் நர்ஸிடம் அனுவை யாரென்று விசாரித்த ஞானபிரகாஷ், நர்ஸ் இந்த மாதிரி என்று கூறியதும், சிறிது யோசித்தவர் அவள் உள்ளே இருக்கட்டும் என்று அனுமதியளித்தார். இருந்தாலும் கவனமாக இருக்குமாறு எச்சரித்தார். போகும் முன் கதிரிடம் வந்தவர், அவன் முகத்தை வருடியவருக்கு அவன் வீட்டிற்கு வரும் தருணங்கள் மனதில் வந்து போகவும் ஒரு பெருமூச்சுடன் வெளியேறினார்.

வெளியே சென்றவர் கதிரின் அம்மாவை அனுவும் இன்னொரு பெண்ணும் ஆறுதல் படுத்த, தன் மகனின் அருகே ஒரு பெண் நெருக்கமாக அமர்நிதருப்பதைக் கண்டு வியப்புற்றவர். அதைப் பற்றி கேட்கும் சூழல் இதுவல்ல என்று கண்டும் காணாதது போல் சென்று விட்டார்.

எத்தனை ஆறுதல் படுத்தியும் காமாட்சியம்மாள் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவரின் முன்னே மண்டியிட்டு அவரின் இருகைகளையும் எடுத்துக் கொண்ட அனு,

“அம்மா.... இங்க பாருங்க, கதிருக்கு ஒன்னுமில்ல... நம்பிக்கை இல்லாதப்பதான் அழணும்... உங்க பையனுக்கு ஒன்னும் ஆகாதுன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல்?” என்று கேட்டவளுக்கு, அவரால்

“ ஆமாம்” என்று வெறுமனே தலையாட்ட மட்டும் தான் முடிந்தது.

“பின்ன அழக்கூடாது.... அவனுக்கு இப்போ தேவையானது எல்லாம் நிறைய நம்பிக்கையும்....உங்க பிராத்தனையும் தான்....நீங்க ஆழ் மனசுல வேண்டிகிறது கண்டிப்பா நடக்கும். அதுவே அவன உங்ககிட்ட கூட்டிட்டு வந்திரும்” என்றவள். தொடர்நது,

“கவலையே படாதீங்க.... நானும் உங்க மகனும் உங்க கண்முன்னாடி பேரனும் பேத்தியோட இன்னும் பல வருஷம் சந்தோஷமா வாழ்வோம்...” கண்களில் நீருடன், நம்பிககையும் சேர்ந்து மின்ன உதட்டில் பிடிவாதமாக பிடித்து வைத்திதருந்த புன்னகையுடன் கூறியவளை பார்த்தவர், தன் கண்களை துடைத்துக் கொண்டு அவள் கண்களையும் துடைத்த விட்டார். “நீதான் அனுவா ராசாத்தி....”

“ஆம்” என்று தலையாட்டலுக்குப் பின்,

“உன்ன பத்திததான் பேசிக்கிட்டே இருந்தான் கண்ணு.... என்ன ஏதுன்னு கேட்டதுக்கு, ஒரு சிரிப்பு மட்டும் தான்.... இந்த லீவுலதான் ரொம்ப சந்தோஷமா திரிஞ்சான்....” சொல்லிக் கொண்டே போனவரின் குரல் இறங்க அனுவின் வார்ததையே ஆதாரமாய் பற்றுபவர் போல அவளைப் பார்த்து,

“எம் புள்ள முழிச்சுக்கும்ல கண்ணு... அவன் சிரிப்ப நான் திரும்ப பார்த்துருவேன்ல..” என்று அவளை ஆதாரமாய் பற்றியபடி கூறியவரைப் பார்தத அனுவிற்கு, அவரைக் கட்டிக்கொண்டு கதற வேண்டும் என்ற  உந்துதல் ஏற்பட அதை அடக்கியபடி,

“நிச்சசயமாம்மா..” என்றாள் தெளிவும் திடமுமாக. இவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே அமைதியாகி விட்ட மற்றவர்கள், அவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு நின்றனர். அதில் அனுவின் தந்தையும் ஒருவர்.

