(Reading time: 13 - 26 minutes)

"ப்பா கூட இது மாதிரி அம்மா நினைவு நாளப்போ, அனாதை ஆசிரமத்துக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பார்..." என்றாள்.

"நாமளும் இதக் கடைபிடிக்கனும்.." என்று அனு கூற

"கண்டிப்பா.." என்று குரல்கள் ஒருமித்துக் கேட்டது.

ஒருவழியாக மறுநாள்மதியம் தன் தூக்கத்திலிருந்து விழித்த கதிர், தன்னையே பார்த்தபடி இருந்த doctor-ஐ பார்த்து புன்னகைக்க, அவரும் புன்னகைத்தார்.

"Good Morning கதிர்.. இப்போ எப்படி இருக்கு?" என்றார்.

"ப்... ப்... ப்... பர... வா... வா... வா....  யில்ல.. சார்" என்றான் திக்கியபடி.

"Well done my boy.. you are all right now. இன்னும் உன்னோட motor activity மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனா நீ முயற்சி செஞ்சுட்டே இருக்கனும். இன்னிலேர்ந்து physio theraphist வருவாங்க. இன்னும் 15 daysல நீ discharge ஆயிரலாம். but இது உன்னோட neuro க்கு மட்டும் தான். உன்னோட fractures சரியானதுக்கு அப்றம்தான் நீ collegeக்கு போக முடியும். Consult it with orthopaedics. Get well soon...." என்றபடி ராடிசென் அங்கிருந்து சென்றார்.

ஞானபிரகாஷ் "அவரை அனுப்பிட்டு வந்துடறேன். Strain  ஆகாத வரைக்கும் நீ பேச try பண்ணிட்டே இரு, இன்னும் ஒரு 2,3 மணி நேரத்துல சரியாயிரும்" என்றபடி சந்துருவை கண்களால் தன் கூட வருமாறு அழைத்தபடி சென்றார்.

"பாத்துக்கடா.." என்றபடி சந்துரு அவர் பின்னால் சென்றான். தன்னை சுற்றிலும் தேடிய கதிர் "அம்மா எங்க?" என்று கேட்க

(கொஞ்சம் திக்கி திக்கி தான் கதிரால் பேச முடிந்தது. அத நானும் திக்கி திக்கி எழுதினா நீங்க காண்டாயிடுவீங்கன்னு, நேரடியாவே எழுதிறேன்)

"அவங்க பக்கத்து guest room-ல தூங்கிட்டு இருக்காங்க. பாவம் ராத்திரி முழுக்க முழிச்சிட்டே இருந்தாங்களாம்"

"நீங்க?"

""நாங்க hostelக்கு போய்ட்டு காலைல professors கிட்டலாம் permission கேட்டுட்டு வந்தோம். Night அப்பா, சந்துரு சார் அப்பறம் அம்மா மட்டும் தான் இருந்தாங்க..." என்றாள்.

அவளை அருகே அழைத்தவன், தன்னை சற்று சாய்வாக அமர வைக்கும் படி கேட்க, அங்கிருந்த நர்ஸ்

"Strain ஆயிரும்.. வேண்டாம்.. வேண்டாம்.." என்றார்.

"Please.. பேசவே ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று கேட்க. சற்று யோசித்து விட்டு அவன் அருகே வர

"May I help.." என்று அலட்டலாக கவின் கேட்க

"ஒன்னும் தேவையில்ல.." என்று அவன் helpஐ நொறுக்கி dustbin-இல் போட்டுவிட்டு நிதானமாக அவன் பெட்டில் இருந்த ஒரு பட்டனை அழுத்த, இடுப்பு வரையிலும் பெட் மெதுவாக உயர்ந்தது. திரும்பிப் போனவர் கவினை ஒரு பார்வை பார்க்க

"Now the tech has improved very much you know.." என்று அவன் மலுப்ப, அனைவரும் புன்னகைத்தனர். அனுவை தனதருகில் அமரவைத்தவன்

"என் கையை பிடிச்சுக்கோ.." என்று சொல்லிவிட்டு

"டேய்.. நீங்கள்ளாம் இங்கிருந்து எப்படா போவீங்க" என்று கேட்க

"மாட்டோமே.." என்று அனைவரும் (கவின், ஆரு, நந்து) சட்டமாக அமர்ந்துகொள்ள

"நீங்க ரொம்ப strain பண்ண கூடாது பாஸ். Only talk.. no romance allowed..." என்றான் strict officer-ஆய்

நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று அனுவின் கண்களையே பார்த்தவன், அதில் அவள் நேசம் அப்பட்டமாய் தெரிய, சிறிய புள்ளியாய் அதில் சோர்வும் தெரிய

"பயந்திட்டியா?" என்று கேட்டானா இல்லை கொஞ்சினானா என்று தெரியாத குரலில் கேட்க, பதில் கவினிடம் இருந்து வந்தது

"இவளா.. building-ம் basement-ம் படு strong சார். உங்க பக்கத்துல உக்கார்ந்து என்னவோ மந்திரம் போட்டு போட்டு எல்லாத்தையும் சரி பண்ணிட்டா..." பழையதை நினைவு படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் தன் style-இல் சொல்ல, அனு

"நான் பேசினதெல்லாம் உனக்கு கேட்டுச்சா?.. ஞாபகம் இருக்கா? என்று கண்கள் படபடக்க கேட்க

"எல்லாமே.. எப்பவுமே.. ஞாபகம் இருக்கும்" இருவர் விழிகளும் ரகசியம் பேசிக்கொள்ள, கவின் நம்பியார் போல கைகளை பிசைந்தபடி

"என்ன பண்ணாலும் இவங்க ரொமான்ஸ தடுக்க முடியலையே" என்று கறுவினான்.

