(Reading time: 10 - 19 minutes)

"ம்ம்ம் ம்ம்ம் நான் பாத்துக்கிறன். " என்று மகளுக்கு செய்கையால் காண்பித்து விட்டு.

"அவ தான் ஆசைப் பட்டு கேக்கிறாளில்ல ஒரு படம் தானே." 

என்று மனைவியை தாஜா செய்து ஒருவாறு ஒத்துக்க வைத்துவிட்டார். சிறு ஏமாற்றம் தான் கணவன் நெஞ்சில் சாய மறுத்து விட்டு கணவனின் கை வளைவில் சரண் பூகுந்தாள்.

அவர்களின் 32 வருட கால ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கையின் பெருமை கலந்த நாணம் லக்ஷ்மியின் அழகை மேலும் மெருகூட்டியது. அவர்களின் இந்த அழகிய, வண்ணக் காதல் மகளின் கைபேசியில் சிறை புகுந்து உடனே அதனை தனது displayயினிலே பதிவு செய்தாள்'.

"அம்மா எவ்வளவு அழகா இருக்கீங்க பாருங்க, அப்பா யூ ஆர் சோ ஹான்ஸம்." என்று தான் எடுத்த படத்தை காட்டி கொமன்ற் அடித்து சந்தோஷப்பட்டாள்.

பாவம் அவள் ஆசைப் பட்டு எடுத்த இந்த படமே பிற்காலத்தில் அவளுக்கு வேதனையை தரக்கூடியதாக மாறப்போவது அவளுக்கு தெரியாமல் போய்விட்டது.

மீண்டும் அவளது கைபேசி

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்." என்று டி.எம்.எஸ் இன் குரலில் தவழ்ந்து வந்தது.

"ஹலோ.. அபி.. சொல்லடீ "

"என்னடீ சொல்லுறது போன் அடித்தால் எடுக்கமாட்டியா?"

"ப்ச் இல்லடீ டைனிங் டேபில்ல இருந்தது கேக்கல"

"அப்போ நீ இன்னும் கிளம்பலயா? டைம் 9.15 இன்றைக்கு ப்ராஜக்ட் சப்மிட் செய்யணும். சீக்கிரம் வா."

" நான் எப்பவோ ரெடி இந்த ஸ்கூட்டி இன்னிக்கென்று ஸ்டார்ட் ஆக மாட்டுதாம்டி. 10 மினிட்ல அப்பாவோட வந்திடுறன். பை டீ" 

களின் உரையாடல் மூலம் அவளது ஸ்கூட்டி ஏதோ தகராறு செய்கின்றது என்று புரிந்து கொண்டு தனராஜை அழைத்து தங்களை டிராப் செய்து விட்டு மகளின் வண்டியை பழுது பார்த்து அவளின் கல்லூரியில் கொண்டு விடுமாறு பணித்து விட்டு மகளின் வருகைக்காக காரினுள் காத்திருந்தார்.

புவிகா காரினுள் ஏறியதும் இரு நடன மாதர் அருகருகே ஒருவர் இடது காலையும் மற்றவர் வலது காலையும் மடக்கி அமர்ந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து நமஸ்கரிப்பது போன்ற வேலைப்பாடுடைய அவர்களின் அழகிய வாயிற்புற கதவைத் திறந்து கொண்டு அவர்களின் கார் கல்லூரியை நோக்கி விரைந்து சென்றது.

திரவன் அன்றைய தன் வேலையை செவ்வனே நிறைவு செய்த மகிழ்வோடு மெதுவாக அந்த ஆழ்கடலின் முத்ததை தன்னுள் சுவீகரித்துக்கொண்டான். ஆழ்கடலின் ஆழ்ந்த முத்தத்தால் கதிரவனே செக்கச் சிவந்து போனான். கதிரவனின் பரபரப்பு குறைந்து குறுகுறுப்பு அதிகரித்தது ஆனால் அந்த நகரின் பரபரப்பு அதிகரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை. அவனும் அவ்வாறுதான் தோற்றமளித்தான்.

கறுப்பு கோட் சூட் கையிலே Bulova Black carbon fiber கடிகாரம் காலிலே ARMANDO black leather ஷூவும் அணிந்து கட்டுகோப்பான உடல் வாகும் அழகாக கத்தரிக்கப்பட்ட மீசையம் இரண்டு நாள் ஷேவ் செய்யாத தாடியும் என ஒரு கந்தர்வனை போன்று தோற்றமளித்த அஸ்வின் வானை எட்டும் அளவு வளர்ந்து நிற்கும் Sony Computer Entertainment America LLC நிறுவனத்தின் காத்திருக்கும் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தான்.

