(Reading time: 41 - 82 minutes)

வித்ரா அந்த வீட்டுக்கு வந்து விட்டாள். அவளை கஷ்டப்படுத்த விரும்பாமல் அவன் சென்று விட்டானாம். அவன் சென்று விட்டால் அவன் நியாபகம் இல்லாமல் போய் விடுமா.

அத்தை பேசும் பேச்சில் எல்லாவற்றிலுமே அவர்களின் பிள்ளைகள் பேச்சு தான் கலந்திருக்கும். இளவரசனை ரொம்ப மெசூர்ட் என்று பேசுபவர்கள், சந்துருவை குழந்தை என்று தான் கூறுவார்கள். அவன் வேறு இப்போது அங்கு இல்லாததால் அவன் நியாபகமாகவே அவருக்கு இருந்ததால் அவன் செய்த குறும்பு, அவனின் சிறு வயது பிரதாபங்கள் என்று அவரின் பேச்சு முழுக்க சந்துருவை பற்றியே இருந்தது.

அவரின் பேச்சோடு சேர்த்து அவரைப் போலவே அவளையும் அங்கில்லாத அவனுக்காக வருத்தப் பட வைத்துக் கொண்டிருந்தார்.

ப்படியே மூன்று மாதங்கள் சென்று இனியா இளவரசனின் திருமண நாளும் வந்து விட்டது.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் சந்துரு வந்து சேர்ந்தான்.

எல்லோருக்குமே அதில் வருத்தம் தான்.

அவன் வந்த சந்தோசத்தை பவித்ராவை மட்டும் அனுபவிக்க விடாமல் ஸ்வேதா வந்து அவனுடனே சுற்றிக் கொண்டிருந்தாள்.

பவித்ராவிற்கு மட்டும் சக்தி இருந்தால் ஸ்வேதாவை அப்படியே பொசுக்கி விட்டிருப்பாள்.

திருமணத்திற்கு முதல் நாள் ரிஷப்ஷன்.

திருமணத்தை தஞ்சாவூரில் வைத்திருந்தனர்.

இளவரசன் அதற்கு எவ்வளவோ மறுத்தும், அவன் தாயும், ராஜகோபாலும் அங்கு தான் வைக்க வேண்டும் என்று கூறி விட்டனர்.

அந்த மண்டபமே கலைக் கட்டியிருந்தது.

மண்டபம் முழுவதும் உறவுக் காரர்களால் நிறைந்திருந்தது.

இளவரசனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு உறவுக்காரர்கள் இருப்பார்கள் என்று அவன் எண்ணவே இல்லை.

சென்னையில் இருந்து அவர்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று வேறு வந்து குவிந்திருந்தனர்.

அவர்கள் எல்லோரையும் இவர்களின் நெருங்கிய உறவுக்காரர்கள் எல்லோரும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

ராஜகோபாலின் தங்கைகள் செல்வி, சுதா இருவரும் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டும், எல்லா வேலைகளையும் செய்து கொண்டும் இருந்தனர்.

எல்லாவற்றையும் பார்க்க பார்க்க அவனுக்கு வியப்பாக தான் இருந்தது. முதலில் அவனுக்கு இங்கு திருமணம் வைப்பது பிடிக்கவில்லை தான். ஆனால் இங்கு வந்து இவ்வளவு பேரையும் பார்த்து, நெருங்கிய உறவினர் அனைவரும் கல்யாண வேலையை பகிர்ந்து செய்து கொண்டு தெரிந்தவர் தெரியாதவர் அனைவரையும் வாங்க என்று வாய் நிறைய வரவேற்பதை பார்க்க அவனுக்கு மகழ்ச்சியாக இருந்தது.

அவன் மண்டபத்தில் இருக்க, பெண்ணை போய் மாப்பிள்ளை வீட்டில் இருந்து அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று அவனின் அம்மா, சந்துரு, இன்னும் அவர்களின் உறவினர் சிலர் சென்றிருந்தனர்.

அவளை அழைத்துக் கொண்டு வந்த பிறகு, கோவிலுக்கு சென்று அங்கிருந்து மணமகன், மணமகள் இருவரையும் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அவனுக்கு இது எல்லாம் புதுசாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தான். கூடவே எல்லாவற்றிற்கும் இனியா கொடுக்கும் ரியாக்ஷன்களையும்.

