(Reading time: 9 - 18 minutes)

04. நீரும் நெருப்பும் - மோஹனா

நீரும் நெருப்பும்

ன்றைய விடியலை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தான் விஷ்ணு. ‘தந்தையும் தமையனும் என்ன பேசிக்கொண்டார்கள் ‘ என்று எண்ணியவாறே தமையனின் அறையை நாடிச் சென்றான் .. அங்கே அவனைக் காணாமல் போகவும் , கிழேத் தேடி வந்தான் .. ஹரி பிரார்தனை அறை வாயிலில் இருப்பதைக் கண்டு அங்கே சென்றான் ..

அங்கே ஹரி அபியை நோக்கிக் காதல் பார்வையை வீசிக் கொண்டிருக்க அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அபி...

‘சரியாக போயிற்று ... நல்ல அண்ணன் , நல்ல அண்ணி .. ‘

“அண்ணா....” குழைந்து அழைத்தான் விஷ்ணு...

“ஆங் ... நீ எப்போடா வந்தே .....”

“நீங்க அண்ணிக்கு ஆன்னா ஆவன்னா சொல்லிக்கொடுக்கும் போதே வந்துட்டேன் ...”

“டேய் .... !!”

“நடத்துங்கோ நடத்துங்கோ ..... “

“நீ எதுக்கு ..”

“’கரடி மாறி வந்தே’ ன்னு தானே கேட்க வரிங்க.... உங்களுக்கும் அப்பாவுக்கும் கொஞ்சமாவது பொறுப்பிருக்க... நேத்து நைட் நீங்க மட்டும் ரகசியம் பேசிப்பிங்க, அதைத் தெரிஞ்சுக்கலாம்னு வந்தா கரடின்னா சொல்றிங்க.........” ஏற்ற இறக்கத்தோடு ஸ்ருதி சேர்ந்து சொல்லவும் ஹரியும் அபியும் சிரித்து விட்டனர்....

விஷ்ணு கோபம் போல் முறைக்கவும் மேலும் சிரித்தனர்.........

“இப்போது நீங்கள் சொல்ல போகிறீர்களா இல்லை நான் அப்பாவிடம் கேட்கட்டுமா?............”

“எனக்கும் என் தந்தைக்கும் ஆயிரம் ரகசியம் இருக்கும்,, குறைஞ்சது ஏழ்நூறாவது இருக்கும்.... அதையெல்லாம் நீ ஏன்டா கேட்கிறாய் ?.....”

‘என்ன??... அண்ணனா இப்படி பேசுவது...’ ஹரி கூறிய அந்த ‘என் தந்தை’ என்ற வார்த்தை அவனின் மனதில் ஆனந்தத்தை ஏற்படுத்தியது... அப்படியென்றால் அப்பாவும் அண்ணனும் பேசிவிட்டார்களா?... அப்போது அம்மா சிக்கிரமே இங்கே வந்துவிடுவார்களா?!!! ... என்ன ஓட்டத்திற்க்கு இடையே

“தோடா ... போல்லாதா ரகசியம் ...”

“நானே அப்பாவிடம் கேட்டுக்கொள்கிறேன் .... நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம் ....” கோபித்துக்கொண்டு விஷ்ணு தந்தை அறையை நோக்கி சென்றான்... பூஜையை முடித்துக்கொண்டு அபி ஹாலிற்கு வந்தாள்...

அங்கே ஹரி ராஜத் தோரணையில் அமர்ந்து அவளை சைட் அடித்துக்கொண்டிருந்தான் ....

‘இரு இரு உன்னை என்னப் பண்றேன் பார்...’ முறைத்துக் கொண்டே சமையலறையை நோக்கி சென்றாள்..

ப்பா ....” அழைத்துக்கொண்டே தந்தையின் அறைகுள் சென்றான்...

“என்னப்பா ... பரபரப்பா வருகிறார்போல்  தெரிகிறதே...!”

“அப்பா . உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் மறைக்காமல் சொல்விர்களா ?...”

“நீ என்ன கேட்க போகிறாய் ?..”

“நீங்களும் அண்ணனும் நேற்று இரவு என்ன பேசினிங்க?....”

“அது எங்களுக்குள் இருக்கும் ரகசியம் .. அதெதற்கு உனக்கு?... “ லேசாக சிரித்துக் கொண்டே சொன்னார்..

“ஹும் .. அப்பா நீங்களுமா ?....” வடிவேல் பாணியில் அவன் சொல்லவும் அவர் வாய்விட்டு சிரித்தார்....

‘அவர் சிரித்ததில் விஷ்ணு மயக்கம் போடாத குறை தான்... அவர் அப்படி சிரித்துப் பார்த்ததில்லை விஷ்ணு... அவர் இப்படி வாய்விட்டு சிரிக்கவும் பிரச்சனை குறைந்து விட்டதை அறிந்துக் கொண்டான்..

