(Reading time: 41 - 82 minutes)

32. என் இனியவளே - பாலா 

En Iniyavale

வன் புறம் சற்றும் திரும்பாத இனியாவையே பார்த்துக் கொண்டிருந்தான் இளவரசன். அவன் பார்வையை அறிந்ததாலே அவள் அவன் புறம் திரும்பவில்லை.

அதனால் வேண்டுமென்றே போட்டோவில் சேர்ந்து நிற்க வருபவர்களை அறிமுக படுத்தி வைக்கவோ இல்லையென்றால் அவர்கள் யார் என்று கேட்கவோ அவளை கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.

இனியாவால் வெட்கத்தை கட்டுப் படுத்த முடியாமல் சிறு குரலில் அவனை திட்ட ஆரம்பித்தாள்.

“இளா. என்ன இதெல்லாம்”

“என்னம்மா. அவங்க யாருன்னு தானே கேட்டேன்”

“ஆமாம். அது இப்ப ரொம்ப முக்கியம் தான். ஒழுங்கா நில்லுங்க. சொல்லிட்டேன்”

“ஏய் என்னடி இது, கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி மிரட்டற. ஐயய்யோ எங்கம்மா எங்கே, என்னை ஏமாத்தி இந்த மாதிரி மிரட்டற பொண்ணுக்கு போய் கட்டி வைக்க பார்க்கறாங்க”

அவனை திரும்பி முறைத்து விட்டு, வாயை சுழற்றி ஒழுங்கு காண்பித்தாள்.

“என்னடி” என்று நெருங்கி வந்து கேட்டான்.

“ஐயோ” என்று இனியா தலையில் அடித்துக் கொண்டு ஜோதியை அழைத்தாள்.

அவள் அருகே வந்த ஜோதி “என்னடீ” என்று கேட்டாள்.

“அக்கா என் கூடவே நில்லுக்கா”

“ஏய் எல்லாரும் வந்து போட்டோ எடுத்துக்கிட்டு இருக்காங்க. நான் உன் கூட நின்னு எல்லா போட்டோலையும் இருக்கணுமா. நான் இங்க தான் கொஞ்சம் தள்ளி நிக்கறேன், எதாச்சும் வேணும்னா கேளு”

“ஐயோ அக்கா, என் எங்கேஜ்மென்ட்ல நீ என் கூட இருந்தா தப்பா. ஒழுங்கா நில்லுக்கா”

“ஏய் அதுக்கில்ல டீ. எத்தனை பேர் மேரேஜ் போட்டோஸ் பார்த்து இருப்போம், இப்படி தான் யாருனா பொண்ணு மாப்பிள்ளை பக்கத்துலையே பளிச்சினு ஒரு சேலையை கட்டிட்டு நின்னுட்டு இருப்பாங்க. என்னடா இது பொண்ணு மாப்பிள்ளையை விட இவங்க அதிகமா இருக்காங்களேன்னு நானே எத்தனை பேரை கிண்டல் பண்ணி இருப்பேன். அதான்”

அவள் கூறும் காரணத்தை கேட்டு வியந்து விட்டு “ப்ளீஸ்க்கா. என் கூடவே நில்லேன், எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.

ஜோதியும் “சரி” என்று அவளுடனே நின்றாள்.

இனியா அவன் புறம் திரும்பி வெற்றி புன்னகை புரிய அவனோ முறைத்தான்.

ஜோதி சும்மா இருக்காமல் “என்னங்க. என் தங்கச்சி ஒரு மாதிரி இருக்குன்னு சொல்லுறா, அவளை கவனிச்சிக்க மாட்டீங்களா” என்று வேறு கேட்டு வைத்தாள்.

இளவரசன் உல்லாச புன்னகையுடன் “அவளை கவனிச்சிக்க தானே நான் இருக்கேன், ஆனா அவ தான் புரிஞ்சிக்க மாற்றாளே” என்றான்.

அதற்குள் அங்கு வந்த லக்ஷ்மி ஜோதியிடம் “அங்க அபி தனியா இருக்கா, நாங்க தூக்கினாலும் வர மாற்றா, போய் பாரு” எனக் கூற ஜோதி இனியாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

இனியா இப்போது அவனை வெளிப்படையாகவே முறைத்தாள்.

அதற்குள் யாரோ உறவினர் வந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு போட்டோ எடுத்துக் கொண்டனர்.

திரும்ப இனியா அவனை திட்ட ஆரம்பிக்க எதிரில் பாலு நின்று கையாட்டிக் கொண்டிருந்தான்.

