(Reading time: 15 - 30 minutes)

தீப்தி தன் வீட்டுக்கு சென்று விட்டதால், முதல் முறையாக தனியாக படுத்தவளுக்கு, மறுனாளைப் பற்றிய பரபரப்பில் பயம் கூட தெரியவில்லை. இரவு முழுவதும் விழிப்புடனே படுத்திருந்தவள், அதிகாலையே எழுந்து குளித்து, தன் தந்தைக்காக காத்திருந்தாள். அவர் வந்ததும் அவரை கட்டிக்கொண்டாள். அவளை அனைத்து உச்சிமுகர்ந்தவர், காலேஜைப் பற்றி விசாரித்தார். சிறிது நேரத்திலே அங்கு வந்த அனுவும் ஆருவும் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு கோவிலுக்கு கிளம்பும் பொழுது, காரணம் தெரிந்த்தால், அனுவுன் ஆருவும் கலண்டு கொண்டார்கள்.

போகும் வழி எல்லாம், ஒரு வித பதட்ட்த்துடன் இருந்தவளை யோசனையுடன்  பார்த்தவர்,   ஏன்னெறு காரணம் கேட்காமலேயே, “ அப்பா இருக்கேண்டா...” என்றார்.அதுவே நந்துவுக்கு ஒரு வகையில் தைரியமாகவும், ஒரு வகையில் குற்ற உணர்ச்சியாகவும். மேலும் அவள் தந்தை, அத்தையும் அங்கு வரப் போவதாக கூறவும், அவரைத் தான் மறந்தே விட்டதை  நினைத்து மிகவும் குன்றிப் போனாள். மானசீகமாக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.( விடு நந்து, இந்த லவ்வுல விழுந்தாலே, உங்கள தவிர மத்தவங்கள்ளாம் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகுறது ஜகஜம் தானா...).

 கோவிலுக்கு அவர்களுக்கு முன்னே வந்து விட்ட நளினியும், சந்துருவும் கோவிலை ஒரு தடவை சுற்றிவிட்டு, ஒரிடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

“ டேய், ஒரு வேள நந்துவோட அப்பா ஒத்துக்கலைன்னா என்னாடா செய்வ..?” வேண்டும் என்றே அவனை வம்பிலுத்தார்,

“ ம்...சிம்பிள்..இங்கயே அவர் கண்ணு முன்னாடியே அவளுக்கு தாலி கட்டிருவேன்...” என்றான் கூலாக,

“ நீ செஞ்சாலும் செய்வேடா... கவலையே படாத, அப்டிலாம் நடக்காது...” என்றார் உறுதியாக,

“எப்டிம்மு இவ்ளோ கான்ஃபிடென்டா சொல்ற...?” என்றவுடன்,

“ டேய் நான் உன் அம்மாடா, உன்னோடதுல பாதியாவது எனக்கு இருக்காது...” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, நந்துவும், பாஸ்கரனும் உல்ளே நுழைவதைக் கண்டவர்,

“சந்துரு, இப்போ இருந்து உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல.. நான் முன்னாடி போறேன் ,நீ கொஞ்ச நேரம் கழிச்சு வா..” என்றவர்,

“ஏன்.....மா....?” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே சென்றுவிட்டார்.

ந்துருவை தேடிய நந்துவின் பார்வையில், நளினி வரவும், மிகுந்த சந்தோஷத்துடன் அவரைக் கட்டிக் கொண்டாள். அதை சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சந்துருவிற்கு ஒன்றும் புரியவில்லை, “ பேசவே இல்ல அதுக்குள்ள இப்டி ஒன்னு சேர்ந்துடாங்க..” என்றவாறு அவர்களை நோக்கிச் சென்றான்.

“ நந்துகண்ணு, எப்டிடா இருக்க..? முகத்துல ஒரு தேஜஸ் தெரியுதே என்ன காரணம்? “ என்று கண்ணடித்துக் கேட்டவரை எதிர் கொள்ள முடியாமல், தலையை கீழே குனிந்து கொண்டாள். அதற்குள் அவர்கள் அருகே வந்து விட்ட சந்துருவை, தன் அண்ணனிடம் ஜாடையாக காட்டி, “ பிரபு ‘ என்று தன் அண்ணனுக்கு மட்டும் கேட்கும் படி கூறியவர், மேலும் அவரிடல் சமிஞை செய்து விட்டு, அருகில் வந்த அவனிடம்,

“யாருப்பா நீ..? என்ன வேணும்.? என்றார், தலையை பின்னுக்கிழுத்து அவரை குழப்பத்துடன் பார்த்தவன், வாயை திறப்பதற்குள்,  

“ அழகான பொண்ணு நின்னுற கூடாதே உடனே வந்திருவீங்களே....?” என்று அவர் மேலும் பொறியவும், நந்து பதட்டமாக,

“ இல்ல அத்தை...இவர் அப்படி இல்ல...அப்பாவ பாக்கதான் வந்திருக்காங்க..”

