(Reading time: 10 - 20 minutes)

03. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

து மாலை நேரம். நாய்களை பிடிக்கும் நாய்வண்டி அரவிந்த் வீட்டு தெருவுக்குள் நுழைந்தது. அரவிந்த் வீட்டின் மாடியில் பொம்மு அரவிந்துடன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.

Bommuvin Thedal“ஹே ...என்ன பட்டம் விடற நீ? ....என்கிட்டே குடு!” என்று அவளிடம் இருந்து பட்டதின் நூலை பிடிங்கினான் அரவிந்த்.  நிமிட நேரத்தில் பொம்முவின் பட்டம் வேறு ஒரு பட்டத்தால் அறுக்கப்பட்டது.

பொம்மு அரவிந்தை முறைக்க அரவிந்த் மீண்டும் சமாளிக்க ஆரம்பித்தான்.

“சரி சரி விடு...ஆயிரம் காத்தாடிய ஜெயக்கரவனுக்கு ஒரு காத்தாடிய இழக்கறது ஒரு பெரிய விஷயம் இல்ல “ – அரவிந்த்.

“இதே வசனத்தைதான் ஒவ்வொரு தடவையும் சொல்லிக்கிட்டு இருக்குறனு நினைக்குறேன்” – பொம்மு.

“அரவிந்த் ! கிழே வா!” என்று தேவி அரவிந்துக்கு குரல் கொடுத்தார்.

“சரி சரி...வா கிழே போலாம்” என்று போம்முவை தூக்கிகொண்டு அரவிந்த் கிழே ஓடினான். கிழே அரவிந்தின் அறைப்பக்கம் அரவிந்தின் அம்மா தேவி கையில் ஏதோ ஒரு பொருளுடன் நின்றிருந்தார்.

“என்னமா?” – அரவிந்த்.

“உன் பிறந்த நாளுக்கு எடுத்த போட்டோ ஆல்பம் வந்திருக்கு! இந்தா” என்று தேவி அந்த ஆல்பத்தை அரவிந்திடம் நீட்ட அரவிந்த் உற்சாகத்துடன் அதை வாங்கிக் கொண்டு அவன் அறைக்கு பொம்முவுடன் சென்றான்.

“சீக்கிரம்...நான் பாக்கணும்!” என்று பொம்மு நின்ற இடத்தில் துள்ளினாள்.

“இரு இரு....இதோ நான்....என் கிறுக்கு தம்பி சஞ்சய் .......கேக்க பாத்தியா எப்பிடி இருக்கு?....இது என் தாத்தா...” என்று ஒவ்வொரு படத்தையும் ஆசையாக சொல்லியபடி பொம்முவுக்கு காட்டினான். பொம்முவும் ஆர்வத்துடன் பார்த்தாள். சிறிது நேரம் சென்றது.

“அரவிந்த்...இங்க பாரு” என்று அதிர்ச்சியுடன் ஒரு ஆல்பத்தில் ஒரு புகை படத்தை  காண்பித்தாள்  பொம்மு.  அவள் காட்டிய அந்த புகைபடத்தில் அரவிந்த் வீடு வாசலில் யார் கண்ணிலும் படாமல் மறைவாக அந்த கருப்பு நாள் நின்றிருந்தது. அதன் வாயில் ஒரு பரிசு பொருளை கவ்விக் கொண்டிருந்தது.

அரவிந்த் அதிர்ச்சியுடன் “இதுதான்...இதுதான் எனக்கு வந்த அந்த கிப்டு....அதுலதான் நீ இருந்த....அப்படினா” என்றான்

“அப்படினா அந்த நாய்தான் என்னை உன்கிட்ட சேர்த்திருக்கு!....ஏன்?...எதுக்காக?” – பொம்மு குழப்பம் கலந்த அதிர்ச்சியுடன்.

“அந்த நாய் எதோ ஒரு காரணத்தோட தான் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கு!” – அரவிந்த்.

“இனி ஒரு நிமிஷம் கூட நாம தாமதிக்க கூடாது.....அந்த நாய..... நாம சந்திக்கணும்!” என்று பொம்மு பதறினாள்.

ரவிந்த் பொம்முவுடன் வேகமாக தெருவுக்கு ஓடினான். வானம் இருள ஆரம்பித்தது. தெருவில் அவன் சுற்றி சுற்றி தேட  அந்த கருப்பு நாய்  எங்கும் கண்ணில் படவில்லை. அந்த தெருவில் சஞ்சய் வழக்கம் போல தன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். பொம்மு மீண்டும் பொம்மையாக நடித்தாள்.

“ஏய் சஞ்சய்....இந்த தெருவுல ஒரு கருப்பு நாய் எதாவது பாத்தியா?” என்று அரவிந்த் அவனிடம் கூவினான்.

“அட நாய தேடுற நாயே! இப்பதான நாய் வண்டி அந்த நாய பிடிச்சிட்டு போச்சு.” என்று பதிலுக்கு கூவினான் சஞ்சய்.

அரவிந்தும் பொம்முவும் மீண்டும் அதியடைந்தனர். அரவிந்த் தன் வீட்டுக்கு விரைந்து தன் சைக்கிளை எடுத்தான். தரையில் வைத்தான்.

“நானும் வரேன்!” – பொம்மு.

