(Reading time: 20 - 39 minutes)

ம்ம்ம். நீங்க சொல்றது சரி தான்னு வச்சிக்கிட்டாலும் நீங்க சொல்ற மாதிரி நடக்க முடியாது.”

“ஏன்”

“ஏன்னா. இந்த வாடா போடான்றதை கூட விடுங்க. உங்களை வா போன்னு பேசினா கூட என் அம்மா என்னை கொன்னுடுவாங்க. அதனாலையே எனக்கும் உங்களை அப்படி எல்லாம் எப்பவுமே அப்படி கூப்பிட வராது. பட் அப்பப்ப வரும், அது மூட் எப்படி இருக்குன்றதை பொறுத்தது. ஓகே. சோ இந்த விசயத்துல நீங்க தலையிடாதீங்க”

“சரிங்க மேடம். தலையிடலை.” என்றவனின் குரல் சிறிது மாறியிருந்தது.

“என்ன இளா. வாய்ஸ் சேன்ஜ் ஆகிடுச்சி”

“ஒன்னும் இல்லை.”

“இளா இப்ப சொல்ல போறீங்களா இல்லையா”

“ஒன்னும் இல்லைடா. அத்தை என்னை அப்படி எல்லாம் கூப்பிட்டா திட்டுவாங்கன்னு சொன்னே இல்லை. அத்தைக்கு தானே நம்ம கல்யாணம் பிடிக்கலை. அது நியாபகம் வந்துடுச்சி”

“ஹலோ அம்மாக்கு நம்ம கல்யாணம் பிடிக்காம எல்லாம் இருக்காது. அதுக்கு ஏதோ ரீசன் இருக்கும். என் மேல கூட எதாச்சும் கோபமா இருக்கலாம்”

“ம்ம்ம். ஐ டூ தின்க் சோ”

“ஏய் அதெல்லாம் விடுங்க. உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லவா”

“அதென்ன டீ கேள்வி. சொல்லு”

“ம்ம்ம். சொன்னா எனக்கு என்ன தருவேன்னு சொல்லுங்க. அப்ப தான் சொல்லுவேன்”

“நீ என்ன கேட்டாலும் தருவேன். ஓகே வா இப்ப சொல்லு”

“ம்ம்ம். ரொம்ப கெஞ்சறீங்க. சோ சொல்றேன்”

“ஏய் ஏய். நான் எப்படி கெஞ்சினேன்.”

“இப்ப தான். நமக்கு ஏதாவது வேணும்ன்னா தானே, என்ன வேணும்னாலும் தருவேன்னு சொல்வாங்க. நீங்க அப்படி தானே சொன்னீங்க. அதுக்கு நான் சொன்னது தான் மீனிங். ஓகே வா”

“உங்க அக்கா சொன்னது கரெக்ட் தான் டீ”

“அக்காவா. என்ன சொன்னா”

“ம்ம்ம். உன் கூட பேசி ஜெயிக்க முடியாதுன்னு தான். அதுக்கு ஒரு எக்ஸாம்பில் சொன்னாங்க பாரு. அது தான் இன்னும் சூப்பர்”

“அப்படி என்ன தான் சொன்னா”

“ம்ம்ம். இந்த அபியை எல்லாம் யாராலையும் சமாதான படுத்த முடியாது. ஆனா அவளையே ஒரு நிமிசத்துல சரி கட்டிடுவா. அப்படின்னா நீங்களே பாத்துக்கோங்கன்னு சொன்னாங்க”

“உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு. ரெண்டு பேரும் திருட்டு தனமா இப்படி எல்லாம் பேசுறீங்களா”

“அதை விடுடீ. குட் நியூஸ் என்னன்னு சொல்லுடி”

“இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா. மாமா வீட்டுக்கு வந்தாரா, வந்துட்டு அம்மா கிட்ட சண்டை போட்டாரு. ஏன் இப்படி பண்றீங்க அத்தை. இனியாக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்துல இருந்து கேட்கறேன் ஏன் நீங்களே அவ கல்யாணத்துக்கு தடையா நிக்கறீங்கன்னு” என்று அனைத்தையும் அவனிடம் கூறினாள்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவனுக்கும் மனம் நிம்மதியாக இருந்தது.

