ஐயோ என்ன இது, என் மனது எப்போதிலிருந்து இப்படி தவறு என்று தெரிந்தும், அதற்கு துணை போக ஆரம்பித்தது.
காதலிப்பவர்களின் மனநிலை எப்போதும் இப்படி தான் இருக்கும். தான் காதலிப்பது தன் வீட்டிலிருப்பவர்களுக்கு பிடிக்காது, அது அவர்களுக்கு துக்கத்தை தான் தரும் என்பதெல்லாம் தெரிந்தே, பிரச்சனை வரும் போது வரட்டும், ஆனால் நான் இந்த தருணம் சந்தோசமாக இருக்கிறேன், அதை நான் இழக்க விரும்பவில்லை என்று அந்த நிமிடத்தை மட்டும் அனுபவிப்பார்கள்.
ஆனால் என்னால் மட்டும் எல்லாவற்றையும் முற்றிலும் ஒதுக்கி விட்டு சந்தோசமாகவும் இருக்க முடியவில்லை, மனது குடைந்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த இன்பமான தருணமும் தேவை படுகிறது. இப்படியே தன் மனம் இருதலைக் கொல்லியாக தவிக்கிறதே என்று எண்ணி வருத்தப் பட்டாள்.
வழக்கம் போல், ஒரு வேளை தான் சைக்கலாஜி படித்ததன் விளைவு தான் இதுவா என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் எண்ண ஓட்டங்களுக்கிடையே அவளின் மொபைல் அடிக்க இந்த முறை பயத்துடன் மொபைலை பார்த்தாள்.
மெல்ல சிறிது தயக்கத்துடனே போனை எடுத்தாள்.
அவன் தான் கேட்டதை மறந்து விட்டு, ஏதேதோ பேசவும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
தன்னோட லைப் பார்ட்னர் கிட்ட எந்த விசயத்தையும், எந்த சிடுவேஷன்லயும் மறைக்க கூடாதுன்னு நினைச்சது என்ன, ஆனா இங்க நடக்கறது என்ன என்று எண்ணிக் கொண்டாள்.
யாருக்கும், எதுக்கும் வாக்கு கொடுக்காத, காலம் தான் எல்லாத்தையும் முடிவு செய்யும், நீயோ நானோ இல்லைன்னு அம்மா சொல்வது நியாபகத்துக்கு வந்தது. இப்படி தான் எல்லாரோட வார்த்தையும் மாறி போகுது போல என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் முன்பு பேசியதற்கும், இப்போது தான் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏதோ நினைவு போல பேசிக் கொண்டிருந்ததற்கு பதில் சொல்லாமல், இரு முறை அழைத்த பின்பும் என்ன என்று கேள்வி கேட்பவளுக்கு என்ன ஆயிற்று என்று எண்ணிக் கொண்டான். அதையே அவளிடமும் கேட்டும் விட்டான்.
“என்ன ஆச்சி டா. திடீர்ன்னு ஏன் இப்படி இருக்க. ஜஸ்ட் இப்ப போன் வைக்கறதுக்கு முன்னாடி வரைக்கும், நல்லா தானே பேசிட்டு இருந்த, இப்ப திடீர்ன்னு அமைதியா ஆகிட்ட மாதிரி இருக்கு. என்ன விஷயம்” என்றான்.
என்னவென்று சொல்வது, அவன் எதுவும் கேட்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய தன் எண்ணத்திற்கேற்பவே அவனும் ஏதும் கேட்காமல் இருந்தும், தான் இப்படி ஏதேதோ யோசித்து மக்கு மாதிரி மாட்டிக் கொண்டாள், யாரை குற்றம் சொல்வது என்று மனதிற்குள் தன்னையே திட்டிக் கொண்டாள்.
“என்னடி பேச்சையே காணோம்”
“ஒன்னும் இல்லை. எல்லாம் பிரச்சனையை தான் நினைச்சிட்டு இருந்தேன். எல்லாம் சீக்கிரம் சால்வ் ஆகணும்” என்று பொய்யும் பேசாமல், உண்மையும் பேசாமல் டிப்ளமேட்டிக்காக பேசி சமாளித்தாள்.
“அதெல்லாம் சால்வ் ஆகிடும் செல்லம். நீங்க எதுக்கும் டென்ஷன் ஆகாதீங்க. எதுக்கு இல்லாத உங்க மூளையை யூஸ் பண்ண ட்ரை பண்றீங்க”
“ம்ம் ம்ம்.” என்று சொல்லிக் கொண்டே இருந்தவளுக்கு லேட்டாக தான் அவன் கடைசியில் சொன்ன வாக்கியம் விளங்க, “ ஏய் பிராட், என்ன சொன்ன என்ன சொன்ன, ரொம்ப தான், யாரு இல்லாத மூளையை யூஸ் பண்றாங்க. நீயா இல்லை நானா. ம்ம்ம்” என்று அவனுடன் சண்டையிட ஆரம்பித்தாள்.