“வேண்டாம்! நான் போறேன்!” என்று போம்முவை பார்க்காமலே சைக்கிளில் ஏறி ஓட்ட ஆரம்பித்து வீட்டை விட்டு வெளியேறினான். வேகமா அரவிந்த் சைக்கிள்ளை ஓட்ட ஆரம்பித்தான். வானம் முழுவதும் இருண்டது. தெருவுக்கு தெரு சென்று தேடிய பின் ஒரு தெருவில் நாய் வண்டி விரைவதை கண்டான்.  அதன் பின்னே வேகமா தொடர்ந்தான் அரவிந்த்.

“அண்ணா! வண்டிய நிறுந்துங்க!” – அரவிந்த் கத்தினான். ஆனால் வண்டி நிற்கவில்லை.

“ஆமா நிறுந்துங்க! “ என்று பொம்மு அரவிந்தின் பின்னே இருந்து குரல் கொடுத்தாள். அரவிந்தின் சைக்கிளின் பின்னே அவள் அமர்ந்திருப்பதை அவன் கண்டான்.

“ஏய் குட்டி பிசாசே! நீ எப்போ ஏறின?..” என்று கத்தினான் அரவிந்த்.

“அதெல்லாம் அப்பவே ஏறிட்டேன்! சரி...சீக்கிரம் போ...அந்த வண்டிய நிறுத்து!” என்று பொம்மு பரபரப்பாக கூறினாள். பிறகு ஒரு வழியாக அரவிந்த் அந்த நாய் வண்டியை நிறுத்தி  அந்த ஓட்டுனரிடம் பேச ஆரம்பித்தான். பொம்மு சைக்கில் பின்னவே அமர்ந்திருந்தாள்.

“அண்ணா! இந்த வண்டில ஒரு கருப்பு நாய பிடிச்சு வச்சிருக்கீங்க...அதை மட்டும் எப்படியாவது விட்டிடுங்க” – அரவிந்த்.

“என்ன விளையாடுறியா? அதெல்லாம் முடியாது...இது என் பொழப்புபா..கிளம்பு கிளம்பு!” என்று ஓட்டுனர் வண்டியை ஓட்ட முயன்றபோது.

“அண்ணா!...ப்ளீஸ்...அது ரொம்ப முக்கியமான நாய்...அதை நிச்சயம் நான் கொண்டு போகணும்!” – அரவிந்த்.

“அப்புடினா அம்பது ரூபா குடு. நய விட்டிடுறேன்” – ஓட்டுனர் தெனாவட்டாக.

அரவிந்த் முழித்தான்.

“லொள்! லொள்! என்று நாய் வண்டி முன்னே கருப்பு நாய் நின்று குரைத்து கொண்டிருந்தது. ஓட்டுனர் திடுக்கிட்டு வண்டியை விட்டு இறங்கினார்.  அரவிந்த் அந்த நாயை கண்டவுடன் புன்னகைத்தான்.

“என்னடா இது?...இந்த நாய் தான் நான் புடிச்சு வண்டி பின்னாடி போட்டேன்!...எப்புடி  வெளிய வந்துச்சு?” என்று ஓட்டுனர் குழப்பத்துடன் திரும்பி பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி. வண்டியில் இருந்த மொத்த நாய்களும் வெளிய நின்று ஓட்டுனரை வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தன. ஓட்டுனருக்கு வயிறு கலங்கியது. உடனே அவர் வண்டிக்குள் ஏறி வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். கருப்பு நாயை தவிர மொத்த நாய்களும் அந்த வண்டியை விரட்டி கத்தி கொண்டே ஓடின.

நாய்கள் வெளியே வர காரணம் பொம்முதான் என்று அரவிந்த் பொம்முவின் சிரிப்பை வைத்து அறிந்துக் கொண்டான். அந்த இருண்ட இடத்தில் பொம்மு அரவிந்த் மற்றும் அந்த கருப்பு நாய் மட்டும் அமைதியாக நின்றிருந்தனர்.

“யார் நீ?....உனக்கு என்ன வேணும்?” என்று அரவிந்த் அந்த கருப்பு னை நோக்கி கேட்டான்.

கருப்பு நாய். எந்த அசைவும் இல்லாமல் அவனை பார்த்தது.

“நீதான என்னை அரவிந்த் கிட்ட கொடுத்த? ஏன் அப்படி பண்ண?” – பொம்மு.

நாய் அப்படியே தான் நின்றது.

“இதுக்கு எதுவும் புரில போல....” – அரவிந்த்.

“யாரோ சொல்லி தான் இந்த நாய் என்னை உன்கிட்ட சேர்த்திருக்கணும்...கண்டிப்பா இந்த நாய்க்கு நாம பேசுறது புரியும்!” – பொம்மு.

பொம்மு மெல்ல அதன் அருகில் சென்றாள். கருப்பு நாய் அதன் கண்களை மட்டுமே அசைத்தது.

“நான் சொல்றது உனக்கு கண்டிப்பா புரியும்....புரியாம நீ இதெல்லாம் செய்ய மாட்ட.....எனக்கு தேவையெல்லாம் என்னை யாரு அரவிந்த்கிட்ட அனுப்ப சொன்னது?” – பொம்மு. ஆனால் கருப்பு நாய் எதுவும் செய்யாமல் அப்படியே தான். இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.