(Reading time: 10 - 19 minutes)

02. என் இதய கீதம் - Parimala Kathir

புவிகா ரசித்து ருசித்து உண்பதை வாஞ்சையுடன் பார்த்து ரசித்தவண்ணம் இருந்தவர்; புவியின் தலையை மெல்ல வருடியவாறு

"நீ சின்னப் பிள்ளையாக இருந்த போது, உன் பாட்டி உனக்கு பிடிக்குமே என்று கல்லுரலில் இடித்த சம்பலும். குழல் பிட்டும் செய்து உனக்கு ஊட்டி விடுவார்கள். நீயும் அவரது மடியில் இருந்து இப்படித் தான் சப்புக்கொட்டியே சாப்பிடுவாய்."

En ithaya geethamஇதனை சொல்லி முடிக்கும் போது தன் தாயின் நினைவில் கண்களில் பனித்த நீர் துளிகளை சேலை முந்தானையால் துடைத்து விட்டபடி....

"இன்னும் கொஞ்சம் வைக்கவாம்மா?"

 

"ம்ஹிம்.... இல்ல போதும்மா."

என்றவள் தானும் தன் பாட்டியின் நினைவில் மூழ்கினாள்.

 

வளுக்கு அப்போது ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும். அவர்களது சொந்த ஊரிலே தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா பெரியப்பா, என எல்லா உறவுகளோடும் கலகலப்பாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்களது வீட்டை சுற்றி பச்சை பசேலென வயல்கள், அழகிய செந்தாமரை தடாகம், அழகிய குருவிகள் வந்து இளைப்பாறிச் செல்ல பரந்து விரிந்த மரங்கள் என இயற்கை வளம் சூழப் பெற்றது அவர்களது "லக்ஷ்மி அகம்." திடீரென ஓர் நாள் 'வேட்டைக் காரனின் வேட்டுச் சத்தம் கேட்டு மரக்கிளைகளில் இருந்து அந்தர்தனம் ஆகும் பறவைகளைப்' போல் தனி மரமானது அவர்கள் வசித்த அழகான அந்த கூடு.

சில காலத்திற்குப் பின் அவர்களும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை நகரிற்கு குடி புகுந்தனர்.

ஆரம்பத்தில் அவளும் தாயிடம் வந்து

"அம்மா தாத்தா பாட்டி எல்லாம் எங்க போயிட்டாங்க? நாம ஏன் இங்க இருக்கோம்?" என்று கேள்வி கேட்பாள். அதற்கு தாயின் விசும்பலே அவளுக்குப் பதிலாகக் கிடைக்கும்.

பாவம் அந்த சின்ன வயதில் தான்: தான் ஏதோ தப்பாக கேட்டு விட்டோம் போல என்று எண்ணி தன் மலர் கரத்தால் தாயின் கண்ணீரை துடைத்து விடுவாள். அதன் பின் மறந்தும் கூட தாயிடம் தம் சொந்தங்களை பற்றி அவள் கேட்டது கிடையாது. ஊட்டியில் இருக்கும் பெரியப்பா குடும்பம் தான் இப்போது இவர்களுக்கு என இருக்கும் ஒரே உறவு. 

இவை யாவும் ஏதோ பனிப் புகார் போன்று அவள் கண்முன்னே வந்து விலகிச் சென்றன. 

office செல்வதற்கு தயாராகி கீழே இறங்கி வந்த நாராயணன் தாயும் மகளும் ஏதோ யோசனையில் இருப்பதை கண்டார்.

"என்னாச்சு உங்க இரண்டு பேருக்கும், எந்த கப்பல் கவிழ்ந்து போச்சு ம்ம்ம்ம்..."

என்று விளையாட்டாக கேட்டுக் கொண்டு தனது தட்டில் 2 இட்லியை எடுத்து வைத்தவர் அப்போது தான் புவியின் தட்டில் இருந்த பிட்டை காண்டார். அவர்களின் கவலைக்கான காரணத்தையும் உணர்ந்தார்.

அவர்களை திசை திருப்பும் நோக்குடன்

"எல்லாரும் சேர்ந்து சாய்ந்திரம் தியேட்டருக்கு போலாமா?"

"ம்...ம்....ஓகேப்பா நான் ஜில்லா படத்துக்கு டிக்கெட் ரிசேவ் செய்து வைக்கறன்." என்று துள்ளிக் குதித்தாள்.

அவளது சந்தோஷத்தில் லக்ஷ்மியும் நாராயணனும் பங்கு கொண்டனர்.

ணி 9 ஆகி விட்டதென அவர்களது அழகிய சுவர் கடிகாரத்தினுள் இருந்த குயில் கூவி அழைத்தது. இந்த கடிகாரத்தை நாராயணண் ஜப்பான் சென்றிருந்த போது வாங்கி வந்திருந்தார்.

"எனக்கு collegeக்கு late ஆகுது நான் கிளம்புறன் bye அம்மா byeஅப்பா ." கூறி விட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு தனது ஸ்கூட்டியை நோக்கி மான் போன்று குதித்தோடிச் சென்றாள். 