“இனி உங்ககிட்ட பேசி பயனில்லை ... நானே தெரிஞ்சுக்கிறேன் ...”

பாலா வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார்...

“என்னங்க .... உங்களுக்கு தெரியுமா ? இன்னைக்கு உங்க தங்கையோட பிறந்தநாள் .....”

“தெரியாமல் என்ன... “

“அப்போது அவர்களை அழைத்து வாழ்த்து சொல்லவேண்டியது தானே!!..”

“சொல்லிட்டேன் பிரேமா .. அவள் சோர்ந்து போய் இருக்கா.... எல்லாம் சிக்கிரம் சரியாக வேண்டும் .... “

“ஆமாங்க .... “

பேசிக்கொண்டே கீழே வந்தவர்கள் அங்கே விஷ்ணு பாவம் போல் அமர்ந்திருக்கவும் ...

“என்ன விஷ்ணு .. ஏன் இப்படி கப்பல் கவிழ்ந்த மாறி உட்கார்ந்திருக்காய்?...”

“என் கவலை எனக்கு.. உங்களுக்கு என்ன வந்துச்சு ... எங்கயோ கிளம்பிட்டிங்க போல.. போங்க உங்க சோலியை போய் பாருங்க மாமா...”

“அதுசரி... வேதாளம் முருங்கை மரம் ஏறிட்டது போல... நீ வா பிரேமா நம்ம வேலையை பார்போம்...”

பிரேமா பாலாவை வழியனுப்பி வைக்க சென்றுவிட, விஷ்ணு அபியைத் தேடிச் சென்றான் ..

பி சமையல் அறையில் எதோ செய்துக்கொண்டிருந்தாள்....

“அண்ணி .. என்ன செய்றிங்க?.... ஸ்வீட்’ஆ... நெய் வாசனைத் தூக்குதே... எனக்கும் கிடைக்குமா?...”

“உனக்கு இருக்கு. ஆனால் இது இல்லை... “

“அண்ணி எனக்கு இந்த ஸ்வீட் ரொம்ப பிடிச்சிருக்கு... பார்க்க கலர்புல்லா இருக்கு ....”

“ம் ம் .. கொஞ்சம் இரு ... “

அருகில் இருந்த பத்திரத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து தட்டில் வைத்துக் கொடுத்தாள்....

“இதென்ன அண்ணி .. தனித்தனியாக செய்கிறீர்கள்....”

“இது ஸ்பெஷல் ப்ரிபரேஷன் ....”

“யாருக்கு?.. எதற்கு?..”

“கேள்வி கேட்காமல் சாப்பிடு விஷ்ணு....”

“சரி....”

அவள் செய்துக்கொண்டிருந்த அடுப்பின் அருகில் அதை செய்ய தேவைப் பட்ட பொருட்கள் இருந்தன... அதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன் கண்களில் சர்கரையே படவில்லை....

“அண்ணி நீங்க சர்க்கரைப் போட மறந்திட்டிங்களா?...”

“இல்லையே போட்டேனே.... அப்போ இங்கே சர்க்கரையைக் காணோமே...”

“இதோ இங்கே இருக்கிறதே ...”

“ஐயையோ ... அண்ணி இது உப்பு .....”

“அச்சோ .. மறந்து போட்டுட்டேன் ... இருந்தாலும் இதை வீணாக்க மனம் வரவில்லை ...”

“அதனால் ....”

“அதனால் ஒன்றுமில்லை ... நீ கேள்விக் கேட்காமல் சாப்பிட்டு போ.....”

“சரி....”

அவள் டைனிங் டேபிளில் எடுத்து வைக்கும் வரைக்கும் அந்த ஸ்வீட்டை மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் விஷ்ணு...

“ஐயோ !! என்ன அண்ணி இது புதிதாக செய்த ஸ்வீட்டை இல்லை இல்லை ஐட்டத்தை அண்ணன் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் வைக்கிறீர்கள்?!....”

“விஷ்ணு... இது நான் உன் அண்ணனுக்கு கொடுக்கும் ட்ரீட்... நடுவில் புகுந்து கெடுக்காதே ... கெடுக்க நினைத்தால் புது ஸ்வீட்டில் கொஞ்சம் மீதம் வைத்திருக்கிறேன்... நினைவில் வைத்துக்கொள் .....”

“நான் ஏன் சொல்ல போகிறேன் அண்ணி .. நீங்களாச்சு அண்ணனாச்சு .... என்னை விட்டால் போதும்....அண்ணா உன் விதி அதை யாரால் மாற்ற முடியும் .....”

”வேலுச்சாமி ... எல்லோரையும் சாப்பிட அழைத்துவா !!....” கூறிவிட்டு கைலாசநாதரை சாப்பிட அழைக்க சென்றாள் அபி..

அனைவரும் உணவு மேடைக்கு வந்தபின் ஒன்றாக உண்டனர்... ஹரி வரும் போது விஷ்ணு அவனை பாவமாகப் பார்த்தான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.