(Reading time: 20 - 39 minutes)

ல்ல மாப்பிள்ளை. அது.. அது” என்று பேச முயன்று பேச முடியாமல் திணறிக் கொண்டு இருந்த லக்ஷ்மியை பார்த்து மெதுவாக புன்னகைத்த பாலு,

“அத்தை. என்னால உங்களை புரிஞ்சிக்க முடியுது. ஏதோ ஒரு விஷயம் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. அந்த விஷயத்தால தான் நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்றீங்க. இப்பவே அந்த விஷயத்தை என் கிட்ட சொல்லுங்கன்னு நான் சொல்லலை. இந்த கல்யாணத்தால நம்ம எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம், இதுல இருக்கற நியாயம், இதெல்லாம் தான் நான் எடுத்து சொன்னேன். அவ்வளவு தான். நீங்க நல்லா யோசிங்க. நல்ல முடிவா எடுப்பீங்கன்னு நம்பறேன். ஓகே. அந்த டாபிக் விடுங்க. நான் ரெண்டு நாள் வெளியூர் போறேன். அதான் என் பொண்டாட்டியை இங்க விட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன். சரியா. மாமா வந்தா சொல்லிடுங்க. நான் கிளம்பறேன்” என்றவாறே கிளம்பி சென்று விட்டான்.

அங்கிருந்த மூவருக்குமே திகைப்பு தான். யாருமே பாலு திடீரென்று அவ்வாறு பேசுவான் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் சரி பண்ணிடலாம் என்று அவன் ஜோதியிடம் எப்போதும் சொல்லுவான் தான். ஆனால் அவளோ ஏதோ தன்னை சமாதான படுத்துவதற்காக ஏதோ சொல்கிறான் என்றே எண்ணுவாள். ஆனால் எப்போதும் தன் தாயிடம் இனிமையாக பேசுபவன். “என் மாப்பிள்ளை தான் ரொம்ப நல்லவர்” என்று தன் தாய் தன்னையே குறை கூறும் அளவுக்கு நல்ல பேர் பெற்றவன், இப்போது தன் அம்மாவிடம் ஏதோ போலீஸ் போல் கறாராக பேசி விட்டு சென்றவனை பார்த்து வியப்பு தான் ஏற்பட்டது.

ல்லோரையும் விட அடிபட்டவர் போல் இருந்தது லக்ஷ்மி தான். தன் மேல் உள்ள அன்பால், மரியாதையால் என்று தன் மகள்கள் ஏதும் கேட்காமல் இருந்ததை இன்று பாலு கேட்டுவிட்டு சென்ற கேள்விகள் எல்லாம் தன்னை சுற்றி இப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றியது.

இப்படி மூவரும் ஏதேதோ எண்ணிக் கொண்டே தான் நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தனர்.

“நான் போய் கொஞ்ச நேரம் என் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்” என்று பொதுவாக கூறினார் லக்ஷ்மி.

“சரிம்மா. சாப்பாடு எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க போங்க” என்றாள் ஜோதி.

லக்ஷ்மி அங்கிருந்து அவர் அறைக்கு செல்லும் வரை அமைதியுடன் இருந்த இனியா ஓடி சென்று தன் அக்காவை அணைத்துக் கொண்டாள்.

“ஏய் மெல்லடி, என் எலும்பு ஏதாவது உடைச்சிட போற”

“அம்மாஆஆஆ” என்று கத்திக் கொண்டே வந்தாள் அபி.

“என்னடி இப்ப எதுக்கு இப்படி கத்தற” என்றாள் ஜோதி.

“ஏய் அபிகுட்டி வந்திருக்கா. நான் பார்க்கவே இல்லையே” என்றாள் ஜோதி.

“ஆமா. இந்த அம்மா தான் என்னை பக்கத்து வீட்டு ஆன்டி கிட்ட விட்டுட்டு வந்துட்டாங்க. அந்த ஆன்டி அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் சோ ஸ்வீட் அப்படி சொல்லி சொல்லி என் கன்னத்தை கிள்ளி எடுத்துட்டாங்க. தெரியுமா” என்று சோகத்துடன் சொல்லி முடித்தாள்.

“ஏன்க்கா குழந்தையை அங்க விட்டுட்டு வந்த.”

“அட என்னடி நீ. நான் வரும் போதே அவங்க எங்களை பிடிச்சிக்கிட்டாங்க. அதான் உன் மாமா உள்ளே வந்த போதே என்னால வர முடியலை. இவளை முதல்லயே தூக்கி வச்சி கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க. நானும் ரொம்ப முயற்சி செஞ்சி அங்கிருந்து கிழண்டு வர பார்த்தேன். ஆனா எங்கே அவங்க விட்டாங்க. இந்த ஸ்வேதாவை பார்த்த உடனே ஒரே கடுப்பு. அதான் அவங்க கிட்ட வீட்டுக்கு சொந்தக் காரங்க வந்திருக்காங்க. நான் அப்புறம் வரேன்னு சொல்லிட்டு வர பார்த்தா, அவங்க இவளை அப்புறம் வந்து வாங்கிக்கன்னு சொல்லி தூக்கிட்டு போயிட்டாங்க. எனக்கும் அவ எதுக்கு இங்கே வந்திருக்கான்னு ஒரே கடுப்பு. அதான் கிளம்பி வந்துட்டேன்.”