தனது ஸ்கூட்டியின் இருக்கையை திறந்து புத்தகங்களை அதனுள் வைத்து பூட்டினாள். பின்பு அதன் மேல் ஒய்யாரமாக ஏறி அமர்ந்து வண்டியை முடுக்கினாள் ஆனால் அதுவோ அவளது அவசரம் உணராது வேலை நிறுத்தம் செய்தது. வெறுப்புடன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்டிள் நுழைந்தாள். 

"ப்போ நானும் கிளம்புறன் லக்ஷ் கண்டதயும் நினைத்துக் கொண்டிராமல் சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அல்லது கனகாவை( வீட்டு வேலைக்காரி) கூட்டிட்டு வேணும் என்றால் கோயிலுக்குப் போய் வா மனசு லேசாயிடும்.” என்று கூறி மனைவியின் கன்னத்தை லேசாக தட்டினார்.

"ம்ம்ம்ம்ம் சரிங்க" என்ற போதும் கணவரது கைத் தீண்டலிலும் அவரின் பெயர்ச் சுருக்கத்திலும் முகம் சிவந்து போனார்.

தனது எண்ணம் நிறைவேறிய களிப்பில் மனைவியின் கன்னக் கதப்பை கண்டு ரசித்தார். நாராயணனுக்கு நன்றாகவே தெரியும் லக்ஷ்மி எவ்வளவு கவலையாகவோ அல்லது சோகமாகவோ இருந்தாலும் கணவரின் லக்ஷ் என்ற அழைப்பில் அவள் உருகிவிடுவாள் என்று.

"என்னங்க இது திருமண வயதில், வள்ர்ந்த பொண்ணு இருக்கா, உங்களுக்கு இந்த வயசிலயும் காதல் தேவைப் படுதா?" என்று கோபமாக தொடங்கி வெட்கத்துடன் சொல்லி முடித்தாள்.

"அட யாரடி இவ காதலுக்கு ஏது வயது அறுபது ஆனாலும் இருபது ஆனாலும் காதல், காதல்... தான். இருபது வயதில் இளமைக் காதல் அறுபது வயதில் அனுபவக் காதல். ம்....."

என்று மனைவியை தன் கை வளைவில் நிறுத்தி காதலைப் பற்றி (ஒன்ஸ்மோரில்) சிவாஜி கூறிய வசனத்தை அச்சு பிசகாது மனைவியிடம் ஏதோ தன் சொந்த வரிகளை போல் உருக்கமாக ஒப்பித்தார்.

வரின் கள்ளத்தனம் புரிந்ததால் வாய் விட்டு சிரித்தாள் லக்ஷ்மி.

திருமணமாகி 32 வருடங்கள் கடந்து விட்டன எத்தனை முறை இது போன்ற டயலோக்கை எல்லாம் கேட்டிருப்பாள்.

( உஸ்.... யார்கிட்டயும் சொல்லாதீங்க எல்லாம் திரைப்படங்களில சுட்டது தான்.)

" ஏன் லக்ஷ்மி இப்படி சிரிக்கிறாய் ம் ...........?"

"இல்ல இது எந்த பட டயலோக் என்று யோசிச்சன் கண்டு பிடித்து விட்டேன் அது தான் சிரிக்கிறன்." என்றாள் சாது போன்று.

அவளை செல்லமாக முறைத்துவிட்டு,

" குட் இது தான் எனக்கு வேணும் என் ல்க்ஷ்மி எப்பவும் சிரித்துக் கொண்டு சந்தோஷமா இருக்கணும். இத விட்டிட்டு சும்மா பழசயே நினத்துக் கொண்டு நீயே ஏன் உன்னைப் போட்டு வருத்திக்கிறாய்?"

"இல்லங்க நானும் முயற்சி செய்து பார்க்கிறன் ஆனால் முடியலங்க"

"முடியணும்மா நம்ம மனதை கட்டுப்புத்திக்க பழகிகணும் நம்மளோட வாழ்க்கை இனி இங்க தான். நாம எவ்வள்வு தான் வருந்தி அழைத்தாலும் இனி நம்மளோட உறவுகள் இங்க நம்மளத் தேடி வரப்போறது இல்லை. அதனால நீ அவங்கள நினைத்து உன்னை வருத்திக் கொள்வது எனக்குப் பிடிக்கல. "

"சரிங்க நான் இனிமேல் பழசை நினைக்க மாட்டன்." என்று கூறி கணவரின் தோள்மீது சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

 ள்ளே நுழைந்த புவிகா தன் பெறோரின் உண்மையான நேசத்தில் சில நிமிடங்கள் தன்னை மறந்து போனாள். 

இந்த மூவரதும் மோன நிலையை புவிகாவின் கைபேசி கலைத்தது.

கைபேசியின் அழைப்பில் விழித்துகொண்ட லக்ஷ்மி கணவனிடம் இருந்து விலகி நின்றாள்.

"அம்மா அம்மா...please அப்பிடியே நில்லுங்க ஒரே ஒரு படம் எடுத்துக்கிறன் please அ...ம்..மா.."

"சும்மா இருடி நீ வேற" என்று சிறு நாணத்துடன் கூறினாள்."

"அப்பா நீங்களாவது அம்மாகிட்ட சொல்லுங்களன் please......" என்று தந்தையின் கன்னத்தை செல்லமாக கிள்ளியபடி கெஞ்சினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.