“இப்ப தான் டி நிம்மதியா இருக்கு. அப்பாடா என் வாயாடி வெளியே வந்துட்டா” என்று சொல்லி சிரித்தான்.
“வவ்வ வவ்வ”
“ஏய் நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா. நேத்து உன் கிட்ட பேசிட்டு போன் வச்சிக் கூட எனக்கு தூக்கமே வரலை. மனசுல அவ்வளவு நிம்மதி இருந்துச்சி, நீ மட்டும் என் பக்கம் இருடீ. எந்த பிரச்சனையா இருந்தாலும் என்னால சால்வ் பண்ண முடியும். நீ என் கூட இருக்கிற அப்படின்றதே எனக்கு ஒரு பெரிய பலம். அதை மட்டும் எனக்காக செய் டீ” என்றான்.
தான் அவனை எந்த அளவுக்கு வருத்தி இருக்கிறோம் என்று இனியாவிற்கு தெளிவாக புரிந்தது.
“ஐ’யம் சாரி இளா. கண்டிப்பா உங்க கூடவே தான் இருப்பேன். என்னால எந்த பிரச்சனையும் வராது” என்றாள்.
அவளின் குரலில் இருந்த வருத்தம் அவனை வருத்தியது “என்ன செல்லம். கொஞ்சம் சிரிச்சி பேசறது. மாமாவும் கொஞ்சம் ஹாப்பியா இருப்பேன் இல்ல”
“மாமாவா யாரு அது?”
“அடிப்பாவி. நான் தான் டீ.”
“ஹாஹஹா.”
“மாமன் சொல்லறேன் இல்லை. ஏய் புள்ளை ஒரு முறை மாமான்னு கூப்பிடு புள்ளை”
இனியா கலலவேன்று சிரிக்க ஆரம்பித்தாள்.
“ஏய் நான் இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா டீ”
“ம்ம்ம்”
“ஒரு பாட்டு பாடவா”
“இதெல்லாம் என் கிட்ட கேட்கவே தேவை இல்லை. பாடுங்க பாடுங்க. எனக்கு யாருனா பாடினா ரொம்ப பிடிக்கும்”
என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே
கண்ணு ரெண்டும் காந்தமோ
என்னை கட்டி இழுக்குதே
உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
சின்ன சின்ன புன்னகையில் என்னை பறித்தாய்
வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய்
சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே
ஒரு பார்வை பார்க்கும் போதிலே
எந்தன் தாகம் வானில் ஏறுதே
மறுபாதி பார்க்கும் போதிலே
எந்தன் ஜென்மம் சாபம் தீருமோ
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
அவன் பாடிய பாடலின் தாக்கத்தில் இருந்து மீளாதவலாக இனியா ஏதும் பேசாமல் இருந்தாள்
“என்னடி ஏதும் பேச மாற்ற”
“ம்ம்ம். ஒன்னும் இல்லை. ரொம்ப பிடிச்சிருக்கு”
“எது டீ. நானா சாங்கா”
“ரெண்டுமே தான்”
“ஆஹா. இப்ப தான் நீ பார்ம்க்கு வந்திட்டிருக்க. அதே ரூட்ல வா”
“அது சரி. என்ன சாங் புல்லா பாடாம கட் காபி பேஸ்ட் எல்லாம் நடந்திருக்கு”
“அது நீ பாட வேண்டிய லைன்ஸ் நீ தான் பாடனும்”
“ஓஹோ”
“ஏய் ஒரு ரெண்டு லைன் எனக்காக பாடு டீ”
மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய்
மின்மினிக்கும் மின்னலைப் போல் ஒலிக் கொடுத்தாய்
உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்
வந்தாயடா என் அன்பே
“ஹேய் பென்டாஸ்டிக் லைன்”
“ம்ம்ம்”
“என்னம்மா வெறும் ம்ம்ம் மட்டும் தானா. சரி சொல்லு. அந்த லாஸ்ட் லைன் ரொம்ப ட்ரூ தானே”
“என்ன சொன்னீங்க. கேட்கலையே”
“கேட்காது டீ உனக்கு. கேட்காது”
இளவரசனுடன் பேசி முடித்து மன நிம்மதியுடன் போனை வைத்த இனியா ஏதோ மெசேஜ் வந்திருப்பதைக் கண்டு அதை ஓபன் செய்தாள்.
“அக்கா உங்களுக்கு திரும்ப கால் ட்ரை பண்ணேன். பட் லைன் கிடைக்கலை. திரும்ப பிஸின்னு வருது. எனக்கு உங்க கிட்ட பேசணும். நாளைக்கு ஹாஸ்பிடல் வரேன்” என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள்.
அதை பார்த்த இனியா அதிர்ந்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள்.
தொடரும்
{kunena_discuss:679}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.