(Reading time: 17 - 34 minutes)

லெட் அஸ் ஹோப் குட்....நீ அம்மக்கு ஃபோன் பண்ணிப் பாரு” என்றுவிட்டு விரைந்து சென்று விட்டார். ஒன்றுமே செய்ய முடியாதவன் போல் மறுபடியும் தலையை தாங்கி பிடித்தவாறே சேரில் அமர்ந்து கொண்டான்.

சற்று நேரத்தில் பரபரப்புடன் உள்ளே வந்த டாக்ட்ர் ராடிசென் நேராக ஒ.பி.டியினுள் ஞானபிரகாஷுடன் சென்றார். மூன்று மணி நேரம் மற்றவர்களை காத்திருக்க வைத்து விட்டு வெளிவந்தவர் ராடிசென்னை அனுப்பி வைத்து விட்டு இவர்களிடம் வந்து,

“ ப்ரைன் ஸ்டெம் டிஸ்லொகேட் ஆயிருந்திச்சு. சர்ஜரி இல்லாம லிஃப்டிங்க் மெத்தட்லயே பொசிஸனுக்கு கொண்டு வந்தாச்சு...ஆனா இன்னும்  ரெகவர் ஆகல...அது வரைக்கும் ஆர்டிஃபிஸியல் வென்டிலேசன் தான் வக்கனும்.. ஈவிங்க் ஐ.சி.யு வுக்கு மாத்திருவாங்க... இப்போ இங்க இவ்ளொ பேர் தேவை இல்ல..சோ கிளியர் அப்” என்றுவிட்டு அப்போது தான் அங்கு வந்த காலேஜ் பிரின்ஸிபல்லையும் பார்த்து பேசிவிட்டு, அடுத்த ஆக்சிடென்ட் கேசை பார்க்கச் சென்று விட்டார்.

இவர்களிடம் வந்த பிரின்சிபால், மற்றவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு மூன்று பேர் மட்டும் இருக்கும் படி கூறி மற்றவர்களை காலேஜிர்க்கு வரும்படி கூறிச் சென்றார். Tutors தாங்கள் இருப்பதாய் சொல்லி மற்றவர்களை அனுப்ப முயன்றார்கள். அனு வரமுடியாது என்று பிடிவாதமாக மறுத்தவிட கடைசியில் அனு, ஆரு, நந்து, கவினை மட்டும் வைத்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்துச் சென்றார்கள்.

மாலையானதும் கதிர் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டான். உடல் முழுவதும் கட்டுக்களுடன் படுத்திருந்தவனைப் பார்த்த போது இதயம் திக்கென்று அதிர்ந்து போனது.

யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இரண்டு நர்ஸ் மட்டும் மாறி மாறி உள்ளே  டியூட்டியில் இருந்தார்கள். அனு மட்டும் எப்படியோ அவர்களிடன் பேசிக்,  கெஞ்சி உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கி விட்டாள். அதுவும் அவர்கள் அருகிலிருக்கும் போது மட்டுமே அவள் உள்ளே செல்லலாம்.

உள்ளே சென்றவளுக்கு சுற்றிலும் டியூபுடன், கையிலும் காலிலும் கட்டுக்களுடன், தான் கதிர்தான் என்பதற்கு அடையாளமாய் முகத்தில் மட்டும் எந்த கீரலும் இல்லாமல் அதே அமைதியுடன் தூங்குபவன் போல் படுத்திதருந்தவனைப் பார்ககும் பொழுதே மனது ரணமாய் வலித்தது அனுவிற்கு.

“உன்னை இப்படிப் பார்க்கத்தான் இவ்வளவு ஆசையாய் ஓடிவந்தேனா” என்று மனதிற்குள்ளேயே குமைந்தவள், மெதுவாக அவன் பெட் அருகே ஒரு சேரை எடுத்துப்போட்டு அமர்ந்தாள். அங்கிருந்த நர்ஸ் ஆட்சோதிப்பது போல் கூற 'ப்ளீஸ்' என்று கண்களில் கண்ணீருடன் கேட்டவளைப்பார்த்து பரிதாபப்பட்டவர்.

