(Reading time: 41 - 82 minutes)

லோ ஹலோ. என்ன வாய் ரொம்ப தான் நீளுது. பார்த்து சார். இப்பவே இந்த சண்டை போடறீங்களே. கல்யாணம் ஆனா கேட்கவே வேண்டாம் போல. எனக்கு ஒண்ணுன்னா கேட்கறதுக்கு நிறைய ஆள் இருக்காங்க. சோ பார்த்து நடந்துக்கோங்க”

“ஹேய் என்ன ரொம்ப பயமுறுத்தற. நீ என்ன பொம்மையா. உன்னை பார்த்து நடத்தறதுக்கு, வேணும்னா உன் மேல ஹான்டில் வித் கேர்ன்னு ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்க சொல்லு”

“இளா. திஸ் இஸ் டூ மச். உங்களை”

“சரி சரி. விடு டீ. இன்னைக்கு நம்பளுக்கு எங்கேஜ்மன்ட் நடந்திருக்கு. ப்ரீசியஸ் மொமென்ட்ஸ். ஆனா நீ எங்க சண்டை கிடைக்கும்ன்னு அலையற”

“இந்த பேச்சுக்கு தான் இளா. சண்டை ஆரம்பிச்சுது. சோ கொஞ்சம் நீங்க தான் பார்த்து பேசணும்”

“ம்ம்ம். எங்க நானும் தான் உன்னை பார்த்து பேச ஆசைப் பட்டேன். முடியலையே. சைடுல பார்த்தாலே நீ திட்டுற. ஹ்ம்ம்” என்று பெருமூச்சி விட்டுக் கொண்டான்.

“உங்களை என்ன பண்ணா தகும் இளா”

“ஒரு கிஸ் பண்ணா தகும்”

“ஐயோ சாமி. உங்க கிட்ட எல்லாம் பேச முடியாது”

“போடீ ஒரு பேச்சுக்கே இங்க தடை போட்டுட்டு இருக்க. ஏய் நமக்கு எங்கேஜ்மன்ட் ஆகிடுச்சி. ஓகே”

“இதையே இன்னும் எத்தனை தடவை இளா சொல்லுவீங்க”

“நீ அதை நம்பர வரைக்கும்”

“இளா. என்னால இன்னும் நம்பவே முடியலை தெரியுமா, எல்லாம் ஏதோ ட்ரீம் மாதிரி இருக்கு. எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. நமக்கே தெரியாம சர்ப்ரைஸா நமக்கு எங்கேஜ்மன்ட். எவ்வளவு ஜாலியா இருக்கு இல்ல”

“ம்ம்ம். ஆமா டீ. என்னால கூட நம்பவே முடியலை. ஆனா சந்துரு தான் பாவம். என்னை அங்க கூட்டிட்டு வரர்துக்குள்ளே நோந்துட்டான். நான் ஆயிரம் கேள்வி கேட்டு அவனை சாகடிச்சிட்டேன்”

“இங்கேயும் அக்கா நிலைமை அப்படி தான். ஆனா நீங்க என் கிட்ட வந்து சொல்லவே இல்லைல்லன்னு கேட்கறீங்க”

“ஏய் சந்துரு என்னென்னவோ சொல்லி என்னை அங்க கூட்டிட்டு வந்தான். திடீர்ன்னு பார்த்தா நமக்கு எங்கேஜ்மன்ட்ன்னு சொல்றாங்க. எனக்கு அப்ப கூட என்னடா எல்லாரும் சேர்ந்து விளையாடறாங்களான்னு தான் தோணுச்சி. ஆனா திடீர்ன்னு நீ கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரத்துல வந்து நிக்கற, நான் என்ன நினைக்கறது. சொல்லு”

“ம்ம்ம். சரி போனா போகுது விடுங்க. உங்களை மன்னிச்சிடறேன். பட் நீங்க ஸ்டேஜ்ல நின்னுட்டு என்னை ஒரு வழி பண்ணதுக்கு உங்களை பழி வாங்குவேன். பாருங்க”

“திரும்பவுமா. ஏன் மா இப்படியே சொல்லி என்னை பயமுறுத்தற, அப்படி என்ன தான் செய்ய போறன்னாச்சும் சொல்லேன்”

“அதெல்லாம் சொல்ல முடியாது. அந்த டைம்ல என்ன தோணுதோ, அதை செய்வேன், பட் பழி வாங்கறது மட்டும் கன்பார்ம்”

