(Reading time: 41 - 82 minutes)

டைசியாக எல்லோரும் சேர்ந்து பேமிலி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இளவரசன் தான் “பவித்ரா எங்கே” என்று கேட்டான்.

அப்போது தான் எல்லோரும் பவித்ரா அங்கில்லாததை கண்டனர்.

எங்கும் பவித்ரா இல்லாததால் மோகன் பவித்ராவிற்கு போன் போட்டார்.

இரண்டு முறை எடுக்காமல் மூன்றாம் முறை எடுத்தாள்.

“என்னம்மா எங்கே போன நீ. அதுவும் தனியா”

“இல்லப்பா. தலை வலியா இருந்துச்சி. அதான்”

“அது சரிம்மா. எல்லாரும் இங்க இருக்கோம். நீ தனியா எங்கே போயிட்ட, உனக்கு இங்க சரியா வழி கூட தெரியாதே”

“எனக்கு வழி எல்லாம் தெரியும். நான் நேரா வீட்டுக்கே வந்துடறேன்”

மோகன் உடனே பதறி விட்டார்.

“என்னம்மா. என்னாச்சி நீ எப்படி தனியா போவ. இப்ப எங்க இருக்க சொல்லு” என்று பதறவும், ஜோதி போனை வாங்கி,

“ஹேய் பவித்ரா. எங்க இருக்க, இங்கிருந்து எங்க போன, என்னாச்சி” என்று கேட்கவும்

“இங்க பக்கத்துல தான், டேபிலேட் வாங்க வந்தேன்க்கா. ஒரே தலைவலி”

ஜோதியால் இதை நம்ப முடியவில்லை. அங்கே எல்லாரும் ஆனந்தமாக இருக்கும் வேலையில் பவித்ராவிற்கு தலை வலி என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“சரி. சீக்கிரம் வா. சித்தப்பா பயப்படறாரு பாரு. சீக்கிரம் வா” என்றவாறு போனை வைத்தாள்.

சிறிது நேரத்தில் பவித்ரா வந்து விட்டாள். ஆனால் அவள் முகம் தான் சரியில்லை.

பவித்ரா மட்டும் பேமிலியாக எடுத்த போட்டோவில் இல்லாததால் திரும்ப எல்லோருடனும் பவித்ராவையும் சேர்த்து நிற்க வைத்து போட்டோ எடுத்தனர்.

நடுவில் இளவரசன் இனியா அபியை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, ராஜகோபால் லக்ஷ்மி அவர்களின் ஒரு புறமும், ராஜலக்ஷ்மி, மோகன் ஒரு புறம் அமர்ந்திருக்க, ஜோதியும், பாலுவும் பின்புறம் நின்றுக் கொண்டிருக்க, பவித்ரா பாலுவின் பக்கம் நின்றுக் கொண்டிருந்ததால் சந்துரு ஜோதியின் பக்கத்தில் வந்து நின்றான்.

ஜோதி போட்டோ எடுப்பதற்குள் “ஏய் பவித்ரா வா, வந்து என் பக்கத்துல நில்லு” எனக் கூறி அவளை இழுத்து அவளுக்கும் சந்துருவிற்கும் இடையில் பவித்ராவை நிற்க வைக்க அனைவரையும் சேர்த்து போட்டோ எடுத்தனர்.

பவித்ராவிற்கு நரக வேதனையாக இருந்தது.

போட்டோ எடுத்த உடனே அவள் செல்ல எத்தனிக்க ஜோதி “ஓரு நிமிஷம் நில்லு” என்று அவளை அதட்டி விட்டு, இனியாவிடம் இருந்து அபியை வாங்கி அவளும் பாலுவும் சேர்ந்து அபியை தூக்கி வைத்துக் கொண்டு இன்னொரு போட்டோ எடுக்குமாறு கூறினாள்.

இதை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.

“பேமிலி போட்டோ” என்ற வார்த்தை மட்டும் அவள் காதில் ஒளித்துக் கொண்டிருந்தது.

பிடிக்காமல் வந்து நின்ற பவித்ராவை கூட அவள் மன்னித்து விடுவாள். ஆனால் அவளை இழுத்து பிடித்து வைத்துக் கொண்ட ஜோதியை தான் அவள் மன்னிப்பதாக இல்லை.

‘எனக்கு ஒரு நேரம் வரும். அப்ப உன்னை பார்த்துக்கறேன்’ என்று மனதில் கருவிக் கொண்டாள்.

