(Reading time: 12 - 24 minutes)

பொம்முவையும் அரவிந்தையும் கோவிலுக்குள்ளே அந்த கிராம மக்கள் அழைத்து சென்றனர். அங்கே நிறைய சிற்பங்களும் தங்குவதற்கு இடமும் உணவும் நிறைந்திருந்தது. நிறைய பாதைகள் கொண்டிருந்தது. கோபுரத்தின் உச்சியிலிருந்து வரும் ஒளியும் ஆங்காங்கே சுவற்றில் தொங்கி எரியும் தீபந்தங்களும்தான் கோவிலுக்குள்ளே வெளிச்சம் தருகிறது. அந்த சக்தி வாய்ந்த கோவிலில் சிலையாக வாழும் கடவுள் தான் “நிலாராணி”. அழகான அந்த பெண் வடிவம் கொண்ட கம்பிரமான அந்த சிலையை கண்டார்கள். இதனால் தான் அந்த மலையை கூட கிழே காட்டில் உள்ள தியசக்திகளால் நெருங்க முடியவில்லை.

Bommuvin thedalஅடுத்ததாக காளியன் பொம்முவையும் அரவிந்தையும் ஒரு ரகசிய சுரங்கப் பாதையில் எங்கோ கூட்டிச்சென்றார்.

“பல வருஷமா நாங்க இந்த கோவிலில தான் இருக்கோம். இன்னிக்கு நீங்க  அடிச்ச மணியோசை தான் எங்கள கொவில விட்டு வெளிய வரவச்சிருக்கு!” – காளியன்.

“என்ன சொல்றீங்க? ஏன் நீங்க கோவிலுக்குள்ள இருக்கணும்?” – பொம்மு.

“எங்க நாட்டு ராஜா மகேந்திரனோட உத்தரவு இது!” – காளியன்

“என்ன சொல்றீங்க? இது நாடா? மலைய சுத்தி எங்க பாத்தாலும் காடுதான் இருக்கு?” – அரவிந்த்

“பல வருஷத்துக்கு முன்னாடி இந்த நாடு பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு! ஒரு போருக்கு அப்புறம் இப்படி மாறிடுச்சு!” – காளியன்

அந்த சுரங்க பாதையின் ஒரு இருட்டான இடத்தில் சுவர்களில் எதையோ அவர்களுக்கு காண்பித்தார் காளியன்.

“இந்த கோவிலில் வாழ்ந்த துறவிகள் எதிர் காலத்தில நடக்க போறதை இங்க ஓவியங்களா வரைஞ்சுருக்காங்க! நீங்களே அதை பாருங்க!” என்றார் காளியன்.

அந்த சுவற்றில் ஒரு ஓவியத்தில் அழகான நாடு ஒரு சூனியக்காரியால் சூழப்படுங்கின்றது. அதையடுத்த ஓவியத்தில் அந்த நாட்டு ராஜா அவர்  நாட்டு மக்களை கோவிலுக்குள்ளே அனுப்பி வைத்து போருக்கு செல்கின்றார்.  அடுத்த ஓவியத்தில் ஒரு பொம்மை ஒன்று ஆலய மணியை அடித்து நாட்டு மக்களை கோவிலில் இருந்து வெளியே வரவைக்கின்றது. அடுத்த ஓவியத்தில் கோவில் கோபுரம் நொறுங்கி மலையில் இருந்து விழுகின்றது.

பொம்முவுக்கும் அரவிந்துக்கும் ஓவியத்தை கண்டு ஆச்சர்யம்.

“இதெல்லாம் உண்மையா நடந்து வருதே! ஆனா.....இந்த கோவில் நொறுங்கி அதோட கோபுரம் கிழே விழறது போல வரையப்பட்டிருக்கு!....இது கேட்ட விஷயமா தெரியுதே!” – பொம்மு.

“அத நினைச்சுதான் நானும் இங்க இருக்குற மக்களும் பயந்துகிட்டு இருக்கோம்!” –காளியன்

பொம்முவும்  அரவிந்தும் அமைதி காத்தனர்.

“உங்களுக்கு சேரவேண்டிய கடிதம்...அதை உங்களிடம் தான் குடுக்கனும்னு ராஜா சொல்லி அனுப்பினாரு!” என்று திடிரென்று அவருக்கு நியாபகம் வந்தது.

காளியன் அந்த சுரங்க பாதையின் ஒரு மறைவான இடத்திற்கு அவர்களை கூட்டி வந்தார். அங்கே போர் சமந்தப்பட்ட பொருட்கள் நிறைந்து இருந்தனர். காளியன் அந்த பொருட்களின் நடுவே எதையோ நீண்ட நேர்மை தேடி கடைசியில் ஒரு காகித சுருள் ஒன்றை எடுத்தார்.

“போருக்கு கிளம்பும் முன்னே இந்த கடிதத்தை ராஜா  என்கிட்டே கொடுத்தார். இது உங்களுக்கு சேரவேண்டியது.” என்று காளியன் அந்த கடிதத்தை பொம்முவிடம் கொடுத்தார். பொம்மு அந்த சுருளில் எழுதிருப்பதை அங்குள்ள தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தாள்.

“நிலாயுகத்தின் ராஜாவாகிய நான் எழுதும் கடிதம் இது....இந்த கடிதம் எழுதும்போது நான் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கின்றேன்.சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு யாரோ ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். அதில் என் நாட்டை அழிக்க ஷானுதா என்னும் ஒரு சூனியக்காரி வரபோகின்றாள் என்றும். அவளின் பயங்கர போற்படையை மோதி ஜெயிக்க சாதாரண மனிதவீரர்களால் முடியாது என்றும் அதில் எழுதியுருந்தது. இதனால் நான் குழப்பத்தில் சிக்கினேன். மனிதர்களை விடம் சக்தி வாய்ந்த போர்ப்படையை உருவாக்க தேடினேன். ஆனால் என்னால் முடியவில்லை.

