(Reading time: 15 - 30 minutes)

தக்கூட பெருமையா சொல்லு....உன்னலாம் திருத்தவே முடியாது...” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஜெனி.

“ இதெல்லாம் manufacturing defect, இனிமே சரி செய்யவே முடியாது...” என்றபடி எழுந்து கொண்டான்.

இருவரும் வருவதையே ஒரு திகிலுடன் பார்த்தவர்களைப் பார்த்து,

“ டேய், நீங்க ஆசப்பட்ட மாதிரில்லாம் எதுவும் நடக்கல, உங்க ரியாக்ஷ்னை குறைங்க..” என்றான்.

“ என்னது ஒன்னுமே ஆகலியா..? என்ன ஜெனி ஏமாத்திட்ட, நான் ஆம்புலன்சுக்கு கால் பண்ணலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்..” என்றான் அருண் போலி வருத்தத்துடன்.

“ அடுத்தவனுக்கு ஆப்புன்னா, என்னா ஒரு சந்தோஷம்... இல்லடா மாப்பு..” என்று கவின் கையை மடக்கிக் கொண்டே கேலியாக கேட்க,

“ஹி..ஹி... நண்பன காப்பாத்தலாமேன்னு தான்...” என்று அருண் இழுக்கவும்,

“ யாரு?..நீயி..? கேக்கறவன் கேனையா இருந்தா, எருமமாடு ஏரோ.......ப்பிளேன் ஓட்டும்னு சொல்லுவியே...” எனவும்,

“ ஹய் பழமொழி நல்லாருக்கே...இட்ஸ் வெரி நைஸ்யா.... ஆனா என்ன அர்த்தம்...?” என்று அருண் கேட்க, பதில் சொல்ல வந்தவனை,

“ ஆமடா...ஏருமயை வச்சு பி.ஹச்.டி பண்ணுங்க... இப்போ உலகத்துக்கு அதுதான் ரொம்ப தேவ..!!” கடுப்புடன் சொன்ன அனு ,

“ மேட்டருக்கு வாங்கடா...தீப்தி ஏன் இப்பிடி பேசிட்டு போறா..? அதுவும் இவன பாத்து..?” என்றாள் தொடர்ந்து,

“ ஆமாமா...இவனுக்கு தான் ஆள் இருக்குனு ஊர் உலகத்துகே தெரியுமே..!! “ செல்வா சொல்லவும்,

“ டேய், எஃஸ்ட்ரா பிட்ட கட் பண்ணு...” கவின்,

“ ஷ்..... இப்போ உங்க மேட்டர், ப்ரச்சனைல இருக்குன்னு அவளுக்கு எப்படி தெரியும்..?” அனு கேள்வியாக கேட்கவும், அனைவரும் அருணை சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்க,

“ அடப்பாவிகளா....அந்த புள்ள, என்ன நிமிர்ந்து கூட பார்க்காதுடா....” என்று அலற,

“அனு, நேத்திலிருந்தே தீப்தி ரொம்ப சந்தொஷமா இருந்தா.. இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள்னு எங்கிட்ட சொன்னா...ஆனா அது இதுவா இருக்கும்ன்னு நான் நெனக்கவே இல்ல..அவ ரொம்ப சீரியஸா இருக்குற மாதிரிதான் எனக்கு தோனுது..” என்று நந்து கூறியவுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ ஃப்ரீயா விடுங்க... இப்போ என்னாயிருச்சு, இன்னும் ஒரு தடவை பொறுமையா சொல்லிப் பார்க்கலாம், கேட்கலையா...அப்றம் இருக்கவே இருக்கு நம்ம பாஸ் ட்ரீட்மென்ட்...” என்றவுடன், முறைத்த நந்துவைப் பார்த்து,

“ அதாவது...பாஸ் மாதிரி ஸ்ட்ரிக்டா சொல்லிருவோம்னு சொன்னேன்...”  என்று மழுப்பினான் கவின்.

க்ளாசிற்குள் சென்றவர்களின் பார்வை தாமாக தீப்தியை பார்க்க, அவளோ படு கூலாக அமர்ந்திருந்தாள். முகத்தில் சந்தோஷம் மட்டும் அப்பட்டமாக தெரிந்தது. இவள் ஏன் இப்படி ஒரு கேள்விகுறியாகவே இருக்கிறாள் என்ற குழப்பத்துடனே அந்த நாள் முடிவுக்கு வந்தது.

றுனாள்,

க்ளாஸில் தீப்தி, மற்ற நேரத்தில் சாதாரணமாய் இருந்தாலும், கவினை பார்க்கும் பொழுது மட்டும் சிரித்தாள். பிறகு அவன் எங்கு சென்றாலும் அவனை பின் தொடர துவங்கவும், ( ரெஸ்ட் ரூம்குமான்னு கோக்குமாக்கா கேள்விலாம் கேக்க கூடாது, சொல்லிபுட்டேன் ) அதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவனே அவளை தனியாக அழைத்து, முடிந்த வரை பொறுமையுடன் பேசினான்.