ன் மகள் கோடிட்டு காட்டியது கதிரைத்தான் என்று அவள் ஃபோனில் பேசியபோதே தெரிந்து கொண்டவர், அவள் இந்தளவிற்கு முடிவுடன் இருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் ஆருவை குழப்பத்தோடு பார்க்க அவள் உதடைக் கடித்தபடி அவரையே திரும்ப குழப்பத்தோடு பார்த்தாள். எதுவும் முடிவெடுக்க முடியாமல், முதலில பையன் குணமாகட்டும் என்று முடுடிவைத் தள்ளிப்போட்டார். காமாட்சியம்மாள் சற்று தெளிவாகவும் எழுந்த அனு அப்பொழுதான் தன் அருகே நின்ற தன் தநதையைப் பார்த்தாள்.

“அப்பா..” என்று அவர் தோளில் சாய்ந்தவள் அவர் தலையை தடவிக் கொடுக்கவும் கண்களை அழுந்தத் துடைத்தவாறு,

“அப்பா நீங்க கேட்டீங்களே ஞாபகம் இருக்கா..?... யாரில்லாம இருக்க முடியாதுன்னு தோனுதோ அவங்க தான் நம்ம லைஃப் பார்ட்னர்னு... இவன்தான்... இதை புரிஞ்சுக்கறதுக்கு தான் இப்படியோன்னு.....” என்று மேலே பேச முடியாமல் நிறுத்தியவள்,

“அப்பா?”

“என்னடா”

“என் கதிர் என்கிட்ட வந்திருவான்லப்பா.....” எல்லோர்க்கும் நம்பிக்கை சொன்ன தன் பெண் தன்னிடம் சிறு குழந்தை போல கேட்கவும் தாங்க முடியாதவராய், முழுமனதுடன்

“நிச்சயமா..... சீக்கிரமே உன்கிட்ட வந்திருவான்” என்றார்.

“தாங்க்ஸ்பா...”என்றபடி மறுபடியும் உள்ளே நுழைந்தாள்.

2 நாட்கள், 48 மணி நேரம் அனைவரையும் பாடாய்ப்படுத்திவிட்டான் கதிர் அனு அந்த இடத்தைவிட்டு அங்கு இங்கு நகலவில்லை. இடையில் கதிரின் நிலையில் முன்னேற்றம் தெரிவதாய் கூறிச் சென்றார் ராடிசென். சொற்பமாக இரத்த ஓட்டம் ஆரம்பித்தது. அது தட்டுத் தடுமாறி ஒவ்வொரு  மூளையின் எல்ல பகுதிக்கும் செல்ல செல்ல எல்லா ஆர்கன்ஸும் பழையபடி வேலை செய்ய துவங்கியதும் ஒவ்வொரு மிஷனாக அகற்றப்பட்டது. உடலில்  இருந்த கருமை எல்லாம் மாறி கொஞ்சம் தெளிவாக தெரிந்தான் கதிர். 2 நாட்களுக்குப் பின் வந்து செக் செய்த டாக்டர் முகத்தில் சிறு கவலையடையவே அனு,

“என்னாச்சு...” என்று பதற,

“இந்த நேரத்தில் நினைவு திரும்பியிருக்கணும்...... ஏன் இன்னும் வரலைன்னு தெரியல. இனியும் கான்சியஸ் ஆகலைனா அம்னீசியா ஆறுதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு..” அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கதிரின் கண் இமைகள் ஆடுவதுபோல் தெரியவும்,

“டாக்டர்” என்று அனு அவன் அருகே சென்றாள். மிகவும் கஷ்டப்பட்டு கண்கள் கூசுவது போல் கண்களை மூடித் மூடித் திறந்தவன் ஒரு வழியாக கண்களை வெளிச்சத்திற்கு பழக்கி பார்க்க, அவன் கண்ணத்தை லேசாக தட்டி அவனை முழு விழிப்புக்கு வரவைத்தார் டாக்டர்.

“இது யாருன்னு தெரியுதா” என்று அனுவை அவன் முன்னிறுத்தி மெதுவாக கேட்க, தட் தட் இதயத்துடன் அனு காத்திருக்க வெகுவாக புருவம்சுருக்கி யோசித்தவன், வாயைத் திறந்து ஏதோ சொல்ல முயன்று, பின் “இல்லை” என்று மெதுவாக முயன்றவரை தலையை மட்டும் ஆட்டினான்.

விக்கித்திப் போய் நின்றாள் அனு. 

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 08

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 10

நினைவுகள் தொடரும்...  

{kunena_discuss:677}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.