ஆனால் என்ன யோசித்தும் அவளால் ஜோதி இதை எல்லாம் வேண்டும் என்றே செய்கிறாளா அல்லது அவள் மனதில் எதையும் எண்ணாமல் தானாக செய்கிற செயல் தன்னை கோபப் படுத்துகிறதா என்ற கேள்விக்கு மட்டும் அவளிடத்தில் பதிலில்லை.

ஏனெனில் முன்பெல்லாம் தன்னிடம் முகம் கொடுத்தே பேசாமல் எரிந்து விழும் ஜோதி இப்போதெல்லாம் அவளிடம் நன்றாக பேசுகிறாள். விழுந்து விழுந்து கவனிப்பது போல் கூட தோன்றுகிறது.

ஆனால் இதில் எது உண்மை என்பதற்கு பதில் தான் அவளுக்கு கிடைக்கவில்லை.

ன்று இரவு ஜோதி அவள் குடும்பத்துடன் அவள் அம்மாவின் வீட்டிலேயே தங்கி விட்டாள்.

ஜோதி, பாலு, அபி, பவித்ரா, ராஜகோபால், லக்ஷ்மி, இனியா என எல்லோரும் மாடியில் கொண்டிருந்தனர். சின்ன சின்ன வட்ட மேஜை மாநாடு அங்கே நடந்துக் கொண்டிருந்தது.

இனியா ஜோதியை தனியே பிடித்து ஆர்வமாக “எப்படிக்கா எங்க கிட்ட கூட சொல்லாம இப்படி செஞ்சீங்க.” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ம்ம்ம். உண்மையை சொல்லணும்ன்னா முதல்ல என் கிட்ட கூட சொல்ல கூடாதுன்னு இருந்தாங்களாம் அம்மா. ஏன்னா நான் உன் கிட்ட சொல்லிடுவேன்னு. ஆனா அப்பறம் எனக்கு சொல்லாம இருக்க முடியாதுன்னு என் கிட்ட சொல்லிட்டு உங்க கிட்ட மட்டும் சொல்லவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எனக்கு உன் கிட்ட சொல்லாம இருக்கறது ஓரு மாதிரி தான் இருந்துச்சி, பட் நினைச்சி பார்த்தா அது உங்களுக்கு ரொம்ப ஸ்வீட் சர்ப்ரைஸா இருக்கும்ன்னு தான் சொல்லாமலே விட்டுட்டோம்”

“இருந்தாலும் இது அநியாயம் தான்”

“ஓஹோ, ஆனா நீ ஒன்னும் இதை கோபமா சொல்ற மாதிரி தெரியலையே, அதுவும் நீ நல்லா எஞ்சாய் பண்ண மாதிரி தானே இருந்துச்சி”

“ஹிஹிஹி. சரி மேல சொல்லுக்கா”

“வேற என்னடி சொல்றது”

“எப்படி அம்மா, அத்தை எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க”

“அத்தை தான் அம்மா கிட்ட வந்து முதல்ல பேசி இருக்காங்க. அம்மாக்கும் உன் ஆளு மேல கோபம் எல்லாம் ஒண்ணும் இல்லையே, ஏதேதோ நினைச்சி வேண்டாம்ன்னு சொல்லி இருக்காங்க, அப்பா அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசனது, அதை விட உனக்கு நடுவுல உடம்பு சரியில்லாதப்ப அவரு துடிச்சி போனதுன்னு எல்லாம் சேர்ந்து  அம்மாவோட மனச மாத்தி இருக்கு, சோ அம்மாவும் ஒத்துக்கிட்டாங்க. அவ்வளவு தான்”

“ம்ம்ம். ஆனா அத்தை எப்படிக்கா ஒத்துக்கிட்டாங்க”

“அதெல்லாம் அம்மா கேட்கலையாம். ரெண்டு பேருமே முதல்ல ஏன் இதுக்கு அப்ஜெக்ட் பண்ணாங்கன்னு எல்லாம் ஏதும் பேசிக்கலையாம். உனக்கு அதெல்லாம் எதுக்கு, நீ ஹாப்பி தானே”

“ம்ம்ம். ரொம்ப ரொம்ப ரொம்ப. எந்த அளவுக்குன்னு எல்லாம் சொல்ல தெரியலைக்கா”

நடுநடுவே இளவரசன் போன் செய்து கொண்டிருந்தான்.

இனியா போனை கட் செய்து விட்டு “இப்ப பேச முடியாது, நாளைக்கு பேசலாம்” என்று மெசேஜ் அனுப்பினாள்.

“ஏய் பேசணும் டீ” என்று மட்டும் அவன் ரிப்ளை செய்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.