'பேசன்ட்க்கு நீ சொல்றது, தொடுறது எதுவுமே தெரியாது.... இன்னும் மூளைக்கு முழுதா இரத்த ஓட்டம் ஏற்படல...” என்றார் பரிதாபத்துடன். அவர் சொன்னதை எல்லாம் கசப்பை போல் விழுங்கியவள்.

“கேட்கும்.... அவனுக்கு கண்டிப்பா கேட்கும்....” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டாள். மெதுவாக, மிகவும் ஜாக்கிரதையாக அவனின் அடிபடாத இடதுகையை எடுத்து தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள். பிறகு மானசீகமாக அவனுடன் பேசத் துவங்கினாள்.

“ கதிர் நான் பேசுறது உனக்கு கண்டிப்பா புரியும்...இன்னும் 100 வருஷம் உன் கையை பிடிச்சுட்டே நான் வாழனும்.... ப்ளீஸ் கதிர் சீக்கரமா இந்த கனவிலிருந்து எழுந்துவா....உனக்கு ஒன்னும் ஆகலை. எங்கிட்ட இருந்து உன்ன யாரும் பிரிக்க முடியாது....நீ எங்கிட்ட இருந்து எப்பவும் தப்பிக்கவே முடியாது. உன் கண்ணுள்ள அந்த குறும்பை நான் திரும்ப பார்ககனும்....... என்கூட சேர்ந்து வாழனும் உனக்கு ஆசையில்லையா?...... எனக்கு இருக்குடா!! லட்சம், கோkoaடி வருஷம் உன் கூட நான் சந்தோஷம வாழனும்..டசன் டசனா குழந்தைப் பெத்துக்கனும்..... நீ இப்படி படுத்திட்டு இருக்கிறத என்னால பார்த்திட்டு இருக்க முடியல.... ப்ளிஸ் உன் வலியை எல்லாம் என்கிட்ட குடுத்திரு. சீக்கிரம் முழிச்சுக்கோடா.....” பேசிக் கொண்டே போனவளுக்கு கதிரைப் பார்கக, அவனிடம் துளியும் சலனமே இல்லை எனவும் கண்களில் கண்ணீர் கோடாக இறங்கியது. வேகவேகமாக அதைத் துடைத்தவள்.

“இல்ல... நான் அழமாட்டேன்...நான் ஏன் அழனும்? உனக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டேன்..எப்படியும் உன்ன சரியாக்கியே தீருவேன்!!” உறுதியும் வைராக்கியமுமாக சொன்னவள், அவன் கைகளை இன்னும் சற்று இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

(இந்த இடத்துல, சினிமால்லலாம் வருமே....அப்படியே ஒரு ஸ்பார்க் அனு கையிலேர்ந்து அப்படியே கதிர் நரம்பு மூலமா அவன் ப்ரைன் ஸ்டெம்மைத் போய் தாக்கி அங்க ஓர் அதிர்வை உண்டாக்குமே..... அதுதான் அதை இங்கு சேrrrarththukர்த்துக்கோங்க. knஒரு நிமிஷம் அனு காலிங்க்... ‘என்ன அனு? ஓ!! இது சீரியஸான சீனா...நோ காமெடி....எல்லாத்தையும் அழிச்சிருங்க. நம்ம வாய் நிக்கவே நிக்காது. நீங்க சோக மோடையே ஆன் பண்ணிருங்க.. அந்த வயலின் எங்கப்பா..)

டாக்டர் ஞானபிரகாஷ் மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறையும் ராடிசென் இருமுறையும் வந்து கதிரைப் பார்த்துவிட்டு சென்றார்கள்.

ஞானபிரகாஷ் சந்துருவிடம் நம்பிக்கையும் அழிக்கவில்லை, பின்னேற்றமாகவும் சொல்லவில்லை.