"சிஸ்டர்" என்று உரக்க அழைக்க, அப்பொழுதுதான் சற்று கண்ணயர்ந்த நர்ஸ் பதறி வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து பார்க்க

"ஒன்னுமில்ல, டைம் என்னன்னு சொல்ல முடியுமா?" என்று கேட்க, அவன் கையில் இருந்த watch-ஐயும் சுவரில் இருந்த அந்த பெரிய கடிகாரத்தையும் பார்த்தவர், கண்களில் கொலைவெறியுடன் தன் பக்கத்தில் இருந்த பெரிய syringe-ஐ தூக்கிக் காட்ட, கப்சிப் என்று அடங்கியவன்

"ஆ.. சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்.. யூ கன்டிநியூ" என்று விட்டு வராத வேர்வையை துடைத்துக் கொண்டான். இதில் அனு, கதிர் ரொமான்ஸ் சற்று தடைபடவே, கப்பென்று அந்த கேப்பை பிடித்தவன்

"அப்படி என்ன சார் சொன்னா?" என்று கேட்க

"அதுவா.. அது ரகசியம்.." என்று முடித்தான்.

"ஆனா இடையில நிறைய வாய்ஸ் கேட்டது..பிரபு.. தேவி... நாராயணா... பூலோகம்.. அதுல அந்த லேடி வாய்ஸ் கூட ரொம்ப சினிமா பாக்குறீங்கன்னு திட்டின மாதிரி இருந்துச்சு. நீங்க யாரும் அப்படி பேசினீங்களா?" என்று குழப்பமாக கேட்க, கேட்ட வினாடி மேலோகத்தில் குழப்பம் துவங்கியது

"யாரடா அங்கே?" கோபமாக கூறிய கடவுளிடம் பயபக்தியாக வந்த சேவகன் வாய் பொத்தி நிற்க

"Network mediator-ஐ அழைத்து வா" என்றார். அடுத்த வினாடி கடவுள் முன் நின்ற அவர், shorts, t-shirt, கழுத்தில் head set என்று கண்ணாபிண்ணா கோலத்தில் இருக்க, அவரை மேலும் கீழும் பார்த்த கடவுள் tension ஆகி

"இது இன்ன கோலம்?" என்று கேட்க

"இது தான் இப்பொழுதைய லேடெஸ்ட் டிரன்ட் பிரபோ.. நன்றாய் இருக்கிறதல்லவா?" என்று வேறு கேட்டு கடவுளை கடுப்பாக்க

"கோலத்திற்கு ஏற்றார் போல் வேலையும் சொதப்பலாக இருக்கிறது.." என்றார் கடுமையுடன்

"என்னவென்று முழித்தவரிடம் கீழே கண்காட்ட, எட்டி பார்த்தவர் நாக்கை கடித்தபடி

"மன்னிக்க வேண்டும் பிரபோ.. connection மாறிவிட்டது" எனவும்

"என்னது.." என்று கண்களை உறுட்டிய கடவுளை கண்டு நடுங்கி

"இதோ ஒரு நொடியில் சரி செய்கிறேன்" என்று காற்றில் அங்கும் இங்கும் விரல்களால் துலாவியவர் ,

"ஆயிற்று பிரபோ.. நான் சென்று வரட்டுமா.." என்று நழுவ

"ஜாக்கிரதை, மறுபடியும் இந்த தவறு ஏற்பட்டாள்...அதோ தெரிகிறானே.." என்று கவினைக் காட்டி

"அவனுடன் உன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கும் படி செய்து விடுவேன்" என்று மிரட்ட

"கருணை காட்டுங்கள் பிரபு, இதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. எம்பெருமான் முருகன் பெயரை வைத்துக் கொண்டு இவன் செய்யும் சலம்பல் தாங்க முடியவில்லை. இனி ஒருபோதும் இத்தவறை செய்யவே மாட்டோம்.." என்று சடுதியில் எஸ்ஸானார்.

(கவின்.. உன் பெருமையோ பெருமை)

கீழே..

"கதிர் சார், இவ எவ்ளோ தைரியமா திடமா இருந்தாளோ.,அதே அளவு சந்துரு சார் ரொம்ப கலங்கிப் போய்ட்டார். என்ன செய்யறது ஏது செய்யறது தெரியாம கதறி அழுதிட்டார் சார்.. அவர் தான் எல்லாரையும் தேத்துவார்னு பார்த்தா, அவர தான் தேத்தவே முடியல..இப்பதான் அவர் முகத்தில உயிரே வந்திருக்கு சார்.." என்றவுடன்

"இருக்காதா.. இப்ப தான் ஒரு சோகத்திலிருந்து தெளிஞ்சிட்டு இருக்கான்.. திரும்ப அதே மாதிரின்னா.. யாரல தான் தாங்க முடியும்" என்றான்

"புரியலையே சார்.."

"ம்ம்.. அதே ரோட்ல ஒரு வருஷத்துக்கு முன்னாடி குணாவ பறிகொடுத்தோம்.. அதுவும் அவனாவே போய்... கண்ணு முன்னால துடிச்சு..  அதே ரோட்ல நானும் அதே மாதிரி துடிச்சிட்டு இருந்தா அவனுக்கு எப்படி இருக்கும்?" என்று வலியோடு கேட்க, அதிர்ச்சியில் மற்றவர்கள்

"குணா சார்.. ஏன் அந்த மாதிரி.." என்று முடிக்காமல் விட, கண்களை மூடியவன் கண்களுக்குள் flash back ஓடியது.

Open பண்ணா.... 

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 09

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 11

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.