(Reading time: 41 - 82 minutes)

ன்று இரவு.

இனியாவின் வீட்டில் அவள் அறையில் அவன் காத்திருக்க அவளோ வருவதாக தெரியவில்லை.

எழுந்து அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

அவள் வரும் சத்தம் கேட்கவும் வாசலை நோக்கினான்.

இனியாவை ஜோதி அழைத்துக் கொண்டு வந்து விட்டு ஏதோ சொல்லி சிரித்து விட்டு செல்லும் சத்தம் கேட்டது. பின்பு அவள் நுழைந்தாள்.

தலையை குனிந்தவாறு வந்தவள் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ அவளை விழுங்கி விடுவதை போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இளா. என்ன இப்படி பார்க்கறீங்க”

“ஏய் போடி, என் பொண்டாட்டி, நான் அப்படி தான் பார்ப்பேன்”

“ம்ம்ம். நீங்க சும்மாவே ஆடுவீங்க. இப்ப சலங்கையை வேற கட்டி விட்டா ஆட்டம் அதிகமா தான் இருக்கும்”

“ஏய். சலங்கையை கட்டலை டீ. நான் தாலியை தான் கட்டி இருக்கேன்” என்று அவள் கழுத்தில் தொங்கிய புது தாலியை எடுத்து அவளுக்கே காட்டினான்.

“தெரியுது”

“ம்ம்ம்.” என்றவாறு அவளை அவன் பக்கத்தில் அமர வைத்தவன்

“இனியா” என்றான்.

“என்ன”

“என்னடி ஏதோ மிரட்டற மாதிரி கேட்கற, இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்”

“எனக்கு காதே கேட்கலை”

“அடிப்பாவி, எந்த மாதிரி ஒரு விஷயம் சொல்றேன், காது கேட்கலைன்னு சொல்ற, அந்த காதை அப்படியே கடிச்சி வச்சிடுவேன் சொல்லிட்டேன்”

“போங்க இளா. எனக்கு தூக்கம் வருது” என்று அவள் கட்டிலில் சாய,

அவனோ அதிர்ந்து “என்னது தூக்கம் வருதா” என்று ஒரு மாதிரி கேட்டான்.

“ஆமா. நேத்து கூட சரியாவே தூங்கலை, ரெண்டு நாளா ஒரே அலைச்சல். பயங்கர டயர்ட் இளா” என்றாள் சாதாரணமாக.

அவனுக்கு பேச்சே வரவில்லை. அடிப்பாவி என்றவாறு பார்த்தான்.

“என்ன இளா”

“ஏண்டி. நானா உன்னை நேத்து தூங்க வேண்டாம்ன்னு சொன்னேன், நீயா தூங்காம இருந்துட்டு நல்ல நேரத்துல வந்து தூங்கறேன்னு சொல்றியே உனக்கே நியாயமா இருக்கா”

“போங்க. நீங்க லென்த்தா பேசறீங்க. எனக்கு தூக்கம் வருது என்றவாறு தலையணையில் முகம் புதைத்தாள்.

அவளை உடனே உலுக்கி எழுப்பியவன் “என்னடி. இங்க ஒரு பஞ்சாயத்து போயிட்டிருக்கு. நீ என்னடான்னா தூங்க போற. எனக்கு ஒரு நியாயம் சொல்லிட்டு போ”

“இந்த நேரத்துலையா நியாயம் கேட்பீங்க”

“அதே தான் நானும் கேட்கறேன். இந்த நேரத்துலையா தூங்குவ”

“ம்ம்ம். போங்க. எனக்கு தூக்கம் தூக்கமா வருது”

“ஐயய்யோ. இவ்வளவு நேரம் நீ ஏதோ காமெடி பண்றன்னு இல்ல நினைச்சேன். நீ என்னடான்னா நிஜமாவே தூங்க போறியே”

இனியா ஏதும் பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப எனக்கு ஒரு பதில் சொல்றியா இல்லையா”

“என்ன பதில் வேணும் சொல்லுங்க”

“ஏய் இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் டீ”

“ஐ’ம் டயர்ட் ப்பா. யாரோ காலைல தான் எனக்கு ப்ராமிஸ் எல்லாம் செஞ்சி கொடுத்தாங்க தெரியுமா”

“எனக்கு தெரிஞ்சிப் போச்சி. நீ போ ராசாத்தி. நீ நல்லா தூங்கு”

“தேங்க்ஸ்ப்பா. நல்லா தூக்கம் வருது. வாங்க நீங்களும் டயர்டா தான் இருப்பீங்க. தூங்குங்க” என்று வேறு சொன்னாள்.

அவன் சிறு பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு வந்து படுத்தவுடன் அவன் முகத்தை தன் புறம் திருப்பி “நிஜமாவே டயர்ட்டா இருக்கு இளா. இப்ப வேண்டாம்” என்றாள்.

அவனும் “ஐ அண்டர்ஸ்டான்ட் டா. நீ தூங்கு” என்று கூறி விட்டு அவள் இமைகளில் முத்தமிட்டான்.

சிறிது நேரத்தில் இளவரசன் உறங்கி விட இனியா தான் உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

என்ன முயற்சி செய்தும் அவளால் உறங்கவே இயலவில்லை.

றங்கிக் கொண்டிருந்த இளவரசன் திடீரென்று விழித்துப் பார்க்கும் போது இனியாவின் சிரிப்பு சத்தம் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

அறை இருட்டாக இருக்க, இனியா அவன் பக்கத்தில் இல்லை. அறையில் ஒரு மூலையில் லேப்டாப் வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

ஒன்றும் புரியாமல் எழுந்து அமர்ந்தான் அவன்.

அவனிடம் அசைவைக் கண்ட அவள் “இளா. இங்க வாங்களேன். ஐயோ” என்று கூறி திரும்ப சிரித்தாள்.

அவனுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

எழுந்து அவளருகே சென்று அமர்ந்தான்.

அவள் ஹெட் செட் போட்டு ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்கோ சரியான கோபம்.

“என்னடி என்ன பண்ணிட்டிருக்க” என்றான்.

“ஐயோ இளா. இந்த சீன் மட்டும் பாருங்களேன் என்று ஹெட் செட்டை அவன் காதுகளுக்கு கொடுத்தாள்.

அதில் அன்ஜானா அன்ஜானி படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் ரன்பீர் கபூரை ஒருவன் தூக்கிக் கொண்டு செல்ல ரன்பீர் அலறிக் கொண்டிருந்தான். (என்னால இந்த சீனை எக்ஸ்ப்லெய்ன் பண்ண முடியாது, ப்ளீஸ் அந்த வீடியோ பாருங்க.)

அதை பார்த்த இளவரசனை அது எந்த விதத்திலும் பாதிக்காமல் அவளை அடிப்பாவி என்பது போல பார்க்க அவளோ “என்ன இளா” என்று கேட்டாள்.

“தூக்கம் வருதுன்னு சொன்ன”

“ம்ம்ம். ஆனா அப்புறம் வரலை”

இளவரசன் நொந்து போனவனை போல் ஒரு பார்வை பார்க்க இனியா அவனை பார்த்து இன்னும் அதிகமாக சிரித்தாள்.

“ஏய் வேணாம் டீ. மனுசனை டென்சன் ஆக்காம ஒழுங்கா போய் தூங்கிடு”

இனியாவும் சிரித்துக் கொண்டே போய் தூங்கி விட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.