“ தீப்தி..உனக்கே தெரியும் நான் ஜெனியை லவ் பண்றேன். அத நீ எந்த அளவுக்கு சீரியஸா எடுத்துக்கறேன்னு என்னக்கு தெரியல.., ஆனா ஜெனி தான் என்னோட உயிர்..அவள தவிர எனக்கு வேற வாழ்க்கையே இல்ல... அதுனால நீ உன்னோட எண்ணத்த மாத்திக்கோ..அப்றம் எந்த வகையிலயாவது நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணியிருந்தா, ஐம் ரியலி சாரி...” என்றான்.

அவன் கோபமாக பேசியபோது, அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு, அவன் பொறுமையாக எடுத்துக் கூரியதும் முகம் மாறிவிட்டது.

“ எந்த விதத்தில்லயா....எல்லா விதத்திலயும் நீ என்ன பாதிச்ச, இப்பவும் பாதிக்கிற...என் லைஃப்ல எதெல்லாம் இல்லைனு ஏங்கினேனோ, அதோட மொத்த உறுவமா நீ இருக்க... எதெல்லாம் என் லைஃப்ல நான் மிஸ் பண்றேனோ, அதையெல்லாம் நீ, ஜஸ்ட் லைக் தட் உன்ன சுத்தி உள்ளவங்களுக்கு குடுக்கிற.. சுத்தி உள்ளவங்களையே இப்படி பாத்துகிறியே, உனக்கே உனக்குன்னு ஆனா எப்படி பாத்துக்குவ. உன்ன என்னால மிஸ் பண்ண முடியாது, அதுகாக நான் எந்த எல்லைக்கு வேணா போவேன்....” என்றாள் ஆவேசத்துடன். அவள் பேசுவதை எல்லாம் பொறுமையுடன் கேட்டவன்,

“ எனக்கு உன்மேல பரிதாபம் தான் வருது. ஆக மொதத்துல உனக்கு காதல்னா என்னன்னே தெரியல..அது ஏதோ கார்ட தேய்ச்சா கடைல கொடுக்குற பொருள்னு நெனக்கிற..அத வாங்க முடியாது, உணரனும்.. இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது. உண்மையான காதல் எப்படி இருக்கும்னு தெரியனும்னா, என் ஜெனிய பாத்து தெரிஞ்சுக்கோ...” என்றுவிட்டு போனான்.

அவன் செல்வதையே பார்த்தவள்,

“ நீ ஜெனியோட சேர்ந்தா தானே, உன்னோட உண்மையான காதலும் ஜெயிக்கும். எப்படி சேர்றீங்கன்னு பாக்குறேன்...” என்றபடி தன் மொபைலை எடுத்தாள்.

தீப்தியை தவிர மற்ற அனைவருக்கும், அடுத்து வந்த இரண்டு நாட்களுமே உற்சாகமாய் சென்றது.

வெள்ளிக்கிழமை அன்று காலை சந்துரு காலேஜ் வந்து சேர்ந்தான். அவனிடன் தீப்தி பற்றி எதுவும் கூறிக் கொள்ள வேண்டாம் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்ததால், அவனிடம் எதுவும் கூறவில்லை. அவனும் presentation  எல்லாவற்றையும் டிபார்ட்மேன்டில் சமர்பிக்க வேண்டும் என்று அவசரமாக சென்று விட்டான்.

மாலையில், நந்துவை சந்தித்தவன்,

“ நாளைக்கு காலைல ரெடியா இரு, நான் வந்து பிக்கப் பண்ணிகறேன்...” என்றான்.

“ இல்ல..அப்பா வந்திருவாங்க, நான் அவங்க கூட வந்திர்றேன்..” என்றாள். கொஞ்சமாய் முகம் மாறியவன்,

“சரி, இந்த ஒரு தடவை மட்டும் தான். அப்போ எங்க வீட்டுக்கு வந்திருங்க..” என்றவுடன்,

“இல்ல...வடபழனி கோவிலுக்கு போகலாம்...”

“என்னது....கோவிலுக்கா??..ஏன்...?”

“அதுவந்து, நாம எல்லாரும் முதல் முறையா சந்திக்கிறது, கோவில்லையா இருக்கட்டும்மேனு தான்...”

“ ஏன் கோவில்லைன்னா என்ன ஸ்பெஷல் வந்திரப்போது...?”

“ ஏன்னா, நல்ல விஷயம் நடக்குறப்போ நம்மல சுத்தி பாசிடிவ் எனர்ஜி இருந்தா நல்லது. அப்படி பாசிடிவ் எனர்ஜி  நெறஞ்சு இருக்கிற இடம் கோவில் தான். “

“இன்ட்ரெஸ்டிங்க்....அஸ் யு விஷ், நாளைக்கு கோவில்ல பார்க்கலாம்...அப்றம் மூனு நாள் பாக்காத ஏக்கத்த போக்க ஒரே ஒரு கிஸ்..” என்று அவளை நெருங்க,

“ம் ஹூம்...” என்று தலையாட்டிய படியே பின்னால் சென்றவளை, ஆசையுடன் பார்த்தவன்,

“சரி, நாளைக்கு உங்க அப்பா முன்னாடியே வாங்கிக்கறேன்...” என்று எட்டி அவள் கன்னத்தை தட்டியவாறு விடை பெற்றுக் கொண்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.