என்றவள் சந்துருவிடம் ,

“ அம்மா வரலையா...?” என்று பயத்துடன் கேட்க, அதற்கு மேல் தலை பிய்த்துக் கொள்வதற்குள்,

“இதோ...” என்று பாஸ்கரன் நளினியை சுட்டிக் காட்டினார். இன்னும் குழப்பமடைந்தவர்களைப் பார்த்து,

“ போதும்மா...பாரு ரெண்டு பேரும் எப்படி முழிக்கிறாங்கன்னு....” என்றவுடன்.

“நல்லா முழிக்கட்டும்...நம்மள எப்டி பதற விட்டாங்க...” என்றார் நளினி.

“இங்க என்ன நடக்குது, அம்மா உனக்கு இவங்கள முன்னாடியே தெரியுமா..” சந்துரு,

“ ஓ...45 வருஷத்துக்கு முன்னாடியிருந்தே.... டேய் இது உன்னோட பாஸ்கி மாமாடா...” என்றார் சந்தோஷம் பொங்க, இதை சொல்வதற்காக பல வருடம் காத்திருந்தவர் அல்லவா...

“ அப்படின்னா இது....” என்று நந்துவை கை காட்டியவனிடம்,

“ உன்னோட பப்புவே தான்...” என்றார், நம்பவே முடியாத சந்தோஷமும், ஆர்வமும் போட்டி போட நந்துவை அன்றுதான் புதிதாக பார்ப்பவன் போல் பார்த்தான்.

நந்துவிற்கு தன் தந்தை நளினியை சந்துருவின் தாய் என்றதுமே, எல்லாம் விளங்கிவிட, இப்படியெல்லாம் நடக்குமா என்று எண்ணுகையிலே அவளுக்கு புல்லரித்தது.

“ பிரபுத்தான்...” என்றவளை நோக்கி அடி எடுத்து வைத்தவன், மனதில் ஒரு முடிவுடன், தன் மாமாவின் அருகில் சென்று அவர் பாதங்களை வணங்கி,

“ மாமா உங்க பொண்ண என்னக்கு தர சம்மதமா...?” என்று மிரட்டலாக கேட்கவும்,

சிரித்தபடியே அவனை அனைத்துக் கொண்டவர்,

“ அதுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கனும் பிரபு....” என்றார். “வித் யுவர் பெர்மிஸன்..” என்றவாரு உரிமையுடன் நந்துவின் அருகில் சென்றவன், அவளை இழுத்து அனைத்துக் கொண்டான்,

“ ஏய்.... என் பின்னாடியே சுத்துவியே அந்த பப்புவா நீ.....” உணர்ச்சிவசப் பட்டவனை,

“பிரபுத்தான்....” என்றாள், கண்களில் தன் காதலையெல்லாம் திரட்டி, அவள் சொன்னவுடன் தன் நினைவுகளில் மின்னலடிக்க,

“ நீ...முன்னாடியே பிரபுன்னு சொல்லிருக்க........நான் சொன்னேன்ல, இது ஏதோ விட்ட கொற, தொட்ட கொற....” உற்சாகமாக கூறியவன் அவளை அப்படியே தூக்கி சுத்த துவங்கினான்.

“ டேய் இது கோவில்டா...அவள எறக்கிவிடு....” என்று நளினி கத்தியதற்கு,

“சோ வாட்...?” என்ற பதிலே கிடைத்தது.

“ மாமா பாக்குறாங்கடா...” என்ற வார்த்தை வேளை செய்து, அவளை இறக்கி விடச் செய்தது. சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்த அந்த தருனத்தில், சந்துரு தவிர்த்து அனைவரும் முருகனுக்கு, மனமுருக நன்றி சொன்னார்கள்.

ந்த நன்றியில் திளைத்து புன்னகையுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த முருகனின் அருகில் வந்த தேவியர்,

“ பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு வழியாக அவர்களை சேர்த்து விட்டீர்கள் தேவா....” என்றனர், அவர்களுக்கு மந்தகாச புன்னகைபுரிந்தவர்,

“ பிரிந்தவர்களை சேர்ப்பதும், சேர்ந்தவர்களை பிரிப்பதும் தானே எமது வேலையே...” என்றார்.

“புரியவில்லையே தேவா..”

“ அதாவது, அவர்களை சேர்ப்பதே பிரிப்பதற்காகத் தான்...” என்றபடி மறைந்தார்.

ஹாஸ்டலில்,

ஆருவிற்கு விசிட்டர் என்று ஆயா அழைக்கவும்,யோசனையுடன் வெளியே வாராண்டாவிற்கு வந்து பார்த்த ஆரு, அங்கு நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து திகைத்துப் போய் நின்றுவிட்டாள். 

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 12

Go to நினைத்தாலே/  இனிக்கும் episode # 14

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.