“ஆமா டா. நீ சொன்னது கரெக்ட் தான். உன்னால மட்டும் இல்லை என்னால கூட அத்தை கிட்ட இந்த அளவுக்கு உரிமையா கேட்டிருக்க முடியுமான்னு தெரியலை. ஆனா அவர் நமக்காக கேட்டிருக்காரு. எவ்வளவு கிரேட் இல்லை”

“ஆமா. மாமா. எப்பவுமே இப்படி தான். அமைதியா இருக்கற மாதிரி தான் இருக்கும். இந்த சைலென்ட் கில்லர் மாதிரி, சைலென்ட்டா காமெடி பண்ணுவாரு, கிண்டல் பண்ணுவாரு. அவருக்கு தப்புன்னு பட்டுச்சின்னா டக்குன்னு அதை கேட்டுடுவாரு”

அவன் சிரித்துக் கொண்டே “அது சரி, அவர் உனக்கு நல்லது தானே செஞ்சிருக்காரு, ஆனா ஏன் உனக்கு அவர் மேல இவ்வளவு கொலை வெறி” என்றான்.

“என்ன. என்ன சொல்றீங்க. புரியலையே”

“அதுவா. அவ்வளவு உனக்காக பேசினவரை போய் சைலென்ட் கில்லர்ன்னு சொன்ன இல்ல, இரு உன் அக்கா கிட்டயே சொல்றேன்”

“அடப்பாவி, ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி. நான் அப்படியா சொன்னேன்.”

“ம்ம்ம். அப்படி தான் சொன்ன”

“போங்க போங்க. நீங்க போங்காட்டம் ஆடறீங்க”

“சரி. ஏன் அவரு திடீர்ன்னு இதை பத்தி பேசினாரு, என் கிட்ட அவர் பேசும் போது கூட நானும் இந்த விஷயத்தை கொஞ்சம் ஆறப்போட்டு அப்புறம் சரி பண்ணலாம்ன்னு தானே சொன்னேன்” என்று வினவினான்.

னியாவிற்கு அதன் காரணமே ஸ்வேதா தான் என்பதை எப்படி சொல்வது என்று புரியவில்லை. சொன்னால் அவர்களுக்குள் சண்டை வருவது நிச்சயம். இப்போது தான் அவர்களுக்குள் ஒரு நெருக்கமே வந்திருக்கிறது. அதற்குள் திரும்ப சண்டை வருவதை அவளுமே விரும்பவில்லை. ஆனால் இப்போது இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே, அவனுக்கு இன்னொரு கால் வருவதால் திரும்ப கூப்பிடுகிறேன் என்று சொல்லி கட் செய்தான்.

அவள் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டாள்.

ஸ்வேதா வந்த போது அவளுக்கு ஏதும் அவ்வளவாக தோன்றவில்லை என்றாலும், வந்த உடனே அம்மாவிடம் தான் மாட்டிக் கொண்டு முழிப்பதை போல் கேள்வி கேட்டதால் அவளுக்குமே ஒரு கோபம் தான் வந்தது.

அதன் பின்பும் தன் மாமா அவளை திட்டும் போதும், பொதுவாகவே அவ்வளவாக மாமாவை தன்னால் எதிர்த்து ஏதும் பேச இயலாது என்பது காரணமாக இருந்தாலும், அவள் மேல் இருந்த கோபமும் ஏதும் பேசாமல் இருந்ததற்கு ஒரு காரணம் என்பதை அவளால் மறுக்க இயலவில்லை.

காலையில் இருந்து தனியாக இல்லாததால் ஏதும் யோசிக்க வழி இன்றி இருந்ததால் மனதில் தோன்றாத சஞ்சலங்கள் எல்லாம் இப்போது தோன்றி மனதை கலங்கடித்தது.

இப்போது ஸ்வேதா வந்ததால் தான் மாமா இப்படி பேச வேண்டி வந்தது என்று இவனிடம் சொல்லவும் முடியவில்லை. என்ன தான் செய்வது என்று மனம் குழம்பிக் கொண்டிருந்தது.

யோசித்து பார்த்தால் தான் செய்தது தவறு என்று மனதிற்கு தோன்றினாலும், தன் மனம் அதையே விரும்புகிறது என்பதும் அவளுக்கு தெளிவானது.

ஒன்று அது தவறு என்றே தோன்றாமலாவது இருக்கலாம். அல்லது தனக்கு நியாயம் என்பதின் பக்கம் நிற்குமளவு மனமாவது துணிய வேண்டும். இரண்டுமே அல்லாமல் தவறு என்றும் நன்றாக பறைசாற்றி தெரிய வைப்பதோடு, அதையே விரும்பும் மனதை என்ன தான் செய்வது.

ஸ்வேதா தன்னிடம் பேச வந்தது எப்படியும் சந்துருவின் விசயமாக தான் இருக்கும். அதை சொன்னால் அவனுக்கு பிடிக்காது.  எப்படியோ அவள் வந்த விஷயத்தை சொல்லாமல் செல்லும் விதமாக எல்லாம் நடந்தது கூட மனதுக்கு ஏதோ இதமாக தான் இருக்கிறது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.