விரைவில் அவள் இங்கே வருவாள். என் நாட்டை அழிப்பாள். எனது நாட்டு மக்களை மட்டும் அந்த நிலாராணியின் கோவில் பாதுகாப்பில் விடுகிறேன். விதி சொல்வது போல ஒரு பொம்மை என் நாட்டை காப்பாற்ற வரும் என்று நம்புகிறேன். இப்போது கோவிலின் துறவிகளோடு அந்த போரை சந்திக்க செல்கின்றேன்! அந்த போரில் நான் வெல்லலாம் அல்லது இறக்கலாம்!”

அந்த கடிதத்தை பொம்மு படித்து முடித்த பின் பொம்மு தான் ஒரு பொறுப்பில் இருப்பதாக உணர்ந்தாள்.

“அப்புறம் ராஜாவுக்கு என்ன ஆகிருக்கும்?” – பொம்மு

“அவர் இறந்திருப்பார்...” – காளியன்

“உங்களோட கடவுள் நிலாராணி ஏன் உங்களை காப்பாத்த வரலை?” – பொம்மு தயத்துடன்.

“அந்த கடவுள் மேல நாம தப்பு சொல்லகூடாது. நிலராணி எதோ ஒரு காரணத்திற்காக அந்த கடவுளும் காத்திருக்காங்க....சீக்கிரம் அது தெரிய வரும்” – காளியன்

“பொம்மு பொம்மு!” என்று வலியுடன் அரவிந்த் திடிரென கத்த உடனே காளியனும் பொம்முவும் அவனை கண்டனர். அவன் காலில் எதோ ஒரு காயம் கருப்பு நிறமாக மாறியிருந்தது. காட்டில் நடந்த போராட்டத்தில் ஒரு காட்டேறி அவன் காலை கடித்திருப்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது.

“  என்னாச்சு இது அந்த காட்டேறி கடிச்ச காயம்தான?   ஏன் இது நீலமா மாறியிருக்கு?” என்று பொம்மு பதறியபடி அரவிந்தின் காலை பிடித்து கேட்டாள்.

“என்ன காட்டேரி கடிச்ச காயமா?” – காளியன்

“ஆமா ! இவனும் நானும் காட்டில இரண்டு காட்டேரி கிட்ட மாட்டிகிட்டோம். அதுங்க கிட்ட இருந்து தப்பிக்கும் போது இது நடந்திருக்கு!” – பொம்மு வேகமாக

“அடகடவுளே!” என்று தன் தலையில் கை வைத்தார் காளியன்.

“இந்த காயத்த சரி பண்ணிடலாம்ல?” – பொம்மு.

“காட்டேரியோட கடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது!   கொஞ்சம் கொஞ்சமா இவன் உடல் முழுவதும் கருப்பாக மாறும்! கடைசில இவனும் ஒரு காட்டேரியா மாறிடுவான்!” என்று காளியன் கூற பொம்முவுக்கும் அரவிந்தின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன.

“அரவிந்துக்கு இந்த காயம் போகணும்! அதுக்கு வழி சொல்லுங்க!” – பொம்மு

நீண்ட நேரம் யோசித்த காளியன் “ ஒரு வழி இருக்கு! ஆனா அது கை கொடுக்குமான்னு எனக்கு தெரியாது!” என்றார்.

“எதவா இருந்தாலும் சொல்லுங்க “ – பொம்மு

“இந்த நிலாயுகத்தில பலகோடி வருஷம் முன்னே கடவுள் நிலாராணி இந்த மக்களுக்காக இரண்டு  அமிர்தம் நிரம்பிய பானையை மறைச்சு வச்சிட்டு போனாங்களாம். ஆபத்து வரும்போதுதான் அதை உபயோகிக்கனும்னு சொல்லிட்டு போயிருக்காங்க. அந்த அமிர்தம் சாப்பிட்டா எந்த தியசக்தியும் விலகி போகும். அதை கண்டுபிடிபதற்கான வரைப்படத்தை இந்த கோவில் துறவிகள்கிட்ட குடுத்திட்டு போனாங்களாம். அந்த அமிர்தம் தேடி பல திருடர்கள் வந்தாங்க. ஆனால் அவங்களால கண்டுபிடிக்க முடியல. உங்களால அதை கண்டுபிடிக்க முடிஞ்சா ....நீங்க இந்த பையனை காப்பாத்தலாம்....அதுவும் சீக்கிரம் இந்த பையன் காட்டேரியா மாறாம இருக்குறதுக்குள்ள” – காளியன்.

“ஆனா அந்த வரைப்படம் வேணும்....என்னால இந்த ஆபத்தான காட்டில எப்படி சுலபமா கண்டுபிடிக்க முடியும்?” – பொம்மு.

“வரைப்படம் கிடைக்க வாய்ப்பில்லை....அந்த வரைபடத்தை வசிருகறது துரவிகள்தான்....கடைசியா நடந்த போருக்கு அப்புறம் துறவிகள் திரும்பி வரலை....அவங்க இறந்திருக்கணும் “ – காளியன்

“இப்ப நான் எப்படி அதை கண்டுபிடிக்கறது?” – பொம்மு.

“அதுதான் உங்க திறமை பொம்மு “ – காளியன்.

பொம்மு என்ன செய்வது என்று தவித்தாள். வேறுவழியில்லை பொம்மு அரவிந்துடன் அந்த அமிர்த பானையை தேடி செல்ல கிளம்பினாள். 

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 03

Go to Bommuvin Thedal episode # 05

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.