“சரி போடி. பார்த்துக்கலாம்”

“இளா தேவை இல்லாம வாயை விடாதீங்க. அப்பறம் அனுபவிப்பீங்க”

“பார்க்கலாம் பார்க்கலாம்”

(இப்படியே அவங்க எவ்வளவு நேரம் பேசினாங்கன்னு எனக்கு தெரியலை, கேட்டா அவங்களுக்கு எங்கேஜ்மன்ட் ஆகிடுச்சாம். இதையே சொல்றாங்க. சரி விடுங்க. எல்லாரும் இப்படி தான் போல இருக்கு)

ல்லோரும் உறங்க சென்று விட்டனர். பவித்ராவிற்கு மட்டும் உறக்கமே வரவில்லை.

அறையில் இருக்க பிடிக்காமல் வெளியே வந்து ஜன்னலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

தண்ணீர் எடுக்க வந்த ஜோதி அங்கு நின்றிருத்த பவித்ராவை கண்டு அதிர்ந்து அவளிடம் சென்றாள்.

வெகு நேரமாக அங்கேயே நின்று கொண்டு வெளியே வெறித்துக் கொண்டிருந்தாளே தவிர பவித்ராவின் நினைவு எங்கேயோ இருந்தது.

ஜோதி பவித்ராவின் தோளை தொட பவித்ரா பயந்து அலறி இரண்டடி தள்ளி நின்றாள்.

அவள் செய்கையில் ஜோதியும் பயந்து தான் போய் விட்டாள்.

“என்னடி” என்று கேட்டவளின் குரலே வெளியில் வரவில்லை.

பின்பு இருவரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

“என்ன பவித்ரா இங்க ஏன் நிக்கற” என்றவளின் கேள்விக்கு பவித்ரா பதிலேதும் கூறவில்லை.

ஜோதிக்கு பவித்ரா திடீரென்று காணமல் போனது நினைவு வந்தது.

“திடீர்ன்னு நீ எங்க பவி அங்க இருந்து காணாம போயிட்ட”

இந்த கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் ஜோதியின் தோளிலேயே சாய்ந்து அழுது விட்டாள் பவித்ரா.

திடீரென்று பவித்ரா அழுகவும் ஜோதி திகைத்து விட்டாள்.

“என்ன பவி”

“அக்கா” என்றாலே தவிர ஏதும் கூறாமல் அழுத படியே நின்றிருந்தாள்.

அவளை சிறிது நேரம் ஆறுதல் படுத்தி பின்பு அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டாள் ஜோதி.

ங்கு நிச்சயதார்த்தத்தில் பவித்ராவும் சந்துருவும் இனியா இளவரசன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தனர். பின்பு எல்லோரும் போட்டோ எடுக்க வந்துக் கொண்டிருக்க இவர்கள் இருவரும் தள்ளி சென்று விட்டனர்.

தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்க சந்துரு தான் அவளிடம் வந்து “போய் உட்காரலாம். இன்னும் போட்டோ எடுத்து முடிக்க டைம் ஆகும்” என்றான்.

அவளும் சரி என்று தலை அசைத்து விட்டு கீழே சென்றனர்.

எல்லோரும் அமர்ந்திருக்க காலி சேர் ஏதும் இல்லாததால் சைடில் அடுக்கி வைத்திருந்த சேரை எடுக்க பவித்ரா சென்று கையை வைக்க, அதே நேரம் நான் எடுத்துட்டு வரேன் என்று கூறி சந்துரு சேரை எடுக்க என்று பவித்ராவின் கை மேல் கை வைத்து விட்டான்.

இருவரும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர்.

பவித்ராவிற்கு அவர்களின் நிலையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தலையை குனிந்துக் கொண்டாள்.

சந்துருவோ ஏதோ மயக்கத்திற்கு ஆட்பட்டவன் போல ரசனையாக அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நிமிர்ந்து பார்த்தவளால் அவனின் பார்வையை பார்க்க இயலாமல் திரும்ப தலை குனிந்தாள்.

இது எல்லாமே ஒரு நிமிடத்திற்குள் தான்.

அதற்குள் அங்கு வேகமாக வந்த ஸ்வேதா கோபமாக “என்ன நடக்குது இங்கே” என்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.