(Reading time: 9 - 18 minutes)

சைகையிலே என்னவென்று கேட்டான்... அதற்கு விஷ்ணு ‘உன் விதி’ என்று சைகை செய்தான்... இதைக் கவனித்துக்கொண்டிருந்த அபி...

“என்ன விஷ்ணு, ஸ்வீட் தீர்ந்து விட்டதா? எடுத்து வரட்டுமா?...”

“ஹி ஹி .. வேண்டாம் அண்ணி ...” சாப்பாட்டில் கவனத்தை செலுத்துவது போல் நடித்தான்.. அவள் சமையலறை உள்ளே சென்றவுடன்.”அண்ணனைப் பார்த்து அதை சாப்பிட வேண்டாம்... என்று சைகை செய்தான்... அவன் கவனித்தால் தானே.... இது அபி செய்தது  நான் சாப்பிடுவேன் என்ற தோரணையில் சைகை செய்தான்...

அப்போது உன் விதி என்று மீண்டும் சைகை செய்து விட்டு அவனுக்கு வைக்கப் பட்ட ஸ்வீட்டை உண்ணத் தொடங்கினான்....

ஹரி அவனுக்கு வைக்கப் பட்ட ஸ்வீட்டை சாப்பிடத் தயாரானான்... அவன் ஸ்வீட்டை வாயில் போடவும் அபி உணவு மேடைக்கு வரவும் சரியாக இருந்தது...

அவனை எண்ணி விஷ்ணு வருத்தப்பட்டான் .. பாவம் அவனால் வேறு என்ன செய்யமுடியும்.... அவனை நோக்கி வருத்தமானப் பார்வையை விசினான்... தம்பியின் கையாலாகாதத் தனத்தை எண்ணி அவனைப் பார்த்து முறைத்தான் ஹரி....

ஹரியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...

‘ஐயோ இதென்ன ஸ்வீட்’ஆ இல்லை பாய்சன்’ஆ..’ மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தினரிக்கொண்டிருந்தான் ஹரி... அருகில் இருந்த தான் தந்தையைப் பார்த்தான்.. அவர் ரசித்து ருசித்து ஸ்வீட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... தம்பியை நோக்கினான், அவன் பாவமென ஒரு பார்வையை வீசினான் ... விஷயம் ஓரளவுக்கு புரிந்து விட்டது அவனுக்கு... அபியை நோக்கினான் அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.... முழுவதும் விளங்கிற்று அவனுக்கு... பேசாமல் கஷ்டப்பட்டு முழுங்கினான்.... திரும்ப அதை கையில் எடுக்கவேயில்லை ஹரி....

 உணவு முடிந்து கையலம்ப சென்ற ஹரியை நோக்கி வந்தாள் அபி...

“இனி என்னிடம் வைத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.....”

‘யார் சொன்னது இனி தானே ஆட்டம் ஆரம்பம்.... ‘ மனதில் எண்ணிக்கொண்டே பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு சென்றான்..

ணவை முடித்து தோட்டத்தில் நடந்துக் கொண்டிருந்தாள் சுபா.... எதோ சிந்தனையில் நடந்துக் கொண்டிருந்தவள் எதிரே வந்த ரவியை கவனிக்காது பலமாக மோதிவிட்டாள்...

“அச்சோ. சாரிங்க... ஏதோ யோசனையில் தெரியாமல் மோதி விட்டேன்....”

“பரவாயில்லை மிஸ்.சுபா...”

“அட என் பெயர் உங்களுக்கெப்படி தெரியும்.....”

“நான் மிஸ்டர். சோழனின் நண்பன் ... ஊர் திருவிழாக் காண வந்தேன்... உங்கள் வரவேற்பு விழாவில் நானும் இருந்தேன்....”

“ஓ ... அப்படியா மிஸ்டர்...?”

“ரவி ....”

தோட்டத்தில் நடைப் பழகிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள் சுபாவும் ரவியும்...

லமான யோசனையில் இருந்தான் ஹரி...

“என்ன அண்ணா .. என்ன யோசனை....”

“ஒண்ணுமில்லை விஷ்ணு....  உங்க அண்ணியை பற்றி ஏதாவது சொல்...”

“என்ன விஷயம் அண்ணா ...”

“காதல் விஷயம் தான் விஷ்ணு... ஒரேஒரு காதல் பார்வை வீசியதற்கே சர்க்கரைக்கு பதில் உப்பள்ளி போட்டுவிட்டாள்... அவளை எப்படித்தான் வழிக்குக் கொண்டுவருவதோ?....”

“அண்ணா, அண்ணியைப் பற்றி உங்களுக்கு தெரியாது... மனதில் உங்கள் மேல் கொல்லை ஆசை வைத்திருக்கிறார்கள்.....”

“என்னடா சொல்கிறாய் ... “

“ஆமாம் அண்ணா... இந்த விஷயத்தில் நீங்கள் என்னை நம்பலாம்...”

“எப்படி ?...”

“சிம்பிள் ... உங்கள் மேல் உள்ள ஆசையை வெளிக்கொணர்ந்து விட்டால் போதும்.... “

“எப்படிடா?...”