கடைசியாக அவர்கள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்தனர். எல்லோரும் வந்து பரிசுப் பொருட்களை கொடுத்து வாழ்த்திக் கொண்டிருந்தனர்.

இந்த முறை அவளிடம் எதுவும் பேச வாய்ப்பே கொடுக்காமல் அத்தனை பேர் சூழ்ந்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்ததால் இளவரசனால் அவளிடம் பேச இயலாமல் போனது. ஏக்கமாக ஒரு பார்வையை மட்டும் வீசி, அவளின் சிரிப்புக்கு ஆளானான்.

பவித்ரா பாவாடை தாவணியில் கலக்கிக் கொண்டிருந்தாள். அது அவளின் ஊர், அவளின் சொந்தக் காரர்கள் என்பதால் எல்லோரும் அவளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தனர்.

சந்துரு தூர நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அவள் பக்கமே செல்லவில்லை. அவன் பார்வை மட்டும் அவளை தொடர்ந்துக் கொண்டிருந்தது.

அவனுக்கு தெரிந்தே எத்தனையோ பேர் பவித்ராவை சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவனோ அவர்களை பொசுக்கி விட முடியுமா என்று இல்லாத நெற்றிக் கண்ணை திறந்துக் கொண்டிருந்தான்.

அதிலும் சில பேர் அவளின் உறவுக் காரர்கள் போலும், அவளிடமே சென்று ஏதேதோ பேசிக் கொண்டு அவனின் டென்ஷனை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

பவித்ராவோ இது எதையும் அறியாமல் வலைய வந்துக் கொண்டிருந்தாள்.

இதை எல்லாவற்றையும் ஜோதி சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜோதி பிஸியாக இருந்ததால் இனியாவுடன் அவள் கொஞ்ச நேரம் கூட நிற்க முடியாமல் போனது, எனவே இனியா பவித்ராவை கூப்பிட்டு அவள் பக்கத்தில் நிற்க வைத்துக் கொண்டாள்.

சந்துரு உடனே போய் அவன் அண்ணனின் பக்கத்தில் நின்று கொண்டான்.

ஆனால் பவித்ரா மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை.

மூன்று மாதமாக அவன் காத்து வந்த கட்டுப்பாடு எல்லாம் காணமல் போவதை அவன் தெரிந்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவனால் இப்போது அவனை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் பார்வையால் அவளை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

இவை எல்லாவற்றையும் ஸ்வேதா பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். பவித்ரா இந்த முறை ஏதும் செய்யவில்லை. ஆனால் சந்துருவின் பார்வை தான் அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. அப்படியும் இரண்டு முறை பவித்ராவை வழி மறித்து அவள் ஏதோ சொல்லி வைக்க, பவித்ரா அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அலட்சியப் படுத்தி விட்டு சென்று விட்டாள்.

இன்னொரு முறை யாரையோ கூப்பிட்டு “பெரியம்மா இவங்களுக்கு என்னவோ வேணுமாம்” என்று சொல்லி விட்டு சென்றாள். அந்த அம்மாவோ ஸ்வேதாவை விடாமல் பிடித்துக் கொண்டது. ஸ்வேதா முயற்சி செய்து விலகி போனாலும் திரும்ப பார்க்கும் போதெல்லாம் “என்னம்மா என்ன வேணும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். எனவே அதற்கு மேல்  ஸ்வேதா ‘இது பவித்ராவின் ஊர், எனவே ஏதும் செய்ய வேண்டாம்’ என்று எண்ணி அமைதியாகி விட்டாள்.

டைசியாக பத்து மணியளவில் ஓரளவு ஜனம் குறைந்து நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் இருந்தனர்.

இளவரசனின் நண்பர்கள் சிலர் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் வந்து இளவரசனை ஆட சொன்னான்.

இளவரசனோ “ஐயோ எனக்கு டான்ஸ் எல்லாம் வராது டா” என்று கெஞ்சியும் விடாமல் சரி “அவங்க கையை பிடிச்சி ஜஸ்ட் ஒரு ஸ்டேப் போடு, விடறோம்” என்று கூறி வற்புறுத்தி அவன் இனியாவை பிடித்து ஒரு சுற்று சுற்றவும் தான் விட்டார்கள்.

இனியாவை தான் எல்லோரும் கிண்டல் செய்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.