“அதுக்காக என்னை யார் கிட்ட வேணும்னாலும் தூக்கி குடுத்துடுவியா” என்று வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தாள் அபி.

அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது.

2.30 மணிக்கு இனியாவின் போன் அலறியது. அபியுடன் விளையாடிக் கொண்டிருந்த இனியா வேண்டா வெறுப்பாக போனை பார்க்க அதிலோ இளவரசன் அழைத்துக் கொண்டிருந்தான்.

அவன் அப்போது அழைப்பான் என்று எதிர் பார்க்காத இனியாவிற்கு சந்தோஷம் பீறிட்டு எழுந்தது.

“அபி நீ அம்மா கூட விளையாடிட்டே இரு. நான் இதோ வந்துடறேன்” என்று தன் அறைக்கு ஓடி சென்று போனை ஆன் செய்தாள்.

“ஹலோ” என்றாள் மூச்சு வாங்க.

“என்னடி மூச்சு வாங்க பேசுற”

“இந்த நேரத்துல போன் பண்ணுவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும். நான் கீழ இருந்தேன். போன் வந்த உடனே ஓடி மாடிக்கு வந்தேனே, அதான் மூச்சு வாங்குது” என்று மேலும் மூச்சு வாங்கிக் கொண்டே சொன்னாள்.

“சரி சரி. மூச்சி வாங்கிட்டு பேசுடி செல்லம்”

“ம்ம்ம் ம்ம்ம்”

“சரி சாப்ட்டியா”

“ம்ம்ம். நீங்க”

“இப்ப தான் சாப்டேன்”

“எப்பவும் சாப்டறதுக்கு முன்னாடி போன் பண்ணுவீங்க. இப்ப என்ன பயம் விட்டு போச்சா. ஹ்ம்ம்”

“சீக்கிரம் சாப்பிட்டுட்டு ஒரே அடியா என் பொண்டாட்டி கிட்ட பேசலாம்ன்னு ஆசையா வந்தேன். பட் எங்கே. என் மக்கு பொண்டாட்டி புரிஞ்சிக்கவே மாட்றாலே”

“என்னது மக்கா. சரி அதை விடுங்க. ஒரே அடியா பேசிட்டிருக்கறதுன்னா வேலை இல்லையா. ரொம்ப நேரம் பேசுவீங்களா”

“ம்ம்ம். இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா புத்திசாலி ஆகிட்டிருக்கா”

“இப்ப உன்னோட புகழ்ச்சி எல்லாம் எனக்கு இப்ப வேண்டாம். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா இப்ப”

“நீ ஏண்டி இப்படி இருக்க. இப்ப தான் எனக்கு மதிப்பு கொடுத்து பேசின, உடனே சொல்லுடான்னு சொல்ற. உன்னை என்னடி செய்யறது”

“நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைன்னா இப்படி தான் மரியாதை தேஞ்சிக்கிட்டே போகும். உன் வசதி எப்படி. இப்ப பதில் சொல்றியா இல்லையா”

“என்னடி அவசரம் உனக்கு. எனக்கு வேலை இருந்தா நான் பேசுற அவசரத்துக்கும், இப்ப நிதானமா பேசுறதுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாதா”

“தெரியுது தான். இருந்தாலும் உங்க வாயால கேட்டா திருப்தியா இருக்கும்னு தான் கேட்டேன்”

“ஆமா. இன்னைக்கு சண்டே. உனக்கு மட்டும் லீவ் தராங்க இல்ல. அதே மாதிரி இங்கே இருக்கற வொர்கர்ஸ்க்கும் லீவ் வேணும் இல்ல. முழுசா இல்லைன்னாலும் ஒரு ஹாப் டேவாச்சும் தரனும் இல்ல. போதுமா விளக்கம்”

“போதும் போதும். உங்க விளக்கம்”

“போதும் டீ நீ எனக்கு கொடுத்த மரியாதை எல்லாம் போதும். இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம்டீ. நீ இப்படி மரியாதை கொடுத்து பேசினா நான் அப்படியே பார்ம் ஆகிடுவேன். அப்புறம் நீ அதை எல்லாம் உடைக்கர மாதிரி வாடா போடான்னு பேசுவ. தேவையா இது. நீ நார்மலா உனக்கு என்ன வருதோ அப்படியே பேசு. கஷ்டப்பட்டு இந்த மரியாதை எல்லாம் வேண்டாம். ஓகே”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.