“எப்படி எப்படி என்று என்னையேக் கேட்கிறீர்களே.... நீங்களே ஏதாவது பிளான் போடுங்கள்....”

“எனக்கு பில்டிங்ற்கு தான் பிளான் போடத் தெரியும்... எதற்கு எப்படி?”

“திரும்ப எப்படி .... ஹையோ ... நானே ஐடியாக் கொடுக்கிறேன்....”

“அண்ணா உள்ளத்தில் உள்ள காதலை வெளிப்படுதிட்டால் போதும் .... அதற்கு என்ன பண்ணுவது???...”

“ஆ.. ஐடியா ... அண்ணா நீங்கள் விவிஎஸ் படம் பார்த்திருக்கிறீர்களா?...”

“நோ .. அப்படிஎன்றால் என்ன ?...”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி ... அண்ணா உங்களுக்கு ஒண்ணுமே தெரியவில்லை... அந்தப் படத்தில் இதே போல் தான் ஹீரோயின் மனதில் காதல் இருக்கும் ஆனால் சொல்ல மாட்டாங்க... நம்ம ஹீரோ அவங்களை எப்படி சொல்ல வைக்கிறதுனு ஐடியா போடுவார் ... அதுல உதயமானது தான் பிசிகல் டச் ஐடியா....“ சொல்லி விட்டு அண்ணனின் முகத்தைப் பார்த்தான்.. ஹரி அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்....

“அதே போல் ஒரு பிசிகல் டச்சை உருவாக்க வேண்டும் .. இப்போது புரிகிறதா.....?”

“ஆனால், எப்படி ?...”

“ஓ மை காட் ... ப்ளீஸ் சேவ் மீ .... அண்ணா அதையும் நான் தான் சொல்ல வேண்டுமா...?”

“ஹெல்ப் பண்ணுடா ...நான் அந்த படம் பார்த்ததில்லை.... “

“சரி .. செய்றேன்.... வேறு வழி....”

“இங்கே வாங்கண்ணா.... இது விளகெண்ணை... இதை இப்படித் தரையில் ஊற்றிவிடவேண்டும்... “

“ஹையோ விஷ்ணு .. யாராவது விழுந்துட்டால், என்ன செய்வது ....”

“அண்ணா .. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்.. நடுவில் எதுவும் பேசக்கூடாது....”

“சரி ... சொல் ...”

“இப்போது நீங்க அண்ணியை அழைக்கிறீர்கள்....”

“அபி ... இங்கே வா....”

“ஐயோ அண்ணா இப்போதில்லை.... நான் சொல்லும்போது அழைக்க வேண்டும் ....”

“சரி...”

“கஷ்டகாலம் .... அண்ணி ஓடி வருவார்கள் ..எண்ணை வழுக்கி விழப் போகும்போது நீங்கள் காப்பாற்ற வேண்டும்... இது தான் ஐடியா... சரியா... ஒழுங்காக செய்யவேண்டும் அண்ணா ...நீங்க கொஞ்சம் மிஸ் ஆனாலும் அண்ணி விழுந்து விடுவார்கள் .... ஆல் தி பெஸ்ட் ...“ சொல்லிவிட்டு நகர்ந்து பக்கத்தில் உள்ள அறையில் ஒளிந்துக்கொண்டான்......

“அபி ... சீக்கிரம் வா ... அபி ... அபி....” உரக்க அழைத்தான்....

தன் வீட்டு செல்லப் பிராணிகளிடம் விளையாடிக்கொண்டிருந்த அபி ஹரியின் கத்தலில் பயந்து விட்டிருந்தாள்... அவள் அவனிடம் செல்ல எத்தனிக்கும் போது சோழன் வந்தான்..

னக்கொரு எதிரி வந்து விட்டான் என்ற கடுப்பில் இருந்தான் சோழன், ஹரி அபியை அழைத்ததைக் கேட்டவுடன் கோபம் தலைக்கேறியது....

அபியை நோக்கி நான் செல்கிறேன் .. நீ உன் வேலையை பார் என்றுக் கூறி விட்டு மாடிப் படி ஏறிச்சென்றான்...

அபிக்கு பதில் சோழன் வரவும் தினரிவிட்டிருந்தனர் ஹரியும் விஷ்ணுவும்...

‘ஹையோ இவன் வருகிறானே...’ என்று ஹரியும் .. ‘ஆஹா கிணறு வெட்ட போய் பூதம் வந்த கதையை போல, பூவிற்கு வலை வீசினால் குரங்கு வந்து விழுதே என்று விஷ்ணுவும் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில்

“ஐயோ ..... அம்மா .....................” அலறிக்கொண்டு விழுந்தான் சோழன்.... பதறியடித்து வந்து பார்த்தனர் பிரேமாவும் அபியும் ... அங்கே அவன் பப்பரப்பே என்று விழுந்துக் கிடந்தான்... 

 

Go to Episode # 03

Go to Episode # 05

தொடர்ந்து பாயும்.......

 

{kunena_discuss:685}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.