இளவரசன் இனியாவிற்கு அந்த திசையை சுட்டிக் காண்பிக்க அவளும் அந்த பக்கம் பார்த்தாள்.

பாலு வீடியோ எடுப்பவரை சுட்டிக் காண்பித்து “நோ பைட்ஸ்” என்று வாயசைத்தான்.

இனியாவிற்கு இன்னும் வெட்கமாக போய் விட்டது.

திரும்ப தலையை குனிந்துக் கொண்டாள்.

இளவரசன் திரும்ப எவ்வளவோ சீண்டியும் அவன் புறம் திரும்பவில்லை.

ஜோதி அபியை தூக்கிக் கொண்டு அவர்களிடம் வந்தாள்.

இனியா ஆசையுடன் அபியை தூக்கிக் கொள்ள கை நீட்ட அவள் வர மறுத்தாள்.

“என்னடா. ஏன் என் அபிக்குட்டி சித்திக் கிட்ட வர மாட்டறா”

“என் கிட்ட பேசாத. இன்னைக்கு உனக்கு கல்யாணம்ன்னு நீ என் கிட்ட சொல்லவே இல்லைல்ல”

“ஐயய்யோ அபிக்குட்டி இன்னைக்கு எனக்கு கல்யாணம் இல்லைடா. எங்கேஜ்மன்ட்”

“ம்ம்ம். அதக் கூட நீ எனக்கு சொல்லவே இல்லைல்ல”

இனியா எவ்வளவோ சமாதானம் செய்தும் அபி கேட்பதாக இல்லை. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

இளவரசன் ஜோதியிடம் இருந்து அபியை வாங்கிக் கொண்டு “அபி மேடம்க்கு என்ன கோபம். இப்ப சொல்லுங்க” என்றான்.

அபி முகத்தை திருப்பிக் கொண்டு ஏதும் பேசாமல் இருந்தாள்.

“அன்னைக்கு அபி தானே எனக்கு உங்க சித்தியை மேரேஜ் பண்ணிக்கறதுக்கு பெர்மிஷன் கொடுத்தீங்க. இன்னைக்கு என்ன கோவிச்சிக்கறீங்க”

“நீங்க தான் இந்த பங்ஷன் நடக்க போறதை என் கிட்ட சொல்லவே இல்லைல்ல”

“ஐயோ அபிக்குட்டி, இன்னைக்கு பங்ஷன் நடக்க போறதை என் கிட்ட கூட யாருமே சொல்லலையே டா”

“அப்படின்னா நீங்களும் பாவம் தான் இல்ல சித்தப்பா” என்று மறைமுகமாக அவனை மன்னித்தாள்.

ஆனால் இன்னும் இனியாவை மட்டும் முறைத்தவாரே பார்த்தாள்.

இனியா “எனக்கும் தெரியாது டா செல்லம்” எனவும் அவளை மட்டும் சந்தேகமாக பார்த்தாள்.

இளவரசனோ உனக்கும் தெரியாதா என்றவாறு அவளை பார்த்து சிரித்தான்.

“அதெப்படி உனக்கு தெரியாம இருக்கும்”

“இந்த பர்த்டே எல்லாம் சஸ்பென்ஸா செலிப்ரேட் செய்வாங்க இல்ல, அந்த மாதிரி இன்னைக்கு எங்கேஜ்மன்ட்ன்னு எங்களுக்கே சொல்லலை” என்றாள்.

அபி இனியாவை பார்த்து “அப்படியா சித்தி, என் கிட்ட சொல்லாததை மாதிரியே உங்க கிட்டவும் சொல்லலையா” என்று கேட்டாள்.

இனியாவும் “ஆமா டா” என்றாள்.

“ம்ம்ம்” என்றவள் உடனே சந்தோசமாக “ஐ நமக்கே தெரியாம நம்ம பர்ட்டே செலிப்ரேட் செஞ்சா எவ்வளவு ஜாலியா இருக்கும், அப்ப உனக்கு எவ்வளவு ஜாலியா இருக்கும் இல்ல சித்தி” என்றாள்.

இனியா இளவரசனை ஓரக் கண்ணால் பார்வையிட்டுக் கொண்டே “ம்ம்ம்” என்றாள்.

அபி சமாதானமாகி சென்று விட்டாள்.

“என்னடி ஓரக்கண்ணால பார்த்து ஆளை மயக்குற” என்றான்.

“ஐயோ இளா. எதாச்சும் பேசி என் முகத்துல ரியாக்ஷன் தெரிய வைக்காதீங்க. போட்டோல எல்லாம் அப்படியே வரும்” என்றவாறே வெட்கப்பட்டாள்.

“ம்ம்ம். பொழச்சி போ”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.