அவனது காத்திருப்பை அதிகரிக்காது வரவேற்பு பகுதியில் உள்ள அழகிய பெண் ஆங்கிலத்தில்

"Mr.அஸ்வின் உங்களை எம்.டி உள்ளே கூப்பிடுகின்றார், நீங்கள் 4வது தளத்தில் உள்ள அறை இலக்கம் 402க்குச் செல்லுங்கள். என்று மலர்ந்த முகத்துடன் கூறினார்."

அந்த பெண்ணிற்கு நன்றியை தெரிவித்து விட்டு மின் தூக்கியில் ஏறி 4ம் தளத்திற்கு செல்லும் முன் அவனுள்ளே பல கேள்விகள் எழுந்தன.

"எனது புதிய projectஐ இ்ந்த அமெரிக்க நிறுவனம் ஏற்று கொள்ளுமா? ஏற்றுக் கொண்டு அதற்கான அங்கீகாரத்தை இந்த நிறுவனம் எங்களுக்கு கொடுக்கமா?"

அதற்குள் அவன் இறங்க வேண்டிய தளம் வந்து விடவே தனது மனதில் எழுந்த கேள்விகளை பின்னே தள்ளி வைத்து விட்டு எம்.டியின் அறையை நாடி சென்றான். 

கதவை தட்டி அனுமதி வாங்கிய பின் உள்ளே சென்றான். உள்ளே நுழைந்தவனுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அது அவனது AAA Entertainment pvt நிறுவனம் program செய்த PS4 க்கான Thief என்ற வீடியோ கேமை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் எத்தனை முறை முயன்றும் அவர்களால் அதனை பூரணாக விளையாடி முடிக்க முடிய வில்லை. அதனால் அஸ்வின் அதனை விளையாடி காட்டினான். 

(அஸ்வின் யாரை சர மாரியாக கொன்று குவித்து கொண்டிருந்திருப்பான் என்று இப்போது புரிந்திருக்கும்)

அங்கு இருந்தவர்களால் அதனை நம்ப முடியவில்லை.

"எவ்வளவு பெரிய கம்பனி எத்தனை ஆயிரம் ஊழியர்கள், அவர்களாலேயே முடியாத காரியம் இந்தியாவில் இருந்து வந்த ஒருவன் அதனை சுலபமாக விளையாடுகன்றானே" என்று ஒரே ஆச்சரியம். அங்கு இருந்த அனைவரும் இதையே தான் பேசினார்கள்.

அந்த அமெரிக்க நிறுவனம் அஸ்வினின் விலை மதிப்பில்லாத அவனின் மூளைக்காக அவனை இந்த நிறுவனத்தின் working partner ஆக்குவதற்கு முடிவு செய்தது. அவனால் இதனை நம்ப முடிய வில்லை. 

"என்னாச்சூ உங்களுக்கு இதில் சம்மதம் தானே" என்று புரோகிராம் மனேச்சர் டானியல் கேட்டார்.

"என்ன டானியல் இப்பிடி கேக்கிறீங்க இந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கே எத்தனை பேர் ஏங்குகின்றனர். ஆனால் நான் இப்போது இந்த நிறுவனத்தில் ஓர் பங்குதாரர் இது எவ்வளவு பெருமை " என்று தனது சம்மதத்தையும் நன்றியையும் தெரிவித்தான்.

"அப்போ நாங்க எங்க லாயரோட கதைத்து டாக்குமென்ட்ஸ் ரெடி பண்ணிட்டு கூப்பிடுறோம் அஸ்வின். நீங்க எங்களோட கை கோர்த்து இணைந்ததற்கு தாங்யூ."

" ஓகே சேர் தாங்யூ , சீ யூ லேட்டர்." அனைவரிடமும் கை குழுக்கி விடைபெற்றான்.


ஹோட்டல் அறைக்கு வந்தவன். அந்த அழகான தேவதையின் ஒவியத்தை கையில் எடுத்து சிறிது நேரம் அதையே காதலுடன் பார்த்திருந்தான்.


பின்பு கையில் உள்ள தொலை பேசியில் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டான். அழைப்பை யாரும் எடுக்காமல் போகவே அபியின் எண்ணை அழுத்தினான். "ஹலோ.... " 

தொடரும்!

Go to episode # 01

Go to episode # 03


{kunena_discuss:702}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.