“கதிர்கிடட எந்த இம்ப்ரூமென்டும் இல்ல... பொதுவா ஆபரேட் பண்ண 2 அவர்ஸ்ல எந்த பினனடைவும் இல்லாம தாண்டிட்டாலே போதும். பேஷன்ட் ஸ்டேபில் சொல்லிறலாம். ஆன அவனுக்கு இன்னும் கான்சியஸ்னெஸ் வறல...எப்ப வரம்னு தெரியாது......வீ கேன் வெயிட் ஃபார் 2 டேஸ்.. ஆனா அதுக்கு மேலயும் அவனுக்கு எந்த இம்ப்ரூமென்டும் இல்லைனா, வீ ஹாவ் டு கோ ஃபார் அ சர்ஜரி... எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு... கதிர் இஸ் அ யங்க் அன் ஹெல்த்தி பாய்...அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒரு... ஒரு ஸ்பார்க்.....ஒரு தூண்டுகோல்..... கடவுள் அதை நிச்சயம் கொடுப்பார்னு நம்புவோம்.... இப்போ எனக்கு கேஸ் இருக்கு..... நீ தைரியமா இரு” என்றவருக்கு இரண்டாம் முறையாக கலங்கி நிற்கும் தன் மகனை பார்த்து கவலையாக இருந்தது. இப்பொழுதுதான் ஒன்றை மறக்கத் துவங்கினான் அதற்குள்.....”கடவுளே எப்படியாவது கதிரை காப்பாற்று” என்று அவரும் கடவுளிடம் ஒரு பெட்டிஷனைப் போட்டார்.

மேலே கடவுள் தன் சகாக்களுடன் தர்பாரில் அமர்ந்திருந்தவர்.

“பார்த்தீர்களா!!!...எவ்வளவு பெரிய மருத்துவராய் இருந்தாலும் கடைசியில் என்னிடம் தான் வரவேண்டும்.....” என்று சட்டைக் காலரை இழுத்துவிட்டுக் கொள்ள,

(கடவுள காலர் வச்ச சட்டையா போடுவார்னு.... ?? கேள்விலாம் கேக்கப்படாது...)

“ஆமாம் பிரபு....” என்று எல்லோரும் ஜால்ரா அடிக்க,

 அவரின் தர்ம பத்தினி மட்டும் அவர் அருகே வந்து அவர் காதைக் கடித்தார்.

“பிரபு, அந்த கதிரைப் பார்க்க பாவமாக இருக்கிறது.... அவன் குற்றம் ஏதும் செய்தானில்லையே, அவனை கண் விழிக்க வையுங்களேன்....” என்றார்.

அவரை பார்த்து மந்தகாச புன்னகை புரிந்தவர்,

“தேவி.... அவன் கண்களை விழிக்க வைப்பது பெரிய விஷயமல்ல. பலபேரின் அகக்கண்களை விழிக்க வைக்க வேண்டும்....அதற்காகத் தான் இந்த நாடகம்” என்றார்.

“என்னவோ போங்கள் பிரபு..... அவனும் அவன் கூட இருப்பவர்களும் எத்தனை வேதனை படுகிறார்கள்.....” என்றார் தேவி வேதனையை வெளிகாட்டும் குரலில்.

“ உனக்கு இளகிய மனது தேவி. ஆனால், ஒரு விஷயத்தை மறந்து விட்டாய் கஷ்டப்படாமல் எதுவும் யாருக்கும் கிடைக்காது. அப்படி கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு அவர்களுக்கு புரியாது...” என்றார்.

“பிரபு, என்னையும் இதே போன்று சோதித்தது விடமாட்டீர்களே...? என்று தேவி பயத்துடன் கேட்க, அவரின் பயத்தைக் கண்டு,

“ஹா...ஹா...”என்று நகைத்தார் கடவுள். தன் இரு காதுகளையும் மூடிக் கொண்ட தேவி,

“இதற்குத்தான் அன்றே சொன்னேன்.... அந்த திருவிளையாடல் மூவியை ஊன்றிப் பார்க்காதீர்கள் என்று, கேட்டீர்களா..... பாருங்கள் இப்பொழுது சிவாஜீயைப் போன்றே சிரித்து பயமுறுத்துகீறீர்கள்..... எனவும் வாயை கப்சிப் என்று மூடிக் கொண்டார் கடவுள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.